அனாதையின் வலைப்பதிவுகள்

Sunday, December 26, 2010

இந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்? புத்தகப் பார்வை

வெகு நாட்களுக்குப் பின் இங்கே எழுத வருகின்றேன். ஈழப் பிரச்சனைக்குப்பின் தமிழன் எனச் சொல்லவே வெட்கம் அதிலும் "இந்திய" என்பது மேலும் கேவலமான விசயம் என்னைப் பொருத்த வரையில். சிலரின் எழுத்துக்களை மட்டும் பிளாகுகளில் படிப்பது என்று இருந்தது பின் டிவிட்டரில் அங்கங்கே குறிப்புகளை எழுதத்தொடங்கி பின் சிலருடன் உரையாடலும் வந்து இன்று இங்கே. 10 நாள் அலுவலகவிடுப்பு ஒரு முக்கிய காரணம். இந்தப் பத்து நாள் லீவில் படிக்கவேண்டிய புத்தகங்க்கள் என எடுத்துவைத்து அதிகம். ஆனாலும் இன்று ஒரு புத்தகம் படித்து விட்டேன்.

"உருப்படாது நாராயன்" புண்ணியத்தில் படித்தது "இந்தியர்கள் விளையாடும் ஆட்டம்" எனும் புத்தகம் ஆங்கிலத்தில் - Games Indian plan - why we are the way we are" ரகுநாதன் என்னும் மேலாண்மை கல்லூரி ஆசிரியர் எழுதியது. சமீபகாலமாக நடத்தைசார்ந்த பொருளாதாரம் என்பது ஒரு தனிப்படிப்பாக பொருளாதாரத் துறையில் கிளம்பி வருகின்றது. பொதுவாக பொருளாதார அடிப்படை மனிதன் ஒரு நியாயமான லாப/நஷ்ட பகுத்தறிவு போடக்கூடிய ஒருவன் என்னும் பின்புலத்தில் உருவானது. ஒரு பெரும் கூட்டம், சுயநலமே ஆனாலும், தனிப்பட்ட ஒவ்வொருவனும் லாப/நஷ்டத்தை சரியாகக் கணக்கெடுத்து நடந்தால் அது ஒரு சமூகத்திற்கே நலன் பயக்கக்கூடியது என்னும் கோட்ப்பாடு பல்வேறு சூடான விவாதத்தைக் கொண்டுசெல்லும். அதை வேறொரு நாளுக்கு வைத்துவிட்டு, இந்த மனிதன் நியாயமான (சுயநலத்திற்கே கூட) லாப/நஷ்ட பகுத்தறிவு கணக்கு போடக்கூடியவன் தானா என்பதில் பொருளாதர அறிஞர்கள் ஆராயத் தொடங்கினார்கள். சமீபத்தில் மேற்குலகில் நடந்த பொருளாதர வீழ்ச்சி இந்த வகை ஆராய்சிகளுக்கு இன்று ஊக்கமாக இருக்கின்றது. டான் ஆரியாலி என்பவர் எழுதிய எதிர்பார்க்கக்கூடிய அபகுத்தறிவு (predictably irrational) புத்தகம் இந்தத் துறையில் எழுதப்பட்ட எனக்கு பிடித்த ஒன்று. அதைப் பற்றி பேசும் போது நாராயன் காட்டிய புத்தகம் தான் இப்பொழுது பார்வையில் இருக்கும் புத்தகம். இந்தப் புத்தகங்கள் மனிதநடத்தை சார்ந்த பொருளாதார புத்தகங்கள் எனலாம். மனிதநடத்தை மற்றும் மனித உணர்தல் துறைகளில் பல்வேறு ஆராய்சிகள், வரும் காலத்தில், நடக்கும் என நான் நம்புகின்றேன். இதற்கான குறிக்கோள் இப்பொழுது பொருளாதார மற்றும் நிதித்துறைகள் காரணமாயிருந்தாலும் ஒரு கட்டத்திற்குப்பின் செயற்கைஅறிவு(AI)த்துறை இந்த வகை ஆராய்சிகளினால் பலனடையும் எனவும் நம்புகின்றேன்.

நாராயன் முதலில் சொன்னபோது அவ்வளவு நம்பிக்கை இல்லை தான். மேலாண்மைத் துறையில் இந்தியக் பல்கலைக்கழகங்கள் சார்ந்து வரும் ஆராய்சிகளின் மீதான ஒரு "நம்பிக்கையும்" ஒரு காரணம்.

முதல் அதிகாரத்திலேயே என் கவனத்தைக் கவர்ந்தது இந்தியர்களைப் பற்றி ஒரு 12 குறிப்புகளை தந்திருந்தது தான். கீழகண்டவைகள் தான் அவை

1. குறைந்த அளவிலான நம்பகத்தன்மை
2. பொதுவில் முட்டாளாகவும் தனிப்பட்ட அளவில் புத்திசாலியாகவும் இருத்தல்
3. நடப்பதெல்லாம் விதிப்படிதான் என நம்புதல்
4. அதீதபுத்திசாலித்தனம் (பலனையே துர்பலனாக்கும் வகையினால)
5. பொதுசுகாதாரம் என்றால் கிலோ என்னவிலை
6. தனக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதி
7. கண்ணுக்கு முன்னாடி நடக்கும் அநீதியை சும்மா விடுதல்
8. புரையோடிப் போன ஊழல் மற்றும் இலவசத்துக்கு அலைதல்
9. பெரும்பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் தெரியாமை
10 ஒரு நடைமுறையை செயல்படுத்த தெரியாமை கூடவே நடத்தத் தெரியாமை
11. சட்டத்தையோ ந்டப்பையோ மீறக்கூட அதிகாரம் இருந்தால் தான் ஒருத்தருக்கு கெத்து என நம்புதல்
12 சட்டத்த்க்கு இடையேயான ஓட்டையை அடையாளம் கண்டுபிடிப்பதே முழுகுறிக்கோளாக அலைதல்

என்னை மேலும் கவர்ந்தது ஆசிரியர் "வெளியே நிற்காமல் நம்முடைய/நம்மைப் பற்றிய குறிப்புகள் என்றது. இந்தப் 12 குறிப்புகளையும் பொருளாதாரத்துறையின் ஆட்டவிதிகள் (Game theory) என்னும் படிப்பின் வழியாக உதாரணங்கள் மூலம் நாம் ஏன் இப்படி என அறிய முற்பட்டிருந்தார்.

ஆட்டவிதிகள் அதன் குறுகிய விளக்கத்தில் இரண்டு நபர்களுக்கு இடையே ஒத்துக்கொள் /ஒத்துக்கொள்ளாதே என இரண்டு தேர்வுக்கிடையில் , லாப/நஷ்ட கணக்குப் போட்டு எதைத் தேர்ந்தெடுத்தால் யாருக்கு அதிகலாபம் கிடைக்கும் என ஆராய வகை செய்யும் படிப்பு. இந்தப் படிப்பின் அதிஉச்சத்தில் நாடுகளுக்கிடையேயான யுத்த/உடன்பாடு ஆட்டம் நடத்தி அதிபர்களுக்கு எது நடத்தால் அதிக லாபமோ அல்லது குறைந்த நட்டமோ என எடுத்துக் காட்டி அவர்களுக்கான தேர்வை செய்ய உதவிக்கொண்டிருக்கின்றது.

இந்த ஆட்டவிதிப்படிப்புகளில் குற்றவாளிகளிக்கான தேர்வுப்பிரச்சனை என்பது ஒரு பாலபாடம்.
இரு கூட்டுக்களவானிகள் (நீங்க, நான்னு வெச்சுக்களாம்). பிடிபட்டுட்டோம்;தனித்தனியாக நமக்குள் பேசவிடாமல் வைத்து நமக்கு இரு தேர்வு கொடுக்கப்படுகின்றது. பிடித்தவர்கள் சொகின்றார்கள் - நீ ஒத்துகிடு அவனைக் காட்டிக்கொடு - அவனுக்கு 5 வருட தண்டனை உனக்க்கு விடுதலை ; இதே தேர்வு அவனுக்கும் கொடுத்திருக்கோம். இரண்டு பேருமே ஒத்துக்கிட்டா இரண்டு பேருக்குமே 4 வருட தண்டனை; இரண்டு பேருமே ஒத்துக்கலைன்னா 2வருட தண்டனை.நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்? ஆசிரியர் திரும்பத் திரும்ப பல்வேறு சூழல்களில் அடுத்தவனைக் காட்டிக்கொடுக்க நினைத்து மொத்தமாக மாட்டிக்கொள்கின்றோம் என பல வேறு வகைகளில் நிறுவுகின்றார். இதற்காக அவர் உள்நாட்டில் மேலாண்மை படிப்பவர்களிடமும் அதே சமயம் வெளிநாட்டில் (இந்தியரல்லா) படிப்பவர்களிடம் நடந்த சோதனைகளைச் சுட்டி, எவ்வளவு வித்தியாசம் இருக்கின்றது எனக் காட்டுகிறார். நான் படிக்கும்போது இதே வகையினாலான சோதனையில், "இந்தியனாக"த்தான் தேர்வு செய்தேன் என்பதை வெட்கத்துடன் இங்கே பதிவு செய்வது முக்கியம்;

இந்த ஆட்டவிதிகளில் இரு தனிநபர்களுக்கோ, குழுக்களுக்கோவான ஒப்பந்ததில் முதல்வெளியேற்றம் என்னும் ஒரு தேர்வு உண்டு. இந்த முதல்வெளியேறம், ஒரு உடனடி லாபத்தைக் கொடுக்கும். இந்தியர்கள், கூடுதல் "லாபம்" சம்பாதிக்க, இந்த முதல்வெளியேற்றம் தேர்வை, பல இடங்களில்- பொதுவாழ்வில், வியாபர உலகத்தில் கான்பிக்கின்றனர். அது தான் நம்முடைய அதிக ஊழலுக்கு, நடத்தைக்கெடுதலுக்கு, அழுக்குக்கு காரணம். மேலும் முதல்வெளியேற்றம், முதலில் வெளியேறுவது இல்லை, யாராவது வெளியேறினால் ஜென்ம்த்துக்கும் அவர்களுடன் உடன்பாடு இல்லை என்னும் அடுத்தகட்ட ஆட்டவிதிகளில், இந்தியர்கள் முதலாவதோ அல்லது மூனாவதையோ தேர்ந்தெடுக்கின்றார்கள். இரண்டுமே நீண்டகால "லாபத்திற்கு" ஊறுவிளைவிப்பவை என நிறுவுகின்றார்

புத்தகம் முழுக்க பல உதாரணங்கள் வழியாக முதலில் குறிப்பிட்ட 12 வகைகளை ஒவ்வொன்றாக ஆராய்கின்றார். 5,6,7 வது அதிகாரங்கள் தவறவிடக்கூடாதவை;


அரசியல்ரீதியாகவும் சமூகவழி சிந்தனைகளாலும் இந்த 12 வகையைவிட ஓரிரு படிகள் என் புரிதல்கள் தாண்டியிர்ந்தாலும், இந்தவகைப் பொருளாதாரம் சம்பந்தமான புத்தகத்தில் படிக்கும்போது எனக்கு வந்த ஆச்சர்யம் உண்மையானது. இதே குறிப்புகளை , ஒரு சமூக ஆய்வியல் வழியாக ஆராய்ந்தால் இன்னமும் அதிக பலன் இருக்கும் என நான் கருதினாலும், இந்தப் புத்தகம் உள்நாட்டுக்காரர்களால் "சமூகவழி சிந்தனைகளை" சற்று தள்ளிவைத்து விட்டு அதிகம் படிக்கப்பட வேண்டும் என கருதுகின்றேன். முதலில் உளமார இந்தப் பிரச்சனைகளை "இருக்கு" என நம்பினாலேயே, பல்வேறு துறைகள் வழியாக இதற்குச் சரியான மருந்தைச் சரியான இடத்தில் தேட ஆரம்பிக்கும் முனைப்பு வரலாம் ..

மேலும் படிக்க

Friday, May 08, 2009

நல்லா போடறாய்ங்கய்ய......... (நாடகம்)

படிக்கும் முன் இதைப் படித்துவிட்டால் (முக்கியமாக பின்னூட்டங்களை) நல்லது. ஈழச் சகோதர(ரி)ர்களே தயவு செய்து மன்னிக்க


திரை விலகுகிறது

ராஜ மாதவன் ஒரு மரத்தடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கையில் சத்திய சோதனையும் தலைக்கு காப்பிடலிசத்தையும் வைத்துக் கொண்டு கண்கள் மூடிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

ராஜ மாதவன் தம்பி மாசான் ஓடி வருகின்றார்.

மாசான்: அண்ணெ அண்ணெ எழுந்திருங்கன்னே சீக்கிரம் வாங்கன்னே

கண்விழித்த ரா மா: என்ன தம்பி என்ன ஆச்சி ஏன் இந்த பதற்றம்?

மாசான்: சிங்காளத்தூர் பசங்க நம்ம அம்மாவையும் அண்ணியையும் களவாண்டுட்டாங்கன்ன. அந்தத் தேவடியாப்பசங்க தலையை வெட்டணுன்னே வாங்கண்ணே

ரா மா: சரிப்பா நீ எதுக்கு பதறுறே - உனக்கு வேற ரெத்த கொதிப்பு இருக்கு பதறக் கூடாது; கெட்ட வார்த்தையெல்லாம் பேசறே; எங்கே கத்துக்கிட்டே ? சீச்சீ அசிங்கம்

மாசான் : லூசான்னே நீ? நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே? நாம சீக்கிரமா போய் காப்பாத்தனும்னே அப்படியே சிங்காளத்தூர் தேவடியாப்பசங்க குலத்தை அறுக்கனூம்னே

ரா மா: தம்பி நான் ஒனக்கு எத்துனை தடவை பாடம் சொல்லியிருக்கின்றேன். நாமெல்லாம் காந்தி வழி நடப்பவர்கள் குலத்தை அறுக்கணும்னேல்லாம் பேசலாமா? என் உடம்பெல்லாம் நடுங்குது. இப்படியெல்லாம் பேசினா நீ என் முகத்துலேயே முழிக்க முடியாது உனக்கு பொறுமை அவசியம் வேணும். இந்தா இந்த சத்திய சோதனை 38ம் பக்கம் படி நான் என்ன சொல்ல வற்றேன்னு புரியும்

மாசான்: ஒங்காம்மல முதல்ல உன்னை வெட்டனும்டா; வெட்டிப்புட்டு ஒன்னைப் பெத்தது போதாதுன்ன்னு இத்தாதண்டி வளர்தாலே என் ஆத்தா அவளையும் சேர்த்து வெட்டணும். நான் வர்றேன் ( ஓடுகின்றார்)

ரா மா: பாத்தியா உன் உணர்ச்சி உன்னை என்னா செய்ய்துன்னு? அண்ணனையும் ஆத்தாவையும் வெட்டனும்ன்றியே . ஒன் சேர்காலம் சரியில்லை

இந்தக் கூத்தில் ஊர் மக்கள் கூடிவிடுகின்றனர்

சூர்யா : சின்னப்பிள்ளத்தனமா பேசாதீங்கன்னே. தம்பி என்ன சொல்லிட்டாப்ப்ல ? நீங்க பதற விசயம் தான் கோமுட்டுத்தனமா இருக்கு

பக்கத்து வீட்டு ரங்கு அய்யர்: மாது நீ சொல்றது தான் சரி. ஒன் தம்பி சேர்க்கை சரியில்லை; நீதான் கவனிக்கனும். பையன் அம்மாவும் அண்ணியையும் இழந்துட்டான். நீதான் பொறுப்பா கவணிச்சுக்கணும். (மனதிற்குள்ளாக அம்பாளே முதலி குடும்பத்தை ஒழிச்சதுக்கு உனக்கு தினம் நெய் வேத்தியம் ஏத்தறேன்)

சிங்காளத்தூரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் வைத்தி: ராஜன்னே அமைதி தேவைன்னே. சட்டுபிட்டுன்னு கிளம்பிட்டா ஊரெல்லாம் ரெண்டாயிடும் அப்புறம் எவனும் ஒழுங்கா நடமாட முடியாதுன்னே. உங்களைப் போல அமைதி யாருக்குன்னே வரும்..

ரா மாவின் பெண்டாட்டியிடம் செறுப்படி வாங்கினவன்: ராஜா அண்ணே நீங்க தான்னே மாசானை கரிக்கிட்டா புரின்ஞ்சுகிட்டீங்க. தேவடியாங்கிரது, குலத்தை அறுக்கனும்கிறது சேச்சே என்ன அதீதம் என்ன வக்கிரம்??

ரா மா: வாங்க எல்லோரும் வாங்க; அங்கே ஆத்தாளையும் சகபத்தினியையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள்; உள்ளம் பதைபதைக்கின்றது அதெல்லாம் விட இந்த மாசான் பேசிய வார்த்தைகள் அப்பப்பா என்ன துவேஷம்; இந்த சத்திய சோதனையிலேயே இதற்கு தீர்வு இருக்கின்றது பொறுமையாகப் படித்தால் ஒரு தீர்வு வராமலா போய் விடும்;

வத்திக்குச்சி : மாசான் சொல்லியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கின்றேன்.

ரா மாவின் மனைவியின் முறைமாமன்(எனச் சொல்லிக்கொள்பவர்): பெண்டாட்டியை தூக்கிட்டுப் போயிட்டான் ஆத்தாளத் தூக்கிட்டுப் போயிட்டான்னு இந்தச் சண்டை போடுறீங்களே; ஆத்தாளை தூக்கிட்டு போகும்போது ஆத்தா கால் பட்டு என் அப்பாவுக்கு காயம் ஆயிட்டது தெரியுமா? வந்துட்டாய்ங்க சண்டை போடுறதுக்கு

ரா மா: வத்திக்குச்சி, நான் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை; வரலாற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றேன்; சில வார்த்தைகளை வார்த்தைகள் என நினைக்கக் கூடாது அதற்கும் மேலே இல்லாவிட்டால் அதற்கும் கீழே பொருள் கொள்ள வேண்டும். மாசான் எதோ வேகத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதன் விளைவு அப்பப்பா எண்ணமுடியவில்லையே ( சிவாஜி குரலில் )

சுதந்திரம் : சரியான பேச்சு; மாசான் சரியாக பேசினால் சரியாகத்தான் பேசினார் எனலாம். தப்பாகப் பேசினால் தப்புன்னுதானே சொல்லனும். நல்லது தான் சொல்லுகிறீர்கள். உங்களக்கு எனது நன்றிகள்

கஸ்பர் : என்ன சொல்றீங்க சூர்யா? உங்களுக்கெல்லாம் கெட்ட வார்த்தைன்னா என்னன்னு தெரியாது? கொலவெறின்னா என்னன்னு தெரியாது . you dont know any stupid thing

புற வர்ஷங்கள்: அடிப்படையாகவே நம் நாட்டில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் ஆதரவும், எதிர்ப்பும் ஆதாயங்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு பலி என இப்போதைக்கு மாசான். மாசான் கருத்துக்களில் பலவற்றோடு நான் முரண்படுகிறேன். கருத்தில் நேர்மையற்றவர்கள் அரசியல் செய்ய மட்டுமே லாயக்கானவர்கள் என்பதென் கருத்து. சேகுவேராவின் படம் அச்சிடப்பட்ட ஆடையணிவதால் மட்டுமே புரட்சி வந்து விடுமா என்ன..? புரட்சியென்பதை பேச்சாக மட்டுமே பிரபலப்படுத்தியவர் மாசான். ஒலிபெருக்கியைப் பிடித்து ஆத்தாலுக்கும் பெண்டாட்டிக்கும் ஆதரவை பேசிவிட உங்களுக்கும், எனக்கும், நம்போன்றோருக்கும் எவ்வளவு கணம் பிடிக்கும். வெறும் பேச்சல்ல நடைமுறை வாழ்க்கையென்பது. போலி புரட்சியாளர்களும், அவர்களுடைய போக்கும் குறித்து சிந்தனையாளர்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இது மாசானின் ‘குலத்தை அழிக்கணும்‘ என்பதற்கான பதில் அல்ல. பொதுப்போக்கில் மாசானின் நடவடிக்கைகள் குறித்த கருத்து.

ராமலீலை : மே 15ஆம் தேதி தெரியும் எங்கே என்ன கிழிஞ்சுதுன்னு

ரா மா: எனக்கு மட்டும் எதுவும் கிடையாது என பேசிக்கொண்டிருக்கின்றிர்கள்; நான் வரலாற்றின் துளிகளிலிருந்து பூகோளம் படிப்பவன்; அறிவியல் படிப்பவன் ஏன் தமிழ்ப்பாடம் கூட படித்தவன். வரலாற்றின் துளிகளின் நுனிகளில் பாடம் கற்காதவன் எதையும் சாதிக்க முடியாது. என் ஆத்தாளின் தம்பியே என்ன சொல்லியிருக்கிறார் என கையில் டேப் வைத்திருக்கின்றேன். சிங்காளத்தூரில் வசிக்கும் என் மனைவியின் முறைமாமனே இங்கே என்ன சொல்லியிருக்கின்றார் என கவணிக்கவும். அவருக்கு சூர்யா போன்ற யாரவது ஒருவர் பதிலளிப்பார் என நினைத்தேன். இந்த கஸ்பர் என்னிடமே கேள்வி கேட்கின்றார். நான் என்ன செய்ய. வரலாற்றின் ஒவ்வொரு பக்கமாக அடியெடுத்து படித்தவனிடம் கேள்வி கேட்கிறார்கள் , இண்டர்னெட்டில் தீர்மானம் போட்டுக் கொண்டு கிண்டல் செய்கின்றனர். அமெரிக்காவிலிருந்தெ போன் போட்டு சாட்சியுடன் சொல்லிவிட்டனர் எனத் தெரியாமல் செய்கின்றனர். இந்த ஊருக்கும் சிங்காலத்தூருக்கும் விரோதம் வரவேண்டுமெனவே இந்தவாறு வெறியுடன் பேசுகின்றனர். அமைதியின் அர்த்தமும் ஆழமும் தெரியாமல் பேசுகின்றனர்.......


(பேசிக் கொண்டிருக்கும் போதே இவர் தலைக்குப் பின் ஒளிவட்டம் விழுவது போல் வெளிச்சம் விழ மற்ற இடங்களில் மெல்லிய இருட்டு. கூடியிருப்பவர்கள் அமைதியுடன் ஜெபம் பண்ணுவது போல இருக்க மறுபக்கத்திலிருந்து ஒரு வண்டியில் "எல்லாவற்றையும்" அள்ளிப் போட்டுக் கொண்டு மாசான் கேவி அழுது கொண்டே வருகின்றார்.

திரை கவிழ்கிறது.......

மேலும் படிக்க

Thursday, April 30, 2009

சில/பல எறுமைகளும், சில சிங்கங்களும், ஒரு முதலையும்

நெட்டுல உலவிக் கொண்டிருந்த போது கிடைத்த ஒளிப்படத் துண்டு. முன்னமே சோகத்தில் இருநத மனது பதைபதைபபுடன் பார்த்து.....


தெரியாவிட்டால் இங்கே கிளிக்கவும்

இந்தக் காளான்மண்டிய புண்ணாக்குத் தேவடியாகுடி தமிழனாக பிறந்ததற்கு பதிலாக இந்த எறுமைக் கூட்டத்தில் ஒன்றாக பிறந்திற்கலாம்.

நன்றி - NegativeSpace Media

மேலும் படிக்க

Wednesday, April 29, 2009

அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.

எவனையாவது நம்பி, நல்லா எழுதுறாய்ங்களே, மனிதம் மனிதம்ன்னெல்லாம் உருகுராய்ன்களே நல்லவய்ங்களோன்னு அவிங்க எழுதறதெல்லாம் படிச்சா, சமயத்திலே நல்லா பீயை கறைச்சி மூஞ்சியிலே ஊத்துவாய்ங்க. இந்தத் தேவடியாகுடி நாய்ங்கள்ன்னாலே இப்படித்தானா? குலம்/கோத்திரம் பாக்கக்கூடாது, நல்லது எந்தச் "சூழலில்" இருந்தாலும் முளைக்கும்ன்னு முட்டாத்தனமா நம்பினா இப்படித்தான் போலும். ஒருத்தம் பின்னாடி ஒருத்தன் ஏறுறது இறுந்தாத் தான் வாழ்கை சுவாரசியம்ன்னு ஒரு வாழையிலை பீ தூக்கி ஞான பீடம் பிச்சை வாங்கின தேவமகன் சொன்னான். அவன் கிட்ட வாசம் பிடிச்சதுகிட்ட இந்த மயித்தைத் தான் எதிர்பாக்கனும்னா என்ன செய்யுறது? இந்த தேசீய புழ்த்திகளுக்கு தனக்கு இருக்கும் நியாயம் அடுத்தவனுக்கு கொடுக்க/இருக்கக் கூடாது என்கிறதில இருக்கிற அசிங்கம் தெரியுமா அல்லது தெரியாது போல நடிப்பாங்களா? கவிதைத் தனமா அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்றியே அப்புறம் என்னா மயித்துக்கு முற்போக்குன்னு போட்டுக்கிட்டு புழ்த்திகிட்டு இருக்குற. போய் மாமனோடோ சேந்துகிட்டு ஒன் சொந்த வாழ்க்கை மயிரை புடிங்கிக்க வேண்டியது தானே அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்னு. ஏண்டா எழவு வீட்டல வந்து ஒங்க சங்காத்தம். வேற எதிலயவாது போய் உங்க CPM கட்சி புழுத்திய புழுத்திக்க வேண்டியது தானே. இந்த விசயத்துக்கு, இங்க , இப்ப எதுக்குடா வற்றீங்க. - திருடன், மொள்ளமாறி, ராட்சசீ இதுங்கள்ட்ட கூட தப்பிச்சுரலாம் இந்த நல்லவன் மாறி வேசம் போடற நாய்கள்ட்ட ஒரு தடவையாவது சுத்தமா ஏமாந்து தான் சுதாரிக்கனும் போல. தூத்தெறி... And here is the rest of it.

மேலும் படிக்க

Saturday, April 25, 2009

புரட்டிவிடும் புள்ளிகள் - Tipping Points - மால்கம் கிளாட்வெல் புத்தகப் பார்வை.

சிறு வயதில் மாஸ்கோ பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப் பட்ட அனைவருக்குமான விலங்கியல் / அனைவருக்குமான இயற்பியல் போன்ற ஒரே துறையைப் பற்றி புதிது புதினா செய்திகளைத் தொகுத்து வந்த புத்தஙகங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கிப் படித்ததுண்டு. மாடு தின்பது உண்மையிலேயே வைக்கோல் தானா? என்னும் கேள்வி வந்த அனைவருக்குமான விலங்கியல் புத்தகம் இன்னமும் ஞாபகத்தில் இருப்பது ஆச்சர்யம் தான். அதைத் தமிழில் படித்திருந்தது தான் அது ஞாபக அடுக்குகளில் ஒட்டியிருக்கின்றது போல ஒரு தேற்றம் இப்பொழுது. சோவியத் யூனியன் விழ்ந்ததில் நான் அடைந்த சோகம் இந்த வகைப் புத்தகங்கள் மீதான இழப்புத் தான். அதே வகைகளில் இபொழுது மனோதத்துவம், பொருளாதரம், சமூகவியல், வரலாறு, புள்ளியியல் என பல இயல்களை அனைவருக்குமாக கலந்து கட்டி சின்னச் சின்ன விடயங்களை, வேறு புது கோணத்தில் காட்டி எழுதும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் புகழடைந்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன் தாறுமாறுளாதரம் ( :-) Freakonomics), உலகம் தட்டை தான் (The world is flat) என்னும் புத்தகங்கள் மக்களாதரவை அடைந்திருந்த சமயத்தில், கும்பலோடு கும்பலாக வாங்கிப் படித்ததில் இந்த வகைப் புத்தகங்கள் மீதான ஒரு ஆவல் தொடங்கியது.
அப்பொழுது தவற விட்டிருந்த புத்தகம் தான் இது - புரட்டிவிடும் புள்ளிகள். இதனுடைய ஆசிரியர் மால்கம் கிளாட்வெல். இந்த புத்தகத்தைத் தவிர மேலும் இரண்டு புத்தகங்களை எழுதி அவைகளும் நல்ல ஆதரவை பெற்றுக் கொண்டிருக்கின்றன. நல்ல வெள்ளை அட்டையில் ஒரு சிறு தீக்குச்சியின் படத்துடன் ஆப்பிள் குழுவினரின் வெளியீடு போல இருக்கும் இந்தப் புத்தகம் எளிமையான நடையில் எழுதப் பட்டிருக்கின்றது. எந்த ஒரு, கொள்ளை நோய் போல, துரிதமாகவும் பரவவும் கூடிய விடயங்களை (நல்லவற்றிர்க்கும் கெட்டவற்றிர்க்கும்) ஏற்படுத்தக் கூடியவைகளை மூன்று வகைளாக வகைப்படுத்தலாம் அவை - , மிகக் குறைந்த அளவிலான ஆனால் செறிவூக்கமும் செயலூக்கமும் கொண்ட நபர்கள் - ஆழமாக ஒட்டக் கூடிய செய்தி - தோதுவான சூழல். இந்த மூன்றையும் சரிவரக் கையாளத் தெரிந்தால் எந்த ஒன்றையும் - தொழிலாக, புரட்சியாக, நோயாக, நோய்கூறாக எதுவாக இருந்தாலும், அதை எளிமையாக பரவலாக்கலாம் என்பது தான் புத்தகம் சொல்லும் செய்தி. ஒரு கட்டுரைக்குள் முடிக்கக் கூடிய விடயமாக இருந்தாலும் (முதலில் இது கட்டுரையாகத் தான் வந்ததாம்), ஒவ்வொரு வகைக்கும் ஏராளமான உதாரணங்கள், ஆராய்சிகளின் தொடர்புகள் என ஆச்சர்யப் படக்கூடிய துணுக்குகளை அடுக்கியிருந்தார். பல துணுக்குகளின் பின்னால் உள்ளது மறுதலிக்க இயலாதது.

சில துணுக்குகள் என்னை துணுக்குற வைத்தன என்றால் மிகையில்லை. அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு தூண்டுகோலாக, போஸ்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியை காட்டி, அதை ஆரம்பித்து நடத்திவைத்தவர்களாக ஒரு மூன்று பேரைச் சுட்டுகின்றார். அந்த மூவரில் பால் ரெவெர்(paul revere) என்னும் ஒருவரின் மக்கள் தொடர்பு நிபுனத்துவத்தின் அளவு தான் விவசாயிகளையும் மற்றவர்களையும் ஒன்றினைத்து, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து நிற்க முடிந்தது. அப்படி நிற்க முடிந்ததே பின்னால் சுதந்திரப் போருக்கான ஆதார வித்து எனவும் நிறுவுகின்றார். ஆராய்ந்து பார்த்தால் பல போராட்டங்கள் இப்படித்தான். பல போராட்டங்கள், முளைவிடாமலே கருகி விடுவதும் இந்த மாதிரி ஆட்களின் போதாமையே. ஒரே மொழி பேசும் இனம் இரண்டு நாடுகளில். ஓரு நாட்டில் இருக்கும் அந்த மக்கள் அழித்தெடுக்கப் படுகின்றார்கள். இன்னொரு நாட்டில் இருக்கும் அதே மக்கள் விளையாட்டுப் போட்டிகளின்ன் வெற்றித் தோல்விகளில் முழ்கியிருக்கின்றார்கள். என்னைப் பொருத்தவரை பால் ரெவேர் போன்ற ஆட்களின் போதாமை ஒரு முக்கிய காரணம்.புரட்டிவிடும் புள்ளிகள் இல்லா கள்ளி நிலமாகத் தான் அந்தக் களம் இருக்கின்றது. 4 அல்லது 5 கோடி புண்னாக்க்குகளும் அதன் மேல் பூஞ்ச காளான்களாக 20-25 லட்சம் காளான்களும் இருக்கும் களத்தில் அதை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் தான்

எனக்குக் கணிதத்தில் வரும் சில எண்கள் மேல் ஒரு விருப்பம் . பை எண் (Phi), படியேற்றம் (exponential) போன்ற எண்கள் கொடுக்கும் நிச்சயம், இந்த நிச்சயமற்ற உலகில், வசீகரிக்த்தான் செய்யும். அதே போல எண்கள், மனிதக் குறியீடுகளிலும் அங்கங்கே மறைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அந்த எண்களை கொடுக்கும் எல்லா செய்திகளையும் அதிகம் நோண்டிப்பார்க்காமல் அங்கீகரித்தும் விடும் என் மனது. இந்தப் புத்தகமும் சில எண்களை விட்டெறிந்திருந்தது. ஏழு என்ணும் வசீகர எண். சராசரி மனித மனம், ஒரு எழு வகை வித்தியாசங்களை உணர முடியும். அதற்கு மேல் உள்ள வித்தியாசங்கள், பிறழத் தொடங்கி விடும். நூற்றி ஐம்பது என்னும் வசீகர எண். இந்தளவு உள்ள மக்கள், எந்த விடயத்தில் இறங்கினாலும், முயற்சித்தால் எளிதாக ஒத்திசைந்து இயங்க முடியும். இதற்கு மேல் கூடத் தொடங்கினால் அந்த ஒத்திசைவு கெடத் தொடங்கிவிடும். இவைகளை சில பல உதாரணங்கள் , பேட்டிகள் என நிறுவுகின்றார். இந்த எண்களை என் மனது அதிகம் ஆராயாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. ம்ம்ம் என்ன செய்ய

உடைந்த கண்ணாடி ஜன்னல் என்னும் ஒரு கோட்பாடு. இது சூழலைச் சார்ந்தது. இந்தக் கோட்பாட்டைக் கொண்டு நியுயார்க்கில் 90களில் நிகழ்ந்த தீயச் செயல்கள் குறைப்பு ந்கழ்சியை விளக்குகின்றார். நான் இயற்கை vs சூழல் வகை அரசியல் பிரிவுகளில் சூழல் பின் நிற்பவன். எனக்கு இதனை ஏற்பதில் சிரமம் இல்லை. வேறு இடங்களில் ஆசிரியரே இயற்கை மட்டுமே இல்லை கூடவே சூழல் மட்டுமே இல்லை என குழந்தைகள் வளர்ப்பு பற்றிச் சொல்லும் போது அதன் உண்மையும் உறைக்காமலும் இல்லை.

இந்தப் புத்தகம் அதன் கடைசி பகுதிகளில், அதன் முதலில் இருந்த வேகத்தை இழந்தாலும், ஒட்டு மொத்தமாக படிக்கையில் ஒரு புதிய பார்வையைத் தரும் என உறுதியாகச் சொல்லலாம்.

மேலும் படிக்க

Sunday, April 12, 2009

என்ன கொடுமை இது?

தமிழில் முக்கியமாக தமிழ்இணையத்தில் நல்ல எழுத்தை - நல்ல என்பதற்கு சிறப்பான மொழி வளமான சரளமான நடை கொண்ட எழுத்து என்பதை விட "சக" மனிதம் மேல் நம்பிக்கை ஏற்ப்படுத்தும்/ஏற்படுத்த முனையும் எழுத்தே என தற்போதய அறிவு சொல்லும் - தருகின்றவர்களாக மாதவராஜ் மற்றும் தமிழ்செல்வன் அறிமுகமாகியிருக்கின்றார்கள். ...... "முற்போக்கு" என்னும் சொல்லின் மீதே வன்மம் தெளித்து எழுதி வந்த கூட்டங்களைப் பார்த்து ஏன் இந்த வார்த்தையை துவம்சம் செய்திருக்கின்றார்கள் எனத் தோனும் இவர்கள் இருவரது எழுத்தைப் பார்க்கும் போது அந்த "முற்போக்கு"ன் மீதான வன்மத்தின் அடியாழம் பிடிபடுகின்றது. சகமனிதத்தின் எதிர்ப்புதான் உண்மையிலேயே அந்த வன்மத்தின் ஊற்றுக்கண் எனவும் புலப்படுகின்றது. சரி மேலும் விலகாமல் சொல்ல வந்ததை சொல்ல முனைகின்றேன். இன்று மாதவராஜ் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரையை இப்பொழுது படிக்கும் போது தோண்றியதை அப்படியே அதே "ரா"வான தொனியை தர வேண்டும் என ஒரு வெறி- அமெரிக்கா காரன் ஈராக் காரனை போட்டு அடிக்கின்றான். சீனாக்காரன் திபேத் காரணை போட்டு அடிக்கின்றான். ரஷ்யாகாரன் ஜார்ஜியா/செசனியா ன்னு போட்டு அடிக்கின்றான். இஸ்ரேல் காரன் பாலஸ்தீனியனை போட்டு அடிக்கின்றான். ஆப்பிரிக்காவில எவன் எவனோ எவன் எவனையோ போட்டு அடிக்கின்றான். இந்தியத் தேவடியாகுடி மாமாக்கூட்டமான தமிழ்க்கார நமக்குக்கு என்ன யோக்கிதை இருக்கு அதையெல்லாம் கேக்கிறதுக்கு? நமக்கு தான் விளக்கென்னை தடவி விட்டு உள்ளே நல்லா போகுதான்னு விளக்கு பிடிக்கிற வேலையை விரும்பி எடுத்தாச்சு. அந்த நிலைமையிலே இந்த வடிவேலு சவுண்டெல்லாம் எதுக்கு? ஒரு நிமிடம் ஒரு அமெரிக்க/அய்ரோப்பிய வெள்ளைக்காரனாகவோ ஒரு சப்பான் சப்பமூக்குகாரனாகவோ இருந்து இதை வேடிக்கைப் பார்த்தா இதுவரையிலேயே மோசமா எடுத்த காமெடிப் படத்தை விட மோசமா இருக்கும் நம்ப நிலமை. சீரிஸா சொல்றேன் - நமக்கு எவனைப் பத்தியும் எதுவும் சொல்ல இனி எந்த ஜென்மத்திலேயும் எந்தக் காலத்திலும் யோக்கிதை கிடையாது. வேற எதயாவது பேசலாம் இந்த இனம் அந்த இனத்தை அடிக்குதுன்கிறத தவிர வேற எதையாவது பிளீஸ்

மேலும் படிக்க

Saturday, March 28, 2009

வெள்ளைப் புலி (The White Tiger)- அரவிந்த் அடிகா

அடிகாவின் இந்தக் கதையைப் பற்றி போன வருடம் ஏப்ரலில்இந்த இடத்தில்வந்ததைப் பற்றி என்னுடைய twitter messageல் குறிப்பிட்டிருந்தாலும், இப்பொழுது தான் படிக்க முடிந்ததது. சில நாட்கள் முன் COSTCO மாதாந்தர சாமான் வாங்கும் வைபவத்தில் என் மனைவி தீவிரமாக தள்ளுவண்டியில் அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது, நான் புத்தகப் பிரிவில் மேய்ந்து (திட்டு வாங்கிக் கொண்டுதான்) கொண்டிருந்தேன். இந்தப் புத்தகம் $8.99 க்கு கிடந்தது, வாங்கவும் கை அரித்தது. எனக்கு fictionஐ விட non fiction மீது ஈடுபாடு இருந்தாலும் அபூர்வ சமயங்களில் fiction வாங்குவது உண்டு கவணிக்க- வாங்குவது என்பதற்கும் படிப்பது என்பதற்கும் 6 வித்தியாசங்களுக்கு மேல் உண்டு. ஆனால்

இந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்னும் தீவிரம் இருந்தது. பலவருடங்களுக்கு முன் அருந்ததிராயின் காட் ஒப்ஃ சுமால் திங்ஸ் நாவலை வாங்கி படிக்க ஆரம்பித்து பாதியில் நின்றது, இன்னமும் நிற்கின்றது. சிறுகதைகள் படிக்க முடியும் எனக்கு, நாவல்கள் பெரும் சவால் தான். என்ன பிரச்சனை என்றால் , சிறுகதைகளை தூங்கவதற்கு முன் இருக்கும் அவகாசத்தில் படித்து விடலாம், சில கும்பல்கள் சிறுகதை என்ற பெயரில் குருநாவல் எழுதி உயிரை எடுக்கும், அதை மறந்து விட்டால். ஆனால் நாவல்கள் அப்படியில்லை. பாதியில் நிறுத்தினால் திரும்ப ஆரம்பிற்பதற்கு மெனக்கெடுதல் அதிகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்களின் குறையை விட தவிர என் முனைப்பின் மீதுதான குறை அதிகம். இடைவெளியில் பல திசைகளில் மனம் திருப்பிவிடப்படுகின்றது. மிடில் ஸ்கூல் கால கட்டங்களில் கோடை விடுமுறைகளில், தூங்கும் போதும் , பேளும் (நன்றி ராஜநாயகம்) போதும், சாப்பிடும் போதும் வண்டி வண்டியாக கல்கி, சாண்டில்யன் என படித்த காலங்கள் போய் இப்பொழுது ஒரு 300 பக்க நாவல் படிக்க மூச்சு வாங்குகின்றது. பல கதைகள் பாதியிலே- இது தமிழிற்கும், ஆங்கிலத்திற்கும் பொருந்தும். இந்தக் கொடுமை இப்போ சில/பல சினிமா படங்களுக்கும் தொடர்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால் இந்த நாவலை படித்து "முடித்து" விட்டேன். முதலில் ஒரு ஓட்டத்தில் 200 பக்கங்களை கடந்ததும் அடுத்த ஒட்டத்தில் முடிக்க வைத்துவிட்டது. நடை வேகமாக ஓடியது என்பது கூட காரணமாக இருக்கலாம். கதை என்றால் ஒன்றும் இல்லை. குண்டியால் சிரிப்பதற்கு கதையென்பது தேவையா என்பது இந்த நாவல் வைக்கும் ஒரு கருத்தாகக் கூட இருக்கலாம். முதலில் ஒன்று சொல்ல வேண்டும். இந்தக் கதையின் அடிநாத நக்கலைப் பிடிக்க, கொஞ்சம் சூடு சொரனையுள்ள தெற்கத்திய கருப்பனாக இருந்து, வடக்கத்தியான்களுடன் சகவாசமும் முக்கியமாக வடநாட்டில் சில காலமாவது வாழ்ந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்தியாவுடன் சுத்தமாக எந்தவித தொட்டுக்க பட்டுக்கவும் இல்லாமல், இந்தியா என்பதை புத்தகவாக்கில் அறிந்து இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாவிட்டால் இந்த நாவலைப் படிக்க/புன்முறுவல் பூக்க/அப்படி போடு என/ ஒஹ் இந்தக் கூனாக்கல் இப்படிதானா என நக்கலுட/ முடியாது.

நாவல், ஒரு ஏழு இரவுகளில், ஒர் மாபெரும் கசாப்புக்கடையில் இருக்கும் கோழிகூண்டிலிருந்து ஒரு கோழி எப்படித் தப்பிக்கின்றது (உண்மையிலேவா?) என கோழியே மற்றுமொரு மாபெரும் கசாப்புக்கடை அதிபருக்கு விளக்கி எழுதும் கடிதங்களின் தொகுப்பு தான். ஒவ்வொரு இரவும் கசாப்புக்கடையை எவ்வளவு தூரம் ஒரு "கோழி" விளக்கமுடியுமோ அந்தளவிற்கு விளக்கின்றது. 36000004 ( 3 கோடியே 60 லட்சத்து இந்து + 3 கிறிஸ்தவ + 1 முஸ்லீம் கடவுளர்) குண்டிகளை தொழும் கோழிகளின் பழக்கவழக்கத்தில் ஆரம்பித்து, கோழி எதை இழந்து தப்பிக்கின்றது, பின் தப்பித்த கோழி எப்படி தானே ஒரு கசாப்புக்கடை வைத்து..., என ஒரு சோகமான காலவட்டத்தில் கதை முடிந்து விடுகின்றது. முன்னா "ஹல்வாய்" இந்த ஜன்மத்திலேயே அசோக் "சர்மா"வாக என்ன செய்யனும் என்னும் இந்தக் கதை "வருதே மூத்திரம்" கோஷ்டிகள் படிக்க முடியாதது தான்.

பொதுவாக பொலிடிகல் கரக்ட்னெஸ் பார்க்கும் மேற்கத்திய கோஷ்டிகள் இதை எப்படி உள்வாங்கின என்பது ஒரு ஆராய்வுக்கு உள்ளாக வேண்டிய விஷயம் கூட.. பின் குறிப்பாக உள்ள ஆசிரியரின் பேட்டியில் ஆசிரியர் தனது எழுத்தின் ஆதர்சமாக, மூன்று கருப்பின ஆசிரியர்களை குறிப்பிடுகின்றார் - ரால்ப்ஃ எலிசன் (Ralph Ellison), ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin), ரிச்சர்ட் ரைட் (Richard wright) - முக்கியமாக எலிசனின் இன்விசிபிள் மேன் என்னும் புத்தகத்தையும் குறிப்பிடுகின்றார். நாவலின் முன்னும் பின்னும் குவிந்திருக்கும் (அஜீர்னப்படுத்தும் அளவுக்கு உள்ள) புகழாரங்களில், பலரும் எலிசனின் இன்விசிபிள் மேனையும், ரைட்டின் நேட்டிவ் சன் னையும் குறிப்பிடுவதால், அந்தப் புத்தகங்களுக்குள் , இந்த நாவல் மேற்கத்தியவர்களில் எந்த நரம்பைத் தொட்டது என்னும் மர்மம் இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. கூடவே எல்லா விடயத்தையும் "பிலாசபிக்கலாக" பார்ப்பது போல் "தொனத்தொனவென" பேசும் "இந்தியர்களின்" முடிச்சை மேற்க்கத்தியவர்களுக்கு இந்த நாவலின் முக்கிய கோழி அவிழ்க்கப் பார்த்திருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.


மேலும் படிக்க