Sunday, October 30, 2005

பஞ்சதந்திரத்தில் ஐந்து பொம்மனாட்டீகள் ஏதோ சலூன் பார்ட்டியிலோ ஸ்பாபார்டியிலோ உக்காந்துண்டு வம்பு பேசிண்ட்ருப்பா. போன வார சன் டீவி கடங்காரன் போட்டான். அதையே கொஞ்சம் மாத்தி இந்த திண்ணை கோஷ்டிகள் வம்பு பேசிண்ட்ருக்கிறதை இந்த வாரம் போட்டிருக்கா. நேக்கு என்ன பண்றதுன்னு தெரியலே. மூனு மாசமா எழுதலன்னா பல்பு பீஸாயிடும்ன்னு தமிழ்மணக்கறவா கண்டிசன் போட்டுட்டா. சரி ஏதோ அங்கதம் அங்குசம்ன்னு மணக்க வைக்றாள்லோன்னா அதை மாதிரி ஏதோ ஒன்னைப் பண்ணி இங்க போடலான்னு பார்த்தா, செத்தவாளை கிண்டல் பண்றமாதிரி இருக்கேன்னு யாரும் கொடி பிடிச்சு பல்பை பீஸாக்கிட்டா என்ன பண்றதுன்னு தெரியலே. நம்மவாளத்தான் நம்பியிருக்கேன். நம்மளவா தான் கருத்துச் சுதந்திரம்ன்னா எண்ணையா நிற்கறவாளாச்சே என் பிளாக்குக்கும் "முதல்" இணைப்பைக் கொடுத்து "என்னையும்" காப்பாத்திடுவாள்ன்னு ஒரு நம்பிக்கை தான்.

போனவருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஒரு ஸ்பா பார்ட்டி. இந்தியாலேருந்து ஒரு பழம் பெரும் நடிகை வந்திருந்தா. நடிக்கிறதை விட்டுட்டு சமையல் கலையிலே இறங்கிட்டா இப்போ ஏதோ டீவி ப்ரோகிராமுக்கு. இண்டர்னெட்டுல 'தளிகை" ன்னு மேகசீன் போட்டுண்டு இருக்கின்ற கோமளா வரதன் தான் இந்தப் பார்ட்டி கொடுத்தா. பார்ட்டியிலே யார் யாரோட ஓடினாள்னு பேசிண்டது, வயத்தைக் குமட்டற வாயு பிரிந்ததுன்னு சிலதைத் தவிர எல்லாத்தையும் பகிரும் பெரும் மனப்பான்மை எனக்கு இருக்கு. புத்தம் சரணம் கச்சாமி...

இந்த ஸ்பா பார்டியிலே ஹோம் சயிண்ஸ் பேராசிரியை உண்ணாமுலை, மருத்துவ நிபுணி ஷோபனா, துணைக்கு கணவர் ரவி, தளிகை நடத்துனர்கள் கோமளா வரதன், பண்டரி பாய், அப்புறம் வரதன் , பட்டிமன்றம் புகழ் ஆச்சார நங்கை என்னும் வண்ணை வச்சலா, மற்றும் உப்புக்குச் சப்பாணியாக என்னைப் போன்ற பலர் கலந்து கொண்ட இந்த ஸ்பா பார்ட்டி சம்பாஷணையிலிருந்து..

உண்ணாமுலை : அடுத்த ஸ்பா பார்ட்டி எப்ப?

சுந்தரி : கோமளாவைத்தான் கேக்கனும்.

உண்ணாமுலை : அடுத்த ஸ்பா பார்ட்டின்ம் போது யேல் வந்தேள்ன்னா ஒரு சமையல் ஷோ வைச்சுரலாம். என் ஸ்டூடண்ட்ஸ் நல்லா ருசிப்பா.

சுந்தரி : யேல்ல என்ன பண்றேள்.

உண்ணா ; சமையல் தான் ..

பார்வையாளர் பலத்த சிரிப்பு.. ( ஸ்பா பார்டியிலே பார்வையாளரான்னு குறுக்க கேக்கப்படாது கோர்வையா வராது நேக்கு அப்புறம் )

சுந்தரி : பலமுறை உங்களை எங்காத்துக்கு பக்கத்திலே பார்திருக்கேன். என் டீவி ஷோல கூட பேட்டி எடுத்தோமே.

உண்னா : இப்போத்தான் இங்கே வந்தேன். உங்க மருமக ராதாக்குத் தெரியுமே

பொறுமையிழந்த வண்ணை வச்சலா : ஹோம்சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ் டிபன்ல்லாம் ருசிப்பாளா இல்லை ஃபுள் மீல்ஸ் தானா?

உண்ணா: ம்ம்ம் சில பேருக்கு டிபன் பிடிக்கும். இப்பத்தான் சமைக்க ஆரம்பிக்கிறா இங்கே

சுந்தரி : கலிபோர்னியா பேராசிரியை லிவர் ஃபுள் மீல்ஸ் வத்தக் குழம்பை விட்டு வரமாட்டேன்றாளே

உண்ணா: அவா நாக்கு அப்படி

சுந்தரி : அதுக்காக பிஸ்ஸா தெரியாம இருக்காளே, அவா அவா டேஸ்ட் அப்படியோ..

வண்ணை வச்சலா : சில பேர் தான் இன்னும் வத்தக் குழம்பு சாப்டுண்டு இருக்கா. அதைத் தப்புன்னு எப்படி சொல்லலாம்?

சுந்தரி : அதைத் தப்புன்னு தான் சொல்லனும். ஹோம் சயிண்ஸ் ப்ரொபசரா இருந்துண்டு வத்தக் குழம்போட இருந்தா எப்படி? நூடுள்ஸ், பிஸ்சா ன்னு உட்டு விளாச வேணாமா?

வண்ணை : நான் என்ன நினைக்கிறேன்னா, புல் மீல்ஸ் foodன்னா என்ன சாதரண டிபன்னா என்னன்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியனும். லிவர் எல்லாம் புல் மீல்ஸ் peopleன்னு சொல்லலாம்.

(இதெல்லாம் என் தலைவிதி ன்னு நினைத்துக் கொண்டே)உண்ணா :

யுனிவர்சிட்டிலேல்லாம் Specialize பண்ணாத்தான் பொழப்பு ஓடும். சிலருக்கு full meals specilizatioன்னா சிலருக்கு டிபன்.

யேல் டோரா: To promote indian food, importance of full meals is subordianate to
issues around whole indian food. When your kid chooses Yale, they can think like "
If I go to Yale, I can cook Indian food also". Our aim is to make the students
identify all indian spices in four years time.

வண்ணை வச்சலா : நான் என்ன நினைக்கிறேன்னா, யேல் ஸ்டூடண்ஸ்க்கு இட்லி
வடை தெரிஞ்சா போறும். I am not interested in full meals.

டோரா : Sure, our students can pick up Dosa and eat without fork and knife.
They can use their hand you know

சுந்தரி (உண்ணாமுலையைப் பார்த்து0 Sorry, நான் உங்களை கண்டுக்கவே இல்லை முதல்ல

உண்ணா : அதனாலென்ன , எல்லாரும் தான் முகத்துல இந்த வெள்ளைய பூசிண்டு கண்ணுல வெள்ளிரிக்காவை வைச்சுண்டுருக்கோம்,. யாரை யாருக்கு தெரியறது.


வண்ணை வச்சலா: அடுத்த சமையல் ஷோ எப்ப?

சுந்தரி : இப்பல்லாம் வெறும் வீட்டு டிப்ஸ் மாத்திரம் தான் கொடுக்கிறேன். சமையல் ஷோக்கு நிறைய உழைக்கணும். டிப்ஸ்க்கு கூடத்தான். அமெரிக்காவிலல்லாம் எவ்வளோ ரெசபி வச்சுண்டுருக்கா. பெரிய பெரிய டிஷ்ஷஸ்ல்லாம் ரொம்ப சாதாரணமா எழுதிருக்கா

பண்டரி பாய் : நடிகை லக்சுமியோட அம்மா ருக்குமனி ஒரு சமையல் புத்தகம் எழுதிருக்கா

சுந்தரி : புத்தகம் தலைப்பு என்ன?

பண்டரி பாய் : ரசம் தாளிப்பது எப்படி?

சுந்தரி : நம்மவாள்ளாம் இப்படி தான் ரொம்ப சிம்பிளான ரெசபியை சிம்பிளா தந்திடுவா. ரெசபியோட complexity ஒன்னும் இருக்காது. இங்கே (அமெரிக்காவுல) உள்ளவா எல்லாம் அப்படி இல்லை. "அடுப்பை நெருப்புக் குச்சி கொண்டு பத்த வைக்கவும்" ன்னு இங்குள்ளவா எழுதவே மாட்டா. ( பார்வையாளர்கள் சிரிப்பு). நம்மவா அப்படித்தான் ஆரம்பிப்பா. (மீண்டும் சிரிப்பு). அதுக்குள்ள போய் அந்த complexityயோட எழுதுறதெல்லாம் ஒரு Art. In this country they are doing it casualy.

ரவி : சில பேரு வாய்ல வைக்கமுடியாம சமைச்சுட்டு அதையே மருந்துண்னு நினைச்சுட்டு -damn fools they are..

சுந்தரி : but, இங்குள்ளவா மாறி அங்கேயெல்லாம் வெளியே வந்து சாப்பிட்டாள்ன்னா, அவன் foolன்னு வெளியே தெரிஞ்சுடும். யாரும் வெளியே வந்து சாப்பிறது இல்லை. அவனுக்கும் வேற வழியில்லை வாயில வைக்க முடியாம சமைக்கிறான்,

உண்ணாமுலை : இந்த நாட்டுலே சமையல் ஒரு கலையா வளர்ந்திருக்கு. நம்ம நாட்டுல வெளிக்கி போறது ஒரு கலையா வளந்திருக்கு. பாமரர்கள் திங்கிற மாதிரி ஒன்னுமே இல்லை. எளிமையா சமைக்கிறதுன்னுட்டு சாம்பார்ல தண்ணியை ஊத்தி ரசம் அப்படீன்ணுறான். நான் ஒரு பட்லர். நான் சமைச்சா non-butlers திங்கனும். MITலெ ஒரு ஹோம் சயின்ஸ் ப்ரொபசர் இருக்கார். அவர் சமைச்சா எல்லோரும் திம்பா. நம்ப நாட்ல பாஞ்சாபிஸ் தேவலாம்.

சுந்தரி : வெளிக்கி போறது ஒரு கலையா இருக்குன்னு சொல்றேள். என்னால ஒத்துக்க முடியாது. ஒரு புக் இருக்கு. வெவ்வேறு கால கட்டத்துல வெளிக்கி போறதைப் பற்றி ஒரு புக் இருக்குன்னு வைச்சுக்குங்கோ. திறந்த வெளி புல்வெளி கழகத்திலே வெளிக்கி போனவா, ஆத்தங்கரைப் பக்கமா சொம்போடோ வெளிக்கி போனவா, வரிசையா மேடை மாதிரி கட்டி அது மேல பாகம் ப்ரிச்சுண்டு வெளிக்கி போனவா, flush டாய்லெட்டுல அதான் பாம்பே கக்கூஸ்ல வெளிக்கி போனவா, இப்ப உக்காந்துண்டு வெளிக்கி போறாளே அது மாரி போனவான்னு ஆராய்ச்சி பண்ணி இருக்காது. அதுக்கும் இங்கே வந்து national geographyல ஏதேனும் படம் எடுத்துருக்கானான்னு தான் பாக்கனும்.

உண்ணாமுலை (குமட்டலுடன்); நீங்க சொல்றது சரி தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் எழுதறா. அவாளும் இந்த பீயைப் பத்தி எழுதாம பீயள்றவாளப் பத்தி எழுதிண்டு போயிறா.

சுந்தரி (புல் ஃபார்மல) : யாருமே இல்லை. அப்கோர்ஸ். ஒரு பில்லியன் இந்தியர்கள் இருக்காங்க; 2000 வருட பாரம்பரியம் இருக்கு. சிந்து சமவெளியிலேயே கக்கூஸ் இருந்திருக்கு. வேர்ல்ட நாறடிச்சு முழுகடிக்கிற வெளிக்கி போர்ஸ் நம்ம கிட்ட இருக்கு. ஏன்ணா அந்தளவுக்கு back-ground இருக்கு. ஆனா நம்மோட smellல கான்பிச்சா ஒருத்தருக்கும் கண்டுபிடிக்க முடியலை. நம்ப கண்டிசன் அப்படி. அண்டார்டிகாவுல ஒருத்தர் கண்டுபிடிச்சார் அப்படிம்பாங்க. என்னன்னு பார்த்த நம்ம சயண்டிஸ்ட் அங்க குடிசை போட்டுருப்பார். அவ்வளவு தான். பரவலா, நம்மளோட கண்ரிபூசன், நம்ம ஸ்டைல் யாருக்கும் தெரியாது.

ஜியார்ஜியன்: you got a point. இன்னி தேதிக்கு சைனீஸ் , இட்டாலியனை விட டேஸ்டானது இந்தியன் foodன்னு எந்த சுலினரி ஸ்கூல்லயாவது சொல்றாளா? one of the three best full meal or full course foodன்னு சொல்றாளா?

சுந்தரி: அதுல பெருமையில்லை மேடம். பிரேக் பாஸ்டுக்கு , லஞ்சுக்கு, டின்னருக்குன்னு continuous food இருக்கே!!! வேறேங்காவது இருக்கா? யாரவது சைனீஸ் பிரெக் பாஸ்ட் சாப்டு இருக்கேளே?

டோரா : We have to explain this to food connoisseur community in Yale. they dont know it. We have to feed them, Indian food is a world food.

ரவி : What is the meaning of world food?

டோரா : The smell should go beyond the kitchen. The aroma should float in air without the time consciousness. I am cooking up this. Trying to fry something. If you take the pakistan food menu, it is very shallow. Not more than two pages. Indian food menu is bigger than that.

ரவி : Do you think in Asia everybody knows about Indian food? Then you have not done it in your own continent.

டோரா : Instead of cooking Indian food, the rich inidan dishes should be cooked like Chinese or thai or italian. Then others will know about it.

சுந்தரி : இல்லங்க, இது இன்னமும் complex. நீங்க இட்டலியை பிஸ்ஸா மாதிரி ஓவன்ன பேக் பண்றீங்க. அவங்க பிஸ்ஸாவை இட்டலி மாதிரி வேகவைக்கிறாங்க. எது வேர்ட்ல ரீச் ஆகும். உங்க இட்லி வேகுமா? இல்லை அந்த பிஸ்ஸா வேகுமா? அந்த பாயிண்டை யோசிச்சு பாருங்க.

ரவி : It will not boil for sometime , but if we ...


சுந்தரி : சாத்தமுதுவோட ரெசபியை பார்த்தசாரதின்னு ஒருத்தர் pie மாதிரி மாத்தி செஞ்சுருக்கார். ஒருத்தர் சீண்டலையே. seven to eight years கஷ்டப்பட்ருக்கார். ஏன் சீண்டலை?

டோரா : exactly this point. there are butlers here. They some time look at chappathi or Naan but not idli or dosa

ரவி : Idly or dhosa is next only to Chappathi or Naan

சுந்தரி : வேர்ல்ட இருக்குற பெஸ்ட் ரெசபியில சப்பாத்திக்கி இடம் கிடையாது. உங்க கண்ரியிலே http://www.epicurious.com/ அப்படின்னு ஒரு சைட் இருக்கு சப்பாத்திக்கு இடம் கிடையாது. பல்லுல மேல் அன்னத்தில ஒட்டுதுன்னு பளிச்சுன்னு சொல்றான்.

டோரா : சப்பாத்தி ஒரு உலக மாக கோந்து தான்.

சுந்தரி : நேக்கு ரொம்ப சந்தோசம் சப்பாத்தி இப்படி அதானல இடம் கொடுக்கலன்னு ஒரு ரீசன் கொடுக்கிரான் பாருங்க. இப்பத்தான் ஒரு ரெசபி புக் வாங்கினேன். பல பேர் ரெசபி இருக்கு. மெக்ஸிகன் tortilla ரெபர் பண்றான். கிரீக் பிட்டா பிரெட்டை ரெபர் பன்றான். நம்ப naan கிடையது சப்பாத்தி கிடையாது.

பண்டரி பாய் : அது வந்து தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்ப இந்தியாவை எடுத்துண்டேள்ன்னா, சப்பாத்தி / naan இல்லாம ஏதாவது food irukkaa?

சுந்தரி : அது பத்தி சொல்லல. இப்ப இட்டலி தோசை யோட நிலமை எப்படி இருக்கு?

பண்டரி பாய் : அது கரெக்ட்; அதுக்கு நம்ப நாடு ஒரு தீணிப் பண்டார நாடாகனும்.

ஷோபனா : Digestion Power.

சுந்தரி : கரெக்ட்.

ரவி : ஏசியாவில இருக்குற எல்லா சாப்பாட்டு கல்ச்சருக்கும் இந்தப் பிரச்சனையா?

சுந்தரி : மிச்ச எல்லோரும் சாப்பாட்டு ரசனையில மட்டம் தான். நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம். உலகத்துலேயே எளிமையா ஜீரணம் ஆகிற உணவு இட்லி. எல்லோருக்கும் ஆகும் குழந்தையிலிருந்து கிழவன் வரை. நாம என்ன பண்ணிண்டு இருக்கோம். இட்டலி சில சமயம் சரியா ஊறலைன்னா கல்லாயிடும் மத்தபடி எல்லோரும் செரிக்கிற மாதிரி தானே இருக்கு?

கோமளா : அதை நல்லா விக்கனும். நம்மகிட்ட விக்க ஆளில்ல்லை. நான் கூட இந்தியர்களுக்குமட்டும்.comன்னு ஒரு கடையை internetல போட்டு விக்கப் பாக்கிறேன். ஒருத்தனும் மோந்து கூட பார்க்க மாட்டேன்கிறான்.

சுந்தரி : ரவி அய்யா சொண்ணாங்க. மாத்திப் போட்டு செய்யனும். இட்டலிய பிஸ்ஸா மாதிரி bake பண்ணனும்னு. இன்னி தேதிக்கு பெஸ்ட் ஓவன்ல வைச்சி இட்டலிய bake பண்ணாலும், அதை விக்க முடியாது

ஷோபனா : பெஸ்ட் food mart போனா ஆயிரம் மெனு இருக்கு ஆனா இட்டலி கிடையாது.

சுந்தரி : அந்த food எல்லாம் சாப்பிட்டு பார்த்தேள்ன்னா ஒன்னு கூட செரிக்காது, நம்ப இட்லி மாதிரி இல்லாம

ஷோபனா : ஆமா ஆமா.

சுந்தரி : இந்த பிட்டா பிரெட் இருக்கு இல்ல அதை வைச்சி நாலு dishhes இருக்கு. ஏன் சப்பாத்தியை வைச்சு இல்ல

பண்டரிபாய் : இங்கே ஹரே ராமா ஹரே கிருஷ்னா இரண்டு கெட்டான் ஒருத்தர் சப்பாத்தியையும் , பாஜியையும் வைச்சி சைனீஸ் நூடுள்ஸ் பண்ணியிருக்கார்.

உண்ணாமுலை : டேஸ்டி foodன்குறது ஒன்னு, packaging the foodன்கிறது ஒன்னு. இரண்டும் வேற வேற

பண்டரி பாய் : packaging சரியா இருந்தா திண்ணையை கூட Googleஸ்கிட்ட வித்திரலாம் இல்லிங்களா?

உண்ணாமுலை : அது ஒரு வகையான packaging. நான் சொல்றது கிட்ட connoisseur அப்பீல் பண்ற மாதிரி packaging. இப்ப நல்ல ஜப்பனீஸ் ஹோட்டல்ல சூசி பாத்தீங்கன்னா அதை தட்டுல தர்ரதிலேயே ஒரு அழகு இருக்கும் இல்லீங்களா.

ரவி : சப்பாத்தியை முழுசா கொடுக்காமல் பிச்சி பிச்சி கொடுக்கலாம் பல்லுல ஒட்டாது. Nobel Prize winner Chandrasekar uses to cut pieces of chappathi for distributing in his classes. Two of other Nobel Prize winners also started grabing it from him to distribute in their class room.

சுந்தரி : connoisseur இருக்காங்களே, நான் தமிழ்ல சாப்பாட்டு ராமன்கள்ன்னு சொல்றது. தமிழ்நாட்டு சாப்பாட்டு ராமன்கள உலகத்து சாப்பாட்டு ராமன்களோட ஒப்பிடவே முடியாது.(பார்வையாளர்கள் ஒரே சிரிப்பு) பர்ஸ்ட் ஆப் ஆல், ஒரு சின்ன விஷயம் சொல்றேன், நான் தமிழ்நாட்ல சுற்றி இருக்கும் போது டாக்டர்ஸ், பொலிடிசியன்ஸ், ரிலிஜியஸ் பீபள்எல்லோரையும் பாக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் என மனசுல பட்டிருக்கு. நாம் எந்த சாப்பாட்டை சாப்பிடறோம்ன்னு ஒரு உணர்வே கிடையாது. சாப்பாட்டை எவன் மோந்துண்டு ரசிச்சுண்டு சாப்புடறான். உருண்டு கட்டி அள்ளி அப்புறதோட சரி. நான் connoisseurன்னு அதைத்தான் சொல்றேன். அந்தாளு ஒரு aristocrate மாதிரி இருக்கனும்னு நான் நினைக்கல. நீங்க செஞ்சுண்டு இருக்கிறது சாப்பிடறதுன்னு கூட ஒரு உணர்வு கிடையாது. தமிழ்நாட்ல அவ்வளவு பேரும் வெளிக்கி போறவன் மாதிரி தான் இருக்கான். வெளக்கெண்ணையை குடிச்சுண்டு ஓவரா வெளிக்கி போயிண்டே இருகிறவன் எப்படி இருப்பான்? சாப்பாட்டுக்கும் அவனுக்கும் contact போயிறதோல்லியோ? அதே மாதிரி தான் தமிழ் நாட்ல இருக்காங்க. நான் கொஞ்சம் exaggerate பண்ணி சொல்றேன்,

பண்டரி பாய் : இன்னும் கொஞ்சம் specific exampleஓட சொல்லுங்களேன்.

(தொடரனுமா ?)


மேலும் படிக்க

Sunday, August 14, 2005

மேதமை அரசியல்....


இளையராசா என்னும் இசைமேதையை வைத்து ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. எவன் கை எவன் முதுகை குத்துகின்றது அல்லது எவன் முதுகு எவன் கையை குத்து கின்றது எனப் புரியாமல் ஒரு கிச்சு கிச்சுத் தாம்பாளம். ஞாநி, சாரு , அவுட்லுக் ஆனாந்த், 10ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல முனையும் "பெரியாரி"ஸ்டுகள் (யாருப்பா நீங்கள் எல்லாம்?) ஒரு பக்கமும் , கலக விரும்பி ( நன்றி பத்ரி அவர்களே) ரோசாவசந்த் மறுபக்கமும் மற்றும் ஒத்துக்கு கூடவே "இசை" ரசிகர்கள், "இசை அரசியல்" ரசிகர்கள் மற்றும் வழக்கமான "பூணூல்" ரசிகர்கள்.

சரி சண்டை தான் என்ன என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முனைந்தாலோ தலைச் சுற்றுகின்றது. இளையராசாவின் இசை மேதமையை ஞாநி, சாரு மற்றும் 10ஆம் நூற்றாண்டு பெருவியாதிஸ்டுகள் "மதிக்காமல்" அவரது அரசியல்/சமூக நிலைப்பாட்டை கற்பனை செய்து குற்றம் சாட்டுவதாக ரோசாவின் "கலகம்" என நினைக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டின் வீர்யம், இளையராஜா தலித் சமூகத்திலிருந்து வந்தவர் என்ற கருதுகோளைக் கொண்டு, அசோகமித்ரன், ஜெயகாந்தன், இளையராஜா என்ற அந்த வர்ணாசிரம ஏற்ற இறக்க வரிசையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பா அல்லது வேறு ஏதேனும் உள்குத்தா என யாமறியேன் பராபரமே. இப்போதைக்கு இந்த "மேதமை" என்ற விடயத்தில் மட்டும் தற்போது கவனம் செலுத்த ஆசை

அது என்ன மேதமை? தலித் சமூகமோ அல்லது அதைப் போன்ற ஆனால் வெவ்வேறு அளவுகளில் அச்சுறுத்தல்களுக்கும்/சுரண்டல்களுக்கும்/வன்முறைகளுக்கும் உள்ளான வேறு சமுகங்களோ, பாலினங்களோ , இந்த "மேதமை" என்ற யாரோ நிர்ணயித்த அளவுகோளினைத் தாண்டிய ஆளுமைகளை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏதேனும் உள்ளதா என்பதே என் முன்னால் உள்ள கேள்வி. சில மாதங்களுக்கு முன் வலைப்பதிவில், இன்று ரோசாவசந்துடன் சேர்ந்து கலகப் போர் தொடுத்திருக்கும் அருள் என்பவரின் பதிவில் ஒரு வர்ணச்சித்திரம். ஊர்க் குருவியின் அருகில் அமர்ந்து ஒரு பருந்து சொல்கின்றது "உயர உயரப்" பறந்து நான் பருந்தாகிவிட்டேன் என்று. நந்தலாலா என்பவர் கமெண்ட்டைப் படித்தால், இளையராஜாவும் மனது வந்து சமூகத்தினரை நேருக்கு நேர் பார்த்து கருத்து சொல்லும் பாக்கியம் வந்தால் உதிர்ப்பதும் "இதைப்" போல் இருக்கக் கூடும் என்று தெரிகின்றது. "இதைப்" போன்ற "வன்"முறையை, அது விளைவிக்கும் பாதிப்பை, ஒரு "ஒரிஜினல்" பருந்தும் "ஊர்"குருவிக்கு செய்து விட முடியாது.

அது போகட்டும், மூளையின் மடிப்புகளில் சில அதிக மடிப்புகளை இயற்கையின் சோழி உருட்டல் விளையாட்டில் பெற்றுவிட்ட தன்மையினாலே வரும் "அதி" மனித தீரங்களுக்கு எந்தளவு அவசியம் மற்றும் தேவையும் கூட? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் இதயத்தின் அளவைவிட சற்று அளவு பெரிதான ஒன்று அமைந்து போனதாலே விளையாட்டுத்தளத்தில் எல்லோரும் தளரும் நேரத்தில் தளர்ச்சி காட்டாமல் ஒருவர் விளையாடி வெற்றி பெருவதோ அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட முலைக் காம்பினைப் பெற்றிருப்பதாலே சர்க்கஸில் வந்து பார்வையாளர்களை கிளுகிளுப்பாக்குபவரோ அல்லது அதிவேகமான மற்றும் ஏரானமுறையில் சிந்தித்து செஸ் விளையாட்டில் பத்து ஆட்ட முறைகளுக்கு பிந்திய சாத்தியக் கூற்றை மனதில் படம் பிடித்து வெற்றி பெருகின்றவரோ, இவர்களுக்கிடையில் மிக அடிப்படையில் என்ன வித்தியாசம்? கூடவே விஞ்ஞானம் அஞ்ஞானம் மற்றும் கலை இலக்கிய வீர தீர தனி மனித "சாதனை"யாளர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு சமூகம் கடமை பெற்றிருக்கின்றது என்பதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி?

அனாதை.

மேலும் படிக்க

Sunday, June 12, 2005

இலங்ைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டும் என்ற
அந்த எழவை ஏன் படித்தேன் எனத் தெரியவில்லை. அது இந்தியிலோ அல்லது சமஸ்கிரதத்திலோ அல்லது பெங்காலியிலோ அவ்வளவு ஏன் மலையாளத்திலோ எழுதப்பட்டிருந்தால் நான் ஏன் சீந்தப் போகின்றேன்? கருமாந்திர தமிழில் எழுதியதால் படித்து தொலைத்து இந்த ஞாயிற்றுக் கிழமையை புண்ணாக்கிக் கொண்டது தான் மிச்சம். மூன்று பிளாக்குள் படித்தேன். மிக எதேச்சயாக. ஆனால் மூன்றிலும் தொடர்புடைய எதோ ஒரு பொது இணைப்பு சிக்கிக் கொண்டது. முதலில் சாரு நிவேதிதா பிரென்சும் அல்ஜீரியப் போரும் பற்றி பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து. அந்தக் கருத்தை ஒரு குறையாகச் சொன்னாலும் பொதுவாக ஒரு இனத்தின் போக்கைச் சொன்னதாக எனக்குப் பட்டது. அதுமட்டுமல்ல ஆதிக்கம் நடத்தும் சமயம் போலில்லாமல், தன் இனத்தவர் மற்றோர் தேசத்தில்
சிறுபான்மையினராக இருந்து ஆதிக்கத்தின் கொடுமைக்கு உள்ளாகும் போதெல்லாம் வேறு தேசத்தில் இருப்போர் கொதிப்பாவது மிகவும் ஒரு சாதாரண விடயம் தான உலகளவிலாக. இந்த லெபனாலில் நடக்கும் இன்றையத் தேர்தலாக இருக்கட்டும் அந்த வகை கொதிப்பு வெளிப்படவில்லை? அதற்குப்பின் இந்தப் பதிவு கதை முன்னமே படித்திருந்ததால் தலைப்பு இழுத்துவிட்டது.

சரி நாம் தான் "இந்தியத்" தமிழர்கள் தனிக் குணம் உண்டு என்றாலும் குமறி எழவேண்டாம், கை கொடுக்க வேண்டாம், ச்ச்ச் கொட்ட வேண்டாம், அட அடுத்தவன் துன்பத்தில் சிரிக்கனுமா ஆத்துக்குள்ளாகப் போய் பின் கட்டிலிலாவது சிரிசுண்டு வந்த்ட்டு ஒன்னுமே தெரியாதது போல் வேலை மயிரையாவது பாத்துண்டு போகலாமில்லையா. அதெல்லாம் இல்லாமல் எந்த ஆயுதத்தை ஆதிக்க இனத்திற்குக் கொடுத்து தன் இனத்தைச் சேர்ந்த சிறுபாண்மையினர் அழித்தொழிப்பை விரைவுபடுத்தலாம் என்னும் என்ணம் எப்படி இங்கே வரமுடியும்? இங்கே தான் வருகின்றது அந்தத் "தேவடியாகுடி" என்னும் சொல்லாக்கம்.
பல மாநில பெண்களைக் கூட்டித் தொழில் நடத்திவரும் ஒரு தேவடியாக்குடியில் பிறந்து வளரும் ஒருவனுக்கு அவன் தாய்க்கே ஆள் பிடித்து வரும்போது ஏதேனும் வலியோ குறுகுறுத்தல்களோ இருக்க வாய்ப்பிருக்கின்றதா? அந்தத் தேவடியாக்குடியில் இருக்கும் மற்ற பெண்களாக இருக்கட்டும் அல்லது அவனது தாயாகவே இருக்கட்டும் அவர்கள் மீது பரிவு இரக்கம், காயம் மற்றும் வலியைப் பற்றின அவனது உணர்வுகள், நம்பிக்கை இழப்பு இவை மீதான அவனது உணர்தல்கள், இந்தத் தேவடியாகுடிக்கு வெளியே இருப்பவர்களின் உணர்தல்களொடு இயந்து வருமா? இயந்து வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லை? இந்த என் முட்டாள்தனத்தை நொந்ததாலே இந்தச் சிறு பதிவு.

உண்மையில் இந்தப் படிமம் எனக்கு பலவற்றை அர்த்தப்படுத்தியுள்ளது. இந்த இந்தியத் தேவடியாக்குடியிலும் நடப்பது இது தானே? இங்கே தானே தாய் மொழியைப் பற்றி பேசினவன் நாயாகின்றான்? "அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுத்து விளக்கெண்ணை தடவி கூடவே வாழையிலை பீயள்ளும் மகன்களுக்குத் தானே இங்கே ஞானபீடம்? ஒருத்தன் பின்னால் ஒருவன் ஏறுவதும் அவன் பின்னால் இன்னொருவன் ஏறுவதும் தானே இங்கே சுவாரசியம் தரும் வாழ்க்கை அனுபவம்? இந்தச் சமுதாயம் ஆயுதம் தர யோசிக்காமல் வேற எந்த எழவை யோசிக்கும்?

மேலும் படிக்க

Sunday, May 01, 2005

இன்று நாராயனின் பதிவுகளில் மனித இன வரலாறு பற்றிய கட்டுரையைப் படித்தவுடன் மூன்று வாரம் முன்பு சயின்ஸ் நியூஸ் எனும் வாராந்தரியில் ஒரு இன மரபனு தொடர்பான கட்டுரையைப் படித்த ஞாபகம் வந்தது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் மாண்டிரேசரின் சுட்டி (அது எங்கேன்னு தேடி நாக்கு தள்ளிப் போச்சு) எதேச்சயாக கையில் கிடைத்திருந்தது. படித்தவுடன் மேலே சொன்ன கட்டுரையை தமிழாக்கி எழுதனும் என்று நினைத்திருந்தேன். இன்ஸுரன்ஸ் மற்றும் வேறு நிறுவணங்கள் இதை ஆதாயப் படுத்த முனைந்தாலும், இந்தத் துறையின் அறிவு பரவலாக்கப் படுவதும் விரிவாக்கப்படுவதும் அவசியம் என நினைக்கின்றேன். மனிதன் ஓரினம் என்பது ஓர் அடிப்படை அறிவு என்பதில்லாமல் அது ஏதோ யாகமும் தியானமும் தியாகமும் செய்து ஞானச் சுடர் பெற்று அடையும் கஷ்டமான சித்தி என்றாக்கியிருக்கின்றார்கள். "சாதாரண" மனிதர்களுக்கு அந்த "ஞான அறிவெல்லாம்" தேவையில்லை என்பது போலாகி, பின்னஈனத்து (நன்றி பெயரிலி) பாணியில் இப்பொழுது இந்த இனம்/சாதி யென்று போட்டுக்கொள்வது வீரத்தனமான/வெளிப்படையான ஒன்றாக அசோகமித்ரன் போன்ற பெரும் பெரும் தலைகளாலேயே வெட்கமில்லால் செய்யப்படுகின்றது. அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக இந்த அறிவியல் துறை இந்த அடிப்படையை பரப்புமானால் அது நல்ல பரடைம் ஷிஃப்ட் ஆக ஆகலாம். நாராயணனின் பின்னுட்டலில் ரவி ஸ்ரினிவாஸ் பண்ணியிருப்பது என்ன வாதம் என்று புரியவில்லை. நாராயணனின் கட்டுரையில் எந்த இடத்தில் மேலினம் கீழினத்திற்கு தோதான வாதம் இருக்கின்றது என்று படிக்கும் போது படவே இல்லை. சில சமயம் இவர் வாய் திறக்காமல் இருந்தால் நல்லது போல் தோன்றுகிறது அல்லது என்னைப் போன்ற மர மண்டைகளுக்கும் விளக்கும் விதமாக இந்த வரிகளை இப்படி விரிக்கலாம் என விளக்கி இவர் எழுதலாம்.


சரி - எனது மொழிப்பெயர்ப்பு பயிற்சி..

scinece News - Apr 2005 Vol 167 No 15 Code of Many Colors - Can researchers see race in the genome?

by Christen Brownlee


இந்த கடந்த 65 வருடங்களில், இனத்தை வரையறுத்தல் என்பது குழப்பமான ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது. இனம் என்பது சமூக ரீதியாக உண்டென ஆகியிருந்தாலும், உயிரியலில் அது நிறுவப்பட்டாலே ஒழிய இனவெறிக்கு வேறு ஆதாரமில்லை. - உண்மையிலேயே உயிரியலில் இனம் என்பது உண்டா? உண்டு இல்லை என இன்னமும் திட்டவட்டமாக நிறுவப்படாவிட்டாலும், அடிப்படை உயிரியலைப் புரிந்து கொண்டாலே, இனம் பற்றிய பார்வைகளில் பல மாற்றம் வரலாம்.



இன்னமும் அறிவியலாளர்களை இனம் என்பதை மக்களைக் குறிக்க எனச் சொல்ல வைக்கவே கடினம். அறிவியல் மொழியில் இனம் என்பது ஒரு உயிர்வகைகளுக்குள்ளாக இருக்கும் மரபளவில் மாறுபட்ட, தனக்குள்ளாக இனப்பெருக்கம் செய்யும் துணை உயிர்வகைகளைக் குறிப்பது. இடரீதியாகவும் நெடுங்காலமாகவும் பிரிந்த உயிர்வகைகள், தனக்குள்ளாக செய்யும் இனப்பெருக்கத்தால், தன்னுடைய மரபனுவில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு இந்தத் துணை உயிர்வகையாக பெருகும். இந்தத் துணை உயிர்வகைகள் மரபனுவின் "அளல்ஸ்" (allels) என்னும் தனிப்பதிவை ஏற்படுத்திக் கொள்ளும். பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ரைட்'ஸ் விதியின் படி "அளல்ஸ்" களுக்கிடையேயான வேறுபாடு 25%த்தை தாண்டினாலேயே இரு வகைகளும் துனை உயிர்வகையாக அதாவது வேறு வேறு இனமாக ஒத்துக் கொள்ளப்படும். (100% வேறுபாடுகள் ஆனாலேயே இரு வேறு உயிர்வகைகளாக கருதப்படும்) தற்போது வேறு வேறு மனித இனமாக கருதப்படும் மக்கள் கூட்டத்தின் "அளல்ஸ்" களுக்கிடையேயான வேறுபாடு 15%க்கு மிகையாகக் கிடையாது.


100 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இனம் ஒரு பிரச்சனையில்லை. எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலே வசித்ததால், அந்த காலத்திய குறைந்த அளவிலான மனிதர்களிடையே வேறுபாடுகள் இல்லை. அவர்களிடமிருந்து பிரிந்து பல்வேறு இடங்களுக்குச் சென்ற, பரிணாம வளர்ச்சியுற்ற தற்கால மனிதர்கள், அவர்களின் பெரும்பாண்மை "அலல்ஸ்"களை தன்னுடன் எடுத்துச் சென்று உள்ளார்கள்.


லிசா புரூக்ஸ் என்பவர் ஒரு மரபனு ஆராய்சியாளர். அவரது கவனத்தில் பட்டது மரபணுவில் SNP என்னும் மரபணுத் தொடரும் மக்களுக்கிடையே இருக்கும் அந்தத் தொடரின் வேறுபாடுகளும். அதாவது ஒருவரது மரபனுத் தொடரின் வேதிப் பொருளை க ச ஞ ட என்னும் குறியீடு போல குறித்தால், "டகககசக" என்று அந்தத் தொடர் வரலாம். அதையே மற்றுமொருவருக்கும் "டகககஞக" என்று வரலாம். இந்த ஒத்தை குறியீடு மாற்றமே SNP எனக் குறிக்கப்படுகின்றது. பொதுவாக இந்த மாற்றங்கள் மரபனுத் தொடரின் முக்கியமில்லா இடங்களில் (புரதம் தயாரிக்காத) தான் பொதுவாக காணப்படுகின்றது. ஆனால் சில சமயம் இந்த மாற்றம் முக்கியமான பகுதிகளில் வரும் போது அது உயிர்வகையின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை , அதாவது உடல் ரீதியான மாறுபாடுகளையோ, நோயிற்கான சாத்தியத்தையோ தரலாம். ஒரு குரோமோசாமில் அடுத்தடுத்து காணப்படும் இந்த SNP தொகுப்பு ஹப்லோடைப்ஸ் எனப்படும். ஆப்ப்ரிக்க, அய்ரோப்பிய கிழக்கு ஆசிய மக்களை வைத்து, இந்த ஹப்மாப் (hapmap Project) எனும் ஹப்லோடைப்ஸ் ஆராய்ச்சியில், புரூக்ஸ், இந்த மக்கள் குழுக்களுக்கிடையே ஏராளமான ஒற்றுமையை கண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழுக்களையும் ஒரு நிற வட்டமாக வரைந்தால், 85 சதவிகிதம் ஒவ்வொரு வட்டமும் ஒன்றன் மேல் ஒன்றாக படியும். மேலோட்டமான இனவேறுபாடுகளான நிறம், முடியின் திடம் போன்றவைகள், இந்த வேறுபாடுகளில் வரவில்லை எனக் குறிக்கின்றார் புரூக்ஸ். இனம் என்பது மரபனுவில் உள்ள வேறுபாடு என நம்பியிர்ப்பவர்களுக்கு இந்த கோட்பாடு உறைப்பது கடினம் தான் என்கிறார் ஜார்ஜியா டங்ஸ்டன் என்னும் மரபணு ஆராய்ச்சியாளர்.


மனித உயிர்திசுக்களையும் வேற்றுப் பொருளையும் மனித நோய் தடுப்பு சட்டகம் (human immune system) எவ்வாறு வேறுபடுத்தி உணர்கிறது என்பதை ஆராய்கிறவர் தான் டங்ஸ்டன். இந்த உணர்தலுக்கு காரணமான மரபனுவிற்கு "Histocompatibility" மரபணு எனப் பெயர். இந்த மரபணுவின் ஒத்தவகை கொண்டவர்களுக்கு இடையே தான் மனித திசுக்களை/உறுப்புகளை மாற்றிக் கொள்ளமுடியும். இந்த திசுமாற்றத்தினை நிர்ணயிப்பதில் இனம் எந்த வகையிலும் உதவுவதில்லை என்கிறார் டங்ஸ்டன். இந்த பரந்துவிரிந்த கருப்பு என்னும் இனத்தில், ஒரு கருப்பருக்கும் வேறு கருப்பருக்கும் இந்த மரபணு கடும் மாற்றம் கொண்டிருக்கலாம். ஒரு கருப்பரின் இந்த மரபணு ஒரு வெள்ளையருக்கு ஒத்துப் போனாலும் வேறு கருப்பருடன் மாறுபடலாம் என்கிறார் டங்ஸ்டன்.


மார்க் சிரவர் என்னும் மரபனு அறிவியலாளர், இந்த 15% மரபணு வேறுபாடுகளும் மக்கள் குழுக்களுக்கிடையே பூளோகரீதியாக ஒரு தொடராக நீளுகிறது என்கின்றார். அதாவது ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்வீடன் தேசம் வரை மக்கள் மாதிரியை (sample ??- என் தமிழ் அறிவு, இத்துனைக்கும் பத்தாவது வரை தமிழ்வழி முறையில் படித்திருந்தும்- என்னைத் தூக்கில் தொங்கலாம் என வைக்கின்றது ) எடுத்துக்கொண்டால் இந்த வேறுபாடுகள் ஒரு தொடராக நீளும். இந்தப் புள்ளிதான் இந்த வேறுபாடுகளைக் திட்டவட்டமாக குறிக்கும் குறியீடு என அளவிட முடியாதவாறு இந்தத் தொடர் இருக்கின்றது என்கிறார் மார்க்.


இதே மார்க் சிரவர், DNAPrint Genomics என்னும் கம்பெனியில் வேலையில் இருக்கின்றார். இந்தக் கம்பெனி, உள்கன்னத்தில் இருக்கும் மரபனுவை எடுத்து மூதாதயர்களில் எவ்வளவு சதவிகிதம் ஆப்பிரிக்க , கிழக்காசிய, அய்ரோப்பிய, அமெரிக்க கலப்பிருக்கின்றது எனக் காட்டக் கூடிய அளவு தகவல் சேகரித்து வைத்திருக்கின்றதாம். தன்னைச் சுத்த வெள்ளை என நம்பிருந்த இவரின் உள் கன்ன மரபனுவில் "டஃப்பி நள் அளல்" (duffy null allel) என்னும் சப்-சஹார ஆப்பிரிக்காவினரில் மட்டுமே காணப்படுவது இருந்ததாம். மொத்தத்தில் 11% மேற்க்காப்பிரிக்க மூதாதயர் கலப்பு இருந்ததாம் இவரது மரபனுவில்.


*************

எனக்கும் இந்த டெஸ்ட் செய்ய வேண்டும் என ஆவல் இருக்கின்றது. ஏதோ கருப்பன் என நினத்துக் கொண்டிருக்கும் என் தலையில், இல்லை 20% சிங்கு கலப்பு இருக்கின்றது என்று மண் அள்ளிப் போடலாம்.


ஏதோ முடிந்தவரை முயன்றிருக்கின்றேன், தமிழாக்கத்தில் ஏதேனும் சிறு தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

ஹி ஹி சரி இப்பொழுது இந்தக் கட்டுரையின் சுட்டியைத் தருகின்றேன். இது இரண்டு பாகங்களாக வந்த கட்டுரை. அந்த இரண்டு பாகங்களையும் இங்கே சொடுக்கலாம்.
பாகம் 1


பாகம் 2


மே 2 2005

இந்தச் சோதனையில் கலந்து கொள்ளாமல் சுயமாக இருக்கவிரும்பும் குடிகளின் குரல்களை காண, ரவி ஸ்ரினிவாஸ் கொடுத்த சுட்டி

http://www.ipcb.org


மேலும் படிக்க

Saturday, April 30, 2005

பாலாஜி-பாரியின் இந்தப் பதிவில் நடந்த விவாதத்தைப் படித்தவுடன் தோன்றியதை இங்கே எழுதுகின்றேன். கீரிப்பட்டியில் நடந்த/ நடந்துக் கொண்டிருக்கும் கூத்தை விவாதமாக்கியிருப்பது குறித்து அவருக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ் நாட்டில் பார்ப்பனாதிகளை விட கேடு கெட்ட சாதியினர் ஒருவர் உண்டு என்றால் அது இந்த தேவர் சாதியினர் தான் எனக்குத் தெரிந்த வரையில். முதலில் இந்த தேவர் என்ற சாதிப் பெயரே போலியானது. கள்ளன், அகமுடையான், மறவன் என்னும் மூன்று சாதியினரே இப்படி "தேவர்" என்னும் வெட்டிப் பந்தாப் பெயரில் உலா வருகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டு சமூக மாற்ற முயற்சிகளில், பார்ப்பான்/வெள்ளாளன்/முதலி/ரெட்டி என நிலஉடமை சமூகத்திடமிருந்த நிலப் பங்கீடுகளின் பெரும் பயனை தஞ்சை /திருச்சி/ புதுக்கோட்டை/ மதுரை/ ராமனாதபுரம்/திருநெல்வேலி போன்ற இடங்களில் கொள்முதல் செய்த திருட்டுக் கூட்டம் தான் இந்தக் கூட்டம். நிலங்களில் வேலைசெய்பவர்களை "வேலை" வாங்குவதற்க்காக வைக்கப்பட்ட அடியாள் கூட்டம், இப்பொழுது இந்த இடங்களின் நில உடைமையாளர்கள். இவர்களது "தேவர் காலடி பொன்னே" பெருமிதங்கள் காறித் துப்பப் பட வேண்டியவை. இவர்களது சாதிப் பற்றும் சாதிப் பெருமிதமும் பார்ப்பானின் சாதிப்பற்றுடனும் பெருமிதத்துடனும் சரிசமமாக நின்று விளையாடும். சினிமா/அரசு நிர்வாகம்/அரசியல் என பார்ப்பன ஆதிக்கம் இருந்த அத்துனை இடங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது இந்தச் சமூகம். பார்ப்பனிய வெள்ளாள ஆதிக்கம் அவ்வளவு வெட்டுக்குத்து இல்லாமல் கைமாறுவது போல் அல்லாமல் இந்த வகைச் சமூகங்களிடம் இருந்து மாற்றம் சிரமமாக இருக்கப் போவதற்கு காரணம், இந்த பெரும்பாண்மை சார்ந்த ஜனநாயகம். அரசியலமைப்பில் தீவிரமான மாற்றம் இல்லாமல் இது சாத்தியமாகப் போவதில்லை. போலிஸ் மற்றும் இடை அரசு அதிகாரிகள் அமைப்பில் ஊடுருவியுள்ள இந்த மத்திய சாதிகளது ஆதிக்கம் ஒடுக்கப் பட வேண்டிய ஒன்று. அதுவும் இந்த ஆட்சியில் , இந்த குறிப்பிட்ட இனத்தவரது ஆதிக்கம், ராஜாஜி/காமராஜ் ஆட்சிக் காலத்தய பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஒப்பானது எனலாம். இந்த வகை ஆதிக்கத்தை அரசியலமைப்பு மூலமாகத்தான் தீர்க்க முடியும். என்னைக் கேட்டால் கீழ் வருவனவற்றை முக்கிய தற்போதைய தேவை எனக் கருதுவேன்

1. தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை.
2. தலித்துகள் மீது செய்யப்பட்ட / தலித்துகள் செய்த சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களை விசாரிக்கும் மற்றும் நீதி வழங்கும் அதிகாரம் மற்றுமொரு தலித்திற்கே எனும் சட்டம்.
3. தலித்துக்ளுக்கு எதிராக குற்றம் நிருபிக்கப்பட்டவர்களுக்கு பொது தண்டனையின் அளவுகளுக்கு மேலாக பொருளாதார நிவாரணமும் உடனடி வசூலிக்கப்பட்டு தலித்துகளிக்கு சேர்பித்தலும் நடக்கவேண்டும்.
4. தலித்துகள் மீதான குற்றம் கீழ் கோர்ட்டில் நிருபிக்கப்படாவிட்டால், அதனை மேல் கோர்ட்டுக்கு மறுமுறையீடு செய்யும் வாய்பை மறுத்தல்
5. எந்த அரசு சார்ந்த / பொதுக் குழு சார்ந்த மேல்மட்ட குழுக்களில் தலித்திய பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்தல்.
6. தலித்துகள் பிரதிநிதிப்படுத்தப்படாத நிறுவணங்களுக்கு தலித்திய உதவி வரி என்னும் தனிப்பட்ட வரியைப் பெற்று அதனை தலித்துகள் பொதுப் பணத்தில் சேர்த்தல். கூடவே சரியான அல்லது கூடுதலான பிரதிநிதித்துவம் உள்ள நிறுவணங்களுக்கு வரி விலக்கு அளித்தல்.
7. சுழல்முறை தலைமைப் பதவிகள் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த / அரசு உதவும் நிருபணங்களின் சட்டங்களில் தலித்திய தலைமைப் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்கல்.
8 சாதிகளை வெளிப்படையாக்கள் மற்றும் அதனை சமூக அளவீடுகளில்பகிரங்கப் படுத்தல்.
9. முதல் இரண்டு பெரும்பான்மை சாதிகள் மற்றும் ஆதிக்க சாதிகள், அவர்களது பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தும் எந்தப் பதவியையும் வர விடாமல் தடுத்தல்.
10. எந்த அரசியல் பதவியும் இரண்டு முறைக்கு மேல் எந்த தனிப்பட்ட நபரும் போட்டியிட முடியாமல் தடுத்தல்.
11. எந்த அரசு உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் அவர்களது தனிப்பட்ட உதவியாளர்கள்/ பிஏக்கள் போன்றோரை தன் சுய சாதியில் வைத்திருக்க அனுமதி மறுத்தல்.
12. சாதியை விட்டு வெளியேறும் வாய்ப்பை அளித்தல். மேலும் அதனை பகிரங்கப்படுத்தல். கூடவே அதனைக் கடுமையாக்கல். உதாரணமாக வெளியேறியவர்களுக்கு அவர்களது சாதியிலே திருமணம் செய்யும் நிலை வந்தால் அவர்களது சாதியை அவர்களுக்கு திரும்ப அளித்தல். கூடவே மாற்றுச் சாதியில் கல்யாணம் செய்து குழந்தை பெற்றவர்கள்/ மாற்றுச் சாதி குழந்தையை தத்தெடுத்தவர்களுக்கு வெளியேறுவதற்க்கான எளிதான விதிகளும், சாதியைவிட்டு மீளாத திருமணம் செய்தவர்கள், சுய சாதிப் பெரும்பாண்மையுள்ள இடங்களில் வசித்தல்/உழைத்தல் ஆகியோருக்கு சாதியை விட்டு வெளியேறும் வாய்ப்பை தீவிரமாக்கலும்.

இன்னமும் விட்டால் எழுதிக்கொண்டு போகலாம் அவ்வளவு தேவையிருக்கின்றது இந்த திருகுகலைப் போக்குவதற்கு.

மேலும் படிக்க

Sunday, April 03, 2005

ஆஹா, ஜெயேந்திரராக்கப்பட்ட சூப்புரமணி ஜெயிலுக்குள் போன நிகழ்வு இந்த அளவு பார்ப்பனாதிகளை ஆட்டியிர்க்கும் என்று நினைக்கும் போது உள்ளார்ந்த மகிழ்சி. இந்த மெல்லிய ஆட்டத்திலேயே இவர்கள் வாய் திறப்பதோ இன்னமும் குதூகலமாக இருக்கின்றது. இந்த குதூகலத்தில் எல்லாம் உச்ச குதூகலம், இவரைப் போன்ற்றொரை ஆதர்சமாகக் கொள்ளும் பார்ப்பனரல்லா ப்ன்னாடைகளின் தற்போதைய நிலை தான். மூஞ்சியில் அப்பிய பீயை நாக்கால் தடவி சுத்தம் பண்ணி வழியும் நிலைக்கு ஆக்கப்பட்ட இந்தக் கேடுகெட்ட நிலை அந்த பார்ப்பனாதிகளுக்கு கூட வரக் கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கோள்ளலாம்.

சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.
soc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி
பேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எளிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள். அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கூட ஒரளவிற்கு ( ஓரளவிற்குத் தான் ) privacy act உதவும். அதாவது இந்திய காவல் நாய்கள் கேட்டால் எல்லாம் blogger.com உங்கள் விவரங்களை "அவ்வளவு சீக்கிரம்" கொடுத்து விடாது. ஆனால் மற்ற தளங்களோ ஆட்களோ அவ்வாறு அல்ல. இந்த எச்சரிக்கை இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்கள் செய்வதெல்லாம் பைபிளோ, குரானோ, கீதையோ, (டோல்முத்து வையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போலுள்ளது) படி நடக்கின்றது என்று நம்பும் பரமார்த்தகுரு சீடர்களுக்கு இல்லை. மற்றபடி happy blogging. நன்றி.

மேலும் படிக்க

Sunday, March 20, 2005

ரோசாவசந்திற்கும் நாராயனுக்கும் நன்றிகள். இந்த வாரத்தில் கலக்கி விட்டீர்கள்.

முதலில் ரோசாவசந்திற்காக. லார்ட்லபக்தாஸை செருப்பாலடிப்பேன் என்று சிம்பாலிக்காகச் சொல்லி ஆரம்பித்து வைத்து பல நரம்புகளைத் தொட்டுவிட்டார். ஒரு விதத்தில் திருமாவளவன் போன்றோர்களை எதிர்மறையாகவேனும் பொதுக்களத்தில் இறக்கப்படுவது நல்லதிற்குத் தான். அதை ஒரு குறிப்பிடத்தக்க கூட்டமாவது தொடர்ந்து விவாத வூடாக வைத்திருக்க வேண்டும். அந்த விதத்தில் ரோசாவசந்த்தின் கோபம் மிகத் தேவையானது. திருமாவளவனை ராமதாஸின் பீயை அள்ளுவதாக காட்டியவனை செருப்பால் என்ன நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும். பெரியாரின் தொண்டர்கள் என்றொரு கூட்டம் தலித்துகள் மீது வன்மம் பாராட்டுவது பிதிங்கிவழியும் சாதியத்தால் மட்டுமே தான் தவிர வேறெந்த மயிரும் அல்ல. சங்காரச்சாரியின் சாதியமும் தலித்துகளின் சாதிஅடையாளமும் சாதியம் என்ற வகையில் முன்பின்/தலைகீழ் முரணானது. இந்தச் சாதாரண அறிவு கூட இல்லாமல் "பகுத்தறிந்து" என்னப் புடுங்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் காலச்சுவட்டிலே இப்படித்தான் ரவிக்குமார பன்றி மேய்க்கச் சொன்னது ஒரு பெரியாரின் "பா"ரிசு. அதையும் "பத்திரிக்கா தர்மமாக' வெளியிட்டார்கள். இப்படி வெளியிட்டது பாப்பார புத்தி தானே என நான் சுராவின் செல்லப் பிள்ளைக்கு வாசகர் கடிதம் போட்டால் "பத்ரிக்கா தர்மம்" என்னவாகயிருக்கும் எனச் சொல்லவா வேண்டும் ? வழக்கம் போலவே இந்த விவாதம் ப* புத்தி என்ற கடுஞ்சொல்லுக்கும் பாப்பாரப்புத்தி என்னும் சுடுசொல்லுக்கும் ஆறு வித்தியாசங்கள் காணும்படி இழுத்து வந்தாயிற்று. பீயள்ளச் சொல்லுவது சாதியத்தின் உச்சம் என்றால் பாப்பாரப்புத்தி என்பது சாதியத்தின் அடுத்த நிலை என்னும் இந்த பாப்பார வாதம், எப்படியாவது தலித்துகளுக்கு என்று பொதுபுத்தியில் இருக்கும் கொஞ்சநஞ்ச கரிசனத்துக்கும் பங்கு போடுவதற்குத் தானே? . ப*யன் என்பதுவும் பாப்பான் என்பதுவும் ஒரு தராசில் வைக்க வேண்டிய விடங்களா என்ன? ஒரு பார்ப்பான் தான் பார்ப்பான் இல்ல எனத் தெளிந்து கொள்ள *தனிப்பட்ட* யோசனை போதுமே. கோயில் சார்ந்த சமுதாயங்களுக்கு வெளியே வந்த பின்னும் ஒரு பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனுக்கு தான் "பார்ப்பான்" இல்லை எனத் தெளிந்து கொள்ளுவதற்கு ஒரு மயிரை இழப்பதைவிட அதிகமாக இழப்பு ஒன்றுமில்லையே. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பது போலத் தான் பார்ப்பான் இல்லை என "முற்போக்குத் தனமாக" தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் இரட்டை லாபம் தானே. ஆனால் "தலித்" என்பது அப்படிப்பட்ட சுலபமான ஒன்றா? தலித்தாக பிறந்த ஒருவர் தான் "தலித்" இல்லை என "தனிப்பட்ட" அளவில் யோசித்தாலும் இழப்பு, தான் தலித் தான் என யோசித்தாலும் தனிப்பட்ட அளவில் வலி. ஏற்றுக் கொண்டாலும் வலி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வலி. இப்படிப்பட்ட நிலையில் தான் இருபது வயதில் இப்படி இருந்தேன் ; முப்பது வயதில் இப்படி தாராளமானேன் சகித்துக் கொண்டுள்ளேன், பிச்சை போட்டுள்ளேன் என மஞ்சள் நீராட்டு விழாக்கள் அசோகர் மரம் நட்டார் பாணியில் வரலாற்றுப்படுத்தல்களாக வரும் கொடுமை . பார்ப்பான் என்னும் கருத்தாக்கம் அதன் அத்துனை பவித்தரமான புனிதமான விளக்கங்கள் அளவிலேயே ஒரு வடிந்தெடுத்த பாசிச சிந்தனை. அது விகாரமடைந்து கோரமடைந்து கொப்பளித்து வழியும் இந்த நேரத்தில் தான் பார்ப்பான் இல்லை எனத் தெளிந்து மூடிக்கொண்டு இருக்க என்ன கஷ்டம்? அடங்குங்கடா எனத் தான் சொல்லத தோன்று கின்றது. ரோசாவசந்த், ஒரு வேண்டுகோள். இந்த சூழல் கெட்டுவிட்டது, பஜனை புடிங்கிவிட்டது என புலம்பல்களுக்கும் அடையாலங்களை ( எவன் அடையாளம்?) விட்டு வெளி வரவேண்டும் என்னும் புத்திமதிகளுக்கும், எதிர் கொண்டு கருத்து தெரிவிக்க வக்கில்லாமல் அடுத்தவன் பெயரில் கைமைதுனம் செய்யும் நேர்மைக்கொழுந்துகளுக்கும் ஆப்புடிக்கும் வகையில் பிஞ்ச செருப்பையோ, பீயள்ளிய விளக்கமாறையோ, குறி வெட்டும் கத்தியையோ தூர வைக்காமல் இருக்க வேண்டும். என் வேண்டுகோள் எல்லாம் ஒரு தேவையில்லையென்றாலும் , பொதுவில் வைக்க வேண்டும் என்பதற்காக வைக்கின்றேன். பதிவுகளுக்கும், சளைக்காமல் இவன் பதிவு அவன் பதிவு எனப் பார்க்காமல் தேவையான எதிர்ப்பையும் பாராட்டையும் வைக்கத் தயங்காத மனதுக்கும் நன்றி.

நாராயண், தங்களது சிலுக்கு ஸ்மிதா மீதான பதிவுகளுக்கு ( சாவித்ரியின் கடைசி கால நிலமை மிகவும் அவதிப்பட வைத்த விடயம்), பெடொபைல்களைப் பற்றி, கெட்ட வார்த்தைகளைப் பற்றி என அடுத்தடுத்து மாறுபட்ட, தேவையான கூடவே நல்ல எளிய நடையில் பதிவுகளை தந்தமைக்கு நன்றி. சென்னை வந்தால் ந்ங்கம்பாக்கம் (?)ஒரு விசிட் கொடுத்து சாயா குடிக்க வந்து கதையளக்க ஆசை. அது ஒட்டி இது ஒட்டி என எல்லா கருமமந்திரங்களையும் ஒட்டி கஷ்ட்டப்பட்டு சிகரெட்டை விட்டு விட்டு நம் டீக் கடைகளில் எப்படி டீ குடிப்பது எனத் தெரியவில்லை. சமீபத்திய பயணங்களில் அந்த வாய்ப்பே இல்லாமல் போனது எப்படி என ஆச்சர்யமாக உள்ளது.

இரண்டு படங்கள் பற்றி குறிப்பு வைக்க வேண்டும் என்னும் மன நிலை சற்று மாறிவிட்டது. அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும். முடிக்கும் முன் ஜெயகாந்தனைப் பற்றி. ஹர ஹர சங்கர எழுதிய பின் கிடைத்த ஞான பீட பரிசு ஜெயகாந்தனுக்கு ஒரு நல்ல உவர்ப்பைத்
தந்து கொண்டிருக்குதோ இல்லையொ எனக்கு மகிழ்ச்சி. ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும் முன்பாக, கூட்டம் போட வந்த இடத்தில் சாராயம் தான் வேண்டும் என அடம் பிடித்து வாங்கிப் போட்டக் கொண்ட ஆளுமையும் கூடவே எமர்சென்சியிலிருந்து , ஈழத்தமிழர் விடயம் ஊடாக இன்று ஜெயேந்திரரின் வாழையிலையைத் தாங்கும் இந்தக் காலம் கட்டம் வரை அவரது அரசியலையும் சமூகப் பார்வைகளையும் பார்த்ததால் இவரது இலக்கியத்தை படிக்காதது ஒரு வருத்தத்தையும் தரப் போவதில்லை. இனிப்படித்தாலும் ஒரு பிரயோசனமும் இருக்கவும் போவதில்லை. ஜெயகாந்தன் , அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்றோருக்கெல்லாம் ஞான பீடமும் அதற்கும் மேலான பீடமும் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக கிடைக்கின்றதோ அந்த அளவு தமிழ் சூழலுக்கு நிம்மதி. இவர்களுக்கு கிடைத்த அடுத்த அடுத்த வருடங்களில் கருணாநிதி, வைரமுத்து மற்றும் இன்ன பிறவுகளுக்கும் கொடுத்தால் அதைவிட ஒரு சிறப்பான டாப்பிங் கொடுக்க முடியாது. பின் எந்தப் பிணத்தை வைத்தும் இந்த கோஷ்டிகளின் தற்போதைய அல்லது வருங்கால சிஷ்ய கேடிகள் அரசியல் நடத்த முடியாததல்லவா?

மேலும் படிக்க

Sunday, March 13, 2005

ரசித்த படங்களை ஒரு இடத்தில் எழுதலாம் என்ற ஆவலில் ஒரு வலைப்பதிவு- கூகுள் புண்ணியத்தில். இந்த திரைப்படப் பகுதியில் அரசியலே இல்லாமல் வெறும் ரசனை அதனை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்ற குறிக்கோள் மட்டுமே வைத்துக் கொள்வது என்று ஒரு சிறு கொள்கை. வைஜெயந்திமாலா நடித்த வாழ்க்கை என்ற படத்தில் என் தந்தையாரின் பெயரும் பத்தோடு பதினைந்தாக வரும் என்று சென்றமுறை என்னுடைய இந்தியப் பயணத்தில் நாங்கள் பேசிக் கொண்ட போது தான் எனக்கு என் தந்தை சினிமாத் துறையில் பணியாற்றியிருக்கின்றார் என்ற விபரமே தெரியும். எங்கள் தந்தை வழி குடும்பத்தில் சினிமா பைத்தியம் என்று பலர் உண்டு. சினிமா தியேட்டரில் சென்று உக்காந்து கொள்வது என்பது மிக முக்கியமான சடங்காகவே எனக்கு இருந்திருக்கின்றது. நான் டூர் பார்க்கப் போன இடத்தில் எல்லாம் அழுது பிடிங்கி சினிமா பார்த்திருக்கின்றேன். என் நண்பர்கள் சிரிப்பார்கள். இங்க வந்து சினிமாவா என. ஹைத்தராபாத்தில், கொல்கட்டாவில், கொடைக்கானலில், ஊட்டியில், திருவனந்தப்புரத்தில் எல்லாம் சினிமா பார்த்த அனுபவம் உண்டு அந்த அந்த இடங்களுக்கு இரண்டு - மூன்று நாட்கள் டூரில் கூட. அந்த அளவு சினிமா பைத்தியம் உண்டு ரசனை உண்டா என்றால் தெரியாது. இனி தான் தெரியவரும் :-)).

இன்று சன் டீவியில் தெரியாத்தனமாக விசுவின் அரட்டை அரங்கத்தைப் பார்த்துத் தொலைத்தேன். உண்மையில் அரட்டை அரங்கம் கான்சப்ட் எனக்கு தனிப்பட்ட அளவில் பிடிக்கும். கடிதங்கள் பகுதி, ஆசிரியருக்கு கேள்வி பதில் பகுதி, கேள்விக்கு பதிலாக வரும் ஆலோசனை பகுதி, பெண்கள் பத்திரிக்கையில் வரும் வாசகர் பக்கம்/ வாண்டுகள் பக்கம் போன்றவைகள் எனக்கு பிடிக்கும் அது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற கவலை கூட இல்லாமல். தினப்படி பப்பரில் "ask amy" என்ற பகுதி விளையாட்டுக்கு பிறகு படிக்கும் பகுதி. சரி அரட்டை அரங்கம் பார்த்தற்கு இந்த அளவு சால்ஜாப்பு போதும் என நினைக்கின்றேன். அரட்டை அரங்கத்தில் மிகப் பிற்ப்போக்கான கருத்துக்கள் அலட்சியமாக, கூடவே மக்கள் கைத்தட்டலுடன் வரும் போதெல்லாம் உடல் கூசிப்போய் மண்ணாந்தை போல கேட்டுவிட்டு பின் மறந்திருக்கின்றேன். ஆனால் இன்று கேட்டதற்கு மன்னிப்பே கிடையாது. அந்த விசு என்ற அந்த பிற்போக்கான மனிதரை(நாயை என்று எழுதி மனது வராமல் மாத்தி விட்டிருக்கின்றேன்)யெல்லாம் என்ன செய்வது எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த வலை உலகத்தில். ஆனால் இந்த மாதிரி ஆட்கள், அதுவும் ஊடகத்துறையில் இருப்பவர்களே இந்தளவு பிற்போக்கானவர்களாக இருக்கும் நிலையில், இந்தியா வல்லரசானால் என்ன ஆகும் என்று யோசிக்கவே முடியவில்லை.


ஒரு பத்து வயது பெண் குழந்தை பேசிக் கொண்டு இருக்கின்றது. அந்த குழந்தை என்ன பேசியது என்பது முக்கியமில்லை. ஒரு இடத்தில் அந்த குழந்தை (ஞாபகத்தில் இருந்து)


பெண் குழந்தை:


எங்களுக்கு பெற்றொரிடத்தில் சுதந்திரமே கிடையாது - அங்கப் போனா தப்பு; இங்கே போனா தப்பு; அதைப் பார்த்தா தப்பு இவரோட விளையாண்டா தப்பு; சிரிச்சா தொந்திரவு.


இடைமறித்த விசு


இத்துணுண்டு இருந்துட்டு இப்படி பேசறே. சிரிச்சா தொந்திரவுன்னு சொல்றே. தெரிஞ்சுண்டு சொல்றியா இல்ல தெரியாம சொல்றியான்னு தெரியலா.


கூட்டமே கை தட்டி சிரிக்கின்றது.


அடுத்து எழுந்த பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறுவன்.


இந்த பொண்ணுங்க என்னமோ சுதந்திரம் சுதந்திரம்ன்னு சொல்லுறாங்க. அவங்களுக்கு தெரியல ஆம்பிளைங்க கல்லு மாதிரி. சுதந்திரம்ன்கிற ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா சின்ன அசைவு இருக்கும் அவ்வளவு தான். பொம்பிளைங்க கண்ணாடி மாதிரி. ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா நொறுங்கிடும் ஒட்டகூட வைக்க முடியாது.


கூட்டம் கை தட்ட, விசு அந்த சின்ன பொண்ண எழுப்பி,


"உனக்கு புரியறதா. ஆண்கள் கல்லு மாதிரி. அப்படி இப்படி இருந்தாலும் அவங்களுக்கு ஒன்னும் கிடையாது. ஆனா பொண்ணுங்க அப்படி கிடையாது. அவங்க கண்ணாடி மாதிரி. "அப்படி இப்படி" இருந்தா நொருங்கிடும். குடும்பத்துக்கே கேவலம் தான்."


இந்த சன் டீவி பண்ணாடை நாய்களை என்ன செய்தா தகும்?


மேலும் படிக்க

Sunday, January 30, 2005

இன்று வலைப்பதிவுகளில் உலா வந்த போது உள்ளத்தில் பட்டென்று பட்டது. ஆஹா. சில மாதங்களுக்கு முன் இந்தப்பதிவுகளில் ஒரே புளித்த தயிர் சாதமும் நார்த்தங்கை ஊறுகாய் வாடையும் அடித்துக் குமட்டியது. இப்போது சற்று மாறுதலுடன் அங்கங்கே மதுரை முனியாண்டி விலாஸ்களும் கண்ணில் படுகின்றது. பிரதிநிதித்துவம் என்பதில் எனக்கு அதிக ஈடுபாடு. பிரதிநிதித்துவம் உள்ளடங்கிய ஜ்னநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் வலைப்பதிவுகளில் சற்று முன்னேற்றம். இன்னமும் இது பல அனுபவங்களை கொண்டு வரவேண்டும். இப்பொழுதைய சுனாமி விடயத்தையே எடுத்துக் கொண்டாலும்சுனாமியை அடுத்த நாள் பேப்பரில் சந்தித்தவர்களும், புரளிக்கு பயந்து ஓடியவர்களின் காமெடிச் சோகப் புராணங்களும் இல்லாவிட்டால் சுற்றுலா போய் மாட்டியவர்களின்குரல்களும் தான் உள்ளனவே ஒழிய நேரடியாக சுனாமியை தன்னுடை வாழ்வில் சூறையாட விட்டவர்களின் குரலைக் காணமுடியவில்லை. அதற்குஇன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ.


இரண்டு சங்கராச்சாரி கைது ஆனது இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என முதல் முதலில் கைது விடயம் பட்ட போது புலப்படவில்லை. விடயம்உள்ளே இறங்கச் சற்று நாள் பிடித்தது. பேரம் முடிந்த வுடன் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். சுந்தரேசனும் ரகுவும் குண்டர் சட்டத்தில் அடைபட்ட பிறகு தான்சரி இது பேர எல்லைகளை தாண்டி விட்டது எனப் புலப்பட்டது. முன்னெல்லாம் (மு)நண்பர் ரோசாவசந்த் சொல்வது போன்ற குட்டி பூர்ஷ்வாக ரத்த அழுத்தத்தையெல்லாம் சமன்படுத்தி உலாவும் போது கையில் தட்டுப்படும் துக்ளக் அழுத்தத்தை எகிறி மேலே அடிக்கும். இப்பொழுதெல்லாம் மனது குதூகலிக்க http://groups.yahoo.com/group/Thuglak/ மற்றும் http://www.kanchiforum.org/ இங்கே செல்லுகின்றேன். உண்மையிலேயே மனது லேசாகிறது. முன்னே வரும் கடும் கோபம் , "இந்த சமயத்தில்" வருவதில்லை. அந்த யாகு குழுமத்தில் இரண்டு வலைப்பதிவாளர்கள் உறுப்பினர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒருவர் முன்னாள் காப்பிகடை ஓனர். காஞ்சி மடத்து சீடர். காஞ்சி மடம்+ ஜெண்டில்மேன் டைரக்டர் + ஜீன்ஸ் + இவர் + பணம் என ஒரு கோட்டோவியம் போடலாம். சரி பெரிய இடத்து விவகாரம். இன்னொருவர் ஓ******ப் பொருளை ஓ*****ப் போகிறேன் சவடால் பார்ட்டி. இவர்கள் சோகத்தில் மனது குதூகலிக்க சங்கடமாக உள்ளது.மனதார வெறுக்கும் ஒரு விடயத்தைப் போல மனதின் ஒரு பகுதி ஆகிவிடும் என்பதை உணர அதிர்ச்சியாக இருக்கின்றது. தன் உறவு இல்லாத மற்றோரின் இறக்கங்களில்/துன்பங்களில் சந்தோசம் அடைவது பார்ப்பனாதிகளின் அடிப்படைக் குணம். ரிக் வேதத்தில் இருந்து ஊறக் கூடிய ஒரு அடிப்படைக் குணம் இது. அந்த அடிப்படைக் குணத்தை என்னிடம் காண்பது என்னைப் பொறுத்தளவில் பேரடியாக இருக்கின்றது. அந்தளவுக்கு ஒரு புளகாங்கிதத்தை இந்தக் கைது தருகின்றது. நான் மட்டுமல்ல இன்னமும் சமுதாயத் தளங்களில் நான் நிற்கக்கூடிய பக்கங்களில் நிற்கக்கூடியவர்களிடம் இந்தப் புளகாங்கிதம் ஊறுவதை உணர முடிகின்றது. இந்தப் புளகாங்கிதம் இரண்டு வகைகளில் துன்பம் தரக் கூடியது. ஒன்று முதலில் இந்தக் கைது கீழிறப்பட வேண்டிய அல்லது சரியாகச் சொன்னால்சமனடிக்கப்பட வேண்டிய நிலையின் மட்டம் அல்ல என்பது. அடுத்து எந்தளவுக்கு தனிப்பட அளவில் போராடி உள்ளே ஊறுத் தொடங்கும் பார்ப்பனீயத்தை அறுத்தெறிய வேண்டி இருக்கும் என்பதைப் பற்றியது. இது இப்படி என்றாலும் இன்னொரு சாத்தான் மனதுசொல்லுகின்றது. மீசை அறும்பத் தொடங்கிய 83ல் சங்கடப்பட ஆரம்பித்த மனது ஒவ்வொன்றாக மற்ற எல்லா ஓட்டை ஒடிசல்களையும் பார்க்கும் திறன் வந்து சங்கடத்திலே இருந்ததற்கு இந்த மாதிரி மனது குதூகலிக்க(போலித் தனமாகவே இருந்தாலும்) சான்ஸ் கிடைப்பதே கொஞ்சம். கிடைச்சதை எந்தவித சங்கடமும் இல்லாமல் அனுபவித்து விடனும். பின்விளைவுகளை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறது. என்ன செய்வதென்று புரியவில்லை.


சில நாட்கள் முன் டீசே தமிழனிடம் அவர் அவரது நண்பரிடம் கேட்ட கேள்விகள் என்ன என ஏதோ விவாதத்தில் கலந்து கொள்ள போகிறவன் போலக் கேட்டேன். அவரும் பொறுமையாக அடித்துக் கொடுத்தார். பதிலே சொல்லவில்லை.அது குறுகுறு என, இப்போழுது தெரிந்ததை அடிப்போமே என ஒரு எண்ணம்.


1. திராவிட எழுச்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலையென்ன?
திராவிட எழுச்சி என்பது நடந்தாக வேண்டிய ஒரு கட்டாயம். அந்த எழுச்சியை இலகுவாக்கியது, அறிவு சார் இயக்கமாக மாற்ற முயன்ற ஈவெராவின்தொண்டு. ஈவெராவின் கடும் உழைப்பை, தள்ளாத வயதான கால்த்தில் நீரிழிவு நோயுக்கு உள்ளான போதும் கூட குறையாத உழைப்பை,அண்ணாத்துரை கோஷ்டியினர் சுலபமாக அறுவடை செய்தனர். அதிகாரத்தில் பங்கீடு புக இது நேரமல்ல என கடுமையாக உணர்ந்து எதிர்த்த போதும், அதிகார மோகம் திராவிட எழுச்சியை நடுத்தர சாதியினர் எழுச்சியாக மாற்றியது. அதுவே கடை சாதியினர் மேல் எழுந்து வர பெரும் தடையாக இப்பொழுது உள்ளது. 1850-1920 வரை தலித்துகளின் குரல் தனிப்பட்டு இருந்தது. ஆனால் அதுவே 80களில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும்வரும் வரை காத்திரக்க வேண்டியிருந்தது. இந்த அளவு தடை இருந்தது எதனால் என்பது ஆராயப்படவேண்டும். 62ல் திமுகா எதிர்கட்சி அந்தஸ்தைபிடிக்கும் வரை இருந்த முக்கியமான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் இயக்கம் இவர்களை வளைத்து பிடித்து தனித்து வளரவிடாமல் ஆக்கியதா அல்லது திமுகாவின்வளர்ச்சி ஏற்படுத்திய நடுத்தர சாதியினரின் திடீர் எழுச்சி கொடுத்த அச்சத்தில் காங்கிரஸ் இயக்கம் இவர்களை பாதுகாக்கிற போர்வையில் தனித்து வளரமுடியா நிலை ஏற்பட்டதா? பார்பனியதின் ஆணிவேர் சுதந்திர இந்தியாவில் செழிக்கக் காரணமான காந்தியுடனாவது தலித் இயக்கக் குரல் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்தில் ஈவெராவுடன் அவர் இயக்கத்தின் உச்சத்தில் இருந்த போது அவருடன் தலித்திய குரல் ஏதேனும் டயலாக் வைத்திருந்ததாகத் தெரியவில்லை. ஈவெராவுடன்நெருங்கிய தளத்தில் இருந்தவர்கள் எல்லாம் மற்ற மேல்சாதிக் கூட்டம் தானே ஒழிய தலித்திய சாதிகளின் வாசனை இருந்ததாகவேத் தெரியவில்லை. அண்ணாத்துரையைவளர்த்தது போல் இணையான ஒரு தலித்திய ஆளுமையையும் ஈவெரா வளர்த்திருந்தால் நல்ல வளர்ச்சி இருந்திருக்கலாம். "லாம்" தான். கருணாநிதியை அருகில் வைத்திருந்ததிலேயே ஈவெராவிற்கு ஒரு தலித்திய நபரை அருகில் வைத்திருந்ததற்கான மனசாந்தி கிடைத்திருக்கும் என ஊகிக்கலாம், கருணாநிதி முதல் அமைச்சரானவுடன் பேசிய வார்த்தையிலிருந்து.அது கருணாநிதியை பலகாலம் உறுத்தியது என்று எங்கோ படித்திருந்தேன். ஆனால் கருணாநிதியின் சாதியோ உண்மையான தலித்திய சாதி அல்ல. மேல் ஜாதியினருடன் நேரடியான மற்ற நடுத்தர சாதியினருக்கு கூட கிடைக்காத ஒரு தளத்தில் தொடர்பு இருந்தது. மேல் ஜாதியினருக்கு கிடைத்தபணம் அறுவடை செய்ய எளிதான புதிதாகத் தோண்றிய சினிமாத் துறையில், இசை நடனம் போன்ற அந்த காலகட்டத்தின் முக்கிய அம்சத்தை கைக்குள் வைத்திருந்த சாதி. சுருக்கமாகச்சொன்னால்திராவிட எழுச்சி நடுத்தர வர்கம் மற்றும் பார்பனர் இல்லாத மற்ற மேல்சாதியினரில் எழுச்சி மட்டுமே.


2. சாதீய ஒதுக்கீட்டில் கல்வி, வேலை போன்றவை யாரால் கிடைத்தது? அல்லது பத்துவீத பிராமணருக்கே அதை முழுதும் தாரை வார்த்துக்கொடுப்பதா உங்களது நிலைப்பாடுபத்து சதவிகித பார்பனர் அல்ல தமிழ்நாட்டில் அந்த அளவு இன்னமும் குறைவு. 1917ல் ஜஸ்டிஸ் பார்ட்டியின் பிறப்புக்கு முன் இருந்த பார்பனரல்லாதோர்சங்கத்தின் முயற்சியால் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு சட்டமானது.


3. அரசியலில் யாரும் பங்குபெறலாம் என்ற ஓர் நிலைப்பாடு எங்கிருந்து முளைத்தது?
வெள்ளைக்காரன் புண்ணியத்தில். அன்னிபெசண்ட் என்பவரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், முக்கியமாக கடைசியாக செத்துப் போன சங்கராச்சாரியும் குழுவும்வருணாஸ்ரமத்தை காரணம் காட்டி நாலாம் வருணத்தினரை முற்றாக அரசியலில் பங்கு பெற விடாமல் செய்ய முனைந்ததை தீவிர மாக எதிர்க்க தோன்றிய பார்பனரல்லாதோர்சங்கம் வைத்த கோரிக்கைகளை வெள்ளைக்காரன் ஒத்துக் கொண்டதால். இது கூட வெள்ளைக்காரன் ஆஷைக் கொள்ள ஒரு ஆழ்மன தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.


4. சா¢. சினிமாவில் சீரழிவை விடுவோம்,, அங்கும் திராவிட பாதிப்பு இல்லாவிட்டால் யாருடைய கைஓங்கியிருக்கும்?
திராவிட பாதிப்பு இல்லாவிட்டிருந்தால் ஹிந்திப் படங்கள் கோலேச்சியிருக்கும். ஹிந்தி முதலாளிகள் அறுவடை செய்து கொண்டு இருப்பார்கள். இணையத்தில்பார்பான்கள் எல்லாம் உங்களிடமும் என்னிடமும் ஹிந்தியில் பதில் சொல்லுவார்கள் , தமிழ் பதிவென்று போட்டுக் கொண்டு. வேறென்ன?


5. திராவிடக்கட்சிகளின் போதாமையால்தான் தலித் அரசியல் தோன்றியது எனலாம். திராவிட எழுச்சி என்ற ஒரு சின்ன ஏணியில்லாமல் எவ்வாறு அடித்தளமக்கள் இந்தளவு (மிகச்சிறிதளவெனினும்) எழுச்சியுறமுடிந்திருக்கும்?
திராவிட என்னும் போர்வையில் எழுந்த இந்த நடுத்தர சாதியினரின் எழுச்சி எந்தவகையிலும் தலித்திய எழுச்சிக்கான ஏணி அல்ல. சொல்லப்போனால்பெரும் தடை. நடுத்தர எழுச்சியும் தலித்திய எழுச்சியும் ஒன்றாக் ஒரே தளத்தில் நடந்திருக்க வேண்டும்.


6. திராவிட இலக்கியங்கள் குறித்து எனக்கும் கிட்டத்தட்ட உங்களின் பார்வையே. அவர்களின் பலரே சொல்லியிருக்கிறார்கள். தங்களுக்கு எழுத்து பிரச்சாரமாக§வு இருந்ததென்று பாரதிதாசன்கூட கம்பராமாயணத்தை நிராகா¢க்கவில்லையென எங்கையோ கேள்விப்பட்டதாய் நினைவு. பாரதியின் சுதந்திரக்கவிதைகள் உங்களால் விரும்பப்படுமெனின் பாரதிதாசனின் தமிழ்த்தேசிய எழுச்சி.
சாகா இலக்கியங்கள் என்பதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது. வெற்றிபெற்ற இனத்தின் வரலாறே பொது வரலாறாவது போல் வெற்றி பெற்றஇனத்தின் இலக்கியங்களே சாகா இலக்கியங்களாகக் காட்டப்படுகின்றது. எனக்கு ஆதியும் அந்தமும் அழிந்த போன, எவருடயது எனத் தெரியாமல்கிடைக்கும் இலக்கியத்தில் சற்று ஆவல் உண்டு.பாரதி பாரதிதாசனெல்லாம் அந்த அந்த காலகட்டத்தின் தெறிபுகளே ஒழிய வேறொன்றுமில்லை.பாரதி ஒரு சிலருக்கு ஒரு அடையாளம் , பாரதிதாசனும் வேறு சிலருக்கு ஒரு அடையாளம் அவ்வளவே.


மேலும் படிக்க