நேற்று இரவு தான் இந்தக் குறும்படம் பார்த்தேன். தமிழகம் சார்ந்த குறும்படங்களை பல பார்த்திருக்கின்றேன். சிறுவனாக இருக்கும் பொழுது நகர லைப்ரரில் மாதத்தின் இரண்டாம் சனியன்று படங்கள் போடுவார்கள். அந்தப் பொழுதில் உடல் சரியில்லை என்றாலே, பரிட்ச்சை சமயமோ தவிர மற்ற எல்லா நேரங்களிலும் படம் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் குடுப்பக்கட்டுப்பாட்டு பிரச்சாரப் படங்கள். கூடவே செய்தி நிறுவணப் படங்கள் எனப் பல. அதன் பிறகு சமீபத்தில் சிவகுமார் என்பவர் அமெரிக்கா வந்த போது காண்பித்த, அவர் எடுத்திருந்த படங்கள். லீனா மணிமேகலை வந்த போது, அவரை தவற விட்டிருந்தேன். அதன் பின் இப்பொழுதான் இந்தப் படம் Aசாலைப் பணியாளர்கள் வேலை நீக்கத்தைப் பற்றி பேசும் இந்தக் குறும்படத்தில் , சில மனிதர்களின் நேரடிச் சோகத்தை அவர்கள் மொழியிலே, அவர்களது நிஜமான உணர்சிகளிலேயே பார்க்க உணர்வுக் கொந்தளிப்பாக இருந்தது. சிறுவர்களின் முகபாவனைகள், அந்தக்
கண்களின் பின்னே தெரியும் சோகத்தையும் பயத்தையும் பிடித்திருந்தது ஆச்சர்யமாகவும் சோகமாகவும்
இருந்தது. சில விஷயங்களை இந்தப் படம் இன்னமும் தெளிவாக விளக்கியிருக்கலாமோ என்று பட்டது.
இந்தப் படம் இரண்டு விடயங்களை தொட எத்தனித்தது என நினைக்கின்றேன் - ஒன்று பிரச்ச்னையின் விளைவான தனிமனித சோகம். மற்றொன்று இந்தப் பிரச்சனையின் ஆணிவேரான அடிப்படைச் சட்டமீறல் அதுவும் அரசாங்கத்தினாலேயே. தனிமனித சோகத்தைக் காட்டிய அளவு, இந்த சட்டமீறைலைப் பற்றிய ஆழமான விவாதம் இல்லாமல் இருந்ததாகப் பட்டது. அரசாங்கம் பொய்யான தகவலைத் தெரிவிதிருந்தது அதாவது வேலைநீக்கம் செலவினக் குறைக்க எனச் சொன்னாலும், அரசாங்கம் அதே வேலைக்கு இன்னம் அதிகம் செலவழைக்கப் போகின்றது என கணக்கு காட்டிச் சொன்ன சங்கத்து இளைஞர் கருத்தை , ஒரு பேட்டி என்ற அளவில் இல்லாமல் , மேலும் ஆராய்ந்து அந்தக் கணக்கு பிழையை இன்னமும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம். அதே சமயம் அதே வேலைக்கு தனியார் நிறுவணங்கள் மிகக் குறந்த்த கூலி கொடுத்து வாங்கும் கொடுமையையும் வெளிச்சம் போட்டிருக்கலாம். இருந்தாலும் இந்தப் படம் அது செய்ய முனைந்ததை/ வெளிக்கொனர வந்ததை நன்றாகவே செய்தது எனலாம்.
இந்தப் படம் என்னுள் தூண்டியவைகளை சுருக்கமாக சொன்னால்
1. இந்தியாவின் சாலைப் பணியாளர்கள், இந்த வெளிநாட்டு சாலைப் பணியாளர்களை ஒப்பிட்டுப்பார்த்தால், கொடுமைப்படுத்தி வேலை வாங்கப் படுகின்றவர்கள் எனக் கொள்ளலாம். எந்தவித பாதுகாப்பு ஆபரணங்களும் இல்லாமல், தொழிலுக்கு வேண்டிய சரியான கருவிகளும் இல்லாமல், அவர்களது வெறும் உடல் உழைப்பை உறின்சி செய்யப்படிகின்ற வேலையிலும் நடந்த இந்த சட்டமீறலான வேலை நீக்கம் கொடுமையானது
2. எந்தவித அரசு கண்காணிப்பும் இல்லா / இருக்கும் கொஞ்ச நஞ்ச கண்காணிப்பும் லஞ்ச லாவண்யத்திற்கு விற்கப்படும் சூழலில் நடக்கும் தனியார் மயமாக்கம் மிகத் தீங்கானது
3. இந்திய அரசாங்கம் ஒரு நேர்மையான முறையில் பகிர்ந்து அளிக்கப் படவில்லை. வெள்ளைக்காரன் ஒரு அடிமை நாட்டை ஆளவேண்டியதன் பொருட்டு ஏற்படுத்திய வலுவான மத்திய அரசு / மிச்சம் மீதியை கொண்டு அமைக்கப்பட்ட அடிமை மனப்பான்மை கொண்ட மாநில அரசு என மேல் நோக்கி செல்லப்படும் அரசமைப்பை, சுதந்திர இந்தியாவும் சுவீகரித்தது தான் பிரச்சனை. ஒரு நேர்மையான, பொது மக்கள் தங்களைத் தானே ஆள வைக்க வேண்டிய வலுவான முக்கிய அதிகாரம் ( தானே வரி வசூலிக்கக் கூடிய) கொண்ட உள்ளுர் அரசாங்கம் , உள்ளூர் அரசாங்கங்களை வழிப்படித்துகின்ற மாநில அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் ஒரு பொது நிதி கொள்கையைக் கொடுக்கக் கூடிய, மாநிலங்கள் சமபங்கு உரிமை கொண்ட மத்திய அரசு என்னும் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசு இயந்திரங்கள், மக்களுடன் நெருக்கமாக இருந்தால் இந்த வகை சட்ட மீறல்கள் குறையவும், சாலைப் பணியாளர்கள் போன்ற அடிப்படை விஷயங்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் வாய்புகள் அதிகரிக்கலாம் என்று ஒரு எண்ணம்.
இந்தவகைப் படங்கள் மேலும் எடுக்கப்பட்டு அவைகள் விவாதப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். எடுத்த டைரக்டர் மாதவராஜிர்க்கு நன்றியும் வாழ்த்துகளும்.
படத்தை இங்கேயும் பதிக்கின்றேன்.
சரியாக வரவில்லையென்றால் இங்கேயும் பார்க்கலாம்
Friday, March 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நானும் பார்த்தேன். அரசின் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கை.
போராட்டத்தில் பல தொழிலாளர்கள்
வென்றுவிட்டார்கள்.
ஆனால் இக்கொடுமையால் இறந்தோர் குடும்பம்,மனநிலை பிறழ்ந்தோர் நிலை
குறிப்பாகத் அத்தாய் விடும் கண்ணீர்.
இதை எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செய்த இந்த'அரச' அம்மாவை என்னென்பது.
நிழலின் அருமை வெய்யிலில்
காமராஜர்,ஏன் எம்ஜீஆரைக் கூட அதைப் பார்க்கையில் நினைத்தேன்.
Post a Comment