Friday, May 08, 2009

நல்லா போடறாய்ங்கய்ய......... (நாடகம்)

படிக்கும் முன் இதைப் படித்துவிட்டால் (முக்கியமாக பின்னூட்டங்களை) நல்லது. ஈழச் சகோதர(ரி)ர்களே தயவு செய்து மன்னிக்க


திரை விலகுகிறது

ராஜ மாதவன் ஒரு மரத்தடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கையில் சத்திய சோதனையும் தலைக்கு காப்பிடலிசத்தையும் வைத்துக் கொண்டு கண்கள் மூடிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

ராஜ மாதவன் தம்பி மாசான் ஓடி வருகின்றார்.

மாசான்: அண்ணெ அண்ணெ எழுந்திருங்கன்னே சீக்கிரம் வாங்கன்னே

கண்விழித்த ரா மா: என்ன தம்பி என்ன ஆச்சி ஏன் இந்த பதற்றம்?

மாசான்: சிங்காளத்தூர் பசங்க நம்ம அம்மாவையும் அண்ணியையும் களவாண்டுட்டாங்கன்ன. அந்தத் தேவடியாப்பசங்க தலையை வெட்டணுன்னே வாங்கண்ணே

ரா மா: சரிப்பா நீ எதுக்கு பதறுறே - உனக்கு வேற ரெத்த கொதிப்பு இருக்கு பதறக் கூடாது; கெட்ட வார்த்தையெல்லாம் பேசறே; எங்கே கத்துக்கிட்டே ? சீச்சீ அசிங்கம்

மாசான் : லூசான்னே நீ? நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே? நாம சீக்கிரமா போய் காப்பாத்தனும்னே அப்படியே சிங்காளத்தூர் தேவடியாப்பசங்க குலத்தை அறுக்கனூம்னே

ரா மா: தம்பி நான் ஒனக்கு எத்துனை தடவை பாடம் சொல்லியிருக்கின்றேன். நாமெல்லாம் காந்தி வழி நடப்பவர்கள் குலத்தை அறுக்கணும்னேல்லாம் பேசலாமா? என் உடம்பெல்லாம் நடுங்குது. இப்படியெல்லாம் பேசினா நீ என் முகத்துலேயே முழிக்க முடியாது உனக்கு பொறுமை அவசியம் வேணும். இந்தா இந்த சத்திய சோதனை 38ம் பக்கம் படி நான் என்ன சொல்ல வற்றேன்னு புரியும்

மாசான்: ஒங்காம்மல முதல்ல உன்னை வெட்டனும்டா; வெட்டிப்புட்டு ஒன்னைப் பெத்தது போதாதுன்ன்னு இத்தாதண்டி வளர்தாலே என் ஆத்தா அவளையும் சேர்த்து வெட்டணும். நான் வர்றேன் ( ஓடுகின்றார்)

ரா மா: பாத்தியா உன் உணர்ச்சி உன்னை என்னா செய்ய்துன்னு? அண்ணனையும் ஆத்தாவையும் வெட்டனும்ன்றியே . ஒன் சேர்காலம் சரியில்லை

இந்தக் கூத்தில் ஊர் மக்கள் கூடிவிடுகின்றனர்

சூர்யா : சின்னப்பிள்ளத்தனமா பேசாதீங்கன்னே. தம்பி என்ன சொல்லிட்டாப்ப்ல ? நீங்க பதற விசயம் தான் கோமுட்டுத்தனமா இருக்கு

பக்கத்து வீட்டு ரங்கு அய்யர்: மாது நீ சொல்றது தான் சரி. ஒன் தம்பி சேர்க்கை சரியில்லை; நீதான் கவனிக்கனும். பையன் அம்மாவும் அண்ணியையும் இழந்துட்டான். நீதான் பொறுப்பா கவணிச்சுக்கணும். (மனதிற்குள்ளாக அம்பாளே முதலி குடும்பத்தை ஒழிச்சதுக்கு உனக்கு தினம் நெய் வேத்தியம் ஏத்தறேன்)

சிங்காளத்தூரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் வைத்தி: ராஜன்னே அமைதி தேவைன்னே. சட்டுபிட்டுன்னு கிளம்பிட்டா ஊரெல்லாம் ரெண்டாயிடும் அப்புறம் எவனும் ஒழுங்கா நடமாட முடியாதுன்னே. உங்களைப் போல அமைதி யாருக்குன்னே வரும்..

ரா மாவின் பெண்டாட்டியிடம் செறுப்படி வாங்கினவன்: ராஜா அண்ணே நீங்க தான்னே மாசானை கரிக்கிட்டா புரின்ஞ்சுகிட்டீங்க. தேவடியாங்கிரது, குலத்தை அறுக்கனும்கிறது சேச்சே என்ன அதீதம் என்ன வக்கிரம்??

ரா மா: வாங்க எல்லோரும் வாங்க; அங்கே ஆத்தாளையும் சகபத்தினியையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள்; உள்ளம் பதைபதைக்கின்றது அதெல்லாம் விட இந்த மாசான் பேசிய வார்த்தைகள் அப்பப்பா என்ன துவேஷம்; இந்த சத்திய சோதனையிலேயே இதற்கு தீர்வு இருக்கின்றது பொறுமையாகப் படித்தால் ஒரு தீர்வு வராமலா போய் விடும்;

வத்திக்குச்சி : மாசான் சொல்லியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கின்றேன்.

ரா மாவின் மனைவியின் முறைமாமன்(எனச் சொல்லிக்கொள்பவர்): பெண்டாட்டியை தூக்கிட்டுப் போயிட்டான் ஆத்தாளத் தூக்கிட்டுப் போயிட்டான்னு இந்தச் சண்டை போடுறீங்களே; ஆத்தாளை தூக்கிட்டு போகும்போது ஆத்தா கால் பட்டு என் அப்பாவுக்கு காயம் ஆயிட்டது தெரியுமா? வந்துட்டாய்ங்க சண்டை போடுறதுக்கு

ரா மா: வத்திக்குச்சி, நான் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை; வரலாற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றேன்; சில வார்த்தைகளை வார்த்தைகள் என நினைக்கக் கூடாது அதற்கும் மேலே இல்லாவிட்டால் அதற்கும் கீழே பொருள் கொள்ள வேண்டும். மாசான் எதோ வேகத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதன் விளைவு அப்பப்பா எண்ணமுடியவில்லையே ( சிவாஜி குரலில் )

சுதந்திரம் : சரியான பேச்சு; மாசான் சரியாக பேசினால் சரியாகத்தான் பேசினார் எனலாம். தப்பாகப் பேசினால் தப்புன்னுதானே சொல்லனும். நல்லது தான் சொல்லுகிறீர்கள். உங்களக்கு எனது நன்றிகள்

கஸ்பர் : என்ன சொல்றீங்க சூர்யா? உங்களுக்கெல்லாம் கெட்ட வார்த்தைன்னா என்னன்னு தெரியாது? கொலவெறின்னா என்னன்னு தெரியாது . you dont know any stupid thing

புற வர்ஷங்கள்: அடிப்படையாகவே நம் நாட்டில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் ஆதரவும், எதிர்ப்பும் ஆதாயங்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு பலி என இப்போதைக்கு மாசான். மாசான் கருத்துக்களில் பலவற்றோடு நான் முரண்படுகிறேன். கருத்தில் நேர்மையற்றவர்கள் அரசியல் செய்ய மட்டுமே லாயக்கானவர்கள் என்பதென் கருத்து. சேகுவேராவின் படம் அச்சிடப்பட்ட ஆடையணிவதால் மட்டுமே புரட்சி வந்து விடுமா என்ன..? புரட்சியென்பதை பேச்சாக மட்டுமே பிரபலப்படுத்தியவர் மாசான். ஒலிபெருக்கியைப் பிடித்து ஆத்தாலுக்கும் பெண்டாட்டிக்கும் ஆதரவை பேசிவிட உங்களுக்கும், எனக்கும், நம்போன்றோருக்கும் எவ்வளவு கணம் பிடிக்கும். வெறும் பேச்சல்ல நடைமுறை வாழ்க்கையென்பது. போலி புரட்சியாளர்களும், அவர்களுடைய போக்கும் குறித்து சிந்தனையாளர்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இது மாசானின் ‘குலத்தை அழிக்கணும்‘ என்பதற்கான பதில் அல்ல. பொதுப்போக்கில் மாசானின் நடவடிக்கைகள் குறித்த கருத்து.

ராமலீலை : மே 15ஆம் தேதி தெரியும் எங்கே என்ன கிழிஞ்சுதுன்னு

ரா மா: எனக்கு மட்டும் எதுவும் கிடையாது என பேசிக்கொண்டிருக்கின்றிர்கள்; நான் வரலாற்றின் துளிகளிலிருந்து பூகோளம் படிப்பவன்; அறிவியல் படிப்பவன் ஏன் தமிழ்ப்பாடம் கூட படித்தவன். வரலாற்றின் துளிகளின் நுனிகளில் பாடம் கற்காதவன் எதையும் சாதிக்க முடியாது. என் ஆத்தாளின் தம்பியே என்ன சொல்லியிருக்கிறார் என கையில் டேப் வைத்திருக்கின்றேன். சிங்காளத்தூரில் வசிக்கும் என் மனைவியின் முறைமாமனே இங்கே என்ன சொல்லியிருக்கின்றார் என கவணிக்கவும். அவருக்கு சூர்யா போன்ற யாரவது ஒருவர் பதிலளிப்பார் என நினைத்தேன். இந்த கஸ்பர் என்னிடமே கேள்வி கேட்கின்றார். நான் என்ன செய்ய. வரலாற்றின் ஒவ்வொரு பக்கமாக அடியெடுத்து படித்தவனிடம் கேள்வி கேட்கிறார்கள் , இண்டர்னெட்டில் தீர்மானம் போட்டுக் கொண்டு கிண்டல் செய்கின்றனர். அமெரிக்காவிலிருந்தெ போன் போட்டு சாட்சியுடன் சொல்லிவிட்டனர் எனத் தெரியாமல் செய்கின்றனர். இந்த ஊருக்கும் சிங்காலத்தூருக்கும் விரோதம் வரவேண்டுமெனவே இந்தவாறு வெறியுடன் பேசுகின்றனர். அமைதியின் அர்த்தமும் ஆழமும் தெரியாமல் பேசுகின்றனர்.......


(பேசிக் கொண்டிருக்கும் போதே இவர் தலைக்குப் பின் ஒளிவட்டம் விழுவது போல் வெளிச்சம் விழ மற்ற இடங்களில் மெல்லிய இருட்டு. கூடியிருப்பவர்கள் அமைதியுடன் ஜெபம் பண்ணுவது போல இருக்க மறுபக்கத்திலிருந்து ஒரு வண்டியில் "எல்லாவற்றையும்" அள்ளிப் போட்டுக் கொண்டு மாசான் கேவி அழுது கொண்டே வருகின்றார்.

திரை கவிழ்கிறது.......

No comments: