Saturday, May 08, 2004

அன்புள்ள ரோசாவசந்த்,

தமாசுக்கு சொன்னதென்றாலும் இதைப் பதிலாகச் சொல்லுகின்றேன். இந்த வலைப்பதிவை கடந்த செப்டம்பர் மாதமே ஆரம்பித்தாலும் எதுவுமே எழுதாதற்கு காரணமே எந்தவித தூண்டுதலும் இல்லாததே. அந்த தூண்டுதல் கிடைத்தது பதிவுகள் தளத்திலும் உங்களது எழுத்தை போட்டுத் தள்ளியது தான். முன்னமே சொன்னது போல் உங்களை எழுத தூண்டத்தான் இதை ஆரம்பித்தேன். இதிலே எந்த பெரிய மனசு புத்தியெல்லாம் இல்லை. மெல்லிய ஹிந்துத்துவா/வல்லிய ஹிந்துத்துவா வலது சாரி ஹிந்துத்துவா இடது சாரி ஹிந்துத்துவா காந்திய ஹிந்துத்துவா அம்பேத்காரிய ஹிந்துத்துவா வெறும் மயிறுபுடிங்கி இந்துத்துவா என பல சைசுகளில் இந்த தமிழ் இணைய உலகை ஆக்கிரமிப்பு பண்ணுவது சகியாமல் ஒரு சுயநலத்துடன் உங்களைத் தொங்கி இங்கே எழுத தொந்திரவு செய்தேன். ஆகவே எந்தவித தமாசுக்கும் இடமில்லாமல் என் பதிலுக்கெல்லாம் காத்திருக்காமல் எதை எழுதத் தோன்றுகின்றதே அதை கூச்சநாச்சமில்லாமல் செய்யவும். ஆச்சாரகீணனுக்கு அழைப்பு விடுக்கச் சொல்லியிருக்கின்றீர். அவர் எனக்கோ அல்லது உங்களுக்கோ(anathai_anandhan@yahoo.com/rksvasanth@yahoo.com) கடிதம் போட்டால் அதை இங்கே வெளியிடுவதற்கு என்ன தயக்கம்? சின்ன குடிசை தான் என்றாலும் நாமே திண்ணைக்குப் போகாமல் ( குடிசை திண்ணையைச் சொன்னேன் )இருக்கும்வரை எவராயிருந்தாலும் இங்கே இடம் உண்டு.

இனி விடயத்திற்கு வருகின்றேன்

முதலில் ஒன்று நான் எழுதிய துப்பறியும் சாம்புகதை ஆச்சாரகீனன் யார் என்பதற்காக அல்ல அவர் எந்தளவு நேர்மைக்காரர் என்பது பொருட்டே. எனக்கு அவர் விட்ட முதல் நாள் கமெண்டையும் என்னுடைய துப்பறியும் சாம்புக்கதைக்குப் பின்னால் விட்ட கமெண்டையும் பாருங்கள் எந்தளவு நேர்மையென்பதன் சாறல் புரியும். எனக்கு பொதுவிடயங்களில் பங்குபெறுகின்றவர் அல்லது பொது விடயங்களைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுகின்றவரிடம் மிகவும் அதிமுக்கியமாக கருதுவது அவரிடம் இருக்கும் நேர்மை. இந்த முகம் தெரியா பேர் தெரியா எதுவும் தெரியா தெரிய வேண்டியிராத வெறும் கருத்து பறிமாறுவதற்க்காக வரும் இணயம் போன்ற இடங்களில் நேர்மையாக அந்தளவில் இருப்பது மிக மிக எளிது. எது மிகவும் முக்கியமோ அதுவே மிகவும் எளிதாக இருந்தால் கூட அதைச் செய்யத் தெரியாதவர்கள் *எதற்கும்* லாயக்கற்றவர்கள். ஆச்சரக்கீணன் அமைதிக்காக நோபல் பரிசு பெற்றால் கூட அவர்
மேல் மூத்திரம் பேயத்தான் எனக்குத் தோன்றும். அந்த வகையிலே தான் நீங்கள் எடுத்துக்காட்டிய அபிதின் கதைகளை திருடி தன் பெயரில் வெளியிட்ட சாருநிவேதிதாவின் எழுத்து வன்மையையோ அல்லது அவரது விமர்சன அழகியலோ பொருட்படுத்துவதை ஏற்கமுடிவதில்லை இந்தவிதத்தில் நான் பழைமைவாதி எனக்கு ஒரு சோறு பதம் தான் முக்கியம்.நேர்மைக் கோளாறு அது ஒரு தடவையென்றாலும் அவ்வளவு தான் அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் வெளியிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும். ஒரு பொது வெளியில்(political space) ஒரு சாதி வெறியன் ஒரு மத வெறியன் ஒரு சாதி வெறியில்லாத மத வெறியில்லாத ஆனால் பொய்யன் இருப்பானேயானல் அந்தப் பொது வெளியில் இருந்து முதலில் வெளியேற்றப்படவேண்டியது அந்தப் பொய்யன்.மனு சாஸ்திரமும் அர்த்த சாஸ்திரமும் என்னை நடுங்க வைப்பது அதனுள்ளே நேர்மையற்றதை ஒரு பலமாக காண்பிக்கும் தன்மை தான்.நமது புராணங்களிலெல்லாம் சர்வ சகஜமாக இந்த நேர்மையற்ற தன்மை ஒரு பலமாக, வேண்டிய முடிவுக்கு இட்டுச் செல்லும் வழியாக காண்பிப்பது,
சீரணிக்க முடியாத ஒன்று. நேர்மைக் கோளாறும் ஹிப்பொகிரேசியும் தான் என இன்றைய உலக இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் என ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றேன். :-). இந்த இணையத்தில் கண்டபடி நாயே பேயே, பொறுக்கி இன்னபிற போட்டு நான் தாக்கியவர்கள் எல்லாம் நான் பார்த்த அளவில் நேர்மைக் குறைவு உள்ளவர்கள், அது ஜெமோவாக இருக்கட்டும் ஜீவாவாக இருக்கட்டுக்ம், எலும்பு பொறுக்கியாக இருக்கட்டும், இப்பொழுது இந்த சிஷ்யகேடியாக இருக்கட்டும், ஆச்சாரகீணனாக இருக்கட்டும். உங்களுக்கு பிடித்த ஒன்று சொல்லவேண்டுமானல் இது. உங்களது "வொயிட் மெயில்" போடுபவர்கள் எல்லாம் பொய்யர்களாக இருப்பதையும் காண்கின்றேன். :-)

அடுத்து இஸ்லாம். நீங்கள் தமிழ் இஸ்லாம் எனப் பிரித்தாலும் நான் பார்ப்பது இது தான். அமெரிக்காவோ / மற்ற மேற்க்கத்திய நாடுகளோ செப் 11 போன்றவைகளை சந்திப்பது அவர்களது மதரீதியான, பொருளாதாரா முக்கியமாக பெட்ரோலியம் சார்ந்த பொருளாதாரம் காரணமாக மத்திய கிழக்குப்பகுதிகளில் விளையாடிய விளையாட்டுகளால் தானே ஒழிய, இஸ்லாம் என்ற மதத்தின் அமைபினால் அல்ல. எனது அறிவுக்கு எட்டிய வரலாற்றின் மூலம் பொதுவாக மதம் என்பதை ஒரு ரியாக்சனரியான ஒன்றாகவே காண்கின்றேன். இஸ்லாத்தை எடுத்துக் கொண்டால் காலத்தால் இளையமதமாக இருப்பதால், அதற்குமுன் இருந்த மதங்கள் சந்தித்த நிலையின் கடினத்தைவிட, இந்த மதம் அது உருவாகும் போது சந்தித்த கடினம் அதிகம் அதன் பொருட்டே அதனுள் இருக்கும் வடிவும் சிக்கலும் ஆனது என்பதாக என் புரிதல். சிக்கல் எனச் சொல்லுவதே இந்துவாக பிறந்தாலும் எந்தவித மதரீதியான கட்டுப்பாடும் இல்லா
வளர்சூழல் கூட காரணமாக இருக்கலாம். மத்திய கிழக்கு ஏசியா இதை எடுத்துக் கொண்டீர்களானால் (இதைச் சொல்வது பாடம் நடத்த அல்ல எனது கருதுகோளை முன்வைக்க) கிழக்கும் மேற்கும் மோதிக்கொள்ளும் முதல் சந்திப்பு மையம். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கிளம்பிய நாடுபிடிக்கும் கோஷ்டியெல்லாம் போட்டுத் தாக்கியது மத்தியகிழக்கு நாடுகளை செங்கிஸ்கானக இருக்கட்டும் அல்லது அவனது பிள்ளை பேரனாக இருக்கட்டும், அது போல மேற்கிலிருந்து நாடு பிடிககப் புறப்பட்ட அனைத்து ஏகாதிபத்தியர்களும் அலெக்ஸாண்டர் தொட்டு போட்டுத் தாக்கியது மத்திய கிழக்கு ஆசிய நாடுகள். இப்படி இருந்த இடத்தின் நிலையால் வாங்கிய அடி போய், இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த பெட்ரோலியத்தை வைத்துக் கொண்டிருப்பதால், திரும்பவும் அந்தப் பகுதி வாங்கும் அடி கொஞ்சம்நஞ்சம் அல்ல. அதனுடைய விளைவுகளை, நம்முடைய அனுபவத்தை வைத்து அளக்க முயல்வது ஆகிற காரியம் அல்ல. இந்தப் புரிதலுடன் இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்தியாவில் இஸ்லாம் வந்ததற்கு காரணம் என்னைப் பொருத்தவரை இங்கே இருந்த சாதிய கொடுமைகள். அந்தச் சாதிய கொடுமைகளை தீர்க்க உள்ளுக்குள் இருந்தே சொந்தமான ஒரு ரியாக்சனரி வளர இடம் கொடாத, செத்த அல்லது மலட்டுத்தனமான நிலையில், இடம் பிடிக்கும் பொருட்டு வந்த இஸ்லாமியரின் மதம் ரெடிமேட் நிலையில் இருந்ததால் பரவியது. கிழக்குவங்காளத்தில் நெருப்பு போல் பரவியது அங்கு இருந்த பிதுங்கி வழியும் மேல் சாதி/கீழ் சாதி வித்தியாசங்கள் என்பது வரலாற்றைப் படிப்பவர்களுக்குத் தெரியும். இது ஒருபுறம். செப் 11 2001 க்கு பிறகு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்புணர்சி என்கின்றிர்களே அது இந்தியளவில் தவறு, நமது டிச் 6 1992க்கும் குறைச்சலாக 85 வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷார் இந்தியாவில் ஹோம்ரூல் மூவ்மெண்தட் என்ற வகையில் இந்தியர்களுக்கு அரசு ஆள்வது,முக்கியமாக ஜனநாயக முறையில் ஆள்வது என்று பாடம் நடத்த முன்பட்ட காலத்தில், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜனநாயகம் என்பதை நிர்ணயம் செய்யும் முன் அதிகாரப்பங்கீடு என்ற ஒரு முக்கியமான வரைகோளைத் தேர்ந்தெடுக்காமல் வெறும் ஆட்கள் எண்ணிக்கை என்ற பலத்தை வைத்து அதிகாரத்தை கையகளப்படுத்த என்று இந்திய தேசிய காங்கிரஸுக்குள் போட்டி வர, முதல் முதலில் சிறுபான்மையோரான இஸ்லாமியர்கள் பயப்பட ஆரம்பித்தார்கள் வெகு வெகு நியாயமாக. அப்போழுது ஆரம்பித்தது தான் முஸ்லிம் லீக் (1905 வாக்கில் இருக்கும்). ஒன்றை கவணிக்க வேண்டும். ஒரு வெள்ளைக்காரனே ஆரம்பித்த காங்கிரஸ் என்ற அமைப்பு வலுப்பெற ஆரம்பித்தது அது பிரிட்டிஷ் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தாலும், உள் ஆட்சி அதிகாரங்கள் அதன் கையில் வரும் பொருட்டுத் தான் என்பது அது. இதனுள்ளே இருக்கும் ஒரு கேவலத்தைச் சொல்லித்தான் ஆகவேண்டும் இந்த பிளாக் நீண்டாலும் சரி என்று. இந்திய தேசிய காங்கிரஸாக இருக்கட்டும் முஸ்லீம் லீக்காக இருக்கட்டும் , இன்றைய இந்துத்துவ வெறிநாய்களின் அன்றைய அவதாரங்களான இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த இந்து மகாசபைக் காரர்களாக இருக்கட்டும் அதன் முக்கிய நபர்கள் , சொந்தமான உள்நாட்டு வளர்ப்பு(home grown) கிடையாது. இங்கிலாந்தில் பயின்ற கோஷ்டிகள். இங்கிலாந்தில் பயின்ற என்றால் அவர்கள் அப்பன் ஆத்தாள்கள் எதோ ஒருவகயில் வெள்ளைக்காரனுடன் சேர்ந்து கூத்தடித்த பெருமான்கள் தான் என்று ஆகும். நான் ஒரு வெள்ளைக்காரனாக இருந்து இன்றைய கோஷ்டிகளின் வீராவேச போராடி சுதந்திரம் பெற்ற கதைகளை கேட்டேன் என்றால் உண்மையில் என் குண்டியால் தான் சிரிப்பேன்.

தொடரும்..

ரோசாவசந்த், இதுவரை வந்ததைப் பற்றிய கமெண்டோ அல்லது வேறு ஏதேனும் சொல்லவந்தாலோ முடியட்டும் என காத்திருக்கவேண்டாம். புகுந்து தாக்கலாம் தாக்க வேண்டும்.

No comments: