Friday, December 24, 2004

ரோசாவசந்த்,
ரொம்ப ஆறப்போட்ட பண்டம் சகிக்காது தான். என்ன பன்றது? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டச்சொன்னவர் பிறந்த நாளுக்கு முத நாள் இதைச் செய்ய வேண்டியிருக்கு. இந்த பதில் என்னைத் தனிப்பட்ட வகைகளில் தாக்கிய விடயங்களுக்கு மட்டும் முடிந்தவரையில். எனக்கு கிடைக்கும் குறைந்த விடுப்பு நேரங்களையும் இந்த வகை வெட்டி மயிறு பிடுங்களுக்கு செலவிடுவது ஜெயேந்தரர் வேஸ்ட்டாகிற வருத்தமிருந்தாலும் நாயைச் சுமந்தால் பீயை அள்ளித்தானே ஆகனும். வெறும் வெங்காயத்தை அதுவும் கஷ்டப்பட்டு கன்னெரிச்சலுடன் உரித்துப் பார்க்க இருபது பத்தி உங்களுக்கு தேவைப்பட்டிருக்கு. பரவாயில்லை சந்தோசம் தான் ஒருகாலத்தில் என் தோளில் கைவைத்து தடவித் தேடின ஆசிரியப் பெருந்தகைகளின் உளவியல் புரியாத நிலை. இப்பொழுது என்னிடம் பீஃ கறி தின்னத் தெரியுமா எனக் கேட்கும் உங்களுடைய உளவியல் புரிந்து கொள்ள தேவையில்லாத நிலை. மரியாதைக்கு இதைச் சொல்லிதான் ஆகவேண்டும் பீஃப் கறி சாப்பிடக்கூடாது ஆனால் ரெட்வைன் சாப்பிடலாம் என என் வைத்தியர் சொல்லியிருக்கார்.


1. முதலில் என் அயோக்கியத்தனத்தைப் பற்றி...
இதோ நீங்கள் கேட்ட உங்க்ளை பாசிசத்தின் லிட்மஸ் டெஸ்ட் என அறிமுகப்படுத்திய இழை இந்த தேதியில் Wednesday, April 28, 2004 அந்தப் பொன் வாசகம் இருக்கின்றது. இந்த இழையிலும் இந்தற்கு சற்று பின்னாலும் நடந்த பதிவுகளையும் படித்து விட்டு, இப்பொழுது இங்கே திருகிப் போன உலகம் என்ற தலைப்பிலும் அதற்கு பிந்தய எனது பதிவுகளையும் படிப்போர் என்னிடம் *எந்தவித மாற்றத்தையும் உணரமுடியாது*. நடந்த விவாதங்களும் ஏறக்குறைய ஒரே விசயம் தான். என்னைப் பொறுத்த வரை அப்பொழுது எழுதிய கள் தான் திரும்ப இந்த மொந்தையில் வந்தது.ஸ்டாடிஸ்டிக்ஸ் கள் கூட. ஆனால் அந்தப் பதிவுகளுக்கான உங்களது "பின்பாட்டு"க்களும் , இப்பொழுதைய பதிவுகளுக்கான உங்களின் "எதிர்பாட்டு"களையும் நீங்களே படிக்கலாம். "அனாதை" என்ற உருவத்தின் மீதான பார்வை எவ்வளவு தூரம் திரிந்து , "தேவைக்கேற்ற" வகைகளில் உளறலாகவும், மொட்டையாகவும், தட்டையாகவும் உருமாறியிருக்கின்றது என நினைக்கும் பொழுது சிரிப்பாகத்தான் இருக்கின்றது. இந்த வகை உருமாற்றங்களை கணக்கில் கூசாமல் கொள்ளாமல் மறைத்து பாசிசத்தின் லிட்மஸ் டெஸ்ட்டையும் "பஸ் மண்டை விவகார்மெல்லாம் நமக்கு தேவையா" என்பதையும் எந்த வித லாஜிக்கும் இல்லாமல் அல்லது பாப்பார லாஜிக் ஒன்றைமட்டும் துணைக் கொண்டு இணைத்துத் தானே நான் அயோக்கியனாக ஆக முடிகிறது? அதீத உளப்பூர்வமற்ற தன்னிறக்கங்கள் இந்த வகை வெற்று சொல்லாடல்களில் அடங்கமாட்டாமல் படக்கென்று வெளி வரத்தான் செய்யும். அதற்கான உளவியல் நோக்கங்கள் எனக்கு தேவையில்லை. என்னைப் பொறுத்தவரையில் "எவனும்" எனக்கு ஒரு பொருட்டல்லா நானும் எவனுக்கும் ஒரு பொருட்டாக இருக்க நினத்ததுமில்லை, நினைக்கப்போவதுமில்லை. அனாதை என்ற முகத்துடன் உலா வந்ததும் அதை உரத்திச் சொல்லவே.நீங்களாக என்னிடம் விசாரிப்புவகையில் வந்தீர்கள் , பதில் போட்டேன். பின் திண்ணைக்காக உழைத்து நேரம் செலவழித்து எழுதிய கட்டுரையை அவர்கள் பீச்சாங்கையில் விலக்குவது போல விலக்கித் தள்ள , அதனால் ஏற்ப்பட்ட காயத்துடன் என்னை ஏதோ ஒரு ஆள் என பொருட்படுத்து கடிதம் எழுதி அதன் காப்பிகளை எகப்பட்ட தலைகளுக்கும் அனுப்பிய நிலையில் உங்கள் மீது எனக்கு கரிசனம் வந்தது ஒரு உண்மை. அதன் பொருட்டே உங்களிடம் தனியாக ஒரு பதிவு ஆரம்பித்து எழுதச் சொல்லி கட்டாயப்படுத்தி அது நடக்காத நிலையில் பின் இதில் எழுத அழைத்திருந்தேன். அப்படிப்பட்ட அழைப்பும் உங்களுக்கு உங்கள் பொருட்டான நிலையை அதாவது உங்களது "சாரு நிவேதித்தனத்தைக்" காட்ட உதவியாக இருக்கின்றது இப்பொழுது. ஏதோ உங்களது அறிவுஜீவித்தனத்தில் குளிர்காய்ந்து எங்களது அறிவிலித்தன்மையை மேம்படுத்திக்கொள்ள போட்ட திட்டம் போல் உங்களுக்குப் பட்டது என் நேரம் தான் சார்.


2. போல்போட் மற்றும் ஸ்டாலினிஸ்டான நான் ..
அய்யா வணக்கம். ஆதிக்க வகையினரை முற்றாக அறிவியல்/இசை/இலக்கிய ஆற்றல்/கணித மேதைத்தனம் போன்ற எந்த வித விடயங்களுக்கும் சமரசமில்லாமல் துறக்க முடிந்தாலே ஒழிய கரையேற முடியாது அதுவும் ஆதிக்கப்படுத்தப்போட்டோர் சிறுபான்மையினராக இருக்கையிலே என்பது என் புரிதல். அதுவும் இந்த இந்திய திருநாட்டு ஆதிக்கச்சக்திகளை, அவர்களின் தொடர்பை, அவர்களது திந்தனைச் செல்வங்களைஅவர்களது அறிவியல் பங்களிப்பை அவர்களது அறவியல் பங்களிப்பை அவர்களின் மரபை தேவையென்றால் அவர்களின் மொழியைக் கூட இலகுவாக தூக்கியெறியலாம் . நன்றாகப் பார்த்தால் "ஒரு நாள் வாழ்க்கையில்" இந்தியத் திருநாட்டு செல்வங்கள் ஒரு மயிருக்கும் உதவுவதில்லை திங்கற உணவிலிருந்து உடுத்துகிற உடையிலிருந்து இருக்கின்ற இடம் வரை. "முன்னேறிய கோஷ்டிகள்" எல்லாம் இதை வேறு வழியில்லாமல் குற்ற உணர்ச்சியுடன் செய்வதையே ஆதிக்கப்படுத்தப்பட்டோர் இன்னமும் முனைப்பாக, மகிழ்சியாக, விடுதலையாக செய்யலாம். அதுவும் என் கருத்தாகத்தான் சொல்லியிருந்தேனே ஒழியே , இப்படி செய்யுங்கள் என யாருக்கும் "கை" காட்டும் விதமாகவோ "மேலெழுப்பி"விடுதலை "வாங்கிக்" கொடுக்கும் விதமாகவோ பிரசிங்கிக்க வில்லை. இப்படிச் சொன்னதை ஏதோ பிரசங்கம் நடத்தியது போல போல்போட் போல ஆட்களைக் "கொல்லுவதால்" அல்லது "அகற்றுவதால்" என்று நான் சொன்னதாகத் திரிப்பது கேலிக் கூத்து. வெளிப்படையாக இல்லாவிட்டாலும்"அதிகாரம் கிடைத்தால்" என்று இக்கு வைத்து சொன்னால் கூட. மோகந்தாஸ் காந்தி அன்னியப் பொருட்ட்களை பகிஷ்கரியுங்கள் கொண்டுவாருங்கள் எரிப்போம் எனச் சொன்னது கூட போல்போட்டில் தானே கொண்டு விட்டது இங்கு.


3 பெரியாரை ஏன் ஈவெரா எனும் விடயத்தில் ....
நான் சொன்னது "ஈவெராவை, ஈவெரான்ன ஈவெராக்கு உறைக்குமா." என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பட்டப் பெயரில் என்ன எழவு இருக்கின்றது என்பது தான்அது பெரியாரா இருந்தாலென்ன வேற்ந்த மயிரானக இருந்தாலென்ன? ஊருக்கெல்லாம் வெள்ளைக்கடிதம் என்றால் என்ன எனச் சொல்லிக்கொடுத்த நபருக்கு என்னைப் பெரியாரை ஈவெரா என்று சொல்லக் காரணம் என்ன எனக் கேட்கும் கேள்வியில் உள்ள வெள்ளைக்கடிதம் உறைக்காதது ஆச்சர்யம் தான்.நான் எவனையும் எப்படி வேண்டுமென்றாலும் கூப்பிடுவேன் எவன் அனுமதிக்கு காத்திருக்கவேண்டும்? 00களில் இருந்து 80களில் வரை உள்ள அத்துனை உரைநடைகர்த்தாக்கள் அது பாரதியாக இருக்கட்டும் இல்லை புதுமைப்பித்தனாக இருக்கட்டும் இப்பொழுது உள்ள சுரா வரையிருக்கட்டும், இந்த "அவன்" என்ற பதத்தையும் "அவர்" என்ற பதத்தையும் அலட்சியமாக சாதிகாட்டுவதாக உள்ள அறுவறுப்பான நிலையில் அதன் நீட்டிப்பாக பொதுவாகவே இந்தப்பட்டங்கள் மயிறு பிடிங்கித்தனங்களின் மீதான கடுப்பு. அதனால் எனக்கு பெரியாரை ஈவெரா என்பது சங்கராச்சாரியை சுவாமிநாதன் என்பதை விடமுக்கியமாகத் தான் படுகின்றது. இதை எந்த மயிறுக்கு உங்களுக்கு விளக்கவேண்டும். வெட்டித்தனமாக சினிமாவசனத்தை திரித்து "வொயிட் மெயில் விட்டா வசந்துக்கு பிடிக்காது" என பில்டப் போடும் அதே பில்டப் அனாதைக்கும் கொடுக்க வேண்டும் தானே. ஓ நீங்கள் ஸ்பெசல் கேட்டகிரியோ உங்களுக்கு மட்டும் தான் இந்த வெயிட் மெயில் எதிர்ப்பு ஏகபோக உரிமையோ?


2. இசை இலக்கியம் ன்னு ஏதோ ஒரு புள்ளியிலே இணையற போதுள்ள புளுக்க சுகத்துக்கு ....
இந்த வசனத்தை நான் சொல்ல முக்கிய காரணம், நான் பெரியாரை ஈவெரா என்று சொல்லுவதற்கான காரணம் - "இப்ப புது ஃபேஷன் ரவிகுமார் மாறி, பாப்பானுக்கு மஸாஜ் பண்ணிண்டு ஜெயமோகன் சொன்னதையே மாத்தி போட்டு இன்டெலெக்சுவல் பஜனை பண்ணவும் தேவை இருக்கும்." ன்னு நீங்கள் ஊகித்து குற்றம் சாட்டியதால். வெறும் ஊகத்தைவைத்து என்னை பாப்பனுக்கு மசாஜ் பன்றேல்னு குற்றம் சாற்றலாம் ஆனால் அத்ற்காக வேறெங்கேயும் சுற்றாமல்(உங்களைப் போல சுற்றுவது தற்போது என்னால் முடியாத காரியம்) உங்களோட இந்த வாக்கியத்திலிருந்தே "உதாரணமாய் வெங்கட் இந்த `நல்லத்தொர் வீணை செய்து..' பாட்டு பற்றி எழுதியிருக்கிறார். எல்லோரும் ரொம்ப ரசித்து கூட்டமாய் சந்தோஷமாய் இருக்கிறார்கள். நடுவில் போய் அபசகுனமாய் எழுத கொஞ்சம் கூச்சமாய் இருக்கிறது" என்று பாப்பானுக்கு மசாஜ் போட்டதை எடுத்தது அதுவும் ஒரு எதிர் வினையாக எழுதியது நேர்மையில்லாத ஒன்றா? நீங்கள் என்னை ஒரு ஊகம் போட்டு சாடலாம் அது நியாயம் , ஆனால் உங்க வாயிலேருந்தே விசயத்தை உறுவினது உங்களுக்கு வொயிட் மெயில் போடறதாயுடுமா? எந்த ஊர் நியாயம்? கூடவே இந்த வசனம் வேறே "மற்றபடி அநாதை விரும்பும் வகையில்/டிக்டேட் செய்யும்படி நான் சோலி பாக்கமுடியாது." உம்ம எவன்யா எந்த ஜோலி பாக்கச் சொன்னான்? உம்மகிட்ட இதை எழுது இதை எழுதாதன்னு எப்போ சொல்லியிருக்கேன்? கொஞசமாவது அடிப்படை நேர்மை இருக்கா என்னதான் ஆத்திரம் இருந்தாலும்?


3. இருந்தகாந்தியை போய், அம்பேத்கார் உயிர்பித்திருந்ததற்கு காரணமாய் கூறியதைதான் (அதற்கான தர்கத்தைத்தான்) நக்கல் பண்ணியிருந்தேன்.... அபத்தமாய் ஒளரலாய் மட்டும் குறிப்பிட்டேன்
அய்யா இதே வாதத்தை உங்களை இங்கே கூப்பிட்ட முன்பும் சொல்லியிருந்தேன். "கடுப்புக்கு முன்" பதிவுகளில் இருக்கு. இப்போவும் சொல்றேன். இதற்கு முன் "அபத்தமாய்" "ஓளரலய்" படாத வாதம் இப்போ படறதேன்? அப்பவே பட்டாலும் அப்பவே சொல்லாததேன்? சாருநிவாதித சமரசமின்மை அப்போ இல்லையா இல்லை அது சௌகரியத்துக்குத் தான் யூஸ் ஆகுமா? கூடவே ஒன்று மட்டும் சொல்கின்றேன் அம்பேத்கார் மட்டும் ஒரே தலித் தலைவர் அல்ல 1850 - 1960 வரையிலான காலகட்டத்தில். இங்கே தமிழ்நாட்ல கூட அதிதீவிரமான முக்கியமா வெள்ளைக்காரன் சப்போர்ட்ன்னு சொல்ற வாதத்தை வைச்சி பார்த்தாக்கூட தலித் தலைவர்கள் இருந்தாங்க. சர் பட்டமெல்லாம் கூட வாங்கியிருக்காங்க. பாரதி கூட பட்லர்ன்னு எல்லாம் அந்த வகைத் தலைவர்களை கிண்டல் அடிச்சிருக்கார். ஆனா அம்பேத்கார் மட்டும் தனித்து தெரிவதற்கு காந்தி தான்கிற என்னோட புரிதல் உங்களுக்கு அந்தளவுக்கு எரிசலை ஏற்படுத்த என்ன காரணம்? விளக்கி சொல்றதா இருந்தா நீங்க என்னட்ட எதிர்பார்க்கின்ற அதே அளவு "அறிவுஜீவிதத்"துடன் விளக்கி சொல்ல வேண்டியது தானே? இது என்ன "மொட்டை"யான "தட்டை"யான காரணம்? ஓ நாங்க மட்டும் தான் உழைத்து புழைத்து காட்டணும் உங்க மூடு சரியில்லன்னா நீங்கள் பீச்சங்கையில் தள்ளிவிட்டு போயிண்டே இருப்பேள் என்ன நியாயம்டா இது?


4. அநாதை வேண்டுமென்றே நான் சொன்னதை திரிப்பதாகவே படுகிறது .....
முதலில் "திருகிப் போன உலகம்" எழுதியது உங்கள் எழுத்தையோ உங்கள் கமெண்ட்டையோ எங்கும் பார்த்து அல்ல. திண்ணையிலோ அல்லது யாகு குழுமம் ஒன்றிலோ அல்லது தினகரனில் யாருடைய பேட்டியோ இவையாவற்றின் மீதான எனது பார்வையாகத் தான் எழுதியிருந்தேன் ஆனால் அதற்கான கமெண்டில் உங்களுடைய ஏதோ கமெண்டைவைத்து எழுதியதாக நினைத்துக் கொண்டு என்னுடன் நிழலுத்தம் ஆரம்பித்தீர்கள். அதன்பொருட்டே என்னை சீண்டும் விதமாக ஈவேரா - பெரியார் விடயத்தை வைத்து வெற்று ஈகோ யுத்தம் போட்டுவிட்டு , ஏதோ நான் ஈகோ வெறி கொண்டு ஆடுவதாக கமெண்ட்பகுதிகளிலும், இந்தக் கடைசி பதிவிலும் ஆட்டம் போட்டு இருக்கின்றீர்கள். என்னை ஈவெரா-பெரியார் விதமாக சீண்டியது காரணமாகவே "யோவ் ரோசாவசந்த்" என்று ஆரம்பித்து ஒரு கிண்டல் பதிவைப் போட்டிருந்தேன். அதிலும் உங்களைப் பற்றி தனிப்பட்ட வகையில் எதுவும் சொல்லாமல், உங்களைப் புண்படுத்தவெல்லாம் நினையாமல் எதற்கு பெரியார் எஃபக்ட் என்ற படமெல்லாம் எனத்தான் முடித்திருந்தேன். நான் சொன்னதை முற்றாக மறுக்காத நிலையில் அல்லது மறுதலிக்காத நிலையில், இந்த ஸ்டடிஸ்டிக்க்ஸ் பார்க்கும் சூத்திரத்தனத்திலிருந்து மேலெழுந்து அதை விரிவாக "பிரம்மசூத்திரம்" பார்க்கும் நிலைக்கு நான் உயரவேண்டும் என உங்களது "பாசம்" புரிந்தாலும் இந்த இடத்தில் எதற்கு? அப்படி விரிவாக பார்த்தாலும் நான் சொல்ல வருவதிலிருந்து "உண்மை" எந்த அளவிற்கு விலகி நிற்கும்? அந்த அளவு அக்கூரசி இந்த விவாத நோக்கிற்கு அதுவும் வலைப்பதிவுகளில் எந்தளவுக்கு அவசியம்? கூடவே இந்த வசனம் உழைப்பை வைத்து - "அனாதையிடத்தில் ஒரு மயிரும் கிடையாது மொட்டையாக திட்டினால் நிரூபிக்கபட்டுவிடும் என்ற வெகுளி(முட்டாள்?)த்தனம் தான்" தங்களால் இந்த வலைப்பதிவுகளில் எழுதியவற்றில், இந்த தளத்திலும்சரி உங்கள் தளத்திலும் இப்பொழுது சிம்புவின் சூனா அறுப்பு சூளுறுப்பு, உள்ளம் என்பது ஆமை வரை எந்தளவுன்னா உழைப்பு உழைச்சிருக்கேள்? கொஞ்சம் நெஞ்சைத் தொட்டு சொல்றேளா? ஓ இதெல்லாம் அடுத்தாத்து அம்புஜங்களுக்கு மட்டும் தானா? இந்த உழைப்பு/உழைப்பின்மை, அறிவுக்கூர்மை /வெகுளித்தன்மை, மாமனித/வெகுஜன பஜனையெல்லாம் ஒற்றப்பார்வைபார்த்து புறந்தள்ளும் பார்ப்பார வேலைன்னு நினைச்சுட்டுருந்தேன். பீஃப் தின்னாலும் அதே கதை தானா? தொலைபேசி இலாக்காவில் ஜெமோவுடன் கூட உழைத்த "நபர்களுடன்" நேக்கு அறிமுகம் உண்டு.அந்த அறிமுகங்களில் அறிந்த விடயம் அண்ணன் இரண்டு மணி நேரம் தான் "உழைப்பார்" மற்ற நேரமெல்லாம் புத்தகங்களுடன்ஓரத்தில் ஒதுங்கி விடுவார். மற்றோர் கேரமோ அரட்டையிலோ இறங்கியிறுக்கும் போது அண்ணன் புத்தகப்படிப்பில். அலுவலகக் கம்ப்யூட்டரில் ஜில்க்கானா சைட்டுகளுக்கு உலாவருபர் நீர். உங்களைப்போலவாதான் அடுத்தவா உழைப்பைப் பற்றிப் பேச தகுதி. இது இன்னிக்கு நேத்தைக்குநடக்கின்ற விடயம் கிடையாதே நூற்றாண்டு பஜனை ஆச்சே. என் "உழைப்பின்" தகுதி நேக்கு நன்னா தெரியும்னா. அதனாலே தான் இந்த இடத்தில்எழுதறேன் வேறே எந்த எடத்துலயும் "பிரசுரிக்க" நாக்கு தொங்கப் போடக் கூட நினைத்தது கிடையாது. இதோ இங்கே பெரியார் தேவை தேவையில்லை விவாதம் நடந்துண்டுருக்கு, போய் மல்லுகட்டுங்கோ யார் வேண்டான்னா? ஜெமோ ஈவெரா ஒரு கடப்பாறைன்னு போட்டு ஒரு மாமாங்கம் ஆகிறது . நான் தான் "வெகுளி" வெங்காய வெடி போடறவா. லெச்சுமி வெடியும் அணுகுண்டும் வச்சிண்டிருக்கேள், முற்றும் மாறுபடுவேன், முற்றும் மறுதலிப்பேன் ஜெமோவுடன் எதிர் கொண்டு எதிர்கொண்டு உயிர்தெழுவென்னெல்லாம் கீரிபாம்பு சண்டை விளம்பரம் பன்னின்டுருக்கேளே இது வரை கிழிச்சது என்ன? சிம்பு சூனாவைத் தவிற? உம்ம "உழைப்பு" மயிரையும் தான் பார்ப்போமே.


5. இந்தியன் எக்ஸ்பிஸ்ஸுக்கு துதியும், தலிஸ்தானுக்கு வேட்டும்....
maligned. malignedன்னா என்னா அர்த்தம்ன்னா? கொஞசம் சொல்லித்தரேளா? அந்த வரிக்கு dalistan site பற்றியும் இண்டியன் எக்ஸ்பிரஸ் பற்றியும் என்னோட கருத்த சொன்ன மாதிரி திரிக்க/திரியவைக்க வெல்லாம் அளவுக்கு மீறிய ஆத்திரம் வேணும் அல்லது அளவுக்கு மீறிய அலட்சியம் வேணும்.


6. தகவல்ரீதியாய் அநாதை உளரியிருப்பதால் பெரிய பிரச்சனையில்லை. ஈகோ கிளரபட்ட ...
தகவல்ரீதியா உளறலா? சிம்பிள் கேள்வி முதலமைச்சர் பதவி வர பெறும் பலம் இருந்த சென்னை மாகாணத்து ஜஸ்டிஸ்பார்ட்டிக்கும், "சம்பல்பூரில்" இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டியையும் ஒப்புமை படுத்தமுடியுமா? இது தான். இதற்கு உள்ளே இருக்கும் கேள்வி, இந்தத்தகவல் தேவையா என்பதே. யார் பதில்ல ஈகோ கிளரப்பட்டிருக்கு? சென்னை மாகானம் ஆந்திரா "முழுமையும்" கர்நாடகா "முழுமையும்" சேர்த்து இருந்ததா எப்போ உளறினேன். "திடுக்" கேள்வி பாணியிலேயே சென்னை மாகானத்து எல்லையில் இருந்த ஒரு பகுதி ஒரிஸாவா ஆகியிறுக்கு( உண்மையிலேயே ஆயிருக்கு சார். தேடி "உழைத்துப்" பாருங்கோ) அங்கேயும் எபக்ட்டு தேடமுடியுமான்னு கேட்டேன். ஜிகே ஜீரோ ஆனால் "அனாதை" சொன்ன தகவல்ல உளறல் இருக்கு. நல்ல லாஜிக்கான பதில்ன்னா இது. யாரோ "ஒருவருடன்" பேசிய விடயத்தை வைத்து எந்தவிதஉழைப்பு புழைப்புன்னு எந்த மயிறும் இல்லாமல் சென்னை மாகானத்து ஜஸ்டிஸ் பார்ட்டியுடன் கல்கத்தா பக்கம் உள்ள ஒரிஸாவில் இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டி ஒப்புமை செய்து ஜல்லியடித்து ஒளரிகிட்டே அடுத்தவனை ஒளருரான்னு சொல்றதுக்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும் அல்லதுஅளவுக்கு மிஞ்சிய ஆத்திரம் வேண்டும்.


சரி பீயை இந்த அளவுக்கு அள்ளினதே போதும். புள்ளையை இன்னிக்காவது போலார் எக்ஸ்பிரஸ் கூட்டிகிட்டு போகனும். அது தான் எனக்கு இப்போமுக்கியம்....


குட் பையெல்லாம் தேவையில்லன்னா, அந்த வகை சென்ஸிபிலிட்டியெல்லாம் ஸ்டுபிட் மிடில்கிளாஸ் அம்மாஞ்சிகளுக்குத் தானே நம்மைப் போல "சாருநிவேதித" மாற்றுக் கலகக்காரர்களுக்கு எதுக்கு அந்த கருமாந்திரங்கள்.


நன்றியுடன்,

அனாதை


பிகு - இந்த நன்றி எதற்குன்னு கேக்கிறதுக்கு முன்னாலே சொல்லிடறேன் பிரம்மச்சாரி சாமியார்ன்னு சொல்லிண்டு பெண்களோட கூத்தடிக்கிற மாதிரி அனாதைன்னு போட்டுகிட்டு கூட ஒரு ஆளையும் சேர்த்துகிட்டு இருக்கிறேன்னனு இனி எவரும் கிண்டல் அடிக்க வாய்ப்பு இல்ல பாருங்கோ அதுக்கு.


மேலும் படிக்க