Saturday, April 30, 2005

பாலாஜி-பாரியின் இந்தப் பதிவில் நடந்த விவாதத்தைப் படித்தவுடன் தோன்றியதை இங்கே எழுதுகின்றேன். கீரிப்பட்டியில் நடந்த/ நடந்துக் கொண்டிருக்கும் கூத்தை விவாதமாக்கியிருப்பது குறித்து அவருக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ் நாட்டில் பார்ப்பனாதிகளை விட கேடு கெட்ட சாதியினர் ஒருவர் உண்டு என்றால் அது இந்த தேவர் சாதியினர் தான் எனக்குத் தெரிந்த வரையில். முதலில் இந்த தேவர் என்ற சாதிப் பெயரே போலியானது. கள்ளன், அகமுடையான், மறவன் என்னும் மூன்று சாதியினரே இப்படி "தேவர்" என்னும் வெட்டிப் பந்தாப் பெயரில் உலா வருகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டு சமூக மாற்ற முயற்சிகளில், பார்ப்பான்/வெள்ளாளன்/முதலி/ரெட்டி என நிலஉடமை சமூகத்திடமிருந்த நிலப் பங்கீடுகளின் பெரும் பயனை தஞ்சை /திருச்சி/ புதுக்கோட்டை/ மதுரை/ ராமனாதபுரம்/திருநெல்வேலி போன்ற இடங்களில் கொள்முதல் செய்த திருட்டுக் கூட்டம் தான் இந்தக் கூட்டம். நிலங்களில் வேலைசெய்பவர்களை "வேலை" வாங்குவதற்க்காக வைக்கப்பட்ட அடியாள் கூட்டம், இப்பொழுது இந்த இடங்களின் நில உடைமையாளர்கள். இவர்களது "தேவர் காலடி பொன்னே" பெருமிதங்கள் காறித் துப்பப் பட வேண்டியவை. இவர்களது சாதிப் பற்றும் சாதிப் பெருமிதமும் பார்ப்பானின் சாதிப்பற்றுடனும் பெருமிதத்துடனும் சரிசமமாக நின்று விளையாடும். சினிமா/அரசு நிர்வாகம்/அரசியல் என பார்ப்பன ஆதிக்கம் இருந்த அத்துனை இடங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது இந்தச் சமூகம். பார்ப்பனிய வெள்ளாள ஆதிக்கம் அவ்வளவு வெட்டுக்குத்து இல்லாமல் கைமாறுவது போல் அல்லாமல் இந்த வகைச் சமூகங்களிடம் இருந்து மாற்றம் சிரமமாக இருக்கப் போவதற்கு காரணம், இந்த பெரும்பாண்மை சார்ந்த ஜனநாயகம். அரசியலமைப்பில் தீவிரமான மாற்றம் இல்லாமல் இது சாத்தியமாகப் போவதில்லை. போலிஸ் மற்றும் இடை அரசு அதிகாரிகள் அமைப்பில் ஊடுருவியுள்ள இந்த மத்திய சாதிகளது ஆதிக்கம் ஒடுக்கப் பட வேண்டிய ஒன்று. அதுவும் இந்த ஆட்சியில் , இந்த குறிப்பிட்ட இனத்தவரது ஆதிக்கம், ராஜாஜி/காமராஜ் ஆட்சிக் காலத்தய பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஒப்பானது எனலாம். இந்த வகை ஆதிக்கத்தை அரசியலமைப்பு மூலமாகத்தான் தீர்க்க முடியும். என்னைக் கேட்டால் கீழ் வருவனவற்றை முக்கிய தற்போதைய தேவை எனக் கருதுவேன்

1. தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை.
2. தலித்துகள் மீது செய்யப்பட்ட / தலித்துகள் செய்த சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களை விசாரிக்கும் மற்றும் நீதி வழங்கும் அதிகாரம் மற்றுமொரு தலித்திற்கே எனும் சட்டம்.
3. தலித்துக்ளுக்கு எதிராக குற்றம் நிருபிக்கப்பட்டவர்களுக்கு பொது தண்டனையின் அளவுகளுக்கு மேலாக பொருளாதார நிவாரணமும் உடனடி வசூலிக்கப்பட்டு தலித்துகளிக்கு சேர்பித்தலும் நடக்கவேண்டும்.
4. தலித்துகள் மீதான குற்றம் கீழ் கோர்ட்டில் நிருபிக்கப்படாவிட்டால், அதனை மேல் கோர்ட்டுக்கு மறுமுறையீடு செய்யும் வாய்பை மறுத்தல்
5. எந்த அரசு சார்ந்த / பொதுக் குழு சார்ந்த மேல்மட்ட குழுக்களில் தலித்திய பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்தல்.
6. தலித்துகள் பிரதிநிதிப்படுத்தப்படாத நிறுவணங்களுக்கு தலித்திய உதவி வரி என்னும் தனிப்பட்ட வரியைப் பெற்று அதனை தலித்துகள் பொதுப் பணத்தில் சேர்த்தல். கூடவே சரியான அல்லது கூடுதலான பிரதிநிதித்துவம் உள்ள நிறுவணங்களுக்கு வரி விலக்கு அளித்தல்.
7. சுழல்முறை தலைமைப் பதவிகள் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த / அரசு உதவும் நிருபணங்களின் சட்டங்களில் தலித்திய தலைமைப் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்கல்.
8 சாதிகளை வெளிப்படையாக்கள் மற்றும் அதனை சமூக அளவீடுகளில்பகிரங்கப் படுத்தல்.
9. முதல் இரண்டு பெரும்பான்மை சாதிகள் மற்றும் ஆதிக்க சாதிகள், அவர்களது பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தும் எந்தப் பதவியையும் வர விடாமல் தடுத்தல்.
10. எந்த அரசியல் பதவியும் இரண்டு முறைக்கு மேல் எந்த தனிப்பட்ட நபரும் போட்டியிட முடியாமல் தடுத்தல்.
11. எந்த அரசு உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் அவர்களது தனிப்பட்ட உதவியாளர்கள்/ பிஏக்கள் போன்றோரை தன் சுய சாதியில் வைத்திருக்க அனுமதி மறுத்தல்.
12. சாதியை விட்டு வெளியேறும் வாய்ப்பை அளித்தல். மேலும் அதனை பகிரங்கப்படுத்தல். கூடவே அதனைக் கடுமையாக்கல். உதாரணமாக வெளியேறியவர்களுக்கு அவர்களது சாதியிலே திருமணம் செய்யும் நிலை வந்தால் அவர்களது சாதியை அவர்களுக்கு திரும்ப அளித்தல். கூடவே மாற்றுச் சாதியில் கல்யாணம் செய்து குழந்தை பெற்றவர்கள்/ மாற்றுச் சாதி குழந்தையை தத்தெடுத்தவர்களுக்கு வெளியேறுவதற்க்கான எளிதான விதிகளும், சாதியைவிட்டு மீளாத திருமணம் செய்தவர்கள், சுய சாதிப் பெரும்பாண்மையுள்ள இடங்களில் வசித்தல்/உழைத்தல் ஆகியோருக்கு சாதியை விட்டு வெளியேறும் வாய்ப்பை தீவிரமாக்கலும்.

இன்னமும் விட்டால் எழுதிக்கொண்டு போகலாம் அவ்வளவு தேவையிருக்கின்றது இந்த திருகுகலைப் போக்குவதற்கு.

7 comments:

Anonymous said...

எல்லாவற்றைக்காட்டிலும் முதலில் சாதி வேற்றுமைகள் அழிக்கப்பட வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

"சாதிகளை வெளிப்படையாக்கள் மற்றும் அதனை சமூக அளவீடுகளில்பகிரங்கப் படுத்தல்"
நல்ல யோசனை. முதலில் உங்கள் சாதியை வெளிப்படையாக்கி நல்லத் துவக்கம் கொடுக்கலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

அனாதை ஆனந்தன் said...

அப்ப ஏழு அயிட்டத்தை ஒத்துண்டுட்டேள். எட்டாவதுல மட்டும் சொல்றவா ஹிப்போகிரசியிலே கொஞ்சம் டவுட் வந்துடுத்து. அப்படித்தானே? கூடவே ஒன்பதிலேருந்து கடைசிவரையும் கேள்வி ஒன்றும் கிடையாதே? ரொம்ப ஷேமம். என் சாதிதானே பகிரங்கப் படித்திட்டாப் போச்சு. பகடியெல்லாம் கிடையாது. அய்யன் வேறு சாதி / அம்மா வேறோர் சாதி. என்னைப் போலவாளயெல்லாம் இந்தப் புளுத்து நாறிப்போன கேடுகெட்ட இந்து மதம் சொல்றது "சண்டாள" சாதி. இனி மூடிண்டு போறேளா? அப்படியே இந்த "அன்புடன்" என்பதையும் மறக்காம வாறி எடுத்துண்டு போயிடும். உம்மப் போலவா வாடையே நேக்கு ஒவ்வாமை.

அனாதை

Anonymous said...

Can you tell us the castes in which your father and mother were born into?

Anonymous said...

இன்னாத்துக்கு நீ அன்பை வாரி எடுத்துகினு போங்கற? அத்த உனுக்கு எதுவும் உருப்டியா கொடுக்கலை போலகீதே. அதான் இப்டி தெனத்துக்கும் அசிங்கம் புட்ச்ச மாரி ஒளரிகினுகீற. இல்ல நான் வெறி புட்ச்ச அனாதைக் கிறுக்கு கசுமாலமாவே இருந்துட்டு பூடறேன்னா அப்பால நான் இன்னா சொல்லி இன்னா ஆவப்போது? வரட்டா?

Anonymous said...

**சாதிகளை வெளிப்படையாக்கள் மற்றும் அதனை சமூக அளவீடுகளில்பகிரங்கப் படுத்தல். **

With much difficulty we achieved the obliteration of caste identities. This is the only useful contribution of the dravidian movements, Now this guy wants to bring it back. Before asking others to publicly proclaim their castes, let this great social reformer disclose the caste identities of his parents.

Anonymous said...

bastard!