Sunday, March 20, 2005

ரோசாவசந்திற்கும் நாராயனுக்கும் நன்றிகள். இந்த வாரத்தில் கலக்கி விட்டீர்கள்.

முதலில் ரோசாவசந்திற்காக. லார்ட்லபக்தாஸை செருப்பாலடிப்பேன் என்று சிம்பாலிக்காகச் சொல்லி ஆரம்பித்து வைத்து பல நரம்புகளைத் தொட்டுவிட்டார். ஒரு விதத்தில் திருமாவளவன் போன்றோர்களை எதிர்மறையாகவேனும் பொதுக்களத்தில் இறக்கப்படுவது நல்லதிற்குத் தான். அதை ஒரு குறிப்பிடத்தக்க கூட்டமாவது தொடர்ந்து விவாத வூடாக வைத்திருக்க வேண்டும். அந்த விதத்தில் ரோசாவசந்த்தின் கோபம் மிகத் தேவையானது. திருமாவளவனை ராமதாஸின் பீயை அள்ளுவதாக காட்டியவனை செருப்பால் என்ன நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும். பெரியாரின் தொண்டர்கள் என்றொரு கூட்டம் தலித்துகள் மீது வன்மம் பாராட்டுவது பிதிங்கிவழியும் சாதியத்தால் மட்டுமே தான் தவிர வேறெந்த மயிரும் அல்ல. சங்காரச்சாரியின் சாதியமும் தலித்துகளின் சாதிஅடையாளமும் சாதியம் என்ற வகையில் முன்பின்/தலைகீழ் முரணானது. இந்தச் சாதாரண அறிவு கூட இல்லாமல் "பகுத்தறிந்து" என்னப் புடுங்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் காலச்சுவட்டிலே இப்படித்தான் ரவிக்குமார பன்றி மேய்க்கச் சொன்னது ஒரு பெரியாரின் "பா"ரிசு. அதையும் "பத்திரிக்கா தர்மமாக' வெளியிட்டார்கள். இப்படி வெளியிட்டது பாப்பார புத்தி தானே என நான் சுராவின் செல்லப் பிள்ளைக்கு வாசகர் கடிதம் போட்டால் "பத்ரிக்கா தர்மம்" என்னவாகயிருக்கும் எனச் சொல்லவா வேண்டும் ? வழக்கம் போலவே இந்த விவாதம் ப* புத்தி என்ற கடுஞ்சொல்லுக்கும் பாப்பாரப்புத்தி என்னும் சுடுசொல்லுக்கும் ஆறு வித்தியாசங்கள் காணும்படி இழுத்து வந்தாயிற்று. பீயள்ளச் சொல்லுவது சாதியத்தின் உச்சம் என்றால் பாப்பாரப்புத்தி என்பது சாதியத்தின் அடுத்த நிலை என்னும் இந்த பாப்பார வாதம், எப்படியாவது தலித்துகளுக்கு என்று பொதுபுத்தியில் இருக்கும் கொஞ்சநஞ்ச கரிசனத்துக்கும் பங்கு போடுவதற்குத் தானே? . ப*யன் என்பதுவும் பாப்பான் என்பதுவும் ஒரு தராசில் வைக்க வேண்டிய விடங்களா என்ன? ஒரு பார்ப்பான் தான் பார்ப்பான் இல்ல எனத் தெளிந்து கொள்ள *தனிப்பட்ட* யோசனை போதுமே. கோயில் சார்ந்த சமுதாயங்களுக்கு வெளியே வந்த பின்னும் ஒரு பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனுக்கு தான் "பார்ப்பான்" இல்லை எனத் தெளிந்து கொள்ளுவதற்கு ஒரு மயிரை இழப்பதைவிட அதிகமாக இழப்பு ஒன்றுமில்லையே. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பது போலத் தான் பார்ப்பான் இல்லை என "முற்போக்குத் தனமாக" தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் இரட்டை லாபம் தானே. ஆனால் "தலித்" என்பது அப்படிப்பட்ட சுலபமான ஒன்றா? தலித்தாக பிறந்த ஒருவர் தான் "தலித்" இல்லை என "தனிப்பட்ட" அளவில் யோசித்தாலும் இழப்பு, தான் தலித் தான் என யோசித்தாலும் தனிப்பட்ட அளவில் வலி. ஏற்றுக் கொண்டாலும் வலி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வலி. இப்படிப்பட்ட நிலையில் தான் இருபது வயதில் இப்படி இருந்தேன் ; முப்பது வயதில் இப்படி தாராளமானேன் சகித்துக் கொண்டுள்ளேன், பிச்சை போட்டுள்ளேன் என மஞ்சள் நீராட்டு விழாக்கள் அசோகர் மரம் நட்டார் பாணியில் வரலாற்றுப்படுத்தல்களாக வரும் கொடுமை . பார்ப்பான் என்னும் கருத்தாக்கம் அதன் அத்துனை பவித்தரமான புனிதமான விளக்கங்கள் அளவிலேயே ஒரு வடிந்தெடுத்த பாசிச சிந்தனை. அது விகாரமடைந்து கோரமடைந்து கொப்பளித்து வழியும் இந்த நேரத்தில் தான் பார்ப்பான் இல்லை எனத் தெளிந்து மூடிக்கொண்டு இருக்க என்ன கஷ்டம்? அடங்குங்கடா எனத் தான் சொல்லத தோன்று கின்றது. ரோசாவசந்த், ஒரு வேண்டுகோள். இந்த சூழல் கெட்டுவிட்டது, பஜனை புடிங்கிவிட்டது என புலம்பல்களுக்கும் அடையாலங்களை ( எவன் அடையாளம்?) விட்டு வெளி வரவேண்டும் என்னும் புத்திமதிகளுக்கும், எதிர் கொண்டு கருத்து தெரிவிக்க வக்கில்லாமல் அடுத்தவன் பெயரில் கைமைதுனம் செய்யும் நேர்மைக்கொழுந்துகளுக்கும் ஆப்புடிக்கும் வகையில் பிஞ்ச செருப்பையோ, பீயள்ளிய விளக்கமாறையோ, குறி வெட்டும் கத்தியையோ தூர வைக்காமல் இருக்க வேண்டும். என் வேண்டுகோள் எல்லாம் ஒரு தேவையில்லையென்றாலும் , பொதுவில் வைக்க வேண்டும் என்பதற்காக வைக்கின்றேன். பதிவுகளுக்கும், சளைக்காமல் இவன் பதிவு அவன் பதிவு எனப் பார்க்காமல் தேவையான எதிர்ப்பையும் பாராட்டையும் வைக்கத் தயங்காத மனதுக்கும் நன்றி.

நாராயண், தங்களது சிலுக்கு ஸ்மிதா மீதான பதிவுகளுக்கு ( சாவித்ரியின் கடைசி கால நிலமை மிகவும் அவதிப்பட வைத்த விடயம்), பெடொபைல்களைப் பற்றி, கெட்ட வார்த்தைகளைப் பற்றி என அடுத்தடுத்து மாறுபட்ட, தேவையான கூடவே நல்ல எளிய நடையில் பதிவுகளை தந்தமைக்கு நன்றி. சென்னை வந்தால் ந்ங்கம்பாக்கம் (?)ஒரு விசிட் கொடுத்து சாயா குடிக்க வந்து கதையளக்க ஆசை. அது ஒட்டி இது ஒட்டி என எல்லா கருமமந்திரங்களையும் ஒட்டி கஷ்ட்டப்பட்டு சிகரெட்டை விட்டு விட்டு நம் டீக் கடைகளில் எப்படி டீ குடிப்பது எனத் தெரியவில்லை. சமீபத்திய பயணங்களில் அந்த வாய்ப்பே இல்லாமல் போனது எப்படி என ஆச்சர்யமாக உள்ளது.

இரண்டு படங்கள் பற்றி குறிப்பு வைக்க வேண்டும் என்னும் மன நிலை சற்று மாறிவிட்டது. அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும். முடிக்கும் முன் ஜெயகாந்தனைப் பற்றி. ஹர ஹர சங்கர எழுதிய பின் கிடைத்த ஞான பீட பரிசு ஜெயகாந்தனுக்கு ஒரு நல்ல உவர்ப்பைத்
தந்து கொண்டிருக்குதோ இல்லையொ எனக்கு மகிழ்ச்சி. ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும் முன்பாக, கூட்டம் போட வந்த இடத்தில் சாராயம் தான் வேண்டும் என அடம் பிடித்து வாங்கிப் போட்டக் கொண்ட ஆளுமையும் கூடவே எமர்சென்சியிலிருந்து , ஈழத்தமிழர் விடயம் ஊடாக இன்று ஜெயேந்திரரின் வாழையிலையைத் தாங்கும் இந்தக் காலம் கட்டம் வரை அவரது அரசியலையும் சமூகப் பார்வைகளையும் பார்த்ததால் இவரது இலக்கியத்தை படிக்காதது ஒரு வருத்தத்தையும் தரப் போவதில்லை. இனிப்படித்தாலும் ஒரு பிரயோசனமும் இருக்கவும் போவதில்லை. ஜெயகாந்தன் , அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்றோருக்கெல்லாம் ஞான பீடமும் அதற்கும் மேலான பீடமும் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக கிடைக்கின்றதோ அந்த அளவு தமிழ் சூழலுக்கு நிம்மதி. இவர்களுக்கு கிடைத்த அடுத்த அடுத்த வருடங்களில் கருணாநிதி, வைரமுத்து மற்றும் இன்ன பிறவுகளுக்கும் கொடுத்தால் அதைவிட ஒரு சிறப்பான டாப்பிங் கொடுக்க முடியாது. பின் எந்தப் பிணத்தை வைத்தும் இந்த கோஷ்டிகளின் தற்போதைய அல்லது வருங்கால சிஷ்ய கேடிகள் அரசியல் நடத்த முடியாததல்லவா?

13 comments:

Anonymous said...

//ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும் முன்பாக, கூட்டம் போட வந்த இடத்தில் சாராயம் தான் வேண்டும் என அடம் பிடித்து வாங்கிப் போட்டக் கொண்ட ஆளுமையும் கூடவே எமர்சென்சியிலிருந்து , ஈழத்தமிழர் விடயம் ஊடாக இன்று ஜெயேந்திரரின் வாழையிலையைத் தாங்கும் இந்தக் காலம் கட்டம் வரை அவரது அரசியலையும் சமூகப் பார்வைகளையும் பார்த்ததால் இவரது இலக்கியத்தை படிக்காதது ஒரு வருத்தத்தையும் தரப் போவதில்லை. இனிப்படித்தாலும் ஒரு பிரயோசனமும் இருக்கவும் போவதில்லை. ஜெயகாந்தன் , அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்றோருக்கெல்லாம் ஞான பீடமும் அதற்கும் மேலான பீடமும் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக கிடைக்கின்றதோ அந்த அளவு தமிழ் சூழலுக்கு நிம்மதி.//

அப்பாடி தமிழ்மணத்துல ஆண்மை உள்ளவன் ஒருத்தனாவது இருக்கானே. தமிழுக்கு நீ ஒருத்தன் போதுமடா சாமி. ஜால்ராவில் பூத்த வீரத் தாமரை ஐயா நீங்கள்.

Thangamani said...

இல்லை ஆனந்தன் ஜெயகாந்தனுடைய ஆளுமை (சாரயத்தை விரும்பிக்குடித்தது எந்த விதத்தில் தவறு!) இலக்கியத்தில் அவர் செய்த சமரசம் (ஜெய ஜெய சங்கரா..) மற்ற விசயங்களில் (ஈழத்தமிழர், சங்கரச்சாரி, நிறுவன மயப்பட்ட மதத்தை தாங்கிப்பிடிக்க முனைவது ...) அவர் செய்துகோண்ட காம்ப்ரமைஸ், சறுக்கல் எல்லாம் உறுத்துகிற அளவுக்கு அவர் இலக்கியம் முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். இப்போது அவருக்கு ஞானபீடம் கிடைத்தது மிகப்பெரிய வீழ்ச்சிதான்; அவரை அசிங்கப்படுத்துகிற வழிதான். ஏன் இந்த ஞானபீடத்தை அப்போதே (ஜெய ஜெய சங்கராவெல்லாம் எழுதும் முன்) கொடுத்திருக்கலாமே. அப்போது கொடுக்கவில்லை இப்போது கொடுக்கிறார்கள் என்றால் அது எதை எழுதியதற்காக?

அனாதை ஆனந்தன் said...

தங்கமணி,
நல்ல நாட்டுச் சாராயம் போல "சுவையான", போங்குக்குச் சொல்லவில்லை உண்மையிலேயே சொல்கின்றேன் சரக்கை இன்னமும் அடித்ததில்லை. ஒரே நாளில் சாராயம் காய்ச்ச வேண்டும் என்று அதைக் கெடுத்து நாறடித்து விட்டார்கள். அதனால் "சாராயம்" குடித்தனால் எல்லாம் கீழிறங்கவில்லை, அந்த கூட்டத்திற்கு வந்து அது இருந்தால் தான் மேடை ஏறுவேன் என்று "அடம்" பிடித்ததால் வந்த கீழிறக்கம் அது. அவரது இலக்கியம் முக்கியமானதாக இருக்கலாம் ஆனால் எனக்குத் தனிப்பட்ட அளவில் அறிமுகமானது இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களால் தான். தங்களது பதிவில் சொன்னது போலவே எனக்கும் இலக்கியத்தை இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து தனியே பிரித்து பார்க்கமுடியாது. அவர்களது தனிப்பட்ட ஆளுமைகள், அவர்களது இலக்கியக் படைப்புளை பார்ப்பதற்கு மிகப் பெரிய தடைதான் என்ன செய்வது?

ROSAVASANTH said...

நன்றி அனாதை! ஒரு பக்கம் கேனத்தனமான வாதங்களையும், கேவலமான எதிவினைகளையும் (கருத்துகளாய் அல்லாமல் செயல்களாகவும்) எதிர்கொள்ள நேரும்போது, உங்கள் பதிவு ஆசுவாசம் அளிக்கிறது. வந்த எதிர்வினைகள் நமது நிலைப்பட்டில் மேலும் தீவிரமாக இருக்கவே உதவியதே தவிர, அதனால் வேறு பிரச்சனைகள் இல்லையெனினும், இது போன்ற பதிவுகளை பார்க்கும்போது கொஞ்சம் நெகிழ்சியுடனும், சந்தோஷத்துடனும் செய்ய முடிகிறது. நன்றி!

Narain Rajagopalan said...

நன்றி ஆனந்தன். உங்களின் பாராட்டுக்கள் இன்னமும் என்னை பொறுப்புள்ளவனாக,விஷயங்களை எழுதும்போது இன்னமும் ஆழமாக யோசித்து எழுத உந்துகிறது. இலக்கியத்தை இலக்கியகர்த்தாகளிடமிருந்து பிரித்து பார்த்தல் என்னாலும் இயலாது.

Anonymous said...

கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பு தவறானது

ரவி ஸ்ரீநிவாஸ் said...

are you in new york.i was under the impression that you were in canada.or is it new york in canada

அனாதை ஆனந்தன் said...

Ravi,

Where did you see that I am in NY? I am not in Canada but US only. I am in the NY timezone for sure. :-).

Thanks,
Anathai

Anonymous said...

அன்புள்ள அனாதை ஆனந்தன் என்கிற கட்டபொம்மு என்கிற ஜிதிராவிட் என்கிற செந்தில்குமார் அண்ணாசிக்கு,

உங்களுடைய சமூக விமரிசனத்தையும், வெறுப்பின் வீரியத்திலும், அதன் உண்மையிலும் உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல்தான் இத்தனை பெயர்களில் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. இருக்கட்டும். நீங்கள் யார்..?? என்ன..?? தலித்தா..?? பாதிக்கப்பட்டவரா என்ன என்பதெல்லாம் எனகுத் தெரியாது. பாதிக்கப்பட்டிருந்தால் உண்மையாகவே வருந்துகிறேன். ஆனால், உங்களைப் போன்ற , ரோசாவைப் போன்ற படித்தவர்கள், அந்தப் படிப்பினால் உங்கள் நிலையைக் கடந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் வேலைப் பார்க்கும் கணித இயலாளர்கள், மிச்சமிருக்கும் சமூகத்துக்கும் இம் மாதிரியான படிப்பினால் விளைந்த முன்னேற்றங்களை சொல்லி அவர்களையும் ஊக்குவிப்பதை விட்டு விட்டு, செருப்பு, மலம் தோய்ந்த செருப்பு, விளக்குமாறு, ஆண்குறி நறுக்க கத்தி என்று ஒரே வன்முறை வழிமுறைகளாக சொல்லிக் கொண்டிருக்கிறீகள். கலகத்துக்கும், ரவுடித்தனத்துக்கும் மயிரிழை வித்தியாசம்தான். :-(

பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அறிவு கொண்டு எதிர்க்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி. ஏனெனில் வன்முறைக்கு அவர்கள் காது கொடுக்க மாட்டார்கள். குடுமி/ பூணுல் அறுப்பில் உதித்த இயக்கம் இன்று எங்கே கிடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு..??

உங்களுடைய கோபத்தின் உக்கிரம் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டி அவர்களை முன்னேற்ற உதவுமானால் நல்லது. மற்றவன் வீட்டை கொளுத்தவும், குறி வெட்டவும், மலம் தோய்ந்த செருப்பால் அடிக்கவும் சொல்லிக் கொடுப்பது எங்கேயும் இட்டுச்செல்லாது - உங்களையும் உங்களை சேர்ந்தோரையும் தாதா கும்பலாக ஆக்குவதை தவிர.

-பனாதை பாண்டியன்

உங்களைப் போல முகமூடிகளுக்கு என் சொந்தப் பெயரில் பின்னுட்டமிட தேவையில்லை என்பதனாலேயே முகமூடிப் பெயரில் விடுகிறேன். உங்களுக்கு பயந்து கொண்டல்ல. நான் யார் என்று அறிந்து கொண்டாலும் எனக்கு கவலை இல்லை. இது உங்கள் தகவலுக்காக. :-)

ROSAVASANTH said...

நன்றி பனாதை பாண்டியன்! (அனாதை மட்டுமில்லாது எனக்கும் அறிவுரை சொல்லியிருப்பதால்) உங்கள் கருத்துக்களை கணக்கில் கொள்ள முயற்சிக்கிறேன்.

அனாதை, இந்த வாக்களிக்கும் நிரலை உங்கள் டெம்ப்ளேட்டில் சேர்க்கலாம். வாக்கு முக்கியமல்ல, மறுமொழி வந்தால் தமிழ்மணத்தில் அப்டேட் ஆகும்.

ROSAVASANTH said...

இது உங்கள் பின்னூட்டமா?
http://www.domesticatedonion.net/blog/?item=441#comment1677

அனாதை ஆனந்தன் said...

ரோசாவசந்த்,
இரண்டாம் முறை பதிய முயற்சிக்கின்றேன்.

அந்த கமெண்ட் என்னுடயதல்ல. அனாதை என்ற பெயருக்கு நான் மட்டும் உரிமை கொண்டாடமுடியாதல்லவா? அதனால் இழப்பொன்றும் இல்லை. பொதுவாக மற்றொரு தளத்தில் "கருத்தொன்றை" பின்னூட்டமாக இடுவதை தவிர்த்தே வருகின்றேன் சில விதிவிலக்குகள் இருந்தாலும். தங்களது ஓட்டெடுப்பைப்பற்றி ன ஆலோசனையை நான் நிராகரித்தாக வேண்டிய சூழ்நிலை. திரு காசி அவர்களின் பல்வேறு உழைப்பை மதித்தாலும் இந்த ஓட்டெடுப்பையும் பின்னூட்ட அறிவிப்பையும் இணைத்தைஒருவித நிர்பந்தமாகவே உணர்கின்றேன். என் பின்னூட்டத்தை அறிவிக்க பெறுதல் என்பது அந்த நிர்பந்தத்தை ஏற்க மறுப்பதைவிட எனக்கு தனிப்பட்ட அளவில் பிரயோசனமாக தெரியவில்லை. புரிந்து கொண்வீர்கள் என நம்புகின்றேன். நட்புடன்,
அனாதை

ROSAVASANTH said...

இப்போதுதான் பார்தேன். இதில் புரிந்துகொள்ள(ளாமலிருக்க) என்ன இருக்கிறது? உங்களு உறுதியை மதிக்கிறேன்.