சிலநாட்களாக தலை காட்ட முடியவில்லை. சற்று அதிகப்படியான வேலை / அமெரிக்க கூடைப்பாந்தாட்ட வேடிக்கைகள் என ஓடிவிட்டது. இன்று கிடைத்த இடைவெளியில் சில பதிவுகள்..
ஹிந்துத்துவ வெறியர்களுக்கு வெறியேறாமல் செய்து விட்டார் சோனியா மாதாஜீ . அந்த வகையில் சோகம் தான். மன்மோகன்சிங் பிரதமராக பதிவியேற்பதில் எந்தவித குறையும் இல்லை எனச் சொல்லமுடியாது, இது வரை மக்களால் ஒரு முறைகூட தேர்ந்தெடுக்கப்படாததும், இந்த தேர்தலில் ஹிந்துத்துவ வெறிநாய்கள் மீண்டும் பதவியை பிடிக்காதவாறு தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் எண்ணிக்கை பெருக்க எந்தவகையில் உதவி செய்தார் என்று அளவிடமுடியாத நிலையிலும் அவர் அந்தப் பதவியில் அமர்வது என்னைப் பொறுத்த வரை ஒரு கரும்புள்ளி தான். கூடவே இதையும் சொல்வேன் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ராப்ரிதேவிக்கள், இந்த வகை பின் வாசல் கதவு வழியாக நுழையும் மன்மோகன்களை விட எவ்வளவோ மேலானவர்கள்.
இந்திய அரசுத்துறையில் ரிட்டயர்ட்யாகின்ற வரை குப்பைக் கொட்டிய எவனும்யோக்கியனும்கிடையாது யோக்கியனாக எவனும் இருக்கவும் முடியாது அது எந்த குப்பைத்துறையாக இருந்தாலும். இந்த லட்சனத்தில் இவர் யோக்கியர் / அவர் யோக்கியர் என்ற பஜனையெல்லாம் பம்மாத்து தான். கூடவே இன்று தான் பார்த்தேன் பதிரெண்டு தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமாம் ஒரிசாவைத் சேர்ந்த ஒருவருக்கும் இடமில்லையாம். இதைவிட ஒரு கேவலம் இருக்கமுடியாது. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் அதாவது விபிசிங் அமைச்சரவைக்கு முன் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவைகளில் தமிழருக்கான இடம் ஒன்று அல்லது ஒன்றுமில்லை. அதுகூட குமாரமங்கலம் என்ற வெள்ளாளத் தமிழனையும் சிசுப்பரமனியம் என்ற பாப்பாரத் தமிழனையும் கூடவே வெங்கட்ராமன் என்ற சவண்டிப்பார்ப்பானை தவறாக தமிழன் என்று கணக்கெடுத்தாலும் தான். அந்தக் கேவலமும் வேண்டாம் இந்த வகை ஓரவன்சனை செய்து அடுத்தவன் சோற்றைப் பிடிங்கித் தின்னும்படியானதும் வேண்டாம்.
ஜெயலலிதா திருந்திவிட்டாராம். இங்கே பாப்பாரப்பயலுகள் போடும் பதிவுகளில் ஆகா ஒகோ என பாராட்டுத்தான். கஷ்டப்பட்டு என் குண்டியால் ஒரு சிரி சிரித்து விட்டேன். ஒரு பதிவில் அவர் திருந்த காரணமாயிறுந்த சோவிற்கு நன்றிகூட உண்டாம். சால்ஜாப்பே செய்ய முடியாத அளவுக்கு அட்டூழியம் பன்னுகின்றவரை, இந்த வகை நாடகமாவது ஆட வேண்டும் என தினப்படி காயத்ரிமந்தரத்தோடு, ஒரு வேண்டுதலும் சூரியபகவானுக்கு விட்டுக்கொண்டிருக்கும் ரகசியத்தை இப்படி போட்டுடைத்திருக்க வேண்டாம்.
இந்தத் தேர்தல் கொடுத்த அஜீரனம் வல்லிய ஹிந்துத்துவ கோஷ்டிகளான எலும்பு பொறுக்கி( இதன் பெயர்க்காரணம் - பொறுக்கி எனப் பொருள் படும் வார்த்தையால் மூன்றாவது வெள்ளம் என்னும் இனதுவேச வெறிக்கட்டுரையை அளித்த ஜெமோ, விரும்பி தமிழ் இலக்கிய உலகுக்கு அழைத்து வரப்பட்ட ஆர்யெஸ்யெஸ் என்னும் பாசிச கும்பலின் உறுப்பினரும், இஸ்லாமியரால் *இதுவரை* கொல்லப்பட்ட இந்துக்களின் கணக்கெடுத்து அதை தனிஇணையதளம் அமைத்து உலகில் பரப்பிவரும் புனிதரும் என பொருளடக்கதைக் காட்ட) போன்றோரை போட்டுத் தாக்கியதை விட இந்த மெல்லிய ஹிந்துத்துவ கோஷ்டிகளுக்கு கொடுத்த அதிர்ச்சி தான் இன்னமும் மகிழ்வைத் தருவது. அதில் முதலாவது வெங்கிட்டரமணன் என்ற இன்னுமொரு ஜெமோ சீடர். தஞ்சாவூரைச் சேர்ந்த அதிலும் கும்மோனத்தைச் சேர்ந்த ( கும்பகோனக்கியன்ஸ் என்ற வார்த்தையே இருபது வருடங்களுக்கு முந்திவரை ஆக்ஸ்போர்ட் டிக்சனரியில் இருந்தது ) பார்ப்பன சமுதாயத்தைச் சார்ந்தவர். இவரது கட்டுரைகளில் இருந்து இவரும் மற்றுமொறு சுஜாதாவின் ஏகலைவர் என அறியலாம். ஆனால் இந்த ஏகலைவர் அவர் ஊர் பெயரைக் காப்பாற்றுபவர். சுஜாதாவிடமே கட்டைவிரல் கேட்பவர். அவரின் அஜீரணத்தை இப்படிப் பார்க்கலாம்.
"இந்த நிலையில் சற்றும் ஜனநாயக் முதிர்ச்சியில்லாமல் தமிழர்களும் தெலுகர்களும் ஒவ்வொரு தேர்தலிலும் மரத்திற்கு மரம் தாவுவது மத்தியில் அமையும்
அரசாங்கத்தையும் நிர்ணயிக்கிறது என்பதால் இந்த முதிர்ச்சியின்மையின் விளைவு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது."
இந்தக் கட்டுரையை ஊன்றிப்படித்தால் இதெல்லாம் விளங்கும்.
1. இந்தியா ஒளிர்கின்றது அதுவும் வாஜ்பாயின் புண்ணியத்தால்.
2. வாஜ்பாய் நல்லவர் - முரளி மனோஹர் ஜோஷி அராஜக கும்பல் (இங்கே தான் கும்மோனம் ஒளிந்திருக்கின்றது - அட முரளி மனோஹர் ஜோஷி வாஜ்பாய் சப்போர்ட்டர். ஆனால் முக்கியமான ஒரு அராஜக கும்பல் தலைவனைக் கானோமே எனப் பார்க்காதீர்கள். அவர் வானி எனக் கூப்பிட்டால் கூட வர மாட்டார்) MMஜோஷி பண்ண முக்கிய தப்பு IIM( அடுத்து IISc/IIT) போன்ற பார்பன சுயாதீன கூடாரங்களை அரசு கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப் பார்த்ததால் அராஜகமானர், ஆனால் அவரது ஹிந்த்துத்துவ வெறியால் என்பது போல் தொனிக்கச் செய்வதில் தான் கும்பகோனத்திய வேலையிருக்கின்றது
3.வாஜ்பாய் குபல்களுக்கு ஓட்டுப் போடாவிட்டால் அவர்களுக்கு முதிர்ச்சியின்மை.
4. இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் அதில் முக்கிய முதிர்ச்சியில்லா மாநிலம் தமிழ்நாடு ( தனியா சொன்னா உள்முகம் தெரிந்துவிடும் - போட்டுக்க தெலுங்கனை கூட) அது முதிர்ச்சியிழந்தது 67ல் ஹிஹிஹி..
5.இது தான் முக்கியம் - இந்தியாவை நாடாக கருதக் கூடாது - அதை India - Inc என ஒரு கம்பெனி போலக் கருதவேண்டும். யார் ஸ்டாக் ஓனர்ஸ்/ யார் ஃபோர்ட்ஆஃப் டைரக்டர்ஸ் /கம்பெனி யாரை நோக்கி அதனது தாயாரிப்புகளை வெளிவிடவேண்டும்/கம்பெனி மஞ்சள் கடிதாசி கொடுத்தால் என்ன செய்வது போன்ற விவரமெல்லாமமனேஜ்மெண்ட் மனுவலான அர்த்தசாஸ்திரத்திலும்/ பகவத் கீதையிலும் தான் தேடவேண்டும்.
பொதுவாக இந்த மெல்லிய ஹிந்துத்துவா கும்பல்கள் sophisticated கும்பல்கள் அவ்வளவு சீக்கிரம் உள்முகம் காட்டாது. சோனியாமாதாஜீ அரசை பிடிப்பதாக இருந்த
ஆத்திரத்தில் வெளியான இந்தவகை உள்முகங்கங்களை அப்படியே பார்பதில் உள்ள மகிழ்சியைப் போல வேறு கிடையாது.
ரோசாவசந்த்,
ராஜகௌதமனின் நேர்முகம் படித்தேன்.
திரும்ப நமக்குள் கருத்து வேறுபாடு. நீங்களும் தலித் கிடையாது நானும் தலித் கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் அவர்களை எந்தவித நிபந்தனையின்றி
ஆதரிக்கும் தகுதிமட்டும் தான் உள்ளது அவர்களை விமர்சிக்கும் தகுதி / அவர்களுக்கு கை காட்டும் தகுதி நம்க்கு அல்லது எந்த தலித் அல்லாதவர்களுக்கும் கிடையாது.
திட்டவேண்டுமென்றால் அவர்களை பயன்படுத்தப் பார்க்கும் ஆதிக்க சக்திகளை போட்டுத் தாக்கலாம் இந்த வகையில் கண்ணனை போட்டுத் தாக்கலாம். அந்தப்
பார்ப்பானின் கேள்விக்குள் இருக்கும் பார்ப்பனக் குசும்புகளை போட்டுத்தாக்கலாம். அவ்வளவு தான்.
அனாதை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment