Sunday, October 30, 2005

பஞ்சதந்திரத்தில் ஐந்து பொம்மனாட்டீகள் ஏதோ சலூன் பார்ட்டியிலோ ஸ்பாபார்டியிலோ உக்காந்துண்டு வம்பு பேசிண்ட்ருப்பா. போன வார சன் டீவி கடங்காரன் போட்டான். அதையே கொஞ்சம் மாத்தி இந்த திண்ணை கோஷ்டிகள் வம்பு பேசிண்ட்ருக்கிறதை இந்த வாரம் போட்டிருக்கா. நேக்கு என்ன பண்றதுன்னு தெரியலே. மூனு மாசமா எழுதலன்னா பல்பு பீஸாயிடும்ன்னு தமிழ்மணக்கறவா கண்டிசன் போட்டுட்டா. சரி ஏதோ அங்கதம் அங்குசம்ன்னு மணக்க வைக்றாள்லோன்னா அதை மாதிரி ஏதோ ஒன்னைப் பண்ணி இங்க போடலான்னு பார்த்தா, செத்தவாளை கிண்டல் பண்றமாதிரி இருக்கேன்னு யாரும் கொடி பிடிச்சு பல்பை பீஸாக்கிட்டா என்ன பண்றதுன்னு தெரியலே. நம்மவாளத்தான் நம்பியிருக்கேன். நம்மளவா தான் கருத்துச் சுதந்திரம்ன்னா எண்ணையா நிற்கறவாளாச்சே என் பிளாக்குக்கும் "முதல்" இணைப்பைக் கொடுத்து "என்னையும்" காப்பாத்திடுவாள்ன்னு ஒரு நம்பிக்கை தான்.

போனவருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஒரு ஸ்பா பார்ட்டி. இந்தியாலேருந்து ஒரு பழம் பெரும் நடிகை வந்திருந்தா. நடிக்கிறதை விட்டுட்டு சமையல் கலையிலே இறங்கிட்டா இப்போ ஏதோ டீவி ப்ரோகிராமுக்கு. இண்டர்னெட்டுல 'தளிகை" ன்னு மேகசீன் போட்டுண்டு இருக்கின்ற கோமளா வரதன் தான் இந்தப் பார்ட்டி கொடுத்தா. பார்ட்டியிலே யார் யாரோட ஓடினாள்னு பேசிண்டது, வயத்தைக் குமட்டற வாயு பிரிந்ததுன்னு சிலதைத் தவிர எல்லாத்தையும் பகிரும் பெரும் மனப்பான்மை எனக்கு இருக்கு. புத்தம் சரணம் கச்சாமி...

இந்த ஸ்பா பார்டியிலே ஹோம் சயிண்ஸ் பேராசிரியை உண்ணாமுலை, மருத்துவ நிபுணி ஷோபனா, துணைக்கு கணவர் ரவி, தளிகை நடத்துனர்கள் கோமளா வரதன், பண்டரி பாய், அப்புறம் வரதன் , பட்டிமன்றம் புகழ் ஆச்சார நங்கை என்னும் வண்ணை வச்சலா, மற்றும் உப்புக்குச் சப்பாணியாக என்னைப் போன்ற பலர் கலந்து கொண்ட இந்த ஸ்பா பார்ட்டி சம்பாஷணையிலிருந்து..

உண்ணாமுலை : அடுத்த ஸ்பா பார்ட்டி எப்ப?

சுந்தரி : கோமளாவைத்தான் கேக்கனும்.

உண்ணாமுலை : அடுத்த ஸ்பா பார்ட்டின்ம் போது யேல் வந்தேள்ன்னா ஒரு சமையல் ஷோ வைச்சுரலாம். என் ஸ்டூடண்ட்ஸ் நல்லா ருசிப்பா.

சுந்தரி : யேல்ல என்ன பண்றேள்.

உண்ணா ; சமையல் தான் ..

பார்வையாளர் பலத்த சிரிப்பு.. ( ஸ்பா பார்டியிலே பார்வையாளரான்னு குறுக்க கேக்கப்படாது கோர்வையா வராது நேக்கு அப்புறம் )

சுந்தரி : பலமுறை உங்களை எங்காத்துக்கு பக்கத்திலே பார்திருக்கேன். என் டீவி ஷோல கூட பேட்டி எடுத்தோமே.

உண்னா : இப்போத்தான் இங்கே வந்தேன். உங்க மருமக ராதாக்குத் தெரியுமே

பொறுமையிழந்த வண்ணை வச்சலா : ஹோம்சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ் டிபன்ல்லாம் ருசிப்பாளா இல்லை ஃபுள் மீல்ஸ் தானா?

உண்ணா: ம்ம்ம் சில பேருக்கு டிபன் பிடிக்கும். இப்பத்தான் சமைக்க ஆரம்பிக்கிறா இங்கே

சுந்தரி : கலிபோர்னியா பேராசிரியை லிவர் ஃபுள் மீல்ஸ் வத்தக் குழம்பை விட்டு வரமாட்டேன்றாளே

உண்ணா: அவா நாக்கு அப்படி

சுந்தரி : அதுக்காக பிஸ்ஸா தெரியாம இருக்காளே, அவா அவா டேஸ்ட் அப்படியோ..

வண்ணை வச்சலா : சில பேர் தான் இன்னும் வத்தக் குழம்பு சாப்டுண்டு இருக்கா. அதைத் தப்புன்னு எப்படி சொல்லலாம்?

சுந்தரி : அதைத் தப்புன்னு தான் சொல்லனும். ஹோம் சயிண்ஸ் ப்ரொபசரா இருந்துண்டு வத்தக் குழம்போட இருந்தா எப்படி? நூடுள்ஸ், பிஸ்சா ன்னு உட்டு விளாச வேணாமா?

வண்ணை : நான் என்ன நினைக்கிறேன்னா, புல் மீல்ஸ் foodன்னா என்ன சாதரண டிபன்னா என்னன்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியனும். லிவர் எல்லாம் புல் மீல்ஸ் peopleன்னு சொல்லலாம்.

(இதெல்லாம் என் தலைவிதி ன்னு நினைத்துக் கொண்டே)உண்ணா :

யுனிவர்சிட்டிலேல்லாம் Specialize பண்ணாத்தான் பொழப்பு ஓடும். சிலருக்கு full meals specilizatioன்னா சிலருக்கு டிபன்.

யேல் டோரா: To promote indian food, importance of full meals is subordianate to
issues around whole indian food. When your kid chooses Yale, they can think like "
If I go to Yale, I can cook Indian food also". Our aim is to make the students
identify all indian spices in four years time.

வண்ணை வச்சலா : நான் என்ன நினைக்கிறேன்னா, யேல் ஸ்டூடண்ஸ்க்கு இட்லி
வடை தெரிஞ்சா போறும். I am not interested in full meals.

டோரா : Sure, our students can pick up Dosa and eat without fork and knife.
They can use their hand you know

சுந்தரி (உண்ணாமுலையைப் பார்த்து0 Sorry, நான் உங்களை கண்டுக்கவே இல்லை முதல்ல

உண்ணா : அதனாலென்ன , எல்லாரும் தான் முகத்துல இந்த வெள்ளைய பூசிண்டு கண்ணுல வெள்ளிரிக்காவை வைச்சுண்டுருக்கோம்,. யாரை யாருக்கு தெரியறது.


வண்ணை வச்சலா: அடுத்த சமையல் ஷோ எப்ப?

சுந்தரி : இப்பல்லாம் வெறும் வீட்டு டிப்ஸ் மாத்திரம் தான் கொடுக்கிறேன். சமையல் ஷோக்கு நிறைய உழைக்கணும். டிப்ஸ்க்கு கூடத்தான். அமெரிக்காவிலல்லாம் எவ்வளோ ரெசபி வச்சுண்டுருக்கா. பெரிய பெரிய டிஷ்ஷஸ்ல்லாம் ரொம்ப சாதாரணமா எழுதிருக்கா

பண்டரி பாய் : நடிகை லக்சுமியோட அம்மா ருக்குமனி ஒரு சமையல் புத்தகம் எழுதிருக்கா

சுந்தரி : புத்தகம் தலைப்பு என்ன?

பண்டரி பாய் : ரசம் தாளிப்பது எப்படி?

சுந்தரி : நம்மவாள்ளாம் இப்படி தான் ரொம்ப சிம்பிளான ரெசபியை சிம்பிளா தந்திடுவா. ரெசபியோட complexity ஒன்னும் இருக்காது. இங்கே (அமெரிக்காவுல) உள்ளவா எல்லாம் அப்படி இல்லை. "அடுப்பை நெருப்புக் குச்சி கொண்டு பத்த வைக்கவும்" ன்னு இங்குள்ளவா எழுதவே மாட்டா. ( பார்வையாளர்கள் சிரிப்பு). நம்மவா அப்படித்தான் ஆரம்பிப்பா. (மீண்டும் சிரிப்பு). அதுக்குள்ள போய் அந்த complexityயோட எழுதுறதெல்லாம் ஒரு Art. In this country they are doing it casualy.

ரவி : சில பேரு வாய்ல வைக்கமுடியாம சமைச்சுட்டு அதையே மருந்துண்னு நினைச்சுட்டு -damn fools they are..

சுந்தரி : but, இங்குள்ளவா மாறி அங்கேயெல்லாம் வெளியே வந்து சாப்பிட்டாள்ன்னா, அவன் foolன்னு வெளியே தெரிஞ்சுடும். யாரும் வெளியே வந்து சாப்பிறது இல்லை. அவனுக்கும் வேற வழியில்லை வாயில வைக்க முடியாம சமைக்கிறான்,

உண்ணாமுலை : இந்த நாட்டுலே சமையல் ஒரு கலையா வளர்ந்திருக்கு. நம்ம நாட்டுல வெளிக்கி போறது ஒரு கலையா வளந்திருக்கு. பாமரர்கள் திங்கிற மாதிரி ஒன்னுமே இல்லை. எளிமையா சமைக்கிறதுன்னுட்டு சாம்பார்ல தண்ணியை ஊத்தி ரசம் அப்படீன்ணுறான். நான் ஒரு பட்லர். நான் சமைச்சா non-butlers திங்கனும். MITலெ ஒரு ஹோம் சயின்ஸ் ப்ரொபசர் இருக்கார். அவர் சமைச்சா எல்லோரும் திம்பா. நம்ப நாட்ல பாஞ்சாபிஸ் தேவலாம்.

சுந்தரி : வெளிக்கி போறது ஒரு கலையா இருக்குன்னு சொல்றேள். என்னால ஒத்துக்க முடியாது. ஒரு புக் இருக்கு. வெவ்வேறு கால கட்டத்துல வெளிக்கி போறதைப் பற்றி ஒரு புக் இருக்குன்னு வைச்சுக்குங்கோ. திறந்த வெளி புல்வெளி கழகத்திலே வெளிக்கி போனவா, ஆத்தங்கரைப் பக்கமா சொம்போடோ வெளிக்கி போனவா, வரிசையா மேடை மாதிரி கட்டி அது மேல பாகம் ப்ரிச்சுண்டு வெளிக்கி போனவா, flush டாய்லெட்டுல அதான் பாம்பே கக்கூஸ்ல வெளிக்கி போனவா, இப்ப உக்காந்துண்டு வெளிக்கி போறாளே அது மாரி போனவான்னு ஆராய்ச்சி பண்ணி இருக்காது. அதுக்கும் இங்கே வந்து national geographyல ஏதேனும் படம் எடுத்துருக்கானான்னு தான் பாக்கனும்.

உண்ணாமுலை (குமட்டலுடன்); நீங்க சொல்றது சரி தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் எழுதறா. அவாளும் இந்த பீயைப் பத்தி எழுதாம பீயள்றவாளப் பத்தி எழுதிண்டு போயிறா.

சுந்தரி (புல் ஃபார்மல) : யாருமே இல்லை. அப்கோர்ஸ். ஒரு பில்லியன் இந்தியர்கள் இருக்காங்க; 2000 வருட பாரம்பரியம் இருக்கு. சிந்து சமவெளியிலேயே கக்கூஸ் இருந்திருக்கு. வேர்ல்ட நாறடிச்சு முழுகடிக்கிற வெளிக்கி போர்ஸ் நம்ம கிட்ட இருக்கு. ஏன்ணா அந்தளவுக்கு back-ground இருக்கு. ஆனா நம்மோட smellல கான்பிச்சா ஒருத்தருக்கும் கண்டுபிடிக்க முடியலை. நம்ப கண்டிசன் அப்படி. அண்டார்டிகாவுல ஒருத்தர் கண்டுபிடிச்சார் அப்படிம்பாங்க. என்னன்னு பார்த்த நம்ம சயண்டிஸ்ட் அங்க குடிசை போட்டுருப்பார். அவ்வளவு தான். பரவலா, நம்மளோட கண்ரிபூசன், நம்ம ஸ்டைல் யாருக்கும் தெரியாது.

ஜியார்ஜியன்: you got a point. இன்னி தேதிக்கு சைனீஸ் , இட்டாலியனை விட டேஸ்டானது இந்தியன் foodன்னு எந்த சுலினரி ஸ்கூல்லயாவது சொல்றாளா? one of the three best full meal or full course foodன்னு சொல்றாளா?

சுந்தரி: அதுல பெருமையில்லை மேடம். பிரேக் பாஸ்டுக்கு , லஞ்சுக்கு, டின்னருக்குன்னு continuous food இருக்கே!!! வேறேங்காவது இருக்கா? யாரவது சைனீஸ் பிரெக் பாஸ்ட் சாப்டு இருக்கேளே?

டோரா : We have to explain this to food connoisseur community in Yale. they dont know it. We have to feed them, Indian food is a world food.

ரவி : What is the meaning of world food?

டோரா : The smell should go beyond the kitchen. The aroma should float in air without the time consciousness. I am cooking up this. Trying to fry something. If you take the pakistan food menu, it is very shallow. Not more than two pages. Indian food menu is bigger than that.

ரவி : Do you think in Asia everybody knows about Indian food? Then you have not done it in your own continent.

டோரா : Instead of cooking Indian food, the rich inidan dishes should be cooked like Chinese or thai or italian. Then others will know about it.

சுந்தரி : இல்லங்க, இது இன்னமும் complex. நீங்க இட்டலியை பிஸ்ஸா மாதிரி ஓவன்ன பேக் பண்றீங்க. அவங்க பிஸ்ஸாவை இட்டலி மாதிரி வேகவைக்கிறாங்க. எது வேர்ட்ல ரீச் ஆகும். உங்க இட்லி வேகுமா? இல்லை அந்த பிஸ்ஸா வேகுமா? அந்த பாயிண்டை யோசிச்சு பாருங்க.

ரவி : It will not boil for sometime , but if we ...


சுந்தரி : சாத்தமுதுவோட ரெசபியை பார்த்தசாரதின்னு ஒருத்தர் pie மாதிரி மாத்தி செஞ்சுருக்கார். ஒருத்தர் சீண்டலையே. seven to eight years கஷ்டப்பட்ருக்கார். ஏன் சீண்டலை?

டோரா : exactly this point. there are butlers here. They some time look at chappathi or Naan but not idli or dosa

ரவி : Idly or dhosa is next only to Chappathi or Naan

சுந்தரி : வேர்ல்ட இருக்குற பெஸ்ட் ரெசபியில சப்பாத்திக்கி இடம் கிடையாது. உங்க கண்ரியிலே http://www.epicurious.com/ அப்படின்னு ஒரு சைட் இருக்கு சப்பாத்திக்கு இடம் கிடையாது. பல்லுல மேல் அன்னத்தில ஒட்டுதுன்னு பளிச்சுன்னு சொல்றான்.

டோரா : சப்பாத்தி ஒரு உலக மாக கோந்து தான்.

சுந்தரி : நேக்கு ரொம்ப சந்தோசம் சப்பாத்தி இப்படி அதானல இடம் கொடுக்கலன்னு ஒரு ரீசன் கொடுக்கிரான் பாருங்க. இப்பத்தான் ஒரு ரெசபி புக் வாங்கினேன். பல பேர் ரெசபி இருக்கு. மெக்ஸிகன் tortilla ரெபர் பண்றான். கிரீக் பிட்டா பிரெட்டை ரெபர் பன்றான். நம்ப naan கிடையது சப்பாத்தி கிடையாது.

பண்டரி பாய் : அது வந்து தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்ப இந்தியாவை எடுத்துண்டேள்ன்னா, சப்பாத்தி / naan இல்லாம ஏதாவது food irukkaa?

சுந்தரி : அது பத்தி சொல்லல. இப்ப இட்டலி தோசை யோட நிலமை எப்படி இருக்கு?

பண்டரி பாய் : அது கரெக்ட்; அதுக்கு நம்ப நாடு ஒரு தீணிப் பண்டார நாடாகனும்.

ஷோபனா : Digestion Power.

சுந்தரி : கரெக்ட்.

ரவி : ஏசியாவில இருக்குற எல்லா சாப்பாட்டு கல்ச்சருக்கும் இந்தப் பிரச்சனையா?

சுந்தரி : மிச்ச எல்லோரும் சாப்பாட்டு ரசனையில மட்டம் தான். நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம். உலகத்துலேயே எளிமையா ஜீரணம் ஆகிற உணவு இட்லி. எல்லோருக்கும் ஆகும் குழந்தையிலிருந்து கிழவன் வரை. நாம என்ன பண்ணிண்டு இருக்கோம். இட்டலி சில சமயம் சரியா ஊறலைன்னா கல்லாயிடும் மத்தபடி எல்லோரும் செரிக்கிற மாதிரி தானே இருக்கு?

கோமளா : அதை நல்லா விக்கனும். நம்மகிட்ட விக்க ஆளில்ல்லை. நான் கூட இந்தியர்களுக்குமட்டும்.comன்னு ஒரு கடையை internetல போட்டு விக்கப் பாக்கிறேன். ஒருத்தனும் மோந்து கூட பார்க்க மாட்டேன்கிறான்.

சுந்தரி : ரவி அய்யா சொண்ணாங்க. மாத்திப் போட்டு செய்யனும். இட்டலிய பிஸ்ஸா மாதிரி bake பண்ணனும்னு. இன்னி தேதிக்கு பெஸ்ட் ஓவன்ல வைச்சி இட்டலிய bake பண்ணாலும், அதை விக்க முடியாது

ஷோபனா : பெஸ்ட் food mart போனா ஆயிரம் மெனு இருக்கு ஆனா இட்டலி கிடையாது.

சுந்தரி : அந்த food எல்லாம் சாப்பிட்டு பார்த்தேள்ன்னா ஒன்னு கூட செரிக்காது, நம்ப இட்லி மாதிரி இல்லாம

ஷோபனா : ஆமா ஆமா.

சுந்தரி : இந்த பிட்டா பிரெட் இருக்கு இல்ல அதை வைச்சி நாலு dishhes இருக்கு. ஏன் சப்பாத்தியை வைச்சு இல்ல

பண்டரிபாய் : இங்கே ஹரே ராமா ஹரே கிருஷ்னா இரண்டு கெட்டான் ஒருத்தர் சப்பாத்தியையும் , பாஜியையும் வைச்சி சைனீஸ் நூடுள்ஸ் பண்ணியிருக்கார்.

உண்ணாமுலை : டேஸ்டி foodன்குறது ஒன்னு, packaging the foodன்கிறது ஒன்னு. இரண்டும் வேற வேற

பண்டரி பாய் : packaging சரியா இருந்தா திண்ணையை கூட Googleஸ்கிட்ட வித்திரலாம் இல்லிங்களா?

உண்ணாமுலை : அது ஒரு வகையான packaging. நான் சொல்றது கிட்ட connoisseur அப்பீல் பண்ற மாதிரி packaging. இப்ப நல்ல ஜப்பனீஸ் ஹோட்டல்ல சூசி பாத்தீங்கன்னா அதை தட்டுல தர்ரதிலேயே ஒரு அழகு இருக்கும் இல்லீங்களா.

ரவி : சப்பாத்தியை முழுசா கொடுக்காமல் பிச்சி பிச்சி கொடுக்கலாம் பல்லுல ஒட்டாது. Nobel Prize winner Chandrasekar uses to cut pieces of chappathi for distributing in his classes. Two of other Nobel Prize winners also started grabing it from him to distribute in their class room.

சுந்தரி : connoisseur இருக்காங்களே, நான் தமிழ்ல சாப்பாட்டு ராமன்கள்ன்னு சொல்றது. தமிழ்நாட்டு சாப்பாட்டு ராமன்கள உலகத்து சாப்பாட்டு ராமன்களோட ஒப்பிடவே முடியாது.(பார்வையாளர்கள் ஒரே சிரிப்பு) பர்ஸ்ட் ஆப் ஆல், ஒரு சின்ன விஷயம் சொல்றேன், நான் தமிழ்நாட்ல சுற்றி இருக்கும் போது டாக்டர்ஸ், பொலிடிசியன்ஸ், ரிலிஜியஸ் பீபள்எல்லோரையும் பாக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் என மனசுல பட்டிருக்கு. நாம் எந்த சாப்பாட்டை சாப்பிடறோம்ன்னு ஒரு உணர்வே கிடையாது. சாப்பாட்டை எவன் மோந்துண்டு ரசிச்சுண்டு சாப்புடறான். உருண்டு கட்டி அள்ளி அப்புறதோட சரி. நான் connoisseurன்னு அதைத்தான் சொல்றேன். அந்தாளு ஒரு aristocrate மாதிரி இருக்கனும்னு நான் நினைக்கல. நீங்க செஞ்சுண்டு இருக்கிறது சாப்பிடறதுன்னு கூட ஒரு உணர்வு கிடையாது. தமிழ்நாட்ல அவ்வளவு பேரும் வெளிக்கி போறவன் மாதிரி தான் இருக்கான். வெளக்கெண்ணையை குடிச்சுண்டு ஓவரா வெளிக்கி போயிண்டே இருகிறவன் எப்படி இருப்பான்? சாப்பாட்டுக்கும் அவனுக்கும் contact போயிறதோல்லியோ? அதே மாதிரி தான் தமிழ் நாட்ல இருக்காங்க. நான் கொஞ்சம் exaggerate பண்ணி சொல்றேன்,

பண்டரி பாய் : இன்னும் கொஞ்சம் specific exampleஓட சொல்லுங்களேன்.

(தொடரனுமா ?)


மேலும் படிக்க