Sunday, May 09, 2004

ரோசாவசந்த்,
தொடர்கிறது...

நேற்றைக்கு எழுதியதை தொடர இன்று படித்தபோது எனக்கே சற்று ஆயாசமாக உள்ளது. ரொம்பச் சுற்றுவது போல் உள்ளது. இதைக் குறைத்து உங்களுக்கான ஏன் இன்றைய தேதியில் இஸ்லாத்தைப் பற்றியான விவாதம் இஸ்லாமியருக்கு வெளியே நடத்த தேவையில்லை என்ற என் கருதுகோளை
ரொம்ப இழுத்தடிக்காமல் சொல்லப் பார்க்கின்றேன்.நேற்றைக்கு இந்திய சுதந்திரக் காலத்திற்குச் சென்றதன் முக்கிய நோக்கம் இந்திய வாழ் இஸ்லாமியர்களின் அவர்களது தாய் பூமியான (குடியேறிகள் என்று பார்த்தால் அத்வானி வகையறாக்களைச் சொல்லவேண்டும் இரண்டு மூன்று வகைகளில்)
இந்தியாவில் அவர்கள் எதிர்காலம் என்ற நம்பிக்கைகள் சிதைய ஆரம்பித்தது எப்பொழுதிலிருந்து என ஒரு ஆரம்பப் புள்ளி வைக்க. இதற்கு முன் பார்த்தால் இஸ்லாமிய மன்னர்கள் காலத்திலோ அல்லது அவர்களுக்கு அருகில் ஆட்சியமைத்திருந்த இந்து மன்னர்கள் காலத்திலோ, இந்த இரண்டு மதப்
பிரிவினர்களுக்கும் இடையில் எந்தவித சண்டைகளோ, குஜராத் களரியைப் போல எரியும் நெருப்பில் போட்டதாகவோ , கர்பினிப் பெண்களை புணர்ந்ததாகவோ எந்த தகவலும் இல்லை. மதச்சண்டைகள் புண்ணியபூமியில் எப்படி நடக்கும் அதெல்லாம் வெள்ளைக்காரன் ஆரம்பித்தது தானே என ஒரு மெல்லிய ஹிந்துத்துவா யோசிக்கும் முன், மதுரையில் 7ஆம் 8ஆம் நூற்றாண்டில் கழுவில் ஏற்றி அதாவது விளக்கெண்ணை தடவின கூரான கழுமரங்களில் ஆயிரக்கணக்கான சமனர்களை அதில் உக்காரவைத்து, புவியீர்ப்பு விசையை ஆளைப் பிளக்கப் பயன்படித்திய உன்மத்தர்களை இந்த இடத்தில் ஞாபகப் படுத்த வேண்டும். அப்படிப்பார்க்கையில் முன் வைத்த ஆரம்பப்புள்ளி ஓரளவுக்காவது சரிவரும்.

உள் ஆட்சி அதிகாரங்களை எந்தவித பங்கீடுபற்றி யோசனையில்லாமல் ஒவ்வொரு இடங்களிலும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்கள் அதாவது மேல்ஜாதி இந்துக்கள் கபளிகரம் செய்யத் தொடங்கினர். வெள்ளைக்காரனுடன் நேரடித் தொடர்பு உள்ள ஒரே இயக்கம் அப்பொழுது இந்திய தேசிய காங்கிரஸ். ஆகவே எந்தவித தேர்தல் முறைகளும் தேவைப்படாமல் , இந்தாப்பா இந்த ஊரை நீனே நிர்வாகம் செய்துக்க என காங்கிரஸ் இயக்கத் தலைவரிடம் வரும். அவர் அந்த ஊருக்கு சென்ற போது எந்த வீட்டில் தங்கிச் சாப்பிட்டாரோ அவர் பெயரை முன்வைப்பார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தால் எவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவார்? இந்த இலட்சனத்தில் தான் சுயஆட்சி நிர்ணயங்களுக்கும் நிர்வாகத்திற்கான பயிற்சியும் நடந்தது. இது இந்துக்களிலேயே உள்ள மத்திய/கீழ் ஜாதியினர் (ஹி ஹி சென்னை மாகானம் தவிர ) உணரும் முன் மாற்று மதமான இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் உணர்ந்து, தமக்கென்று முஸ்லீம் லீக் வைத்துக் கொண்டனர். இனி இரண்டு குழுக்கள் இருப்பதால் தேர்தல் வைத்துத் தான் பங்கீடு. இது பெருவாரியான முஸ்லீம் மக்கள் வசிக்கும் இடங்களிலும் பெருவாரியான இந்துக்கள் வசிக்கும் மற்ற எல்லா இடங்களிலும் பிரச்சனை இல்லை. இதில் கொடுமையென்னவென்றால், முதலில் நடந்த இந்தவகைத் தேர்தல்களில் இஸ்லாமியர் பெருவாரியான பகுதிகளில் கூட ( இப்பொழுது தேட முடியவில்லை. என் ஞாபகம் சரியானால் அது பாக்கிஸ்தான் / ஆப்கானிஸ்தான் பார்டர் ஏரியாக்கள் உள்ளிட்ட ) முஸ்லீம் லீகைவிட இந்திய தேசிய காங்கிரஸ் அதிக ஓட்டு பெற்றது.(இந்த வரியை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்) இந்த மெஜாரிட்டேரியன் அரசியலுக்கு சிக்கல் கொடுத்தது வங்காளம். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் மெஜாரிட்டி அது எந்தளவு என்றால் ஒரு 70% இந்து 30 % முஸ்லீம் என்றளவில். அதுவே கிழக்கு வங்காளத்தில் 40% இந்து 60% முஸ்லீம் ( இந்த தசவிகிதக் கணக்கெல்லாம் ஒரு குறியீடாகத் தான் கொடுக்கின்றேன். உண்மையில் கொஞம் கூடதல் குறைதல் இருக்கலாம்). கிழக்கு வங்காளத்தில் இருந்த முஸ்லீம்கள் ஏழைகள் விவாசாய நிலங்களில் உழைத்தவர்கள் , இந்துக்கள் நிலச்சுவாந்தார்கள். இங்கே ஆட்சியதிகாரங்கள் பங்கீடு செய்வதில் சிக்கல். இப்பொழுது ஜார்கெந்த் உத்தராச்சல் என்ற மாநிலங்கள் பிரிவது எப்படி மத்திய அரசாங்கத்தை ஆளுபவர்களுக்கு உதவுகின்றதோ அதே போல வெள்ளைக்காரனுக்கும் உதவின வங்காளப் பிரிவினை நடந்தது. இதன் படி ஒட்டுமொத்த வங்காளத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஒரு இந்துவிடம் சேர்வதை விட மேற்கு வங்காளம் இந்துவிடமும் கிழக்குக் வங்காளம் ஒரு இஸ்லாமியரிடம் செல்லும் அவ்வளவு தான் என்னைப் பொறுத்தவரையில். அந்தப் பிரிவினைக்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த இந்துக்கள் எதிர்ப்பும், ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் ஆதரவும் கொடுத்தனர். மேலே தொடரும் முன் , ரோசாவசந்த் இந்த இடத்தில் ஒரு நிறுத்தம் கொடுத்து உங்களைக் கேட்கின்றேன். என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் ஆனது இந்தக் காலத்தில். காலத்தின் இந்த நேரத்திற்குச் செல்லுவோம். நான் குறிப்பிடும் இந்தக் காலத்தில் நடந்திருக்கவேண்டியது எது?

இதை எதற்குக் கேட்கின்றேன் என்றால் நீங்கள் கேட்ட இந்த இஸ்லாம் குறித்த ஒரு வெளிப்படையான விவாதம் தேவைப்படுகின்றது. அது இஸ்லாமியரால் நடத்தபடுவது பொறுத்தம். ஆனால் அதற்கு முன் விவாதிக்கும் உரிமை சகஜமாக்கப்படுவது அவசியம் என்று *இந்தக்* காலத்தில் போட்ட வாதம் எப்படி பல அடுக்குகளால் மூடப்பட்ட ஒன்று எனவும் ஒவ்வொரு அடுக்காய் விரித்தால் உங்கள் கேள்வியில் உள்ளதாக எனக்குப்படும் ஒரு சார்பு அனர்த்தம் வெளிவரும் என்ற நம்பிக்கையில் :-)

தொடரும்..

No comments: