Monday, December 27, 2004

துக்கம்.

காலையில் எழுந்ததிலிருந்து கேள்விப்பட்டவுடன் இந்தச் செய்தி மனதை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. சென்னையில் தினப்படி பெசண்ட் நகர் அருகே வாக்கிங் செய்யும் உடன்பிறப்பின் இருப்பை உறுதி செய்து பின் வேதாரன்யத்தைச் சேர்ந்த நண்பனுடன் பேசியதில் அவனுடைய கிராமமெல்லாம் பாதிக்ப்பட்டது தெரிந்தது அவனுக்குத் தெரிந்த சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து தினப்படி 200லிருந்து 300 பேராவது மீன்பிடிக்க செல்வார்கள் என்றும் எவரும் மீளவில்லை என்ற போது கொடூரமாக இருந்தது நாகப்பட்டினத்தில் இருவருக்கும் பொது நண்பர் ஒருவரின் மாமனார் மீன் வாங்க சென்றவர் திரும்பாததும் அவரது சைக்கிள் மட்டும் ஓரத்தில் கிடந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு அடிப்படை வார்னிங் சிஸ்டம் இல்லாமல் கூட இருக்கின்றோமா? ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் முன்னால் கூட வார்னிங் செய்ய முடியாத ஆபத்தா இது. ஒன்றும் புரியவில்லை. ஆபத்துகால நடவடிக்கை எடுக்க ஏதேனும் திட்டங்களும் வழிமுறைகளும் இருக்கின்றனவா அல்லது இவையெல்லாம் டிரையல் அண்ட் எர்ரர் மூலம் எடுக்கப்படுகின்றதா எனவும் தெரியவில்லை. உடல்களை தூக்கி வருவதெல்லாம் இளைஞர்களும் சாதாரன மக்களும் போல் உள்ளது இல்லை அவர்கள் எல்லாம் அரசாங்க ஆட்களா? வண்டியில் அடுக்குவதைப் பார்த்தால் செத்து அடுக்குவது போல் இருக்கின்றது செத்ததை உறுதிப் படுத்திக் கொள்ளவெல்லாம் செய்கிறார்களா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கின்றது? பிபிசியில் ஒரு ஹெலிகாப்டர் ஆட்களை காப்பது போல் ஒரு படம் போட்டிருந்தார்கள் அதைத் தவிர வேறேதிலும் அரசாங்க இயந்திரத்தைப் பார்க்க முடியவில்லை. எழுபத்தி ஏழில் தமிழ்நாட்டில் பெரும் புயல் அடித்தபோது அரை டிரைவுசர் பள்ளி மாணவன். ஊரெங்கும் மரமெல்லாம் விழுந்து அதன் விறகு பொறுக்க அந்த மதியமே ஓடியது இன்னமும் நினைவிருக்கின்றது. அதன் ஆபத்தும் தொத்திக் கொண்டிருக்கும் மரம் திரும்ப மேலே விழலாம் அதனால் சாவு கூட நிகழலாம் எல்லாம் விளங்காமல் கூட்டத்தோடு கூட்டமாக ஓடியது மட்டும் ஞாபகம் இருக்கின்றது. இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் பொது சிந்தனை இன்னமும் வளரவில்லை என்னதான் மயிறு முன்னேற்றம் என்பது தான் வயத்தெறிச்சலாக இருக்கின்றது. டீவியில் பார்க்கும் போது எல்லா மக்களும் வெளியில் அதுவும் ஏதோ பிக்னிக் போல வேடிக்கை பார்க்க. அவ்வளவு பேர் வெட்டியாகக் கூடினால் வேறு வகை வியாதிகள் எளிதில் பரவாதா? தடுப்பு நடவடிக்கைகளுக்கும் நிவாரணத்திற்கும் இந்தக் கூட்டமே தடையாக இருக்காதா? தலை சுத்துகின்றது.


டீசே தமிழன் இயற்கையைத் திட்டிக் கொண்டிருந்தார் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையான இயற்கையென்றால் வயது, பால், வர்க்கம் பாத்திருக்காது. இங்கே 95% அன்றாடங்காச்சிகள் அதிலும் முக்கியமாக குழந்தைகளும் பெண்களும். இப்படிக் குறி வைத்து தாக்கவெல்லாம் இயற்கைக்கு சூட்சமம் தெரியாது.


5 comments:

இளங்கோ-டிசே said...

அன்பின் ஆனந்தன்,
நீங்கள் சொல்வது போல, நான் கேள்விப்பட்டவரையில் சுமத்திரா தீவுகளில் பூமிநடுக்கம் ஏற்பட்ட மணித்தியாலங்களின் பின் தான் தமிழ்நாடு, ஈழம் எல்லாம் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். ஏன் அரசாங்கங்கள் இவ்வளவு சோம்பறி மூதேவிகளாய் இருந்ததோ தெரியாது. இப்போது தமிழ்நெட்டிலும் (http://www.tamilnet.com/art.html?catid=79&artid=13718) இதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். மற்றும் இன்னும் ஈழத்தின் தமிழ்ப்பகுதிகள் ஒழுங்கான அத்தியாவசிய உதவிகள் எதுவுமே செய்யப்படவில்லையென்றும், அரசாங்கம் தமிழ்ப்பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிக்கையை இருட்டிப்புச்செய்துவருவதாகவும் அங்கிருந்து பேசும் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
.....
இந்த சோகப்பொழுதில் அரசியல் பேசக்கூடாது என்றாலும், தமிழ்நாடு பாதித்தபோது மத்திய அரசு மற்றும் ஏனைய மாநில அரசுகள் என்ன செய்கிறது என்று அறிய ஆவல்? கார்கிலுக்கும், குஜராத்திற்கும் அதிக நிதியளித்த மாநிலம் தமிழ்நாடு என்று கேள்விப்பட்டேன். இப்போது தமிழ்நாடு பாதிப்படையும்போது அவர்களின் ஆதரவுக்கரங்கள் எவ்வளவு நீள்கிறது என்று பார்க்கோணும்

ROSAVASANTH said...

டீஜே, மீண்டும், மீண்டும் இந்த மெத்தனம் என்ற விஷயத்தின் மீது மிகுந்த கோபம் வருகிறது. துக்கத்தினால் வரும் கோபத்தை கண்டபடி காட்டகூடாதுதான். ஜப்பான் போன்ற ஒரு நாடு எப்படி நடந்திருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இங்கே இயற்கை அழிவுகள் எதிர்ப்பார்க்க கூடியது, மற்றும் முன்னேறிய நாடாய் இருப்பது மட்டும் காரணமாய் தோன்றவில்லை. உயிர்களுக்கான மதிப்பு, அதிலும் குறிப்பாக அன்னாடங்காச்சிகளின் உயிர்கள் மீதான் மதிப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. எங்கேயோ தொலைதுரத்தில் இருந்துகொண்டு ஒரு துரும்பை கூட எடுத்துபோடமல் இதை சொல்லவும் குற்றவுணர்வாய் இருக்கிறது. இது குறித்தெல்லாம் பேச பிறகு நேரம் இருக்கிறது. இப்போது கையாலாகாமல் பார்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியுமா என்று தெரியவில்லை.

ROSAVASANTH said...

யாருக்கா அழுவது என்று தெரியவில்லை. http://www.thatstamil.com/news/2004/12/27/andamans.html

வானம்பாடி said...

தமிழக மக்கள் எந்த நிதி உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் தாங்களே உதவிக் கொள்கிறார்க்ள். இப்போதைய முக்கியமான தேவை உயிர் காக்கும் மருந்துகளும், தொற்று நோய் பரவாமல் தடுப்பதும் தான்.

SnackDragon said...

விவாதத்துக்கு நேரடி தொடர்பில்லாமல் இருந்தாலும், காந்தியைப் பற்றிய இந்த கட்டுரை பாடிக்கவேண்டிய தொன்று. இது குறித்து என் சார்பு இங்கு தேவையில்லை என் நினைக்கிறேன்


http://www.vho.org/tr/2004/2/Kemp184-186.html


அன்புடன்
கார்திக்