இரண்டு சங்கராச்சாரி கைது ஆனது இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என முதல் முதலில் கைது விடயம் பட்ட போது புலப்படவில்லை. விடயம்உள்ளே இறங்கச் சற்று நாள் பிடித்தது. பேரம் முடிந்த வுடன் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். சுந்தரேசனும் ரகுவும் குண்டர் சட்டத்தில் அடைபட்ட பிறகு தான்சரி இது பேர எல்லைகளை தாண்டி விட்டது எனப் புலப்பட்டது. முன்னெல்லாம் (மு)நண்பர் ரோசாவசந்த் சொல்வது போன்ற குட்டி பூர்ஷ்வாக ரத்த அழுத்தத்தையெல்லாம் சமன்படுத்தி உலாவும் போது கையில் தட்டுப்படும் துக்ளக் அழுத்தத்தை எகிறி மேலே அடிக்கும். இப்பொழுதெல்லாம் மனது குதூகலிக்க http://groups.yahoo.com/group/Thuglak/ மற்றும் http://www.kanchiforum.org/ இங்கே செல்லுகின்றேன். உண்மையிலேயே மனது லேசாகிறது. முன்னே வரும் கடும் கோபம் , "இந்த சமயத்தில்" வருவதில்லை. அந்த யாகு குழுமத்தில் இரண்டு வலைப்பதிவாளர்கள் உறுப்பினர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒருவர் முன்னாள் காப்பிகடை ஓனர். காஞ்சி மடத்து சீடர். காஞ்சி மடம்+ ஜெண்டில்மேன் டைரக்டர் + ஜீன்ஸ் + இவர் + பணம் என ஒரு கோட்டோவியம் போடலாம். சரி பெரிய இடத்து விவகாரம். இன்னொருவர் ஓ******ப் பொருளை ஓ*****ப் போகிறேன் சவடால் பார்ட்டி. இவர்கள் சோகத்தில் மனது குதூகலிக்க சங்கடமாக உள்ளது.மனதார வெறுக்கும் ஒரு விடயத்தைப் போல மனதின் ஒரு பகுதி ஆகிவிடும் என்பதை உணர அதிர்ச்சியாக இருக்கின்றது. தன் உறவு இல்லாத மற்றோரின் இறக்கங்களில்/துன்பங்களில் சந்தோசம் அடைவது பார்ப்பனாதிகளின் அடிப்படைக் குணம். ரிக் வேதத்தில் இருந்து ஊறக் கூடிய ஒரு அடிப்படைக் குணம் இது. அந்த அடிப்படைக் குணத்தை என்னிடம் காண்பது என்னைப் பொறுத்தளவில் பேரடியாக இருக்கின்றது. அந்தளவுக்கு ஒரு புளகாங்கிதத்தை இந்தக் கைது தருகின்றது. நான் மட்டுமல்ல இன்னமும் சமுதாயத் தளங்களில் நான் நிற்கக்கூடிய பக்கங்களில் நிற்கக்கூடியவர்களிடம் இந்தப் புளகாங்கிதம் ஊறுவதை உணர முடிகின்றது. இந்தப் புளகாங்கிதம் இரண்டு வகைகளில் துன்பம் தரக் கூடியது. ஒன்று முதலில் இந்தக் கைது கீழிறப்பட வேண்டிய அல்லது சரியாகச் சொன்னால்சமனடிக்கப்பட வேண்டிய நிலையின் மட்டம் அல்ல என்பது. அடுத்து எந்தளவுக்கு தனிப்பட அளவில் போராடி உள்ளே ஊறுத் தொடங்கும் பார்ப்பனீயத்தை அறுத்தெறிய வேண்டி இருக்கும் என்பதைப் பற்றியது. இது இப்படி என்றாலும் இன்னொரு சாத்தான் மனதுசொல்லுகின்றது. மீசை அறும்பத் தொடங்கிய 83ல் சங்கடப்பட ஆரம்பித்த மனது ஒவ்வொன்றாக மற்ற எல்லா ஓட்டை ஒடிசல்களையும் பார்க்கும் திறன் வந்து சங்கடத்திலே இருந்ததற்கு இந்த மாதிரி மனது குதூகலிக்க(போலித் தனமாகவே இருந்தாலும்) சான்ஸ் கிடைப்பதே கொஞ்சம். கிடைச்சதை எந்தவித சங்கடமும் இல்லாமல் அனுபவித்து விடனும். பின்விளைவுகளை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறது. என்ன செய்வதென்று புரியவில்லை.
சில நாட்கள் முன் டீசே தமிழனிடம் அவர் அவரது நண்பரிடம் கேட்ட கேள்விகள் என்ன என ஏதோ விவாதத்தில் கலந்து கொள்ள போகிறவன் போலக் கேட்டேன். அவரும் பொறுமையாக அடித்துக் கொடுத்தார். பதிலே சொல்லவில்லை.அது குறுகுறு என, இப்போழுது தெரிந்ததை அடிப்போமே என ஒரு எண்ணம்.
1. திராவிட எழுச்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலையென்ன?
திராவிட எழுச்சி என்பது நடந்தாக வேண்டிய ஒரு கட்டாயம். அந்த எழுச்சியை இலகுவாக்கியது, அறிவு சார் இயக்கமாக மாற்ற முயன்ற ஈவெராவின்தொண்டு. ஈவெராவின் கடும் உழைப்பை, தள்ளாத வயதான கால்த்தில் நீரிழிவு நோயுக்கு உள்ளான போதும் கூட குறையாத உழைப்பை,அண்ணாத்துரை கோஷ்டியினர் சுலபமாக அறுவடை செய்தனர். அதிகாரத்தில் பங்கீடு புக இது நேரமல்ல என கடுமையாக உணர்ந்து எதிர்த்த போதும், அதிகார மோகம் திராவிட எழுச்சியை நடுத்தர சாதியினர் எழுச்சியாக மாற்றியது. அதுவே கடை சாதியினர் மேல் எழுந்து வர பெரும் தடையாக இப்பொழுது உள்ளது. 1850-1920 வரை தலித்துகளின் குரல் தனிப்பட்டு இருந்தது. ஆனால் அதுவே 80களில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும்வரும் வரை காத்திரக்க வேண்டியிருந்தது. இந்த அளவு தடை இருந்தது எதனால் என்பது ஆராயப்படவேண்டும். 62ல் திமுகா எதிர்கட்சி அந்தஸ்தைபிடிக்கும் வரை இருந்த முக்கியமான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் இயக்கம் இவர்களை வளைத்து பிடித்து தனித்து வளரவிடாமல் ஆக்கியதா அல்லது திமுகாவின்வளர்ச்சி ஏற்படுத்திய நடுத்தர சாதியினரின் திடீர் எழுச்சி கொடுத்த அச்சத்தில் காங்கிரஸ் இயக்கம் இவர்களை பாதுகாக்கிற போர்வையில் தனித்து வளரமுடியா நிலை ஏற்பட்டதா? பார்பனியதின் ஆணிவேர் சுதந்திர இந்தியாவில் செழிக்கக் காரணமான காந்தியுடனாவது தலித் இயக்கக் குரல் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்தில் ஈவெராவுடன் அவர் இயக்கத்தின் உச்சத்தில் இருந்த போது அவருடன் தலித்திய குரல் ஏதேனும் டயலாக் வைத்திருந்ததாகத் தெரியவில்லை. ஈவெராவுடன்நெருங்கிய தளத்தில் இருந்தவர்கள் எல்லாம் மற்ற மேல்சாதிக் கூட்டம் தானே ஒழிய தலித்திய சாதிகளின் வாசனை இருந்ததாகவேத் தெரியவில்லை. அண்ணாத்துரையைவளர்த்தது போல் இணையான ஒரு தலித்திய ஆளுமையையும் ஈவெரா வளர்த்திருந்தால் நல்ல வளர்ச்சி இருந்திருக்கலாம். "லாம்" தான். கருணாநிதியை அருகில் வைத்திருந்ததிலேயே ஈவெராவிற்கு ஒரு தலித்திய நபரை அருகில் வைத்திருந்ததற்கான மனசாந்தி கிடைத்திருக்கும் என ஊகிக்கலாம், கருணாநிதி முதல் அமைச்சரானவுடன் பேசிய வார்த்தையிலிருந்து.அது கருணாநிதியை பலகாலம் உறுத்தியது என்று எங்கோ படித்திருந்தேன். ஆனால் கருணாநிதியின் சாதியோ உண்மையான தலித்திய சாதி அல்ல. மேல் ஜாதியினருடன் நேரடியான மற்ற நடுத்தர சாதியினருக்கு கூட கிடைக்காத ஒரு தளத்தில் தொடர்பு இருந்தது. மேல் ஜாதியினருக்கு கிடைத்தபணம் அறுவடை செய்ய எளிதான புதிதாகத் தோண்றிய சினிமாத் துறையில், இசை நடனம் போன்ற அந்த காலகட்டத்தின் முக்கிய அம்சத்தை கைக்குள் வைத்திருந்த சாதி. சுருக்கமாகச்சொன்னால்திராவிட எழுச்சி நடுத்தர வர்கம் மற்றும் பார்பனர் இல்லாத மற்ற மேல்சாதியினரில் எழுச்சி மட்டுமே.
2. சாதீய ஒதுக்கீட்டில் கல்வி, வேலை போன்றவை யாரால் கிடைத்தது? அல்லது பத்துவீத பிராமணருக்கே அதை முழுதும் தாரை வார்த்துக்கொடுப்பதா உங்களது நிலைப்பாடுபத்து சதவிகித பார்பனர் அல்ல தமிழ்நாட்டில் அந்த அளவு இன்னமும் குறைவு. 1917ல் ஜஸ்டிஸ் பார்ட்டியின் பிறப்புக்கு முன் இருந்த பார்பனரல்லாதோர்சங்கத்தின் முயற்சியால் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு சட்டமானது.
3. அரசியலில் யாரும் பங்குபெறலாம் என்ற ஓர் நிலைப்பாடு எங்கிருந்து முளைத்தது?
வெள்ளைக்காரன் புண்ணியத்தில். அன்னிபெசண்ட் என்பவரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், முக்கியமாக கடைசியாக செத்துப் போன சங்கராச்சாரியும் குழுவும்வருணாஸ்ரமத்தை காரணம் காட்டி நாலாம் வருணத்தினரை முற்றாக அரசியலில் பங்கு பெற விடாமல் செய்ய முனைந்ததை தீவிர மாக எதிர்க்க தோன்றிய பார்பனரல்லாதோர்சங்கம் வைத்த கோரிக்கைகளை வெள்ளைக்காரன் ஒத்துக் கொண்டதால். இது கூட வெள்ளைக்காரன் ஆஷைக் கொள்ள ஒரு ஆழ்மன தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
4. சா¢. சினிமாவில் சீரழிவை விடுவோம்,, அங்கும் திராவிட பாதிப்பு இல்லாவிட்டால் யாருடைய கைஓங்கியிருக்கும்?
திராவிட பாதிப்பு இல்லாவிட்டிருந்தால் ஹிந்திப் படங்கள் கோலேச்சியிருக்கும். ஹிந்தி முதலாளிகள் அறுவடை செய்து கொண்டு இருப்பார்கள். இணையத்தில்பார்பான்கள் எல்லாம் உங்களிடமும் என்னிடமும் ஹிந்தியில் பதில் சொல்லுவார்கள் , தமிழ் பதிவென்று போட்டுக் கொண்டு. வேறென்ன?
5. திராவிடக்கட்சிகளின் போதாமையால்தான் தலித் அரசியல் தோன்றியது எனலாம். திராவிட எழுச்சி என்ற ஒரு சின்ன ஏணியில்லாமல் எவ்வாறு அடித்தளமக்கள் இந்தளவு (மிகச்சிறிதளவெனினும்) எழுச்சியுறமுடிந்திருக்கும்?
திராவிட என்னும் போர்வையில் எழுந்த இந்த நடுத்தர சாதியினரின் எழுச்சி எந்தவகையிலும் தலித்திய எழுச்சிக்கான ஏணி அல்ல. சொல்லப்போனால்பெரும் தடை. நடுத்தர எழுச்சியும் தலித்திய எழுச்சியும் ஒன்றாக் ஒரே தளத்தில் நடந்திருக்க வேண்டும்.
6. திராவிட இலக்கியங்கள் குறித்து எனக்கும் கிட்டத்தட்ட உங்களின் பார்வையே. அவர்களின் பலரே சொல்லியிருக்கிறார்கள். தங்களுக்கு எழுத்து பிரச்சாரமாக§வு இருந்ததென்று பாரதிதாசன்கூட கம்பராமாயணத்தை நிராகா¢க்கவில்லையென எங்கையோ கேள்விப்பட்டதாய் நினைவு. பாரதியின் சுதந்திரக்கவிதைகள் உங்களால் விரும்பப்படுமெனின் பாரதிதாசனின் தமிழ்த்தேசிய எழுச்சி.
சாகா இலக்கியங்கள் என்பதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது. வெற்றிபெற்ற இனத்தின் வரலாறே பொது வரலாறாவது போல் வெற்றி பெற்றஇனத்தின் இலக்கியங்களே சாகா இலக்கியங்களாகக் காட்டப்படுகின்றது. எனக்கு ஆதியும் அந்தமும் அழிந்த போன, எவருடயது எனத் தெரியாமல்கிடைக்கும் இலக்கியத்தில் சற்று ஆவல் உண்டு.பாரதி பாரதிதாசனெல்லாம் அந்த அந்த காலகட்டத்தின் தெறிபுகளே ஒழிய வேறொன்றுமில்லை.பாரதி ஒரு சிலருக்கு ஒரு அடையாளம் , பாரதிதாசனும் வேறு சிலருக்கு ஒரு அடையாளம் அவ்வளவே.