வாருமய்யா அநாதைவாள், (கோவிச்சுக்கப்டாது, படிச்சு வேலைக்கு போற எல்லாருமே அவள்தான்ன்னு, கொஞ்ச நாள் முன்ன பத்ரி அண்ணா ஒரே போடா போட்டதாலே இப்படி கூப்பிட்டு பாக்கறேன்).
பெருசா சொல்ல எதுவுமில்லை. போன பதிவு முழுக்க சங்கராச்சாரி சங்கராச்சாரினு எழுதிட்டு, அதை எடிட் கூட பண்ணாம, ஈவேராவை சொல்ற மாறி மத்தாவாளையும் சொல்ல வசதியாயிருக்கும், சொன்னா அவளுக்கு உறைக்கும்னு(நிஜமாவா?) ஏன் இப்படி அசட்டுதனமா ஃபிலிம் காட்டறீர்! சரி, நீர் ஈவேரான்னு கூப்பிடும். இல்லேன்னா ராமசாமின்னு கூப்பிடும், இன்னும் நாயகன் படம் மாதிரி `நாயக்கர்'னு கூட கூப்பிடும். எனகென்ன வந்தது. இல்லே, இதில புதுசா என்ன இருக்கு! பாப்பானுக்கு திட்ட ஆயிரம் நியாயம் இருக்கும், திமுககாரனுக்கு காட்டி கொடுக்க ஆயிரம் காரணம் இருக்கும். இப்ப புது ஃபேஷன் ரவிகுமார் மாறி, பாப்பானுக்கு மஸாஜ் பண்ணிண்டு ஜெயமோகன் சொன்னதையே மாத்தி போட்டு இன்டெலெக்சுவல் பஜனை பண்ணவும் தேவை இருக்கும். இதுல புதுசா என்ன சொல்ல முடியும். புள்ளிவிவரத்த போட்டு என்ன புது கரடி விட போகிறீர்!
ஈவேராவை கொண்டுபோய் இப்ப சேர்மேனாக்கி, அந்த கதை என்னதுக்குகாணும். அதே கற்பனையை பறக்கவிட்டு ஈவேரா இல்லாத தமிழகத்தை கற்பனை பண்ணி பாக்கவேண்டியதுதானே! ஜஸ்டீஸ் கட்சிகாரன் ஒரிஸா தாண்டி கடை வச்சிருந்தான் - ஈவேரா காங்கிரஸுல இருந்தபோதே. அங்கெல்லாம் என்ன ஆச்சு, எவனுக்காவது ஜஸ்டீஸ் கட்சின்னு ஒண்ணு இருந்த விவரம் தெரியுமான்னு போய் கேளும்!
நீர் நினைவு தெரிஞ்சு மொதல்ல பெரியார்னுதானே கேள்விபட்டீர்? அதை பிரயத்தனம் பண்ணி எக்ஸிஸ்டேன்ஷியலிஸ்டா அந்நியபட்டு ஈவேரான்னு மாத்திண்டு இப்ப ஸ்வாமிநாதனை கூப்பிடலாம், சக்கரபாணியை கூப்பிடலாம்னு பஜனையெல்லாம் எதுக்கு? நேஜத்தை சொல்லவேண்டியதுதானே! என்னைக்கு இந்த ஸ்டாடிஸ்டிகஸை கண்டிண்டு அழறதை நிறுத்தபோறீரோ தெரியலை. ஸ்டாடிஸ்டிக்ஸ் ஒரு பாடம்தான், எல்லா பாடத்திலேயும் பாஸ்பண்ணத்தான் மேலே போகமுடியும். கார்நாடகத்துலேயும், ஆந்திராவிலேயும் என்ன பத்துபிறப்பாளனா இருக்கான்? இன்னிக்கும் பச்சையும், மஞ்சளும் மாத்தி மாத்தி சாத்திண்டப்றமும் கூட இந்துத்வாவாலே என்ன புடுங்க முடிஞ்சதுன்னு டாடிஸ்டிக்ஸ் போட்டு பாருங்கோ!
கேரளாலேயும் பெங்கால்லேயும் லெஃப்டா! (அதுக்கும் ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸா?) கேள்விபட்டேன்! ஒரு தரம் ஸ்வாமிநாதனே சொல்லிருந்தார் `என்னோட சிஷயாள்ளாம் நிறய பேர் அங்க இருக்கான்'னு. அப்ப லெஃப்டாத்தானே இருக்க முடியும். அப்படியே வச்சுகுவோம். அந்த லெஃப்டுக்கு பல இடத்துல வெட்டு குத்துன்னு ஆப்பு வைக்கிறா மாதிரித்தானே கேரளாவில ஆர்.எஸ்.எஸ்காரன் பலமா இருக்கான்(பெங்கால் கதை வேற). என்ன தனியா நின்னு இன்னிக்குவரைக்கும் தேர்தல்ல ஒண்ணும் புடுங்கமுடியலே! எல்லாத்துக்கும் ஒரு காரணம் சால்ஜாப்புன்னு சொல்லிண்டே போகலாம். காந்திதான் எல்லாம் பண்ணார், காந்தியில்லாட்டா அம்பேத்கார் ஏதுன்னு(அப்படியா?) கேண்டுண்டே போகலாம். உமக்கும் தெரியும் தமிழ் நாட்டு பாப்பான் மாதிரி வூடு கட்ரவன் எவனும் இருக்கமுடியாதுன்னு. இந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் உள்ளேயே பூந்து-அதுவும் ஈவேராகாலத்துல- குலகல்வி ஆப்பு வைச்சவன். அந்த இடத்துலே இத்தனை இயக்கம், சிந்தனை. போய் மத்த மானிலத்து விவாதத்தை போய் பாரும்.
ரீடிஃப்லே எழுதர கேஸ் திண்ணைலே எப்படி பால் மாறும்னு கவனியும். மேலே இருந்தா அப்பரம் பாப்போம். நாளைக்கு எழுதமுடியுமா தெரியல. அதான் கைல கிடச்சதை உள்ளே போட்ருக்கெ4என்.
அன்புள்ள ரோஸாவசந்த்
.
(ஒரு விஷயம்-`என்னுடைய ஜெயமோகன்' குறித்து. ஜெயமோகனை மறுப்பதன் மூலமே என்னுடைய இருப்பை ஒவ்வொரு விஷயத்திலும் நான் உறுத்திபடுத்திகொள்கிறேன். ஆனால் அதை(ஜெயமோகன் விரும்பும்/எதிர்பார்கும்) மூர்கத்துடன் தட்டையாய் செய்யமுடியாது. உதாரனமாய் என்னிடம் கேட்டாலும் இலக்கியம் மிக மிக முக்கியமானது என்றுதான் ஜெயமோகனை போல் சொல்வேன். சுரேஷிற்கு அவர் சொன்ன பதிலை போலவே அது தென்படும். ஆனால் ஜெயமோகானின் அந்த கட்டுரையிலிருந்து மிக தீவிரமாய் நான் வேறுபடுவேன். அதை முன்வைப்பதென்பது மிக மிக சிக்கலான காரியம். மற்றபடி ஜெயமோகனை ஒரு முக்கிய -எதிர்கொள்ளவேண்டிய- எழுத்தாளராகத்தான் என்னால் பார்க்கமுடியும்.
தங்கமணியின் (பழைய) பதிவின் பின்னூட்டத்தில் (இப்போது அவர் சில காரணங்களால் மறைத்து வைத்திருக்கிறார் ) நான் சொன்னதை படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் சொன்னதின் சாராம்சம் ஜேயேந்திரரை விட பார்பனர்களுக்கு முக்கிய அடையாளம் ஜெயலலிதா. இதன் அடிப்படை பெரியார் ஒருமுறை `வைதிக பாப்பானை நம்பினாலும் இந்த லௌகீக பாப்பானை நம்பாதே' என்று சொன்னதன் அடிப்படை, (என்னை பொறுத்தவரை கொஞ்சம் இந்த சோஷலிச பார்பனியத்தையும் கவனித்துகொள்லவேண்டும்.) நான் கொஞ்சம் மாற்றி கொண்ட பாணியிலிருந்து இப்படி என்னை எழுதவைத்து புண்ணியத்தை வாரி கட்டிகொண்டீர்.)
---ரோஸாவசந்த்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அலைன் ஆகாமல் குண்டக்க மண்டக்க வந்துள்ளது. சரி செய்ய நேரமில்லை. முடிந்தால் நீங்களே எடிட் செய்யவும் நன்றி.
எடிட் செஞ்சு அலைன்மெண்ட் மாத்தியாச்சு. நாளைக்கு வர்ரேன் சூடா. (:-))
அன்புடன்,
அனாதை
நன்றி அனாதை. நேற்று அவசரமாய் தட்டிவிட்டி போய்விட்டேன், பிறகுதான் ஏதாவது நிதானம் தவறி சொல்லிவிட்டேனோ என்று தோன்றியது. அப்படி எதுவும் சொல்லிவிட்டதாக தெரியவில்லை. நாளை சூடா வாரும், ஆனால் நான் இதை ரொம்பதூரம் இழுத்துகொண்டு போகும் ஐடியாவில் இல்லை.
//நாயக்கர்'னு கூட கூப்பிடும். எனகென்ன வந்தது.//
Pappan is a pappan.. Always. Periyar told us not to include pappans in the DK. That is for a good reason.
-Anathais Anonymous
Post a Comment