Sunday, May 02, 2004

ஒரு காலத்தில் இணையத்தில் தமிழ் என்பது உண்மையில் காதில் தேன் பாய்ந்த ஒன்றாக இருந்தது. இன்றைக்கு இணைய விவாதக் குழுக்களாகவும், இணைய இதழ்களாகவும், வலைப்பதிவுகளாகவும் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். விவாதங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு , எழுதுவதைக் காட்டிலும் படிப்பதில் இன்னமும் ஆர்வம். அந்த வகையில் ஆங்கில இணைய உலகில் பல்வேறு தொழில்துறை விவாதங்களாக்ட்டும், நீயுயார்க் டைம்ஸ் போன்றவற்றில் நடக்கும் விளையாட்டு சம்பந்தமான ( அரசியல் பகுதியில் சில இடங்களில் உள்ளே நடப்பது ஜீரணிப்பது கஷ்டம் தான்.) இடங்களில் நடக்கும் விவாதங்களாகட்டும் இந்த வலைப்பதிவுகளில் நடக்கும் விவாதங்களாகட்டும் அந்த விவாதங்களில் மக்கள் காட்டும் நேர்மை, கூடவே தன் வன்மையினால் விவாதத் தளத்தை விரிவாக்கி பல்வேறு நபர்களிடம் விவாதத்தை கவணிக்க வைக்க உதவும் நபர்கள் கூட காட்டும் ஒரு சாதாரணத் தன்மை, இது அடக்கம் கிடையாது அடக்கம் தெரிந்து வைத்துக் கொண்டு பெரிய மனது பண்ணி பணிவு காட்டுவது போல் பஜனை செய்வது, அந்தச் சாதாரணத் தன்மை அசரவைக்கும். அதே சமயம் ஒரு மெச்சூருக்கும் ( சாதாரண மக்கள் எனக் குறிக்கலாமோ?) நிபுணருக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் ரிந்திருக்கின்றது.
அந்த நிபுணர் அந்த அமெச்சூரிடத்தில் கலந்து விவாதம் செய்கையில் , எந்தவித கிரீடமும் இல்லாமல், திரும்ப இதை வலியுறுத்தவேண்டும் முன்பே கிரீடம் மாட்டியிறுந்தவர் இதற்காகவே கிரீடத்தை கழட்டிவிட்டு என்றில்லாமல் அவரும் சாதாரணமாகவே உள்ளே பொறுந்துகின்றார், அப்படி கலந்து கொண்டும் விவாதத்தை எந்தவிதத்திலும் கைகொள்ள முயலாமல், அதன் போக்கிலே விடுகின்றார். அது போலவே இந்த சாதாரண நபர்கள் , நிபுணர்கள் கலந்து விவாதம் செய்யும் போது சற்று வெளியவே நிற்பதும் எப்போதாவது கலந்து கொண்டால் கூட ஏதேனும் சந்தேகக் கேள்வியோடு நின்று கொள்வதும் சிலீரென்று இருக்கும். இதற்கு தலைகீழ் நிலை தான் தமிழ் இணைய உலகில். எவர் அமெச்சூர் எவர் நிபுணர் என்றெல்லாம் கிடையாது. ஒரு அமெச்சூர் தன்னுடைய செல்வாக்கினால் நிபுணர் போல வேடம் கட்டி, வேறொரு உண்மையான நிபுணரை, இவனை யெல்லாம் பேசவிடக்கூடாது அல்லது இவன் பேசுவதெல்லாம் வெறும் மண்ணு என்பார். அவன் மண்ணு இவன் மண்ணு என்னுடைய தகுதி என்ன யோக்கியதை என்ன என திருவிளையாடல் பாலையா போல வசனம் பேசாத இணையத்திற்கு வந்த தமிழகத்து நிபுணர்களை இதுவர கண்டதில்லை. தமிழ் இணைய உலகில் 97ல் இருந்து சுத்திக்
கொண்டிருக்கும் அனுபவத்தில் சொல்கின்றேன். சரி விவாதங்களை எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு விவாதமாகட்டும் இரண்டு ரவுண்டு அல்லது மூன்று ரவுண்டு தாக்குபிடிக்குமா எனச் சந்தேகம். இரண்டாவது ரவுண்டிலேயே என் அறிவு சாஸ்தி எனக்கே சொல்லித்தரயா என சம்பந்தம் இல்லாமல் ஒரு பர்சனல் குத்து வரும். குத்து வாங்கிய பெருமானும் இது தான் சமயம் எனக் காத்திருந்தது போல், இது தான் நான் கடைசி தடவையாக சொல்வது எனச்சொல்லி ஒரு ஸ்டேட்மெண்ட் விடுவார். குத்து விட்ட நபரும் சில சமயம் பெருந்தன்மையாக விடுவது போல் கழலுவார் அல்லது வீம்புக்கு எந்த விவாதமோ அதற்கு சம்பந்தம் இல்லாததை தேடி எடுத்து அதுக்கு பதில் சொல்லுவது போல் ஒன்று. அவ்வளவு தான். இந்த நிமிட மனிதர் என ஒரு சொல்லாக்கம் உண்டு அதாவது சீக்கிரமே வெளியாகி விட்டு பேந்த முழிக்கும் நபர்களுக்கு, அது போல இந்த தமிழ் இணைய விவாத நபர்களுக்குள் இந்த வியாதியுடன் தான் இந்த விவாதங்கள் நடக்கின்றது. அது யாருக்கு பயன் என்று தெரியவில்லை. சில சமயம் உண்மையில் விவாத ந்டத்த முன் வரும் நபர்களையும் முகமூடி/முகபேதி எனச் சொல்லி உனக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் அதுவும் இல்லையென்றால் மாடரேற்றர்கள் இருக்கின்றார்கள் அவர்களும் விவாதத்தில் கலந்து கொண்டு இருப்பார்கள் பட்டேன்று தனக்கு மாற்றாக உள்ள ஆட்களின் விவாதத்தை மாடரேட் செய்து விடுவார்கள். அடிப்படை ஜனநாயகம் கூட இல்லாத இந்த வகை நபர்கள் தான் இன்று தமிழ் இணைய உலகில் கோலேச்சிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே ஒரு விடயம் தான் இந்த இணைய உலகில் நம்பிக்கைத் தருவது. அது இந்த இணைய உலகின் அதுவும் முக்கியமாக தமிழ் இணைய உலகின் வியாபாரத்திற்கான ஸ்கோப் குறைவு என்பது தான். இப்பொழுது காசைவிட்டு ஸ்பேஸ் பிடிப்பதாக
கனவில் இருக்கும் இலக்கிய புரவலர் , இலக்கிய கர்த்தாக்கள், இலக்கியத்திற்கு வால்வு கொடுப்பவர்கள் எல்லாம் சில நாட்கள் கழித்து ஓடிவிடும் வாய்ப்பு அதிகம் உண்டு , இந்துத்துவ அமைப்புகளின் ஜெண்டாகவும் இருக்கும் நபர்கள் தவிர. அது வரை இந்தக் கூட்டத்தை பல்லைக் கடித்துக் கொண்டு தான் சகித்துக் கொள்ளவேண்டும்.

No comments: