Saturday, February 09, 2008

என்ன செய்வது இவனுகளை?



எப்படி இவன்களால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் எழுத முடிகின்றது எனத் தெரியவில்லை. தன்னுடைய ஹிப்போகிரசி இவன்களுக்கு உறைக்குமா? உறைக்காதா? உறைக்க வில்லையென்றால் அந்தளவிற்க்கு முட்டாப் பூணாக்களா? இங்கே கருணாநிதி ஆட்சி ஜெயலலிதா ஆட்சி என நான்கு முறை மாறி மாறி வந்தாகி விட்டது. அது எப்படி usual suspects மாதிரி திரும்பத் திரும்பத் இந்தப் பாப்பாரப் புடுக்குகள் 5 வருடம் காணாமல் போவதும் கருணாநிதி வரும்போதெல்லாம் புளுத்திக் கொண்டு வருவதும் ச்ச்ச்ச் இப்படி வருவதன் வித்தியாசம் இந்தப் பாப்பான்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா? இந்த வெங்கட்சுவாமிநாத புடுக்கு, ஜெயலலிதா ஆட்சியில் எந்த சமூக விழிப்புனர்வு கட்டுரை அதுவும் முதல்வரின் பெருமிதங்களையும் ரசனைகளையும் அதிகார ஆணவங்களையும் பற்றி வரைந்தது? அதற்கு நேரமில்லாத அளவிற்கு ஜெயலலிதாவின் எந்த முடியை சிரைத்துக் கொண்டிருந்தது? வெங்கட்சுவாமிநாத புடுக்குக்கு மட்டுமில்லை மற்றப் பாப்பாரப் புடுக்குகளுக்கும் சேர்த்தும் தான் இந்தக் கேள்வி. என்ன மாதிரி நம்பிக்கை இந்தப் பார்ப்பான்களுக்கு? இந்த மாதிரி இருக்குமோ? இந்தப் பார்பனரல்லா கூனாக்களுக்கு திரும்பத் திரும்ப அறவியல் மயிரியல் என்ற போர்வையில் படங்காட்டினால், அதுவும் விட்டு விட்டு தன் சௌகரியத்திற்கு என்றாலும் கூட, முட்டாக் கூனாக்கள் ஆண்டாண்டுகாலமாக காலை நக்கும் பழைய ஞாபகம் ஊறித் திளைத்து, குழம்பிப் போய், இது தான் எளிதாயிற்றே என்று நாய் காலை நக்குவது போல் நக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் செய்யும் குயுக்தியா? பார்ப்பான்களையும் அதற்கு தப்பு சொல்ல முடியாது. கோடாரிக்காம்புகள் செழித்து வளரும் பிரதேசமாயிற்றே இந்தத் தே-தமிழகம்? 97% பார்பனரல்லா பிரதேசத்தில் இந்த மாதிரி ஹிப்போகிரைட் கட்டுரைகள், குயுத்தியுடன் வரமுடியும் என்றால் உண்மையில் பார்ப்பனரல்ல கூட்டங்கள், பார்ப்பன வேதங்கள் சொல்வது போல் தே மகன்கள் தானா? வெட்டிப் பூனாக்கள் தானா? ம்ம்ம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம்பி, நரிப்பாம்புகள் கூட சேர்ந்து வாழ்ந்தால் எப்படிச் சூனாவும் வாணாவும் வெந்து போகும் என்பதற்கு இந்தப் பார்பனரல்லா கூனாக்களே நல்ல உதாரணம்.

இன்று இந்தக் கடுப்பைப் பற்றி எழுத வரவில்லை. எழுத வந்தது வேறு. தற்ப்போதைய அமெரிக்க தேசத்து அதிபர் தேர்தலைப் பற்றி, அதன் முக்கியத்துவத்தைப், அதுவும் முன்னெப்போதும் இல்லாத, முக்கியத்தைப் பற்றி எழுதி வைக்க வேண்டும் என்ற ஆசை. நேரப் பற்றாக்குறையும், விரைவாக எழுதத் தெரியாத என்னுடைய திறனில்லாமையும், துன்பப் பட வைக்கின்றது. ஒரு நல்ல காத்திரமான, எந்தக் குயுக்திகளும் இல்லாமல் அடுத்தவன் முட்டாப்பய, தான் பெரும் புளுத்தி என்னும் எண்ணம் துளிக்கூட வெளிப்படா பல கட்டுரைகள், வலது இடது என்றில்லாமல் இந்த மேற்கத்திய உலகில் காணக் கிடைப்பது உண்மையிலேயே வயிற்றெரிச்சலைக் கொடுக்கின்றது. ஆறு மாதகாலமாக எழுத நினைத்தது தள்ளிக் கொண்டே போகின்றது. சமீபத்திய வால் ஸ்டீரீட் பத்திரிக்கை கட்டுரைகளும், அதிபராக வர ஆசைப்படுபர் முக்கியமாக ரிபப்ளிகன் கட்சியில் இருப்பவர்கள் , கொடுக்கும் சில அரசியல் வாக்குறுதிகள் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியமான ஒன்று எனத் தெரிய வைக்கின்றது.

அமெரிக்க தேசம், அதன் கனவுகளைத் தாண்டி, அதன் அதிகார ஆணவங்களைத் தாண்டி, அதன் ஆதாரக் கோட்பாடுகளால் என்னைக் கவர வைத்த ஒரு தேசம். தன்னுடைய தேசமக்கள் என்றில்லாமல், உலக மக்கள் எவருக்குமாக, அதன் அதிகார எல்லைக்குள், வரைந்த உரிமை சாசனம் மிகவும் ஆச்சர்யப் படக் கூடிய ஒன்று. என்னுடைய ஆரம்பகால வலைப் பதிவுகள் காலத்தில் அதாவது 2004ல், அமெரிக்க உரிமை சாசன விவரணைகளை (அதன் முதல் பத்து) மொழியாக்கம் செய்திருந்தேன். ஒரு 6,7 மாதங்களுக்கு முன் அமெரிக்க ஆதாரச்சட்டங்களையும் அதை நிர்வகிக்கும் முறைகளைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு வந்தது. படிக்கப் படிக்க வியப்பும் அதே சமயம் இந்த நிர்வகிக்கும் முறைகளில் இருக்கும், எனக்குப் பட்ட, ஓட்டையும் தான், இங்கே எழுத வேண்டிய முனைப்பின் பின் இருப்பது.
< இது இன்னமும் எடிட் செய்யா நிலையில் மனதில் தோன்றியதை கொட்டி வைக்கின்றேன். பின்னர் தேவைப்பட்டால் எடிட் செய்து கொள்ளலாம் –என இங்கே பதிக்கின்றேன். ஒழுங்கில்லா நிலைக்குப், படிப்பவர்கள் மன்னிக்க >

மேற்கத்திய உலகம் இந்த உலகிற்கு கொடுத்த முக்கியமான கொடை இந்த முறைபடுத்தப்பட்ட மக்களாட்சி முறை என்று தனிப்பட்ட வகையில் கருதுகிறேன்.(குடவோலையையும் மக்களாட்சியையும் அதன் ஓற்று வேற்றுமைகளை பின்னர் கவனிப்போம்). அந்த வகையில் பதினேழாம்/பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும், மன்னராட்சிக்கு எதிராக வந்த மாற்றங்களைப் பற்றி ஆராயலாம். மிக அடிப்படையில், எந்த நிலையில், ஒரு சமூகம், மன்னராட்சி அல்லது ஒரு தலைவன்/சர்வாதிகாரியின் அல்லது ஒரு சிறு குழுவின் கண்கானிப்பில் தன்னை விட்டு விடுவது இயல்பாக நடக்கின்றது அதே சமயம். வேறு ஒரு சமூகம், அதன் எதிர் நிலையான, இந்த மக்களாட்சி என்ற முறையை, அதாவது தன்னைச் சுற்றி நிகழும் அனைத்திலும் தன் தனிப்பட்ட விருப்பத்தை ஏற்றும் வாய்ப்புள்ள ஒரு சமூக கட்டமைப்பை ஏற்பது இயல்பாக நடக்கின்றது எனவும் ஆராய வேண்டியிருக்கின்றது. தற்போது எங்கேயும் இந்த சுத்தமான அமைப்புமுறை / பிரிவு இல்லையென்றாலும், இதனுடைய வாசனையை நம்மால் அறியலாம். இந்த சுத்தமான அமைப்புமுறை மற்றும் தெளிவான பிரிவு இல்லாததற்கும், இந்த அடிப்படையே ஒரு காரணம் என்றும் பின்னால் கணிக்கலாம் ஒவ்வொரு இனத்திற்கும் (அதாவது உயிரினத்திற்கும்) ஒரு டிஎன்ஏ இருப்பது போல ஒவ்வொரு மனித சமூகக் கூட்டத்திற்கும் ஒரு சிந்தானா முறை "டிஎன்ஏ" இருக்க வாய்ப்பு உள்ளது என எண்ணிக்கொண்டால், சிலவற்றை அர்தப்படுத்தலாம் ( அனர்த்தமும் படுத்தலாம்). தமிழனின் சாப்ட்வேரில் சில பல பிரச்சனை இருக்குப்பா என்பான், சாப்ட்வேரில் வேலை பார்க்காத என் நண்பன். அப்படி அர்த்தப்படுத்த வாய்புள்ளதாக நான் எண்ணுவது இந்த முன்னர் சொன்ன பிரிவு. தாய்வழி/ பெண் வழி சமூகம் அல்லது விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த சமூகம் (நீட்டிப்பாக) இந்த தொழிற்சாலைகள் சார்ந்த சமூகங்கள் ஒரு வகை டிஎன்ஏ என்றால் ( இது ஒரு வகை குருடர்கள் யானை பார்த்த கதை தான் என்றாலும் - இது தரும் சுவாரிசியம் என்னை வசீகரிக்கின்றது), ஆண்வழி சமூகம் அல்லது வியாபாரம், கேளிக்கை, தொழில் திறன் அல்லது தனிப்பட்ட உடல் திறன் (காசுக்கு ஆள் வெட்டறது கூட!!) வழிச் சமூகங்கள் ஒரு வகை டிஎன்ஏ. இந்த இரண்டு வகையே, மக்களாட்சியா அல்லது பெரு மன்னர்/பெரு அதிபர் ஆட்சியா எனத் தீர்மானிப்பது என்பது என் எண்ணம். இந்த மேற்கு மட்டும் கிழக்கு சிந்தனாமுறைகளுக்கு அடிப்படை கூட இந்த இரண்டு வகையாக இருக்கலாம். வியாபாரியான கனியன் பூங்குன்றனார் எழுதியதற்கும் , விவசாய குடும்ப திருவள்ளுவரின் எழுத்திற்கும் ஆழத்தில் உள்ள அடிப்படை வேறுபாட்டை இந்த இரண்டு வகை டி என் ஏ பிரச்சனையாகக் கூட பார்க்கலாம். மேலும் இதன் நீட்டிப்பாகவே இந்த அமெரிக்க கன்சர்வேட்டிவ்ஸ்கள் அதன் எதிர் பக்கத்தில் இருக்கும் லிபரல்கள் (அத்தாரிட்டேரியன் vs அனர்கிஸ்ட்டுகள்) எனவும் நீட்டித்திப் பார்க்க முடியும் என நினைக்கின்றேன். மேலொட்டமாக இவைகள் இந்த தெளிவான கருப்பு வெள்ளை படலத்தில் இல்லாமல் ஒரு கலப்படியான கலவையாக இருக்கும் ஆனால், இதனை வெங்காயத் தோல் உரிப்பது போல் லேயர் லேயராக உரித்தால், இந்த கருப்பு வெளுப்பு அடிப்படை தெரியவரலாம் என்றூ ஒரு அனுமானம். சரி இது எனது தனிப்பட்ட கருதுகோள் -. கவனிக்க - எந்த வகைப் பிரிவு எந்த அடிப்படையில் சிக்கும் என்பதை சொல்லவில்லை அதை அவரவர் தனிப்பட்ட புரிதல்களுக்கு விட்டு விடுகின்றேன்.

கடந்த இரு நூற்றாண்டு அமரிக்க கூட்டாட்சியின் போக்கை, மனநிலையை தெரிந்து கொள்ள அந்தந்த காலத்திய சட்டத்திருத்தங்களைப் பற்றியும் அந்த காலத்திய நீதிமன்ற முடிவுகளும் கருத்துக்களும் அவசியம். அமெரிக்க சிவில் போரைத் தூண்டியதில் அந்தக் கால நீதிமன்ற முடிவு மற்றும்கருத்துக்கள் ஒரு காரணம் என்பர் பலர். அமெரிக்க கூட்டாட்சி ஆதார சட்டங்களை ஒரு 20 அல்லது 25 பக்கங்களில் அடக்கிவிடலாம். ஆனால் அதை ஒட்டிய நீதிமன்ற கருத்துக்கள் , நீதிமன்ற முடிவுகளை படிக்க, தெரிந்து கொள்ள, ஒரு கேரியர் தேவைப்படலாம். இதைப் படிப்பவர்கள், இதில் எழுதப்பட்டவைகள் ஒரு தனி மனித புரிதல் முயற்சிகள் என்றளவில் பார்த்தால் ஷேமம். ஆதாரங்களை சேகரிக்கப் போவதில்லை எவருமே கூகுளாண்டவர் புண்ணியத்தில் பலவற்றை தெளிந்து கொள்ள முடியும்.

அமெரிக்கப் புரட்சியின் போதே இந்த அரசாங்க வடிவைப் பற்றிய விவாதம் இருந்தது. அரசாங்கங்களைப் பற்றி இரண்டு வித மரபுகள் இருந்தன. எந்த ஒரு தனிமனிதரின் நன்னடத்தையையும் கடமையையும் தீர்மானிப்பது, முன்பே ஒத்துக் கொண்ட ஒப்பந்தத்தின் எல்லையே என ஒரு மரபும், தனி மனிதர்கள் நன்னடத்தையையும் கடமையையும் பிறப்பிலே கொண்டவர்கள் எனவும் அவர்களின் அரசியல் பங்களிப்பே அரசாங்கங்களை நடத்திச் செல்லும், என ஒரு மரபும் இருந்தன. (மிக எளிமையாக்கிவிட்டேன் என நினைக்கின்றேன் - மேலும் விரிவாக அறிய ஆசைப்படுபவர்கள் Social contract theory என கூகிளிட்டு ஆரம்பித்து அறிந்து கொள்ள முயலாம்). இந்த இரண்டு வித மரபுகள் திரிந்து இப்பொழுது அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் எனவும் குடியரசு கட்சியினர் எனவும் வந்துள்ளனர். இதன் ஆரம்பகால கட்டங்களில், மத்திய கூட்டாட்சிக் குழுவினர் (federalists) எனவும் இவர்களின் எதிர் குழுக்கள் எனவும் இரண்டு கூட்டணியினர் இருந்தனர். ஜார்ஜ் வாஷிங்டனின் ஆட்சிக் காலத்தில், இரண்டு குழுவினரும் ஆட்சிப் பங்கில் இருந்தனர்.

எல்லா மக்களாட்சி முறைகளைப் போலவே அமெரிக்க கூட்டாட்சியும் மக்கள் மன்றம், நீதிமன்றம், அரசாங்க மன்றம் என்னும் மூன்றடுக்குகளால் ஆனது. இந்தியா மூன்றடுக்கா அல்லது இரண்டடுக்கா என்னும் குழப்பம் இப்பவும் எனக்கு உண்டு. 1947-52 கலில்இந்திய அரசாங்கம் உருவான முறையும், 1768-1791களில் அமெரிக்க அரசாங்கம் உருவான முறையையும் ஒப்புமைப் படித்திப் பார்க்கலாம். மேலோட்டமாகப் பார்த்தாலும் இரண்டும் தலைகீழான முறையில் வளர்ந்தது எனத் தெரியும். மிக வலிமை வாய்ந்த மாநிலங்கள் ஒன்றினைந்து அமெரிக்க கூட்டாட்சியை வளர்த்தெடுத்ததும், வெள்ளைக்காரன் தன் நிர்வாக வசதியை மட்டும் கருத்தில் கொண்டு அமைத்த அரசாங்க வடிவை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை வைத்து இந்திய ஆட்சிமுறை மல்லுக்கட்டுவதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மன்றம் இரண்டடுக்கு கொண்டது. முதலாம் அடுக்கு, மக்கள் தொகைக் கேற்ப அவர்களது பிரதிநிதிகள்(representatives), இரண்டாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தேடுக்கப் பட்டு மக்கள் மன்றத்துக்கு அனுப்பப் படுவர். அவர்கள் சார்ந்த கட்சியின் பெரும்பண்மை, யார் அந்த மக்கள் மன்றத்தை கட்டுப் படுத்துகின்றார்கள் என வரும். இந்த மக்கள் மன்றம் அதன் எல்லைக் கேற்ப்ப, அரசாங்க கண்காணிப்புக் குழுக்களை உண்டாக்கி வழி நடத்தும். பெரும் பாண்மைக் கட்சியினர் , இந்தக் குழுக்களின் எஜண்டாக்களைத் தீர்மாணிப்பர். அடுத்து இரண்டாம் அடுக்கு, இந்த தேசத்து மாநிலங்களின் ஒவ்வொரு மாநிலத்துக்கான இரண்டு பிரதிநிதிக்களைக்(Senators) கொண்டு அமைந்த ஒன்று, இந்தப் பிரதிநிதிக்கள் ஆறாண்டுக்கு ஒரு முறை அந்த மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப் படுவர். சிறிய மாநிலம் – பெரிய மாநிலம் இரண்டிற்கும் ஒரே மாதிரியான பிரதிநிதிக்கள். இந்த அடுக்கு, மக்கள் மன்றத்தை விட பலம் வாய்ந்தது. அரசாங்க மன்றம், மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு தலைவரின்(president) கீழ் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை அமையும். அந்தத் தலைவரின் விருப்பத் தேர்வுகள் அந்த அமைச்சரவையை அமைக்கும். அந்த அமைச்சரவை நபர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள். ஜான் ஃகென்னடி தனது தம்பியை ஒரு முக்கிய அமைச்சராக்கியிருந்தார். ஆனால் மக்கள் மன்றத்தால் அங்கீகரிக்கப் படுபவர்கள். அமெரிக்க நீதிமன்றங்கள், பல இருந்தாலும், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமானது. இது ஒன்பது நீதிபதிகளால் ஆனது. இவர்களை அரசாங்கத் தலைவர் தேர்ந்தெடுப்பார். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இவர்களது ஆட்சிக்காலம், இவர்கள் இறக்கும் வரை நீடிக்கலாம் அல்லது இவர்களாக பதவி விலகும் வரை நீடிக்கலாம். இவர்களையும் இரண்டடுக்கு மக்கள் மன்றம் அங்கீகரிக்க வேண்டும். மக்கள் மன்றம் இவர்களை (அரசாங்கத் தலைவரையும்) பதவி நீக்கலாம் ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மக்கள் மன்ற ஆதரவு தேவை. உச்ச நீதிமன்றம், அமெரிக்க ஆதார சட்ட திட்டங்களின் அதிகாரப் பூர்வமான காப்பாளர்கள். அவர்களது நீதி இறுதியானது. 9 நீதிபதிக்களின் தனிப் பெரும்பாண்மை, அவர்கள் வழங்கும் நீதியை நிலை நாட்டும். குழப்பமாக இருக்கின்றதா? நீதிக்கு எதற்கு தனிப் பெரும்பான்மை என்று? நீதிக்கு ஒரு பக்கம் மட்டும் இல்லை என்பதால் தான் இந்தக் குழப்பம். கன்சர்வேடிவ்களின் நீதி , லிபரல்களுக்கு அநீதி. லிபரல்களின் நீதி கன்சர்வேடிவ்களுக்கு அநீதி. ஆயுட்கால நீதிபதிகளால் வரும் இந்த சமசீர் இல்லா நிலை தான் நான் ஓட்டை என முன்னர் சொன்னது.
அமெரிக்க உச்ச நீதிமன்றமும் நீதிபதிக்களும் , ஆதார சட்ட அதிகாரபூர்வமான காப்பாளர்களாக ஆன கதை சுவாரிசியமானது, அதற்கு வாசிங்டன் காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ( அமெரிக்க தேர்தலுக்குள் இந்த கட்டுரையை முடித்தால் தனிப்பட்ட அளவில் ஒரு திருப்தி இருக்கும், பார்க்கலாம் முடிகின்றதா என)
.தொடரலாம்...

மேலும் படிக்க