பராக் ஒபாமாவின் பொருளாதார ஊக்கி திட்டம் கீழ் மன்றத்தில் தேர்வாகி, இப்போது மேல் மன்றத்தில் தேர்வாக கூடிய நிலையில், பழமைவாதிகளின் கடும் தாக்குதலுக்கு இடையே நிற்கின்றது, மூன்றே மூன்று யானைக் கட்சியினரின் ஆதரவில். பழமைவாதிகளின் மீது நுனி முதல் அடி வரை வெறுப்பிருந்தாலும், அவர்களிடம் காணும் ஒரு நல்ல (?) குணம், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் தான் எனும் பிடிவாதம். மற்றும் அவர்களிடையே இருக்கும், தன் ஆள் ஒரு திருட்டு விபச்சார (கவனிக்க ரி இல்லை) மகனாக இருந்தாலும், தன் ஆள் என்றால், அவன் பின்னே நிற்கும் அசட்டுத் துணிவு. அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள், தன் ஆளுக்கு ஒரு வாதம் , அடுத்த ஆளுக்கு ஒரு வாதம் என்ற வித்தியாசம் கூட வெளியே தெரியாது வைப்பார்கள். இந்தப் பொருளாதர ஊக்கியை மையம் வைத்து தாக்கி, இதன் செலவுத் திட்டங்கள், ஏழ்மை வகுப்பினர் பலன் பெரும் வகையில் அமைந்திருப்பதும், நிறுவணங்களுக்கான வரி விலக்கு இல்லாமல் இருப்பதும் அவர்களை முழு முடுக்கி வைத்திருப்பது ஒரு காரணம் என்றாலும், மற்றுமொரு காரணம், அவர்களது மூணுகால் பிடிவாதம் தான். அவர்கள் இப்படி ஒரு மித்த எதிர்ப்பைக் காட்டுவதிலிருந்து, கழுதைக் கட்சியினர் கத்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது. புஷ்ஷின் பொருளாதார, ராணுவ கொள்கைகளுக்கு ஒத்துப் போன கழுதைக் கட்சியினரின் அளவில் பாதி அளவிற்குக் கூட யானை கட்சியின்ரால் ஒபாமாவிற்கு இனைந்து போக மாட்டார்கள்.
[மன்னிக்க நான் பாட்டுக்கு யானைக் கட்சி / கழுதைக் கட்சி என வார்த்தை சுருக்கத்திற்கு எழுதுகிறேன். கழுதைக் கட்சியினர் என்றால் அது ஒபாமா கட்சியையும் யானைக் கட்சியென்றால் அது புஷ் கட்சியையும் குறிக்கும். "ஜாக் அஸ்" என தேர்தலில் நின்ற, மிக முன்னால் அமெரிக்க அதிபரான அண்ட்ரு ஜாக்ஸனை, தாக்கிய சமயத்தில், டெமாகரடிக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரு, அதையே தன் சின்னமாக கொண்டதால், டெமாகரெடிக் கட்சியினர் சின்னமாக கழுதை ஆனது. ரிபளிகனுக்கு யானை சின்னம் வந்தது ஒரு அரசியல் கார்டூன் மூலமாக. சரி நம்ம கதைக்கு போவோம்.] Aஇப்படி தாராளமயத்தினரும் ( லிபரலுக்கு என்னுடைய தமிழாக்கம்) பழைமைவாதிகள் போல், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்றால் அவர்களும் பழைமைவாதிகள் போல ஆக மாட்டார்களா என்றால் என்னிடம் "நேர்மையான" பதில் இல்லை. இந்த பழமைவாதிகள்/தாராளமயத்தினர் போராட்டம், சுர/அசுர போராட்டம் போல் தான். இனைந்து போக வழியில்லை. இனைந்து போனால் அங்கே அதன் பின் குழப்பம் தான். முழு தாராளமய அதிபருக்கு, அமெரிக்கா அதனுடைய அடிப்படை சுயத்தில், நீண்ட நாட்களுக்கு ஆதரவு தராது. இந்த முதல் இரண்டு வருடங்கலுக்கு எந்தளவிற்கு தாரளமய திட்டங்களை புகுத்த வேண்டுமோ, அந்தளவிற்கு புகுத்தி, அடுத்த இரண்டு வருடங்களுக்கு பழமைவாதிகளின் "வேடம்" போட்டால், மீண்டும் நான்கு வருடங்கள் உறுதி. ஜார்ஜ் புஸ் செய்ததும் அது தான் அவரது முதல் இரண்டு வருடங்கள் எந்தளவிற்கு பழமைவாதிகளின் பொருளாதார/ராணுவ திட்டங்களை புகுத்தமுடியுமோ அப்படி புகுத்தி, பின் அடுத்த இரண்டு வருட தாரளமய வேடம் போட்டு திரும்ப தேர்தலை கையாண்டார். அவரது இறுதி இரண்டு வருடங்களும் அவரை தாராளமய (முக்கியமாக பொருளாதார) அதிபர் என்றே பழைமைவாதிகள் திட்டி வந்தனர்.
இன்றைய வால்ஸ்டிரீட் பத்திரிக்கையில் இந்தப் பொருளாதார ஊக்கியைத் தாக்கி கடுமையான கருத்து வந்துள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனை பொருளாதாரச் சந்தையில் பணச் சுற்று இல்லாமைதான். வங்கிகளுக்கிடையேயான பணச்சுற்று நின்று அதன்பின் வங்கிகள் அதற்கு அடுத்த தரப்பிற்கு பணச்சுற்றை விட முடியா நிலைமையில் எல்லா பொருளாதார இயக்கங்களும் கரகர வென்று ஆகிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பணச்சுற்று உராய்வு எண்ணையைப் போன்றது என்றே கருதப்படும். இந்தப் பணச்சுற்றை முடுக்கிவிடுவது எப்படி என்பதில் பழமைவாதிகளுக்கும் தாராளமயத்தினருக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. பழமைவாதிகள் பொருளாதார நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதன் மூலம் பணச்சுற்றை இயக்கமுடியும் என்னும் நம்பிக்கை உடையவர்கள் மேலும் அவர்களது அரசியல் பின்புலமும் பொருளாதார நிறுவனங்கள்(சிறிது/பெரிது) சார்ந்தது. தாராளமயத்தினர் காப்பாள அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களது அரசியல் பின்புலமும் காப்பாள அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளோர் மூலமே வருவது. அதுவும் ஒபாமா இந்த தேர்தலில் ஒருங்கினைத்தது அப்படி காப்பாள அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளோரையே . ஆகவே ஒபாமாவின் இந்த பொருளாதார ஊக்கித் திட்டத்தில் பணச் சுற்று ஏழ்மை/இயலாமையிலிருந்து காப்பதற்கான திட்டங்களுடன் உள்ளது என்பது ஆச்சர்யப் படத்தக்கதல்ல. மேலும் அந்தப் பணச்சுற்று "நிச்சயமாக" செலவிடப்படும் என்னும் அடிப்படையில், அப்படி செலவிடப் படும்போது அது ஒரு பொருளாதார ஊக்கத்தைத் தரும். அந்த ஊக்கம் மேலும் வேகமெடுத்து பொருளாதாரத்தை முன்னெடுக்கும் என்பது அவர்கள் கருத்து. நீயுயார்க் டைம்ஸ்ஸில் பத்தி எழுதும், சமீபத்தில் நோபல் பரிசினைப் பெற்ற, பால் குரூக்மன் போன்றார், இதைவிட பெரிதான பொருளாதார ஊக்கித் திட்டத்தினை முன்வக்கின்றனர். குரூக்மேன் ஒபாமா செய்வது பத்தாது என்று வேறு சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். வால்ஸ்டீரீட் போன்ற பழமைவாத எண்ணத் தொட்டிகள் (இது திங் டாங்ககிற்கான கிண்டலான தமிழாக்கம்), இதற்கு நேர் எதிராக அமெரிக்க நிறுவணங்க்ளுக்கு வரிவிலக்கு தருவதல் மூலம், அவர்கள் அந்த வரிவிலக்கான பணத்தை திரும்ப நேரடி கடனாகவோ, கமெபெனி ஸ்டாக் வாங்குவதன் மூலம், பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த முடியும் என்கின்றனர். உண்மையில் வெறும் பொருளாதார அதுவும் மனிதாபிமானமற்ற, முரட்டுப் பொருளாதாரப் பெருக்கம், இந்த இரண்டு குழு சண்டைக்கு வெளியில் எங்கோ இருக்கின்றது. ஆனால் அந்த மனிதாபிமானமற்ற, முரட்டு பொருளாதாரப் பெருக்கம், முடிவில் எந்த மயிரைத் தரும் என எனக்குத் தெரியாது. தற்போதைய பழமைவாத பொருளாதாரவாதிகளும், முரட்டுப் பொருளாதாரவாதிகள் போல் போலி மயக்கம் கொடுத்தாலும், அவர்களும் ஒருவித காப்பாள நோக்கினை ,அதாவது "தற்போதைய" நிறுவனப் பின்புலங்கள் அழிந்துவிடக் கூடாது என்னும் திட்டத்துடனே செயல் படுவர். மனிதாபிமானமற்ற, முழு முரட்டுப் பொருளாதாரம் இயங்கினால் அது விலங்குகள் அரசு. வலிமை மட்டுமே ஜெயிக்கும் இடமாக இருந்தாலும். வலிமையின் அர்த்தங்களும் அங்கே தொடர்ந்து மாறிக் கொண்டு இருக்கும். அதைப் போலவே நிறுவனம் என்பதான அர்த்தங்களும் அதன் பின்புலங்களும் மாறிக் கொண்டு இருக்கும். அந்த நிலமை பழமைவாதிகளுக்கு தாராளமயத்தினரை விட அதிகம் ஆப்பு வைக்கும் ஒன்று
என்னைப் பொருத்தவரையில், எனது ஆதரவு ஒபாமா வழி பொருளாதார ஊக்கிகுத் தான். இது பத்தாது இன்னமும் அதிகம் வேண்டும் என்னும் குருக்மேன் போன்றார் கருத்திலும் என் நம்பிக்கை. புஸ் (புஷ்சைவிட இது நன்றாக இருக்கின்றது) வழி செய்து பார்த்தாகிவிட்டாயிற்று. வரிவிலக்கு பெற்ற நிறுவணங்களும் அதன் அதிகாரிகளும் எந்த மயிரையும் புடுங்கவில்லை ஐந்து ரூபாய் பொருமான உடைய ஒன்றை ஐநூறு ரூபாய் பொருமானம் உள்ளதாக போலி விளையாட்டு காட்டி ஐநூறு ரூபாய்க்கான இடைக்கூலி பெற்றதைத் தவிர. பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்படும், கூடவே கவிழ்க்கப்படும், அரசியல்வாதிகள் மேல் (எவ்வளவு மோசமானவன் என்றாலும்) நம்பிக்கை வைப்பது, கோல்ஃப் கிளப் கனெக்ச்சன்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவன அதிபர்களை நம்புவதைவிட நிச்சயமாக மேலானது. என்ன பொதுமக்கள் சற்று சுரனையுடனும், குறைந்த பட்ச அறிவுடனும், தன்னைச் சுற்றியிருக்கின்றவன் நலத்தில் அக்கறை(அவன் நிறம்/குணம்/நீளம்/அகலம் சார்ந்து அல்ல)யுடனும் இருந்தால் அரசியலை சுத்தப் படுத்தமுடியும். அதே சமயம் அப்படி இருந்தாலும், கோல்ஃப் கனெக்சன் நிறுவன அதிபர்களை எந்த மயிரும் பிடுங்கமுடியாது
Saturday, February 07, 2009
Subscribe to:
Posts (Atom)