அடிகாவின் இந்தக் கதையைப் பற்றி போன வருடம் ஏப்ரலில்இந்த இடத்தில்வந்ததைப் பற்றி என்னுடைய twitter messageல் குறிப்பிட்டிருந்தாலும், இப்பொழுது தான் படிக்க முடிந்ததது. சில நாட்கள் முன் COSTCO மாதாந்தர சாமான் வாங்கும் வைபவத்தில் என் மனைவி தீவிரமாக தள்ளுவண்டியில் அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது, நான் புத்தகப் பிரிவில் மேய்ந்து (திட்டு வாங்கிக் கொண்டுதான்) கொண்டிருந்தேன். இந்தப் புத்தகம் $8.99 க்கு கிடந்தது, வாங்கவும் கை அரித்தது. எனக்கு fictionஐ விட non fiction மீது ஈடுபாடு இருந்தாலும் அபூர்வ சமயங்களில் fiction வாங்குவது உண்டு கவணிக்க- வாங்குவது என்பதற்கும் படிப்பது என்பதற்கும் 6 வித்தியாசங்களுக்கு மேல் உண்டு. ஆனால்
இந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்னும் தீவிரம் இருந்தது. பலவருடங்களுக்கு முன் அருந்ததிராயின் காட் ஒப்ஃ சுமால் திங்ஸ் நாவலை வாங்கி படிக்க ஆரம்பித்து பாதியில் நின்றது, இன்னமும் நிற்கின்றது. சிறுகதைகள் படிக்க முடியும் எனக்கு, நாவல்கள் பெரும் சவால் தான். என்ன பிரச்சனை என்றால் , சிறுகதைகளை தூங்கவதற்கு முன் இருக்கும் அவகாசத்தில் படித்து விடலாம், சில கும்பல்கள் சிறுகதை என்ற பெயரில் குருநாவல் எழுதி உயிரை எடுக்கும், அதை மறந்து விட்டால். ஆனால் நாவல்கள் அப்படியில்லை. பாதியில் நிறுத்தினால் திரும்ப ஆரம்பிற்பதற்கு மெனக்கெடுதல் அதிகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்களின் குறையை விட தவிர என் முனைப்பின் மீதுதான குறை அதிகம். இடைவெளியில் பல திசைகளில் மனம் திருப்பிவிடப்படுகின்றது. மிடில் ஸ்கூல் கால கட்டங்களில் கோடை விடுமுறைகளில், தூங்கும் போதும் , பேளும் (நன்றி ராஜநாயகம்) போதும், சாப்பிடும் போதும் வண்டி வண்டியாக கல்கி, சாண்டில்யன் என படித்த காலங்கள் போய் இப்பொழுது ஒரு 300 பக்க நாவல் படிக்க மூச்சு வாங்குகின்றது. பல கதைகள் பாதியிலே- இது தமிழிற்கும், ஆங்கிலத்திற்கும் பொருந்தும். இந்தக் கொடுமை இப்போ சில/பல சினிமா படங்களுக்கும் தொடர்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் இந்த நாவலை படித்து "முடித்து" விட்டேன். முதலில் ஒரு ஓட்டத்தில் 200 பக்கங்களை கடந்ததும் அடுத்த ஒட்டத்தில் முடிக்க வைத்துவிட்டது. நடை வேகமாக ஓடியது என்பது கூட காரணமாக இருக்கலாம். கதை என்றால் ஒன்றும் இல்லை. குண்டியால் சிரிப்பதற்கு கதையென்பது தேவையா என்பது இந்த நாவல் வைக்கும் ஒரு கருத்தாகக் கூட இருக்கலாம். முதலில் ஒன்று சொல்ல வேண்டும். இந்தக் கதையின் அடிநாத நக்கலைப் பிடிக்க, கொஞ்சம் சூடு சொரனையுள்ள தெற்கத்திய கருப்பனாக இருந்து, வடக்கத்தியான்களுடன் சகவாசமும் முக்கியமாக வடநாட்டில் சில காலமாவது வாழ்ந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்தியாவுடன் சுத்தமாக எந்தவித தொட்டுக்க பட்டுக்கவும் இல்லாமல், இந்தியா என்பதை புத்தகவாக்கில் அறிந்து இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாவிட்டால் இந்த நாவலைப் படிக்க/புன்முறுவல் பூக்க/அப்படி போடு என/ ஒஹ் இந்தக் கூனாக்கல் இப்படிதானா என நக்கலுட/ முடியாது.
நாவல், ஒரு ஏழு இரவுகளில், ஒர் மாபெரும் கசாப்புக்கடையில் இருக்கும் கோழிகூண்டிலிருந்து ஒரு கோழி எப்படித் தப்பிக்கின்றது (உண்மையிலேவா?) என கோழியே மற்றுமொரு மாபெரும் கசாப்புக்கடை அதிபருக்கு விளக்கி எழுதும் கடிதங்களின் தொகுப்பு தான். ஒவ்வொரு இரவும் கசாப்புக்கடையை எவ்வளவு தூரம் ஒரு "கோழி" விளக்கமுடியுமோ அந்தளவிற்கு விளக்கின்றது. 36000004 ( 3 கோடியே 60 லட்சத்து இந்து + 3 கிறிஸ்தவ + 1 முஸ்லீம் கடவுளர்) குண்டிகளை தொழும் கோழிகளின் பழக்கவழக்கத்தில் ஆரம்பித்து, கோழி எதை இழந்து தப்பிக்கின்றது, பின் தப்பித்த கோழி எப்படி தானே ஒரு கசாப்புக்கடை வைத்து..., என ஒரு சோகமான காலவட்டத்தில் கதை முடிந்து விடுகின்றது. முன்னா "ஹல்வாய்" இந்த ஜன்மத்திலேயே அசோக் "சர்மா"வாக என்ன செய்யனும் என்னும் இந்தக் கதை "வருதே மூத்திரம்" கோஷ்டிகள் படிக்க முடியாதது தான்.
பொதுவாக பொலிடிகல் கரக்ட்னெஸ் பார்க்கும் மேற்கத்திய கோஷ்டிகள் இதை எப்படி உள்வாங்கின என்பது ஒரு ஆராய்வுக்கு உள்ளாக வேண்டிய விஷயம் கூட.. பின் குறிப்பாக உள்ள ஆசிரியரின் பேட்டியில் ஆசிரியர் தனது எழுத்தின் ஆதர்சமாக, மூன்று கருப்பின ஆசிரியர்களை குறிப்பிடுகின்றார் - ரால்ப்ஃ எலிசன் (Ralph Ellison), ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin), ரிச்சர்ட் ரைட் (Richard wright) - முக்கியமாக எலிசனின் இன்விசிபிள் மேன் என்னும் புத்தகத்தையும் குறிப்பிடுகின்றார். நாவலின் முன்னும் பின்னும் குவிந்திருக்கும் (அஜீர்னப்படுத்தும் அளவுக்கு உள்ள) புகழாரங்களில், பலரும் எலிசனின் இன்விசிபிள் மேனையும், ரைட்டின் நேட்டிவ் சன் னையும் குறிப்பிடுவதால், அந்தப் புத்தகங்களுக்குள் , இந்த நாவல் மேற்கத்தியவர்களில் எந்த நரம்பைத் தொட்டது என்னும் மர்மம் இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. கூடவே எல்லா விடயத்தையும் "பிலாசபிக்கலாக" பார்ப்பது போல் "தொனத்தொனவென" பேசும் "இந்தியர்களின்" முடிச்சை மேற்க்கத்தியவர்களுக்கு இந்த நாவலின் முக்கிய கோழி அவிழ்க்கப் பார்த்திருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
Saturday, March 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
"படித்த காலங்கள் போய் இப்பொழுது ஒரு 300 பக்க நாவல் படிக்க மூச்சு வாங்குகின்றது. பல கதைகள் பாதியிலே- இது தமிழிற்கும், ஆங்கிலத்திற்கும் பொருந்தும். இந்தக் கொடுமை இப்போ சில/பல சினிமா படங்களுக்கும் தொடர்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். "
இங்கேயும் அதே. 100 சதம் நம்புகிறேன்.
Post a Comment