Saturday, February 14, 2009

அமெரிக்க வணிகக் கட்டுப்பாடுகள்

அமெரிக்க தளையற்ற பொருளுடமை பற்றி பேசப்படும் அளவிற்கு, அமெரிக்க வணிக கட்டுப்பாடுகள் பற்றி பேசப்படுவதில்லை. அமெரிக்க சுதந்திரம் வாங்கிய சமயத்திலேயே இந்தக் கட்டுப்பாடுகளைப் பற்றி விவாதங்கள் நடந்து வந்து, சில கட்டுப்பாடுகள் அடிப்படைச் சட்டத்தில் ஏற்றப்பட்டிருந்தது. ஆனாலும் 19890;ல் வணிக கட்டுப்பாடுகளைப் பற்றிய சட்டம் அமலுக்கு வந்து, வணிக கட்டுப்பாடுகளின் மீதான மறுவிசாரணையும்/ தீர்வையும் அளிக்கும் உரிமை அமெரிக்க உச்சநீதி மன்றத்திடம் வந்தது. அமெரிக்க உச்சநீதி மன்றம், அடிப்படை சட்டங்களிடையேயான மிக முக்கிய தீர்வுகளை தந்துபோல் வணிக கட்டுப்பாடுகள் மீதான சில முக்கிய தீர்வுகளையும் தந்தன. அந்த தீர்வுகள் அமெரிக்க வணிகத்தின் போக்கினை தீர்மானிப்பதாக இருந்தன. உலகளாவிய பொருளாதாரம் மற்றும் இணைய வழி வணிகம் கூடவே சிக்காகோ வழி சிந்தனை என்பவைகள் இந்தக் கட்டுப்பாடுகள் மீது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. அந்தக் குழப்பங்கள், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்புகளில் தெரிந்தாலும், கூடவே நிறுவணங்களின் அரசாக செயல்பட்ட புஷ் அரசாங்கம் நியமித்த அமெரிக்க உச்ச நீதிபதிகள், நிறுவணங்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை செய்கின்றன என்றும் ஒரு விவாதம் உள்ளது. ஆனால் என்னுடைய விருப்பம், இந்த அமெரிக்க அரசு உருவான சமயம் அல்லது முக்கியமாக போன நூற்றாண்டு இடை வரை, இந்த நாட்டின் அடிப்படை எவ்வாறு ஒரு தனிமனித சுதந்திரத்தை உண்மையான நோக்குடன் பேணுவதாக இருந்தது என ஆராயும் நோக்கு. தனிமனித சுதந்திரத்தின் அளவே எந்த ஒரு சமுதாயத்தின் வெற்றியின் அளவாகும் என்பதாக என் தனிப்பட்ட விருப்பம். பீயள்ளுவது தான் ஒருத்தனின் சுதந்திரம் என்றால் அந்தப் பீய்ள்ளும் வெற்றிதான் அந்த சமுதாயத்திற்கு, அது சந்திரமண்டலத்திற்கு ராக்கெட் விட்டாலும். சிரித்துக் கொண்டே பீயள்ளுகிறார்கள் அதை எப்படி மேற்கத்திய கண் கொண்டு பார்க்கலாம் என தேவிடியாகுடி ஞானகுருக்கள் கேட்கும் முன்னே நாம் நம் விடயத்திற்கு திரும்பலாம்.எந்த ஒரு பொருளாதாரமானாலும் அது எந்த பொருள் எப்படி எவ்வளவு தேவைப்படும், எங்கிருந்து வரவழிக்கப் படும் அல்லது எப்படி தயாரிக்கப் படும் கூடவே முக்கியமாக யார் இதனை செய்யலாம் யார் இதனை உபயோகிக்கலாம் என்றெல்லாம் முடிவு எடுக்க வேண்டும்.

அந்த முடிவுகளை மூன்று வழிப்படுத்தலாம். முதலாம் வழி மரபு ரீதியானது. ஐரோப்பிய நாடுகளில் மேல்வட்டதினரால் வழிநடத்தப்பட்ட பொருளாதார நிறுவணங்களிடம் இந்த முடிவு செய்யும் அதிகாரம் இருந்தது. அரசனுக்கு ஒரு கமிஷன் கொடுத்துவிட்டு, பின் இந்த நிறுவணங்கள் நிர்ணயம் செய்வது அந்தக் காலத்தில். இதையே தேவடியாகுடியில் சாதி மற்றும் வர்ணம் நிர்ண்யம் செய்யும். சந்திரோயான் விடும் தேவடியாகுடியில் இன்னமும் சில பல முடிவுகள் சில சாதிக்கூட்டங்களின் கையில் இருப்பதும் சிலசமயம் சில இடங்களில் மதக் கூட்டதின் கையில் இருப்பதும் நடக்கும். இந்தப் பொருளாதார முடிவுகளின் முரணே பல நேரங்களில் தேவடியாகுடியில் நடக்கும் மதக் கலவரங்களுக்கு பின்புலனாகவும் இருக்கும்.

இரண்டாம் வழி ஒரு வானளாவிய அதிகாரம் கொண்ட மத்திய அமைப்பு மேலே கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் முடிவு எடுக்கும். உதாரணமாக சோவியத் யூனினில் செய்யப்பட்ட அல்லது சைனாவில் செய்யப்படுகின்ற முறை.

மூன்றாவது வழி இந்த முடிவுகளை எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற சந்தை தீர்மானிப்பது. சந்தை என்றால் எவன் வேண்டுமானாலும் விற்கலாம் எவன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்னும் அர்த்ததில். . இதன் சாதக பாதகங்களுக்கு செல்லும் முன்னே இந்தச் சந்தை, "எவன்", விற்பவன், வாங்குபவன் என்னும் ஆட்களை அறிந்து கொள்வது முக்கியம். இந்தச் சந்தை எப்பொழுது தொடந்து ஓட்டம் கொள்ளும்? விற்கின்றவன் கூட்டு சேர்ந்து வாங்குகிறவனை மொங்கா போட்டாலும் வாங்குகிறவன்கள் கூட்டம் சேர்ந்து விற்கின்றவனை மொங்கா போட்டாலும் இந்தச் சந்தை படுத்துக் கொள்ளும். அது இல்லாமல் விற்கின்றவன்கள் தனித்தனியே போட்டி போட்டு, விற்கின்ற பொருள்களை விலையிலும் தரத்திலும் புதுமையிலும் மெருகு ஏற்றி ஏற்றி, வாங்குகிறவனை வாங்க வைக்க வேண்டும். அப்படி வாங்க வைக்கும் போட்டி இருந்தால் தான் சந்தை தொடர்ந்து ஓட்டம் கொள்ளும் என்பது இந்த வகை. ஒரு வகையில் பார்த்தால் முதல் இரண்டு வகைகளும் இந்த வகையின் முழு எதிரிகள். முதல் இரண்டு வழிகளுமே இந்தப் "போட்டா போட்டியை" விலக்கி விடுகின்றன.

இந்த மூன்றாவது வழிதான் அமெரிக்கா தேர்ந்த்தெடுத்தது அமெரிக்கன்களுக்கு இந்தப் "போட்டா போட்டி" மேல் ஒரு நம்பிக்கை. அது தான் மனித சக்தியை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றது என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே மோனோபோலி எனப்படும் ஒரு தனிகுழுவோ, நிறுவணமோ அல்லது அரசாங்கமோ இந்தச் சந்தையை கை கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர் ( இப்பொழுது அந்தத் தீவிரம் குறைந்து வருகின்றது ). இந்த போட்ட போட்டியை தற்காத்துக் கொள்ள 1890 ஷெர்மன் அக்ட்(sherman act) என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்த ஷெர்மன் சட்டம் மிக முக்கியமான நோக்கை நோக்கி இருந்தது. அவைகளை நான்கு வகைப்படுத்தலாம். முதலாவது - நுகர்வோர் நலன் மற்றும் சந்தையில் முக்கிய பங்கு வகிப்போரிடம் அந்தப் பங்கு பெருகவிடக்கூடிய சொத்து மாற்றங்கள் மீதான தடைகள். இரண்டாவது சந்தையில் புதுமைக்கும், அறிவுப் பெருக்கத்திற்கும் வகைமை செய்வது. மூன்றாவது சந்தையில் இருக்கும் தனியார் நிறுவனங்களை சமசீராக காப்பது . நான்காவதாக பொருளாதார பலத்தை பரவலாக்குவது.

இந்த ஷெர்மன் சட்டத்தின் இரண்டு பகுதிகளின் தமிழாக்கம் இங்கே - இது இந்தச் சட்டதின் பின் உள்ள குறிக்கோளை காட்டலாம்

1. எந்த ஒரு நிறுவனங்களுக்கிடையேயான ( ஒரு பகுதி அரசு நிர்வாகமாகவும் இருக்கலாம்) ஒப்பந்தம், நேரடியாகவோ அல்லது சூழ்ச்சியின் மூலமாகவோ, எந்த ஒரு வணிகத்தையும் தடை செய்யும் வகையில் இருந்தால் அது சட்டமீறலாகும். எந்த தனிமனிதனோ அல்லது நிறுவனமோ இந்த சட்டமீறை செய்திருந்தால் அவர்களுள் குற்றம் செய்தவர்களாகின்றனர் அவர்களுக்கு சிறை தண்டனையோ , பொருள் தண்டனையோ இரண்டுமோ தரப்படும்
2. எந்த ஒரு தனி மனிதன் சந்தையை கையகப் படுத்தினாலோ அல்லது திட்டம் போட்டிருந்தாலோ அவர்களுக்கு சிறை தண்டனையோ பொருள் தண்டனையோ இரண்டுமோ தரப்படும்.

பல ஷெர்மன் சட்டத்தின் விதிகள் தற்போதைய நீதிமன்றங்களால் வேறு வகைகளில் பார்க்கப் பட்டாலும் , இந்த சட்டங்களுக்குப் பின்னாலுள்ள நோக்கு கவனத்திற்கு உரியது. சில பல உச்சநீதிமன்ற வழக்குகளை சந்திக்கும் போது, இந்த ஷெர்மன் சட்டத்தில் அடிவாங்கிய, தப்பிய வழக்குகளை, பார்க்கும் போது, இந்த நோக்கு ஒரு புரியலையும் , அமெரிக்க வணிகக் கட்டுப்பாடு எங்கே சென்று கொண்டிருக்கின்றது எனவும் கணிக்க உதவலாம்.

மேலும் படிக்க