Thursday, December 02, 2004

திருகிப் போன உலகம்.

இந்த சங்கராச்சாரி கைதும் அதன் பின் நடக்கும் விவாதங்களும் எந்த வகையில் திருகிப் போன சமுதாயத்தில் இருக்கின்றோம் என்று காட்டுகின்றது.அடிப்படையே பிறழிப் போய் எது வலது எது இடது எது முன் எது பின் எது மேல் எது கீழ் என திசைகள் அனைத்தும் திருகப்பட்ட நிலையில் நின்று கொண்டு அனைத்து விவாதங்களும் நடத்தப்படுவது கூத்தாக இருக்கின்றது. முதலில் இந்த சங்கர மடம் மற்றும் அதன் வரலாறே ஒரு தகராறான வரலாறு. ஆதி சங்கரரை புத்தருக்கு முன் வைத்து திருகு தண்டாவை ஆரம்பித்து பின் சிருங்கேரியின் கும்பகோண கிளையை ஐந்தாவது மடம்( இந்த இடத்தில் http://www.ucl.ac.uk/~ucgadkw/indology.html, "Vidyasankar Sundaresan" பெயரை வைத்து தேடினால் இந்த மடத்தைப்பற்றிய பல சரித்தரபூர்வமான விடயங்கள் கிடைக்கும்)என ஜல்லியடித்தில் இருந்து ஆரம்பமே ஒரு மோசடி. ஒரு யோசிக்கும் வயதில் இல்லாத ஒரு சிறுவனை காவு கொடுப்பது போல் அவனை துறவுக்கு தேர்ந்தெடுப்பதுவே ஒரு child abuse தான் அவனது பெற்றோர் சம்மதம் இருந்தாலும்.அதுவும் சுற்றியிருப்பவர்கள் , தனது குரு ஒருவரைத் தவிர, மற்ற எல்லோரும் சம்சார பந்தத்தில் இருப்போராக இருக்க, இந்த சிறுவனை மட்டும் வேறு சிந்தனையில் வளர நிர்பந்தியிருப்பது நிச்சயமாக குழந்தைக் கொடூரமாகத் தான் கருத முடியும். புத்த விகாரங்களிலும் கிறிஸ்தவ கூடாரங்களிலும் (? முப்பது வயதில் தான் உண்மையிலேயே பிரமானம் பெறப்படுகின்றது) சிறு வயதில் பிரம்மச்சார்யத்தை வாழ்வியல் முறையாக கட்டாயப்படுத்துவது கொடுமை லிஸ்டில் வந்தாலும், அந்த இடம் முழுவதும் அந்த வகையில் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் அதுவே ஒரு தனிப்பட்ட சமுதாயக் குழுவாகி, மனரீதியான தாக்குதல்களிலிருந்து சிறிய வயது நபர்களை தவிர்ப்பதுவாக இருக்கும்.ஆனால் இந்த சங்கர மடத்திலோ இந்த இருவர் மட்டும் தான் பிரம்மச்சாரிகள். கூட இருக்கும் மற்ற அனைவரும் இந்த ஓரிரு பிரம்மச்சாரிகளின் பிரம்மச்சார்யத்தை ஒரு "சித்தியாக" விற்று தன் நலத்தை பல்வகைகளில் பெருக்கிக் கொள்வதுடன், இந்த காவு கொடுக்கப்பட்ட பிரம்மச்சர்யத்தை ஒரு வித நிறுவனப்படுத்தப்பட்ட கற்பகவிருட்சமாக ஏற்பாடு செய்து வருவதை இந்தக் கூடத்தின் நலம் விரும்பிகளையும்இந்த மடத்தின் சொத்துக்களின் அளவையும் பார்த்தாலே விளங்கும். (உண்மையில் இந்த பிரம்மச்சார்யத்திற்கான தேவை/அவசியம் நாலு வேதத்திலும் இருக்கின்றதா)?

இந்தச் சங்கராச்சாரி கைதும் அதன் பின் நடக்கும் விவாதங்களும், பின்புலத்தில் இந்தச் சங்கரமடம் என்னும் விஷவித்தினை ஆராய விடாமல், ஒரு தனிப்பட்ட "கெட்ட" சங்கராச்சாரியைப் பற்றினதாக மாற்றும் முயற்சியை இந்த அரைகுறை சீர்திருத்தவாதிகளாலும், மீடியாக்கலாலும், அரசாங்க கருவிகளாலாலும் ஒரு புறம் நடந்தாலும், இந்த மடத்தின் முக்கிய நலம் விரும்பிகள் இந்த கெட்ட "சங்கராச்சாரியை" கைவிட்டு விலகி நிலகி நிற்பது அதனை எந்தவகையில் முழுமைப்படுத்துகின்றது என்பது விவாதங்களில் வராதது ஆச்சர்யம் தான்."பாரம்பரி"யங்களை வகுந்தெடுப்பதற்காகவே அரசியல் வாழ்கையை ஆரம்பித்ததாக ஜல்லியடிக்கும் மஞ்சள் சால்வை சோணக்கியனும் "பாரம்பரியம்" மிக்க சங்கர மடத்திற்கும், தீண்டாமையைப் பிறப்புரிமையாகக் கொண்ட ஒரு "பெரியவாளுக்கு" "விளக்குப்பிடிப்பது" மூலம் எந்த வகை பாரம்பரியத்தை காக்கின்றார் எனத் தெரியாமல் இருப்பது கேவலம் தான். சமரசம் செய்ய முனையாத ஒரே காரணத்தால் மட்டுமே இந்த சங்கராச்சாரி இப்பொழுது "கெட்ட" சங்கராச்சாரியாக அடிக்கப்படுகின்றார் என்பதற்கு, இன்னமும் இளைய சங்கராச்சாரி, அவருடைய தம்பி போன்றோரின் பங்கு கொஞ்சம் கூட அரசாங்க கருவிகள் கையில் வராதை முக்கியமானதாக காட்டலாம். சங்கரராமன் குற்றம் சாட்டியது இரண்டு சங்கராச்சாரிகளையும் கூடவே சங்கராச்சாரியின் உடன்பிறப்பையும் என்பதும், சங்கராச்சாரியின்தம்பிக்கும் சங்கர்ராமனும் நேரடி சண்டை இருந்தபோதிலும் அவர்கள் இருவருக்கும், பெரிய சங்கராச்சாரி போலவே இந்த கொலையினால் பயன் இருந்ததை கணக்கில் எடுக்காதது எப்படி என்பது ஒரு திருகப்பட்ட சமுதாயத்தில் தான் சாத்தியம். அதையும் விட வியப்பு இந்தவகை ஒரு தலைப்பட்ச நடவடிக்கை எடுத்தவர் தைரியலட்சுமியாம். எதனால் சிரிப்பது எனத் தெரியவில்லை. உண்மையிலேயே இந்த நிகழ்வை பயன்படுத்தி, இந்த ஒரு "கெட்ட" சங்கராச்சாரியை கை கழுவினாலும், சங்கர மடமும் ஜெயலலிதாவின் ஆட்சியும் தக்கவக்கப் படுமானல் உண்மையில் "உண்மையான" நலம் விரும்பிகளுக்கு இது இரட்டைப் பலனாக இருக்கும். சாதாரண மக்களுக்கான ஆரம்ப கட்ட அதிர்ச்சி போன பின்னால் இந்த நிகழ்வு இந்த சங்கர மட நலம் விரும்பிகளால் திரிக்கப்பட்டு எவ்வாறு அறுவடை செய்யப் படப் போகின்றது என்பதின் சாத்தியக் கூறுகளையும், இந்த நிகழ்வை ஏதோ ஒரு திருப்பமாக, சாதனையாக, அதுவும் ஈவேராவின் சாதனையாக வெல்லாம் காட்டும் வெகுளித்தனத்தின் எல்லையும் பார்க்கும் போதும் எந்த வகையில் திருகிப் போன சமுதாயத்தில் இது நடக்கும் என யூகிக்க முடியவில்லை.

கடைசியாக ஒரு quiz.

1. ரிக்வேதம் முழுவதும் கற்றுணர்ந்த ஒரு பார்பனன் செய்த கொலைக்கு இந்து சாஸ்திரங்களின் படி என்ன தண்டனை?
2. ரிக்வேதம் முழுவதும் கற்றுணர்ந்த ஒரு பார்பனனை துன்புறுத்தப் போவதாக சொல்பவனுக்கு என்ன தண்டனை? அப்படி சொல்லி பின் உண்மையிலேயே துன்புறித்தினவனுக்கு என்ன தண்டனை?
3. ரிக்வேதம் முழுவதும் கற்றுணர்ந்த ஒரு பார்பனனுக்கு அவன் அடுத்தவர் மனைவியை கவர்ந்தால் என்ன தண்டனை? நன்றாக கவனிக்கவும் அப்படி அடுத்தவர் "மனைவியாக இல்லாதவர்களை" கவர்ந்தால் என்ன தண்டனை?

விடை தெரியவில்லையா? இது வரை இந்த விடயத்தில் வாயைத் திறக்காத அல்லது திறந்தது போல பாவ்லா காட்டிய இணையப்பார்பனர்கள் யாரேனும் தெரிந்தால் அவர்களிடம் கேட்கலாம். அல்லது இந்த இடத்தில் http://members.ozemail.com.au/~mooncharts/manu/manu-english.pdf தேடிப்பார்க்கலாம்.


6 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

கிறிஸ்தவ,பௌத்த சன்னியாசிகளையும் சிறுவயதில் இருந்தே குருவாவதற்குத் தயார் செய்கிறார்கள்.ஆனால் இந்து சமயத்தில் தான் குருவின் காலுக்கு பாத பூசையும் தலைக்கு பாலாபிஷேகமும் செய்யும் கூத்து நடக்கிறது

KARTHIKRAMAS said...

அன்புள்ள அனாதை,
முதலில் பாராட்டு. "இது" போஸ்ட்.

மத்தபடி,
எனக்கு கேள்விகளாகவும் /தெரியாதவைகளாகவும் இருப்பதை எழுதுகிறேன்.

1. சங்கர மடத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் பார்வை என்ன? ஒரு சாதரண பார்ப்பன குடும்பம் சங்கர மடத்தை , ஏதோ மிக உயர்ந்த இடத்தில் இருக்கு பரிசுத்த இடமாக வைத்துள்ளது. சங்கர மடத்திலிருந்து அந்த சாதரண பார்ப்பன குடும்பத்துக்கு திரும்பி கிடைப்பது என்ன, கல்கண்டும் /குங்குமமுமா? போதுமா அது அவர்களுக்கு?
இவர்களுக்கு வெறு வழி தெரியாமல் அந்த "பரிசுத்த" டான்ஸ் காடும் சங்கர மடத்தை தலையிலே துக்கி வைத்துக்க் கொள்ள யார் சொன்னது?

2. சங்கர மடத்தின் தத்துவம் ஏன் எந்த பார்ப்பனராலும் கேள்வி கேட்கபடுவதில்லை?
கேள்விக்கு அப்பாற்பட்ட அல்லது தன்னல் புரிந்துகொள்ள்முடியாத தத்துவம் உள்ளதென ஏற்று கொள்ளும் எவரும், சஙர மடமல்ல எந்த மடமானாலும் இதே நிலையை எதிர் கொள்ள வேண்டியதுதான்.

3. ///(உண்மையில் இந்த பிரம்மச்சார்யத்திற்கான தேவை/அவசியம் நாலு வேதத்திலும் இருக்கின்றதா)?/
இல்லை. இதற்கு பார்பனர்கள் வணங்கும் புராணங்களிலே இருந்தே உதாரணம் காட்ட முடியும்.
ஆணாலும் ஏற்றுக் கொள்வதற்கு பார்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதவர்க்கும் இயாத ஒன்று.
காரணம், கல்யாணம் ஆனவன் கீழானவன், கல்யாணமாகாதவன் உயர்ந்தவன் என்ற ஒரு மிகக் கீழ்த்தரமாண ஒரு முறைஅயை நமது கலாச்சாரத்தின் மீது ஏற்றப்பட்டுள்ளது.

அட அதையாவது இந்த பார்ப்பனர்கள் ஒழுங்காக பின்பற்றுகிறார்களா என்றால் அதுவும் இல்லை!
சங்கராச்சாரி சின்ன வீடு வைத்திருந்தால அது கூட வேதத்தில் சரி என்று தான் சொல்லப்பட்டிருக்கு என்று ஒரு எக்ஸப்ஷன் கொடுத்துவிடுவார்கள்.
சரி இப்ப பண்ண சங்ராச்சாரியை தீண்டத்தகாத முறையில் தள்ளி வையுங்கோ ந்னு சொன்னாலும் செய்வது துணிய மாட்டார்கள். இது அவர்கள் அறிவீனத்தை தவிர வேறெதையும் காட்டுவதை எனக்கு தெரியவில்லை. இங்கு பெரும்பாலான் சாதாரண் பார்ப்பனர்கள் அடிப்பொடிகளாகவும், தெரியாத குற்றத்தினாலுமேதான் இந்த நிலைக்கு தங்களை ஆளாக்கி கொள்கிறார்கள் என்பதும் யோசிக்கப்படவேன்டியது.
4. தற்சமயம், சங்ராச்சாரியை கெட்டவர் என்று சொல்லிவிட்டு, இவர்கள் மீண்டும் அதே அறீவீனத்தை மேலெடுத்துச் செல்ல ஆசைப்படுகிறார்கள். இவர்களால், தான் நடத்தி வந்தது வெத்து வேட்டு என்று தெரிந்ததும் விட முடியாமல் தவிக்கும் தவிப்பு. என்ன பாரம்பரியம் ! மண்ணாங்கட்டி பாரம்பரியம்! எத்த்னை பேர் இதில் சங்கரரை படித்திருப்பார்கள். (சங்கரர் மேல் அடிக்கப்பட்டுள்ள சாயம் வேறு உள்ளது என்பது வேறு விஷ்யம்)

5. இதில் பெரியார் பெயர் அடிபடுவதைப்போல ஒரு முரண்டாட்டத்தனம் ஏதுமில்லை! இது பெரியாருக்கு அவர்கள் செய்யும் இழுக்கு என்று சொன்னாலாவது சும்மா இருப்பார்களா என்று நினைக்க தோன்றுகிறது.

KARTHIKRAMAS said...

இதை மேலோட்டமாக எழுதிய பதிவு, சங்கராச்சாரியார் கைதின் போது யோசித்து வைத்திருந்த விஷ்யங்களை மேலும் எழுதுவேன், தற்சமயம் ஞாபகத்தில் இல்லை

ROSAVASANTH said...

அ.ஆ, இப்போதுதான் பார்தேன். வழக்கம் போலவே போட்டு தாக்கியிருக்கிறீர்கள். சந்தோஷம்! சிந்திக்கவும் நிறையவே இருக்கிறது. நான் இது குறித்து இன்னும் முழுமையான கருத்திற்கு வரவில்லை. உடனடியாய் சொல்ல அவசிமில்லை என்றே நினைக்கிறேன்.

ஒரே ஒரு விஷயம், இந்த கைது நிகழ்விற்கு ஈ.வே.ராவை(உங்களுக்கும், ஜெயமோகன், மற்றும் சோ நீலகண்டனுக்கெல்லாம் பிடித்தது போல் நானும் இப்போதைக்கு ஈ.வே.ரா என்றே அழைக்கிறேன்) காரணமாய் நான் சொல்லவில்லை. இந்துத்வ பரிவாரங்கள் அழைக்கும் கிளர்சிக்கு எந்த ஆதரவும் இல்லாததற்கு நான் ஈவேராவையை காரணமாய் நினைகிறேன். தங்கமணியின் Bளாகில் அதை சொல்லியிருக்கிறேன். நீங்கள் அது குறித்து எதுவும் பேசவில்லை எனினும் (என்று தோன்றினாலும்) அது குறித்தும் ஏதேனும் சொல்லலாமே! அன்புள்ள வசந்த்.

ROSAVASANTH said...

http://ntmani.blogspot.com/2004/12/blog-post.html#comments

Anathai said...

ஈழவேந்தன் , கார்த்திக் வாங்க வாங்க. பாராட்டுக்கு நன்றி கார்த்திக். இந்த ரோசாவசந்த்துக்கு ஒரு தனி பதிவு போட்டுருக்கேன்.
அதையும் படிச்சு கருத்து சொல்லுங்க,

அன்புடன் அனாதை.