Wednesday, May 12, 2004

ரோசாவசந்த்,

நேற்றைக்கு நான் விரும்பிப் பார்க்கும் கூடைப்பந்து விளையாட்டு இல்லையென்றால் நேற்றைக்கு இப்படி எழுதத் தொடங்கியதை முடித்திருப்பேன்.


இந்த வாரக் கடைசி வரை இந்த விவாதத்திற்கு சற்று வெளியில் சென்று ஜனநாயகத்தில றுபாண்மையினர் நிலை பற்றி என்னுடைய புரிதலை சுருக்கமாக எழுத ஆசை.இது என்னுடைய சிறுபாண்மையினரின் மீதான சார்பான பார்வையை விளக்கலாம். நாடு தேசம் என ஒரு எல்லை போட்டு சுதந்திரம் , சொந்த ஆட்சி என கூடிவருவதே எந்த ஒரு சமுதாயத்தின், அதன் விதியினை அல்லது செல்லும் பாதையினை தீர்மானம் செய்யும் பொறுப்பை அந்தச் சமுதாயமே அமைத்துக் கொள்ளும் விதமாகத்தான்என்பது பால பாடம். இது ஒரு சமுதாயம் ஒத்த மாதிரியானதாக அல்லது ஒத்த வகையினரால் (அதாவது ஒரே மதம் ஒரே இனம் ஒரே பொருளாதார வகுப்பு ஒரே மொழி என ) ஆனதாக இருந்தால் பிரச்சனையில்லை எல்லா ஒத்தைப் பரிமாண சமன்பாடுகளின் தீர்வைப் போல. இதிலே ஒன்றுக்கு மேற்பட்ட வகையாக பிரியும்பொழுது அப்படிப்பட்ட சமுதாயத்தில் சொந்த ஆட்சி என்ற வார்த்தையின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தம் இழக்கின்றது. ஜனநாயக ட்சிமுறையில்பெரும்பாண்மையினர் தங்களுடைய பிரதிநிதிகளால் ஆளுகின்றார்கள். இது ற்றொரு பால பாடம். அந்த ஜனநாயக ஆட்சிமுறையிலே சிறுபாண்மையினரால் அந்த ஆட்சி தங்களுடைய சொந்த ஆட்சி / தங்களுடைய விதியினை, தாங்கள் செல்லும் பாதையினை தீர்மானிக்கும் பொருப்பு தங்களிடமே உள்ளதாக சாதாரணமாக கொள்ளமுடியாதவாறு ஆக்குகின்றது இந்த பால பாடம். அப்படிப்பட்ட நிலையிலே இந்த சுதந்திரம் / விடுதலை உணர்ச்சி / உரிமைகள் உள்ள நிலை என்னும் பதங்கள் ஜனநாயக ஆட்சிமுறையில் சிறுபாண்மையினருக்கு அதன் அர்த்தம் கெட்ட நிலையிலே தான் உள்ளது. அதாவது சுதந்திரம் , பெரும்பாண்மையினர் அதைப் பிச்சையாக போடும் வரை, விடுதலை உணர்ச்சி அதே பெரும்பாண்மையினர் அதை அனுமதிக்கும் வரை. இதற்கும், இந்தச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன் இருந்த நிலைக்கும் ஒரு சிறுபாண்மையினர் பார்வையினூடாக என்ன வேறுபாடு?


இன்றைக்கு இதை தொடர்வதைவிட உங்களுக்கு பதில் எழுதுவது எளிதாக இருப்பதால் அதைச் செய்கின்றேன் :-). எனக்கு எழுதுவது அவ்வளவாக வராது. இந்த இணையத்தில் உலவுவதற்கு முன் நான் எழுதியது ஒன்றுமில்லை. சிலவிடயங்களை பற்றி எதிர்த்து எழுத யாருமே முன்வராததால், அந்தக் கண நேரசதியில் எதாவது எழுத நேரிடுகின்றது. எழுதுவது எனக்கு எந்தவிதத்திலும் மகிழ்ச்சியான ஒரு விடயம் இல்லை. தீவிரமாக எழுதுவது என்பது யாருக்கு
எழுதுகின்றோம் என்பதை வைத்து வருவது என நினைக்கின்றேன். என்னுடைய கருத்துடன் ஒத்துக் போகின்ற உங்களைப் போல உள்ளவர்களுக்கு எழுத எதுவும்கிடையாது என நன்றாகவே தெரியும். என்னுடய கருத்துடன் ஒத்துப் போகாதவர்களுக்கு தீவிரமாக எழுதுவது உண்மையில் தேவையா என ஒரு எண்ணம். ஆகவே தயவுசெய்து தீவிர எழுத்தையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். நானே எதிர்பார்க்காமல், சாதாரணமாக சொல்லவேண்டியது ( என்னைப் பொறுத்தவரை இந்தச் சாதாரணமாக சொல்ல முடியாதது என ஒன்றும் இல்லை) , எனது எழுதும் திறன் இன்மையால், "தீவிர" ஜோடனை பெற்று வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இனி வங்காளப் பிரிவினை பற்றி. அது சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் நம்பிக்கை இழக்கச் செய்த முக்கியமான ஒன்று அந்தப் பிரிவினை நடைப்பெற்ற போதும். அதைப்பற்றி அதில் உள்ள எனக்குத் தெரியும் இஸ்லாமியர் பக்கம் உள்ள நியாத்தைப் பற்றி பெரும்பான்மை சமூகத்திலிருந்து அந்த சமூகத்தின் இடதாக இருக்கட்டும், தீவிர இடதாக இருக்கட்டும் அவர்களிடமிருந்து ஏதேனும்கட்டுரையாகவோ/விவாதமாகவோ வந்திருக்கின்றதா? எனக்குத் தெரிந்து நான் படித்ததில்லை. அப்படி வராத நிலையில் அந்தளவுக்கு இறுகிப் போன பெரும்பான்மை சமூகத்திடமிருந்து இழக்க ஆரம்பித்த நம்பிக்கையை திரும்பத் பெருமாறு பாரும்பாண்மையினர் மனது வந்து செய்தது என்ன ? இந்தக் கேள்வியின் தொந்திரவும், இதை விரிவாக , இந்த ஜனநாயகத்தில் சிறுபாண்மை என ஏற்றத் தாழ்வான ஒரு அரசியல் முறையில்வசிப்பவர்கள் முக்கியமாக இந்தியாவில் வசிப்பவர்கள் மீதான பெரும்பான்மையினர் என இருப்போர் தொடர்ந்து உரிமைப்பறிப்பு, இடங்கொடாமை, வன்முறை செய்து பயமுறுத்தல் , கூடவே இந்த அழகியல் என்ற பஜனையில் செய்யும் பண்பாட்டு ரீதியான தாக்குதல்கள் எனச் சொல்லி, இதைத் தீர்க்காதவரையில் இஸ்லாத்தைப் பற்றி ஒரு விவாதம் வேண்டும் என கேட்கும், விரும்பியோ விரும்பாமலோ பெருபாண்மை கூட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு, என்ன தகுதி என அறிய அந்த இடத்தில் நிறுத்தினேன். இஸ்லாமிய தேசங்களில் வசிக்கும் மாற்று நபர்கள் மீதான அதே வகைத் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது? நமக்குள்ளே அந்த வகைத் தாக்க்தல்கள் வாராத வண்ணம் செய்துவிட்டு, பின் அந்தவகைத் தாக்குதல்களை எதிர்க்கலாம். அது தானே தன்னளவில் நேர்மையாக இருக்க வக செய்யும். இதேக் கேள்விக்கு, கமெண்ட்ஸ் பகுதியில் நண்பர் ரமணிதரன் சுட்டிக்காட்டிய தாரிக் ரமதானும் சுட்டி ஒரு பதில் சொல்லியிருந்தார் ஒரு இஸ்லாமியர் பார்வையில்.

இனி தமிழ் நாட்டு இஸ்லாமிய பெண்மணி பர்தா போடுவது பற்றி. அதில் அப்படி என்ன உள்ளது? இஸ்லாமியப் பெண்மனி எதைப் உடுத்தினால் அவருக்கு நல்லது எதை உடுத்தாவிட்டால் அவருக்கு நல்லது என முடிவு செய்ய நீங்களோ நானோ யார்? இது ஒரு வொயிட்மெயிலுக்கு நிகரானதாகாதா? எனக்கு புரியவில்லை சுத்தமாக எங்கே என் புரிதலில் ஓட்டை உள்ளது என. ஒரு ஆப்பிரிக்க இனத்துப் பெண்மனி காதுபூராக வளையம் வளையமாக குத்திக் கொண்டிருக்கின்றார். அது கொடுமையானது அல்லது இல்லை என தீர்மாணிக்க நான் யார்? பர்தா போடுவது இபொழுதைய வழக்கம் என்றால் இல்லை என நன்றாகச் சொல்லமுடியும். நான் இருந்த எனது மாவட்டத்தில் முப்பது வருடங்களாக பர்தாபோடுபவர்களைக் கண்டிருக்கின்றேன். அது இப்பொழுது தீவிரமடைந்தால் அதற்கு யார் பொறுப்பு? தமிழ்நாட்டில் இஸ்லாமியருக்கு எந்தவித தற்காப்புகளும் அரசியல் ரீதியாக கிடையாது அவர்கள் எண்ணிக்கை தலித்துகளைப் போல, இந்த ஓட்டுவகைகளில் தவிர்க்கக் கூடிய எண்ணிக்கைதான் . இந்த நிலையில் இஸ்லாமியர்கள், தீவிர நிலையெடுப்பது ஒரு ன்னேர்ச்சியான ஒன்று. அந்தத் தீவிர நிலை போகவேண்டுமா ஒரே வழி இந்த்துத்தவ வெறியர்களை தீவிரமாக ஒடுக்குவது முடிந்தவரை. அதைத் தீவிரமாக செய்யமுனையாத பெரும்பாண்மை சமூகத்தை வைத்துக் கொண்டு இஸ்லாம் பற்றிய விவாதம் வேண்டும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ளமுடியாது.

அன்புடன்
அனாதை

No comments: