Friday, December 03, 2004

யோவ் ரோசாவசந்த்,

இன்னமும் எத்தனை காலத்துக்குங்கானும் இப்படி நோண்டி நோண்டி என் கிறுக்கலைப் படிக்கப் போறீர்? ரொம்ப நோண்டாதீர் ஓய் வெங்காயம் தான் மிஞ்சும். ;) ஈவெராவை, ஈவெரான்ன ஈவெராக்கு உறைக்குமா. அது குடுக்குற சுதந்திரத்திலேஅதையே சுவாமிநாதனுக்கும்(அதாங்க ஓய் பெரிய பெரியவா), சுப்புரமணிக்கும் போட்டா எங்கெங்கெல்லாம் உறைக்கும்னு தெரியாதா ஓய். அதுக்காக உம்ம ஜெமோவையும் இப்ப நேசகுமாரா பரிணாம வளர்சியில் இருக்கும் நம்ப எலும்பு பொறுக்கியையும் என்னோட சேர்த்து ஒன்னாப் போடறதா ஓய். ஆவாள சுவாமிநாதன சுவாமிநாதன்னு சொல்லச் சொல்லும் பார்ப்போம். அவாள மட்டுமில்ல ஓய், இந்த கலைஞரை, புரச்சித்தலவரை, உலகநாயகன, புவியரசை கிண்டல் பன்றவாளையும் தான் சொல்லச் சொல்லிப் பாருமே, உம்ம நாக்கு வெந்துரும்ஓய்.
இப்பத்தான் தங்கமணியின் பதிவைப்படிச்சேன். அவர்ட்ட கொஞ்சம் சொல்லுங்க , எழுத்துருவெல்லாம் திருகித் திருகித்தான் தெரிகிறது. வெட்டி ஒட்டி தான் படிக்க வேண்டியிருக்கு. டெக்னிக்கல் விடயங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக் கொள்ளும்நபர்கள் பலரது பதிவுகளில் தங்கமணி பதிவின் ரெஃபரல் இருக்கும். அந்த ரெஃபரல் எல்லாம் உள்ளளாங்காட்டிக்குத் தானா? ரெத்தம் ஒரே நிறம்ன்னுபஜனை பாடிண்டே அவா அவா ரெத்தத்தோட கரெக்டா இருப்பா போல.
சரி இந்த பெரியார் இஃபெக்ட்டுக்கு வருவோம். இன்னி தேதிக்கு ஈவெரா ஈரோட்ட்ல சேர்மனா இருக்குறாப்ல வச்சுக்குவோம். இன்னமும் அம்பது வருடம் கழித்து இந்த ஈவெராவிற்கு இப்பொழுது இருக்கும் ஈவெராவின் இஃபெக்ட்டுல 5 சதவீதம் வளர்க்க வாய்பிருக்கா? அதனாலேயே நீங்க சொல்ற வெகு ஜன மதிப்பீட்டுக்கு நான் ஒத்துக்கிறேன் அதே சமயம் இந்துத்துவாவின் பங்கு தமிழ்நாட்ல வளராததற்கு காரணம் உண்மையிலேயே இரு பிறப்பாளர்களின் பங்கு இங்கு வெகு குறைவு என்பதாலேயே. சுவாமிநாதனின் குரலில் இந்த பகுதி முழுவதும் நாலாம் வர்ணத்திரர் என கூறியிருப்பார். நல்லா ஆராய்ஞ்சாக்க இங்கே முதலாம் வர்ணம் மற்றும் நாலாம் வர்ணம் இந்த இரண்டு வர்ணம் தான் இருந்துச்சுன்னு வரும். சுவாமிநாதன் வெள்ளக்காரனுக்கு போட்ட பெட்டிசனையெல்லாம் பார்த்தாக இன்னமும் பலது வெளிவரும். வெள்ளைக்காரணிடம் பதவி பிடிக்கும் வெறியில் இந்த இரண்டாம் வர்ணம் ( ரெட்டி, முதலி, பிள்ளை இன்ன பிற) மூன்றாம் வர்ணம் ( செட்டி போன்ற) எல்லோரையும் போட்டு நாலாம் வர்ணம்ன்னு காட்டினதாலே, எல்லாம் ஒன்னு சேர்ந்து பாப்பானுக்கு ஆப்படிக்க ஆராம்பிச்சுட்டானுக. சுவாமிநாதனும் இன்னமும் மற்ற இந்து தலைகள் எல்லாம் இந்த இரண்டாம் வர்ணம் மூன்றாம் வர்ணம்னு அவனவனுக்கு பாத்தி போட்டு விட்டுருந்தான்கள்னா, ரெட்டி, முதலி, பிள்ளை, செட்டி, நாயர் எல்லாம் நாயுடு, தேவன்,நாடானோட கூட்டணி போட்டு பார்பனல்லாதோர் சங்கம்ன்னும், நீதிக்கட்சின்னும் கடை திறந்திருப்பான்களா?அப்படி ஒரு சூழல் இல்லாம இருந்திருந்தா ஈவெரா வலம் வந்திருக்க முடியுமா? இதுவே தானே வட நாட்டிலே நடக்குது அங்கே ஒரு பெரியாரும் வரமுடியலே. வடநாட்டு பார்ப்பான்களுக்கு நம்ப பாப்பான்கள் போல பேராசை இல்லாததாலே அங்கே இந்த இரண்டாம் வர்ணம், மூன்றாம் வர்ணம்னு தெளிவாக வச்சிகிட்டி அவனுகளுக்கு எலும்புத் துண்டை போட்டுக்கிட்டு கரொக்டா இருந்ததாலேயே இந்துத்துவாவை சுலபமா மீட்க முடியுது. இது என்ன பெரிய மந்திரவித்தையா? ரொம்ப்பப் படம் காட்டக் கூடாது ஆமா.

அன்புடன்,
அனாதை

மேலும் படிக்க

Thursday, December 02, 2004

திருகிப் போன உலகம்.

இந்த சங்கராச்சாரி கைதும் அதன் பின் நடக்கும் விவாதங்களும் எந்த வகையில் திருகிப் போன சமுதாயத்தில் இருக்கின்றோம் என்று காட்டுகின்றது.அடிப்படையே பிறழிப் போய் எது வலது எது இடது எது முன் எது பின் எது மேல் எது கீழ் என திசைகள் அனைத்தும் திருகப்பட்ட நிலையில் நின்று கொண்டு அனைத்து விவாதங்களும் நடத்தப்படுவது கூத்தாக இருக்கின்றது. முதலில் இந்த சங்கர மடம் மற்றும் அதன் வரலாறே ஒரு தகராறான வரலாறு. ஆதி சங்கரரை புத்தருக்கு முன் வைத்து திருகு தண்டாவை ஆரம்பித்து பின் சிருங்கேரியின் கும்பகோண கிளையை ஐந்தாவது மடம்( இந்த இடத்தில் http://www.ucl.ac.uk/~ucgadkw/indology.html, "Vidyasankar Sundaresan" பெயரை வைத்து தேடினால் இந்த மடத்தைப்பற்றிய பல சரித்தரபூர்வமான விடயங்கள் கிடைக்கும்)என ஜல்லியடித்தில் இருந்து ஆரம்பமே ஒரு மோசடி. ஒரு யோசிக்கும் வயதில் இல்லாத ஒரு சிறுவனை காவு கொடுப்பது போல் அவனை துறவுக்கு தேர்ந்தெடுப்பதுவே ஒரு child abuse தான் அவனது பெற்றோர் சம்மதம் இருந்தாலும்.அதுவும் சுற்றியிருப்பவர்கள் , தனது குரு ஒருவரைத் தவிர, மற்ற எல்லோரும் சம்சார பந்தத்தில் இருப்போராக இருக்க, இந்த சிறுவனை மட்டும் வேறு சிந்தனையில் வளர நிர்பந்தியிருப்பது நிச்சயமாக குழந்தைக் கொடூரமாகத் தான் கருத முடியும். புத்த விகாரங்களிலும் கிறிஸ்தவ கூடாரங்களிலும் (? முப்பது வயதில் தான் உண்மையிலேயே பிரமானம் பெறப்படுகின்றது) சிறு வயதில் பிரம்மச்சார்யத்தை வாழ்வியல் முறையாக கட்டாயப்படுத்துவது கொடுமை லிஸ்டில் வந்தாலும், அந்த இடம் முழுவதும் அந்த வகையில் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் அதுவே ஒரு தனிப்பட்ட சமுதாயக் குழுவாகி, மனரீதியான தாக்குதல்களிலிருந்து சிறிய வயது நபர்களை தவிர்ப்பதுவாக இருக்கும்.ஆனால் இந்த சங்கர மடத்திலோ இந்த இருவர் மட்டும் தான் பிரம்மச்சாரிகள். கூட இருக்கும் மற்ற அனைவரும் இந்த ஓரிரு பிரம்மச்சாரிகளின் பிரம்மச்சார்யத்தை ஒரு "சித்தியாக" விற்று தன் நலத்தை பல்வகைகளில் பெருக்கிக் கொள்வதுடன், இந்த காவு கொடுக்கப்பட்ட பிரம்மச்சர்யத்தை ஒரு வித நிறுவனப்படுத்தப்பட்ட கற்பகவிருட்சமாக ஏற்பாடு செய்து வருவதை இந்தக் கூடத்தின் நலம் விரும்பிகளையும்இந்த மடத்தின் சொத்துக்களின் அளவையும் பார்த்தாலே விளங்கும். (உண்மையில் இந்த பிரம்மச்சார்யத்திற்கான தேவை/அவசியம் நாலு வேதத்திலும் இருக்கின்றதா)?

இந்தச் சங்கராச்சாரி கைதும் அதன் பின் நடக்கும் விவாதங்களும், பின்புலத்தில் இந்தச் சங்கரமடம் என்னும் விஷவித்தினை ஆராய விடாமல், ஒரு தனிப்பட்ட "கெட்ட" சங்கராச்சாரியைப் பற்றினதாக மாற்றும் முயற்சியை இந்த அரைகுறை சீர்திருத்தவாதிகளாலும், மீடியாக்கலாலும், அரசாங்க கருவிகளாலாலும் ஒரு புறம் நடந்தாலும், இந்த மடத்தின் முக்கிய நலம் விரும்பிகள் இந்த கெட்ட "சங்கராச்சாரியை" கைவிட்டு விலகி நிலகி நிற்பது அதனை எந்தவகையில் முழுமைப்படுத்துகின்றது என்பது விவாதங்களில் வராதது ஆச்சர்யம் தான்."பாரம்பரி"யங்களை வகுந்தெடுப்பதற்காகவே அரசியல் வாழ்கையை ஆரம்பித்ததாக ஜல்லியடிக்கும் மஞ்சள் சால்வை சோணக்கியனும் "பாரம்பரியம்" மிக்க சங்கர மடத்திற்கும், தீண்டாமையைப் பிறப்புரிமையாகக் கொண்ட ஒரு "பெரியவாளுக்கு" "விளக்குப்பிடிப்பது" மூலம் எந்த வகை பாரம்பரியத்தை காக்கின்றார் எனத் தெரியாமல் இருப்பது கேவலம் தான். சமரசம் செய்ய முனையாத ஒரே காரணத்தால் மட்டுமே இந்த சங்கராச்சாரி இப்பொழுது "கெட்ட" சங்கராச்சாரியாக அடிக்கப்படுகின்றார் என்பதற்கு, இன்னமும் இளைய சங்கராச்சாரி, அவருடைய தம்பி போன்றோரின் பங்கு கொஞ்சம் கூட அரசாங்க கருவிகள் கையில் வராதை முக்கியமானதாக காட்டலாம். சங்கரராமன் குற்றம் சாட்டியது இரண்டு சங்கராச்சாரிகளையும் கூடவே சங்கராச்சாரியின் உடன்பிறப்பையும் என்பதும், சங்கராச்சாரியின்தம்பிக்கும் சங்கர்ராமனும் நேரடி சண்டை இருந்தபோதிலும் அவர்கள் இருவருக்கும், பெரிய சங்கராச்சாரி போலவே இந்த கொலையினால் பயன் இருந்ததை கணக்கில் எடுக்காதது எப்படி என்பது ஒரு திருகப்பட்ட சமுதாயத்தில் தான் சாத்தியம். அதையும் விட வியப்பு இந்தவகை ஒரு தலைப்பட்ச நடவடிக்கை எடுத்தவர் தைரியலட்சுமியாம். எதனால் சிரிப்பது எனத் தெரியவில்லை. உண்மையிலேயே இந்த நிகழ்வை பயன்படுத்தி, இந்த ஒரு "கெட்ட" சங்கராச்சாரியை கை கழுவினாலும், சங்கர மடமும் ஜெயலலிதாவின் ஆட்சியும் தக்கவக்கப் படுமானல் உண்மையில் "உண்மையான" நலம் விரும்பிகளுக்கு இது இரட்டைப் பலனாக இருக்கும். சாதாரண மக்களுக்கான ஆரம்ப கட்ட அதிர்ச்சி போன பின்னால் இந்த நிகழ்வு இந்த சங்கர மட நலம் விரும்பிகளால் திரிக்கப்பட்டு எவ்வாறு அறுவடை செய்யப் படப் போகின்றது என்பதின் சாத்தியக் கூறுகளையும், இந்த நிகழ்வை ஏதோ ஒரு திருப்பமாக, சாதனையாக, அதுவும் ஈவேராவின் சாதனையாக வெல்லாம் காட்டும் வெகுளித்தனத்தின் எல்லையும் பார்க்கும் போதும் எந்த வகையில் திருகிப் போன சமுதாயத்தில் இது நடக்கும் என யூகிக்க முடியவில்லை.

கடைசியாக ஒரு quiz.

1. ரிக்வேதம் முழுவதும் கற்றுணர்ந்த ஒரு பார்பனன் செய்த கொலைக்கு இந்து சாஸ்திரங்களின் படி என்ன தண்டனை?
2. ரிக்வேதம் முழுவதும் கற்றுணர்ந்த ஒரு பார்பனனை துன்புறுத்தப் போவதாக சொல்பவனுக்கு என்ன தண்டனை? அப்படி சொல்லி பின் உண்மையிலேயே துன்புறித்தினவனுக்கு என்ன தண்டனை?
3. ரிக்வேதம் முழுவதும் கற்றுணர்ந்த ஒரு பார்பனனுக்கு அவன் அடுத்தவர் மனைவியை கவர்ந்தால் என்ன தண்டனை? நன்றாக கவனிக்கவும் அப்படி அடுத்தவர் "மனைவியாக இல்லாதவர்களை" கவர்ந்தால் என்ன தண்டனை?

விடை தெரியவில்லையா? இது வரை இந்த விடயத்தில் வாயைத் திறக்காத அல்லது திறந்தது போல பாவ்லா காட்டிய இணையப்பார்பனர்கள் யாரேனும் தெரிந்தால் அவர்களிடம் கேட்கலாம். அல்லது இந்த இடத்தில் http://members.ozemail.com.au/~mooncharts/manu/manu-english.pdf தேடிப்பார்க்கலாம்.மேலும் படிக்க