ஊடு கட்டி அடிச்சு எவ்ளோ நாளாச்சுன்னு நினைச்சாளே மலைப்பா இருக்குன்னா. முந்தாநேத்திக்குதான் குட்டியோண்டு புள்ளாண்டன கராத்தே கிளாஸ்ல உட்டுட்டு வேடிக்கை பாக்கையிலே பட்டதுண்ணா. நன்னா ஒருத்தரை ஒருத்தர் அடிக்க விடுறா. இங்கே அடி அங்கேஅடின்னுட்டே அடிக்க வுடுறா. துக்குனோண்டுகளும் நன்னா ஆவுன்னு கத்திண்டு காலை தூக்கி கையை துக்கி அடிக்கறதுகள். அந்த மாதிரி கூட இல்லாம வலைப்பதிவுன்னு பன்னிண்டு , அடிச்சுண்டாலே இல்ல குட்டிண்டாலே அது ஒரு கீழ்த்தரம்ன்னே ஆக்கிட்டா இங்கே. வெண்ணைய தடவிண்டு தேன் மாதிரி குழைண்சுண்டா தான் மதிப்புன்னு வேற ஆக்கிட்டா. நன்னா கோபம் வரதுகளும் , கோபத்தை அடக்கிண்டு "உதாரணமாய் வெங்கட் இந்த `நல்லத்தொர் வீணை செய்து..' பாட்டு பற்றி எழுதியிருக்கிறார். எல்லோரும் ரொம்ப ரசித்து கூட்டமாய் சந்தோஷமாய் இருக்கிறார்கள். நடுவில் போய் அபசகுனமாய் எழுத கொஞ்சம் கூச்சமாய் இருக்கிறது" ன்னு நல்லினக்கத்துக்கு போயிடுறா. எவ்வளவு கீழ்த்தரமா இடஒதுக்கீட்டை வெளியே தெரியாம கமெண்ட் அடிச்சாலும் , இசை இலக்கியம் ன்னு ஏதோ ஒரு புள்ளியிலே இணையற போதுள்ள புளுக்க சுகத்துக்கு எதை எதையோ சமரசம் செய்தாலாவது நல்லிணக்கம் முக்கியம்ன்னு ... வேற யாரையும் இல்லன்னா உம்மத்தான் சொல்றேன். ஏதோ இங்கவாவது வந்தா தாம் தூம்ன்னு குதிக்கிறேளே. பாக்க சந்தோசமா இருக்குன்னா. உள்ளளாங்காட்டிக்கும் எல்லாம் சொல்லலைன்னா. குத்திக்காட்டவும் சொல்லன்னா. நீர் இப்படி அப்படின்னு கத்தினாலும் நேக்கு கோபம் வராதுண்ணா அது நான் ஈவெராவை ஈவெரான்றாப்ல. நீர் "அங்க" "இங்க" போய் கத்தினா நல்லினக்கம் போயிடும்ன்னு நினைக்குறேள் பாருங்கோ அதுக்குள்ள இருக்குன்னா ஆவாள்ளாம் பெரியாரை ஈவெராங்குற ரகசியம். இது ரெண்டையும் போட்டு கலந்து கட்டி ரவுசு அடிக்கிறேள் பாருங்கோ அது எப்படி இருக்குன்னா ரவிக்குமாரண்ட பெரியாரைப்பத்திக் கேட்டும்,பி.ஏ.கிருஷ்ணனண்ட்ட ஈவேராவைப்பத்தியும் கேட்டு எழுதி ஈவெரா விழா எடுத்தாளேஅது போலன்னா இருக்கு. (இந்த பிஏகிருஷ்ணன்ட்ட ஒரு விஷயம்ன்னா, தமிழ்ன்னு வரும் போது அண்ணன் பின்நவீனத்து பிற்போக்கு ஆயிடுவார் சமஸ்கிருதம் வேதம் என்றாலோ முன்நவீனத்து முற்போக்கு ஆயிடுவார் இது பத்தி வேறு சமயம் வச்சுக்கலாம்).
நன்னா படிச்சு பார்த்துட்டு அப்புறம் கத்துங்கோ கத்தியாலே குத்துங்கோ நான் சபாஷ் சொல்வேண்னா, நானே தப்புன்னாக்க கூட. அனாதையாயிருக்கறதுலே எவ்வளவோ நன்மைன்னா. ஆனா சும்மா "நம்ம", "உம்ம" விகுதிக்கெல்லாம் அர்த்தம் போட்டுட்டு வந்து கத்தினேள்ன்னா என்ன பன்றது சொல்லுங்கோ. நான் "சங்கராச்சாரி"ங்கறதுலேயும் ஈவெராங்கிறதுலேயும் இண்டலெக்சுவல் மயிறு பிடிங்கித் தனத்தையும் ,சமரசத்தையும் தேடிண்டிருக்கேளே எதால சிரிக்கிறதுன்னு தெரியலைன்னா. இண்டலெக்ட்டா பேசறது, "ஆழமா" பேசறது, "தட்டையா" இல்லாம பேசறது, "பல பரிணாமத்துல" பேசறது, "உணர்ச்சிக்கு இடமில்லாம" அறிவுப்பூர்வமா பேசறது, பொது ஜனங்களை மேலெழுத்து செல்லுமாறு பேசறது எல்லாம் தமிழ் சூழலில் நடக்கும் உன்னத பஜனை மற்றும், ஒருவகையான பாசிசம்ன்னும் நல்லாவே தெரிஞ்சுண்டுருக்கிற என்ணன்ட்ட வந்து அதைத் தேடறேளே என்னன்னு சொல்றது. எழுதற எதையும் திருத்தற வழக்கமும் இல்லன்னா. எழுத ஆரம்பிக்கிறப்ப இருக்குற தொனி முடியும் போது இருந்தா அதுவே எனக்கு போதும். திருத்துனதுன்னா மேலோட்டமா எனக்கே பளிச்சுன்னு தெரியற எழுத்துப் பிழை தான். வேற எந்த மயிரையும் திருத்துனது கிடையாது. இங்கமட்டுமில்லன்னா வேறெந்த களத்திலயும் அதே கதை தான். எழுதறதுல எனக்கு வெளிக்கி போற சுகம் கூட கிடையாதுன்னா. கடுப்பை காட்ற ஒரு வஸ்து அவ்வளவுதான். இவ்வளவுதான்னா சுயவிளக்கம் கொடுக்க முடியும். இந்த இழவு மாதிரியே இரண்டு மூணு தடவை உமக்கேசொல்லியாச்சுன்னு நினைக்கிறேன். முந்தின பதிவிலியே ரொம்ப நோண்டாதீர், வெங்காயம் தான் மிஞ்சும்ன்னும் சொல்லியிறுந்தேன். அப்பவும் விடமாட்டேன்னா என்னான்றதுன்னா?
சரி. இரண்டு பாயிண்ட் உமக்கு கடுப்புல இருக்கு பேசித் தீர்த்துறுவோம். காந்தியாலே தான் எல்லாம் புடிங்கிறுச்சுன்னு எங்கேயும் புளுகல. காந்திகிட்ட தலிதுகள் நோக்குல எவ்வளவோ தப்பிருக்கலாம் ஆனா அதற்காக ஒரு இந்துத்துவ வெறிநாய் காந்திக்கு தேவலாம்ன்னு வர்றதையோ, அல்லது காந்தி கபட தாரின்னாலோ என்னால அதை ஒத்துக்க முடியாதுன்னு தான் சொன்னேன். கூடவே ஒரு காந்தி இருந்ததால தான் , இந்துத்துவ வெறிநாய்கள் சூழ்ந்திருந்த காங்கிரஸில் அம்பேத்காருக்கு மதிப்பிறுந்ததுன்னும் சொன்னேன்.இதுலே எது உடாண்ஸ்ன்னு வாங்க வந்து கிழியுங்கன்னா.எதுக்கு இந்த ஒளிஞ்சு புடிச்சு விளையாட்டு.
பெரியாராலேதான் தமிழ்நாட்ல சங்கராச்சாரிய கைது செய்யக்குடிய சூழல் மற்றும் பெரிய எதிர்ப்பு வராத நிலைன்னு சொல்றதை எதிர்கிறதுக்கு எதுக்கு கண்டதை பேசனும். சித்தார்த்தாவிற்கு ( அதாங்க புத்தர் :-) ) தற்போதைய இந்திய சூழலில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய ஆளுமை இருக்கோ அல்லது காந்திக்கு எந்தளவுக்கு வட இந்தியச் சூழலில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஆளுமையிருக்கோ அந்தளவுக்கு தான் தமிழ்நாட்ல பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஆளுமை ஈவெராவிற்கு இல்லங்ன்னா பெரியாருக்கு. அதுக்கு கொஞ்சம் கூடவும் கிடையாது குறைவும் கிடையாது. குஜராத்ல வயத்துக்குள இருக்குற சிசுவ கத்தியாலஎடுத்து தலைய அறுத்ததுல சித்தார்த்தாவுக்கும், மோகந்தாஸுக்கும் கொடுக்கிற பங்குதான், திண்ணியத்தில பீயைக் கறைச்சு கொடுக்கிறதுல ஈவெராவுக்கும் கொடுக்கனும். அப்படி எல்லாம் கொடுக்கனும்னா, அதுக்காக அப்துல் என்ற முஸ்லீமுக்குகிடைத்த ஜனாதிபதி பதவி காந்தி என்ற ஆளுமை கொடுத்த ஆன்மீக பலத்தால், சங்கராச்சாரி கைது பெரியார் கொடுத்த சீர்திருத்த திந்தனையாக்கம்ன்னு சொல்றதையெல்லாம் அது புளுகு மொள்ளமாரித்தனம்ன்னும், அப்படி படம் காட்டுறது தப்புன்னும் தான் சொல்லனும். இதே கைதை "பாப்பாத்தி" செயலலிதா இல்லாம "மோளக்காரன்" கருணாநிதி பன்னியிருக்கட்டுமே, அப்பக் கிளம்புற பட்டையக் கிளப்புற , அரசே கவிழும்படியான எதிர்ப்புக்ளையும் கொண்டு போய் ஈவெரா மேல போடக்கூடிய தைரியம் இருக்கா ஒய். 67ல ஈவெரா சப்போர்ட்காமராசுக்கு, ராஜாஜி ஆதரவு அண்ணாதுரைக்கு. ஜெயித்தது ஈவெரா எஃபக்ட்டு தான்னு சொல்லுங்கன்னா கேட்டுக்கிறேன். ஜெமோ கோஷ்டி போடறஅதே லாஜிக்க போடறது யாருன்னு நல்லா மல்லாக்க படுத்துண்டு யோசிங்கன்னா. இந்துத்துவாவின் உச்சம் தான் இப்போ திராவிட போர்வையிலே கோலெச்சிகிட்டு இருக்கு. நம்புங்கன்னா இன்னமும் ஈவெரா எஃபக்ட் மயிறு பிடிங்கிட்டு இருக்குன்னு. கருணாநிதி பண்ற பஜனைய விட கேவலமாஇருக்கு. இந்த தாரளுமயமாக்கலில் தனியார்துறையிலே இடஒதுகீடு தேவைன்னு விவாதம் வர்ர நேரத்தில, ஒதுக்கீடுன்னா என்னான்னு சொல்லிக்கொடுத்த ஊர்ல ஆட்சி பன்ற "ஈவெரா எஃபக்ட்டு" திராவிட ஆட்சி சொல்லுதுங்கன்னா படிப்பு சம்பந்தமான விடயத்திலெ நிர்வாக இடங்களுக்கு ஒதுக்கீடு கேக்க மாடடோம்னு. வாங்கன்னா, தோள்ள உக்காந்து காது ஒட்டையிளே எதையொ தேய்கிற மாதிரி ஈவெரா எஃபக்ட்டு பரவி வெடிச்சு புடுங்குதுன்னு சொல்லுங்கன்னா, கேட்டுக்கிறேன்.
இரு பிறப்பாளருக்க்ம் இந்துத்துத்துவாக்கும் தொடர்பு கொடுத்தா அதுக்கு டேட்டா கொடுத்து சப்போர்ட் கொடுத்தா உமக்கு எங்கன்னா பொத்துக்கிட்டு வருது. இருபிறப்பாளர்கள் , அவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களது தற்போதைய அரசியல் செல்வாக்கு, மைனாரிட்டிகள்முக்கியமா இஸ்லாமியர்கள் எண்ணிக்கை, தலித்துகள் எண்ணிக்கை இவைகள் தீர்மானிக்கிறது அந்த இடத்தில் உள்ள இந்துத்துவாக்களின் பலத்தை. இது தான் நான் சொல்லவர்ரது. அதுக்கு எதுக்கன்னா இந்தக் கடுப்பு. தமிழ்நாட்டு தேவன்களுக்கும் நாடன்களுக்கும் வன்னியன்களுக்கும் பூணுல் மாட்டுங்கன்னா, அப்பத்தெரியும் குஜாராத்தை விட எவ்வளவு கேவலமா இருக்கும் இங்க நிலமைன்னு. சாதி வெறியினால தான் இங்க இந்து வெறி மட்டாதெறியறதே ஒழிய ஒரு எஃபக்ட்டும் புடுங்கறதுனால இல்லன்னா. படம் காட்டாதீர்ன்னும் "யோய்" ன்னு போட்டதிலேயும் வர்ற தீயை கொஞ்சம் வைனை ஊத்தி அமுக்கிகிட்டுருந்தா கொடுத்த டேட்டால பளிச்சுனு தெரியற விசயத்தை பத்தி பேசலாம். statistics பத்தி செய்யுற கிண்டல் எல்லாம் இருக்கட்டும், கண்ணுல பளிச்சுன்னு தெரியற அதுவும் வேற எந்த manipulationஉம் இல்லாத அடிப்படை டேட்டாவுலே தெரியற விசயத்தைக்கூட பாக்க மாட்டேன், டேட்டா பாக்கிறவன் மேலோட்டவாதி அதை பாஸ் செஞ்சுண்டு வந்தா தான் கணக்கில் எடுக்க முடியும்ன்னு பாப்பார லாஜிக் எல்லாம் போட்டா என்னன்றது.
கேரளாவுல ஆர்யெஸ்யெஸ் காரன் இருக்கானே ஆனா என்ன தனியா வரமுடியாதுன்னுங்ற உம்ம பஜனையைத் தான் என்னோட டேட்டா பஜனையிலே இப்படி சொல்லியிறுந்தேன்.
Hindu | Mus | Chris | SC | ST | Brhamin | State |
---|---|---|---|---|---|---|
57.38 | 23.33 | 19.32 | 9.8 | 1.1 | 4 | Kerala |
என்னா விளக்கனுமா? ஆர்யெஸ்யெஸ் தலித்துகளை மாத்தினாலே ஒழிய தனியா வர மெஜாரிட்டி கிடைக்காது ஏன்னா ஹிந்து ஓட்டு 57.8 - 10.9 = 46.9% தான். அது மட்டுமில்ல மேற்கு வங்காளத்துலயும் கேரளாவுலயும் தான் தலித்துகள் இல்லாத ஹிந்து எண்ணிக்கை50% க்கும் கீழே. கேரளாவுல 46.9ன்னா மேற்கு வங்காளத்தில அது 46.22. இது தான் அங்க இடது சாரிகள் ஆட்சிபிடிக்க வைச்சுது, அது அதிசயமான தனித்துவமான அந்தப் பகுதி மக்களின் தனிப்பட்ட அறிவுமேன்மைங்கறதெல்லாம் பஜனை, அது வேறு வழியல்லாத சூழலில் இருபிறப்பாளர்கள்தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டிக்க உள்ள ஒரு வழி, ஏன்ன்னா அந்த இடது சாரி தலமையெல்லாம், இரண்டு இடத்திலேயும் சொல்லி வச்ச மாதிரி இரு பிறப்பாளர்கள் கையிலே இருக்கிறது தான் காரணம்ன்னு, நான் நினைக்கிறது பஜனைன்னா, இந்த டேட்டா மேல உங்க புரிதலை சொல்லுங்க கேட்டுக்கிறேன். இதையெல்லாம் பாஸ் செஞ்சிட்டு மேலே போறது ஒருபுறம் இருக்கட்டும் , இதை எப்படி பாஸ் பண்றதுன்னு பாக்கிறதுல ஒன்னும் தப்பில்லை தானே.
குஜராத்லயும் ராஜஸ்தான்லயும் பாப்பான்க்ள் 25% ( அனைத்துந்தியாவவிடவும் மற்ற தென் மாநிலங்களை விடவும் இந்த சதவிகிதம் மிக மிக அதிகமானது ) இவனுகளே இப்படின்னா மற்ற சத்ரியன்களும் வைசிகன்களும் இங்கே அதிகமாத்தான் இருக்கனும்ங்க்றது ஒரு அனுமானம்.அதனாலதான் குஜராத்ல அந்த வெறியாட்டம் போட்டும் மோடி போன்ற கிகாலோவுக்கு பிறந்த மகன்கள் எல்லாம் ( தேவடியா மகன்ன்னா உங்களுக்கு பிடிக்காதுங்கன்னா உங்களோடு சேர்ந்து எனக்கும் அப்படி ஆயிடுச்சு.அதான் இப்படி மாத்திட்டேன்) திரும்ப வரமுடியுதுன்னு நான் டேட்டாவைப் பார்த்து புரிஞ்சுகிடறேன். அது தப்புன்னா வேற விளக்கம் கொடுங்களேன் அந்த காந்தி பிறந்த ஊரின் மாகாத்மியத்தைப் பற்றி.(அங்க பெரியார் இல்ல அதான்கிற பஜனை தவிர பிளீஸ்..).
அப்புறம் என்னன்னா கர்நாடகத்திலேயும், ஆந்திராவிலேயும் எவ்வளவு பத்து(இரு) பிறப்பாளர்கள் கணக்கா? நீங்களே பாருங்களேன்னா? இன்னமும் பளிச்சினு தெரியும். சென்சஸ் எடுக்குறான்களாம் ஆனா சாதி பத்தி டேட்டா கிடையாது. புடுங்கிங்க. இந்த முன்னெற்றப்பட்ட சமுதாயக் கணக்கிருந்தா இன்னமும் உங்களைப் போட்டு வ்ங்கியிருப்பேன். என்னா சொன்னீங்கன்னா? ஜஸ்டிஸ் பார்ட்டி ஒரிஸா தாண்டி இருந்த கதையா. ஜஸ்டிஸ் பார்ட்டி முதலமைச்சர் பதவி வரை இந்த சென்னை மாநிலத்துல பெறும் அளவு இருந்த பலத்தை ஆந்திராவுக்கு பக்கமா இருந்த ஒரிஸா ஜஸ்டிஸ் பார்டியோட சேர்த்து ஜெமோ பாணி திடுக் செய்தியா? ஆமா சென்னை மாநிலத்து எல்லையிலே இருந்த ஒரு பகுதி ஆந்திரா பிரிஞ்சப்போ ஒரிஸாவாயிருக்கு. அதுக்காக நான் பிளெட்டை திருப்பி, இங்கே அடிச்ச ஈவெரா எஃபக்க்ட் ஏன் அங்க அடிக்கலன்னு கேட்டா நியாயமாகுமா? ஏகப்பட்டதை படிச்சு அறிஞ்சுண்ட "பஸ்மண்டை"ன்னு பீலா வேணா விட்டுக்க உதவும். நமக்கெதுக்கன்னா அந்த ஆசையெல்லாம்?
அப்பாடி இப்படி சண்டை போட்டு எவ்ளோ நாளாச்சுங்கிற திருப்தியுடன்,
மதிப்பிற்குரிய
அனாதைவாள்
1 comment:
நாளை அல்லது மறுநாள்!
Post a Comment