Wednesday, May 05, 2004

ரோசாவசந்த் வாங்க வாங்க. உங்களுக்கு பதில் எழுதும் முன் விருந்தினர் ஆசாரக்கீனனுக்கு ஒரு பதில்;
மிக்க நன்றி ஆசாரகீணன் அவர்களே, திண்ணையில் எழுதிய சாமினாதன் இல்லை என ஆணித்தரமாக தெரிவித்திருக்கின்றீர்கள். (பார்க்க நேற்றய பின்னூட்டுப் பகுதியில் ) ரமணிதரன் என்ற பெண்ணின விரோதி/முல்லா நண்பர்/ புலியாகிய வரின் கோயபல்ஸ் புளுகை நம்பிய மாங்காய் என என்னைப்பற்றி கரிசனத்துடன் தெரிவித்திருக்கின்றீர். நல்லது. இந்த மாங்காய் சொல்லப் போகும் கதையை கேட்க விருப்பமா? அதாவது ஒன்னும் ஒன்னும் இரண்டு எனப் போட்ட சிம்பிள் கணக்கு கதை..

கதைக்கு முன் ஒரு முன்கதை.

ஆசாரக்கீணன் என்பவரை எழுத்தாளர் முருகன் ( அதாங்க நம்ப ஜெயகாந்தன் மற்றும் ஜெயமோகன் சிஷ்யகேடி அவமானப்படுத்திய) சீராட்டி பாரட்டி சென்னைத் தெருக்களில் மொச்சக்கொட்டை தின்று இலக்கியபசியாற்றிய இனிய விவரமெல்லாம் சொல்லி இவர் காட்டும் ஆர்ட்பிலிமைப் பாருங்கள் என ராயர் காப்பிகிளப் எனும் பிராமனாள் காப்பிக் கடைக்கு அழைத்து வர, இவரும் அறிவுஜீவித படங்களை காட்டத் தொடங்கினார். இந்தக் காலக்கட்டத்தில் ஜேகே/ஜேமோ சிஷ்யகேடியும் உள்ளே நுழைந்தார் என்பது கவணிக்கத்தக்கது. திடீரென்று ஒரு நாள் ஹீனனுக்கும் ஹரி யென்ற கிளப்பில் ஏகபோக ரசிகர்கூட்டம் வைத்திருக்கும் "அண்ணா"விற்கும் சண்டை. அன்றைய ஒனர் பதவியில் இருந்த ஒரு பணக்காரர், "முன்பகை"யெல்லாம் தீர்க்க இது இடமில்லை என் சப்போர்ட் பாப்புலர் ஹரியண்ணாவுக்கு என்று அறிவிப்பு கொடுத்தார். முருகரை காணவேயில்லை. அந்த சமயத்தில். அன்றயிலிருந்த்ய் ஹீனன் திரும்பவில்லை. முன்பகை என்ன என்ற விபரம் தெரியவில்லை இதற்கிடையில் சிஷ்யகேடியின் தாத்தா "யாரோ" முதலியாரின் ( இந்த வேளால ஒட்டு முக்கியம் ஜெகே என்ற வேளாளரின் பாசப்பினைப்பு புரிய) தமிழ் புலமை பற்றிய விவரத்தை ஒரு பழம்பெரும் எழுத்தாளர் ( சத்தியமாக இவரும் வேளாள சாதிதான் என துண்டு போட்டுத் தாண்டலாம்) ராகாகியில் புகழ , அதை தற்போது பெண்ணின விரோதி/முல்லா நண்பர் /புலியாக அடிக்கப்பட்ட ரமணிதரன் அவருக்கே உரிய பாணியில் தாக்க, இன்றைய தாக்குதலுக்கு அடிப்படை உண்டானது அன்று. ஹீனன்
வெறியேறிய சில நாட்களுக்குள் சிஷ்யகேடியால் தாக்கப்பட்டார் ஹரி"யண்ணா". சிஷ்யகேடி ராகாகியிலிருந்து வெளியேற்றம் சிஷ்யகேடி மரத்தடியென்ற இளஞர் கூட்டத்திற்குள் ஆமை மாதிரி புகுந்தார். திருப்பவும் சிஷ்யகேடிக்கும் ஹரி"யண்ணா"விற்கும் மரத்தடியில் அடிதடி வர கிடைத்த சந்தர்ப்பத்தில் சிஷ்யகேடி முருகரை சந்திக்கு இழுக்க முருகர் கோவணம் கட்டி ஏறக்கட்டினது வேறு கதை. இதற்கும் முன் ராகாகியில் ஆசாரக்கீனனை முருகன் தஞ்சை பிராகாசினுடனான அனுபவத்தை சொல்லக் கேட்டதையும்,. தஞ்சை பிரகாசஷ் பெரியகோவில் கதைசொல்லிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விபரம் பற்றியும் படித்தவர்கள் இன்ன்மும் இருக்கலாம். இவ்வளவையும் சொல்லக் காரணம் ஆசாரக்ஹீனன் + முருகன் + சென்னை + தஞ்சை பிரகாஷ் + பெரிய கோவில் + தஞ்சாவூர் என கோட்டோவியம் போட.
இந்த கோட்டோவியத்திற்கு சாயம் போட்டுப் பார்ப்போமா?

போன வருடம் செப்டம்பர் மாதம் திண்ணையில் ஆசாரக்கீணன் என்பவர் நீயுயார்க் நகரில் நடக்க இருந்த இந்திய இலக்கிய மாநாடு பற்றி ஒரு பிட் நோட்டீஸ் போட்டார் அது இங்கே http://www.thinnai.com/arts/ar0911032.html.

சில நாட்கள் இடைவெளிவிட்டு அதாவது இந்திய இலக்கிய மாநாடு நடந்து முடிந்தபின் அதில் கலந்து கொண்ட காஞ்சனா தாமோதரன் என்ற மேல்தட்டு நபர் (இவர் ஜெமோவிற்கு புரவலர் எனத் தெரிந்ததே, திண்ணைக்கும் புரவலராய் இருக்கலாம் என்பது என் அனுமானம் திண்ணையும் டாக்ஸ் எக்செம்சன் வாங்கின ஒரு பணம் சம்பாதிக்காத நிறுவணமாக பதிவு செய்ப்பட்டு -விளம்பரம் இல்லாதது புரிகிறதோ? மேல் தட்டு நபர்களின் வருமானத்திலிருந்து மக்களுக்கு வரியாக செல்லவிடாது இங்கே இல்க்கிய புர்ச்சி பண்ண பாத்தி போடப்பட்டுருக்கலாம் எல்லாம் ஒரு லாம் தான். திண்ணை ஒரு மாஃபியா கும்பல் போல இயங்காது யார் யார் என வெளிப்படையாக அறிவித்திருந்தால் இந்த லாம்களை போக்கலாம். :-) ) ஒரு நீண்ட பணக்காரத்தனமான கட்டுரை எழுதியிருந்தார். அதில் அந்த இல்க்கிய மாநாட்டில் கலந்து கொண்ட சிவகுமார், சாமினாதன் (:-) ) மற்றும் கற்பகம் , ராம் , கார்த்த்கிக், பாலா என்பவர்களுடன் நடந்த சம்பாசனைகளின் தேவையான பகுதியை இங்கே தட்டுகின்றேன்.

"பாலா, அவரது மகன் ஷரத் கார்த்திக், ராம் மகாலிங்கம், சாமினாதன், கற்பகம், பிகேசிவக்குமார், நான் எல்லொரும் சேர்ந்து சாப்பிடப் போனோம். முந்தய நாள் கவியரங்கத்துக்குப் பின் ...... இன்று லிட்டில் இந்தியா பகுதிக்கு போலாமென்று முடிவாயிற்று. இந்த உரையாடலும் , நான் வந்திரங்கிய அன்று ராம் சாமினதன் , பத்மனாபன் கனேசன், சிவக்குமார் எல்லோரோடும் உரையாடியதுமாய்ச் சேர்ந்து பல விஷயங்கள் பேசினோம்.

நாங்கள் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கிறோம், மின்னஞ்சல் போக்குவரத்துக்கள் கிடையாது. திண்ணையில் அவ்வப்போது எழுதி வாசிக்கும் நவீன இலக்கிய ஆர்வலர்கள் என்றறிந்த பாலா ஆச்சர்யப்பட்டுப் போனார். சந்தித்த கதை சொன்னோம். 2000-ல் முருகானந்தம் தம்பதியினர் அழைப்பை ஏற்று ஜெயகாந்தன் இங்கே வந்த போது நான் அவரைப் பேட்டு கண்டு அது கணையாழியில் வெளியானது. அந்தப் பேட்டியைத் தான் நடத்தும் ஜெயகாந்தன் இணைய தளத்தில் போட அனுமதி கேட்டு சிவக்குமார் எனக்கு எழுதினார். அதற்குப்பின் இப்பொழுது தான் பேசிக்கொள்ளுகின்றோம். 2000-ல் இரா.முருகனின் இலக்கிய நண்பராகச் சாமினாதனின் மின் அறிமுகம். .....
"
முழுகட்டுரையும் படிக்க விருப்பமாயின்

இந்தக் கட்டுரையிலிருந்து இரா.முருகனின் இலக்கிய நண்பர் சாமினாதன் என அறியலாம், இல்லாவிட்டல் காஞ்சனா புளுகினார் என அறியலாம்.

இரா.முருகனின் இலக்கிய நண்பரான ஆச்சாரஹீனன் பிட் நோட்டீஸ் போட்ட இலக்கிய கூட்டதிற்கு இரா.முருகணின் இலக்கிய நண்பர்
சாமினாதன் செல்கின்றார். ஆச்சாரஹீனனின் இன்றய ஜோடியான சிவக்குமார், அதே இலக்கிய கூட்டதில் சாமினாதன் என்பவருடன்
கலந்து கொள்கின்றார். ஆனால் அந்த ஆச்சாரஹினனுக்கும் சாமினாதனுக்கும் ஸ்னானப்பிராப்தி கூட கிடையாதாம்.

சத்தியமாக எந்தப் பொய்யும் இல்லை, நேற்றைக்குத்தான் lies and the lying liars who tell them என்ற புத்தகத்தை எடுத்து வந்தேன்
16 பக்க்ம் தான் படித்திருந்தேன். நேற்றைய பதிவில் நேர்மை வார்த்தை அதிகம் தெளித்திருந்தது கூட அந்தப் புத்தக்தின் பாதிப்பு தான். அந்த புத்தகத்தில் கூட கிடைக்காது இப்பொழுது பார்த்த ஒரு புளுகின் வரலாறு. எப்படி புளுகிறார்கள். இதற்கெல்லாம் அசாத்திய வெறிவேண்டும் நேர்மைக்குறைவு இந்தக் கோஷ்டிகளுக்கு பிறப்பு வியாதியோ என சந்தேகப்பட்டேன். இது அதற்கும் மேல்.


இங்கே ஒரு படம் போட்டு விளையாட்டு காட்டியிருந்தேன். இங்கே சொல்லப்படும் விடயத்திற்கு
தேவையில்லைதான். அதன் தேவையில்லாத நிலையை விட இந்தப் படம் விபரீதம் விளைவிக்கக் கூடிய
சாத்தியக்ககூறு இருப்பதை , இந்தப் பின்னுட்ட்டில் ஆசாரக்கீனன் சொல்வதை நம்பி ( இந்த மாதிரி சமயத்தில் வெறெந்த எழவைச் செய்வதாம்) அந்தப் படம் காட்டும் வேலையை வாபஸ் பெற்றுக் கொள்ளுகின்றேன்.


No comments: